பொய்க்கால் குதிரையில் போவோமா ஊர்கோலம்!
மாயையில் மயங்கிய மதிகெட்ட கோலங்கள்!
விஷத்தை அமுதாக்கிய விநோதப் பார்வைகள்!
பிழைக்குள் பிழைப்புத் தேடும் புரியாத வாழ்க்கைகள்!
இது இன்று அண்டம் சுமக்கும் ஆச்சரிய உண்மைகள்!
தீமை ‘தீ’ க்கு எம்மை வார்ப்பதில் என்ன பயன்!?
அசத்திய கூட்டத்தோடு கோவிந்தா
போடுவதா இஸ்லாத்தின் பாதை!?
கலிமாச் சொல்லிவிட்டு கண்றாவி கொள்கையோடு
கைகோர்ப்பதா காலத்தின் தேவை!?
தாருல் குப்ரின் நிழலில் நாம் தாக சாந்திக்கு தயார் ஆகிறோம்!
கார் இருளில் நிமிர்ந்து நடக்க கைத்தடியும் தேடுகிறோம்!
வெளிச்சம் கொடுப்பதாக நினைத்து கண்களை இறுக மூடி
மார்க்கத்தின் பெயரால் கனவும் காண்கிறோம்!
பாதிலை அருந்தி விட்டு நெஞ்சை நிமிர்த்தி
ஹக்கை கொப்பளிக்க நினைக்கிறோம்!
சிறுபான்மையில் அப்துல் கலாம் என்ன!
பெரும்பான்மையில் அப்துல் சலாம் என்ன!
அஞ்ஞானத்துக்கு அழகு சேர்க்க அடுக்கடுக்காய் பலர் வந்தார்!
விஞ்ஞானத்தின் பெயரோடு மாறியதா எம் துயரங்கள்!?
வேண்டுமா ‘பெனிபிட்’ தாருங்கள் ‘புரபிட் ‘
இந்த பொல்லாத நியதிக்குள் சுழலுதே மனித வாழ்வு!
அதில் பொல்லைக் கொடுத்தும் அடிவாங்கும்
நிரந்தர நியமனமாய் ஒரு சரண்டர் ‘பொலிடிக்ஸ்’
‘ஸ்பெஷல் போர் மைனோரிட்டி முஸ்லிம்ஸ்!’
அண்டக் காக்கை வளர்த்து குயிலோசை கேட்கத் துடிக்கிறோம்!
புலிப் பண்ணையில் பசும்பால் கறக்க கனவு காண்கிறோம்!
பித்தலாட்டத்தில் ஒரு நம்பிக்கையோடு கேட்கும்
முஸ்லீம் சிறுபான்மை பங்கு அது அது பிக்ஹுள் அகல்லியாத்!!!
source: http://khandaqkalam.blogspot.in/2014/11/blog-post_15.html