மலைகளின் உயரம்: பூமியின் ஆழம் – குர்ஆன் பேசுகிறது
மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!
‘பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.’ ( குர்ஆன் 17 : 37)
பூமியில் மனிதன் தான் என்ற அகங்காரத்துடன் நடக்கக் கூடாது என்று அறிவுரை சொல்ல வந்த இறைவன் அதற்கு ஒரு உதாரணத்தையும் கூறி விளக்குகிறான். நீ என்னதான் அறிவில் முதிர்ச்சி அடைந்தாலும். நீ வாழும் பூமியில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் உன்னால் செல்ல முடியாது. இதுதான் உனது ஆற்றல். விண்வெளிக்கு நீ செல்ல முடியும். ஆனால் நீ வாழும் பூமியில் சில மைல் தூரத்துக்கு மேல் உன்னால் செல்ல முடியாது. இவ்வளவு தான் உனது ஆற்றல் என்கிறது குர்ஆன். அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தால் பூமிக்கு அப்பாலும் மனிதனின் அறிவு விரிகிறது. இன்னும் ஒரு இருபது வருடங்களில் ஏற்படப் போகும் மாற்றங்களை இப்பொழுதே நம்மால் கணித்து விட முடிகிறது. ஆனால் சில விஷயங்களில் உன்னால் முடியாது என்று இறைவன் சவால் விட்டு சில விபரங்களை குர்ஆனில் ஆங்காங்கே கோடிட்டு காட்டுகிறான். அது போன்ற சவால் விடும் வசனங்களில் ஒன்று தான் நாம் மேலே பார்த்தது.
மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் மூன்று கிலோ மீட்டர் மட்டுமே! இதற்கு மேலும் துளையிட்டு செல்ல முடியாது. சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்டனர்.
பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும். இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான்.
உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை. உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
தற்போது வரை புவியை மனிதனால் 8 கி.மீ ஆழத்திற்கு மேல் தோண்ட இயலவில்லை. காரணம் பூமிக்கு அடியில் போகப்போக வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போவதால்தான். சராசரியாக புவியை அதன் மேற்பரப்பிலிருந்து 100 அடி ஆழம் தோண்டினால் வெப்பநிலை ஒரு டிகிரி சென்டிகிரேட் வரை அதிகரிக்கும்.
புவியின் மேற்பரப்பிலிருந்து நான்கு கி.மீ ஆழம் உள்ளே போனால் அங்கே வெப்பநிலை சுமார் 100 டிகிரி சென்டிகிரேட் இருக்கிறது. இது தண்ணீர் கொதிக்கும் வெப்பநிலை. இதுவே முப்பது கி.மீ உள்ளே போனால் அங்கே வெப்பநிலை 1200 டிகிரி சென்டிகிரேட் இருக்கிறது. இது பறைகளே உருகும் வெப்பநிலை.
புவியின் மேற்பரப்பிலிருந்து சராசரியாக 4 கி.மீ ஆழம் வரை தான் மனிதனால் புவிக்குள் செல்ல இயலும் சராசரியாக 50 கி.மீ ஆழத்திற்க்கு கீழே புவி திடநிலையில் இருக்காது, திரவ நிலையில் (Liquid) தான் இருக்கும். சில இடங்களில் புவிக்குள் அழுத்தம் அதிகரித்து அந்த குழம்புகள் புவியை துளைத்துக்கொண்டு வெளியே வருவதைத்தான் நாம் எரிமலை (Volcano) என்று அழைக்கிறோம்.
பூமியின் ஆழத்திற்கு மனிதனால் செல்ல முடியாமை தொடர்பாக கடந்த 10.11.2014 அன்று தமிழ்நாட்டின் பிரபல செய்திச் சேவையான புதிய தலைமுறை தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. குறித்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட செய்திகளை இனி பார்போம்.
மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்த பின் சூரியக் குடும்பத்தைத் தாண்டி பல கோடி மைல் தொலைவுக்கு வின்வெளியில் பயணம் செய்திருக்கின்றான். செவ்வாய் கிரகத்திலிருந்து பாறைகளை எடுத்து வந்து ஆய்வு செய்வதே தமது அடுத்த இலக்கு என்று அதை நோக்கி மனிதன் முன்னேறிக் கொண்டிருக்கின்றான். ஆனால் பூமியின் ஆலத்திற்கு செல்வதில் மனிதன் இதுவரை வெற்றி பெறவில்லை. விண்ணில் பல கோடி மைல் தொலைவுக்கு பரந்த மனிதன் பூமிக்குள் இது வரை சென்ற தூரம் வெரும் 2.2 கி.மீ மாத்திரம் தான்.
பூமியின் மேற்பரப்பை மாத்திரமே மனிதன் இதுவரைக்கும் சுரண்டிக் கொண்டிருக்கின்றான். பூமியின் மேல் அடுக்கைத் தாண்டி பூமியில் இரும்புகள் நிறைந்த “மூடக மையப் பகுதியான” “மேண்டில்” (Mantle) என்ற பகுதிக்கு செல்வதற்கு மனிதனால் இன்னும் இயலவில்லை. பூமியின் ஆழத்தைப் பற்றிய அனைத்து ஆய்வுகளும், உத்தேசமானவையாகவோ, அல்லது கணிப்புகளாகவோ மாத்திரம் தான் இதுவரைக்கும் இருந்து வருகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் பூமியைத் தோண்டி ஆய்வு செய்வதற்கு முயற்சிக்காமலும் இல்லை.
பூமியின் ஆழத்தை ஆய்வு செய்வதற்காக 1961 ம் ஆண்டு மோஹோல் (MOHOLE) என்ற திட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. பசுபிக் பெருங் கடலில் ஆரம்பிக்கப்பட்ட தோண்டும் பணி 601 அடி ஆழம் வரைத் தான் நடைபெற்றது. அதன் பின்னால் இது போன்ற திட்டம் சாத்தியம் இல்லையென்று கைவிடப்பட்டது. இந்த ஆய்வை “ஐவோடிட்பி” என்ற ஆழ்கடல் துளையிடும் அமைப்பு தற்போது கையிலெடுத்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் செயல்படும் இந்த அமைப்பு பூமியை துளையிடும் பணிக்காக சுமார் 6000 ம் கோடி (இந்திய) ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. பசுபிக் பெருங்கடலில் துளையிடுவதற்கான 03 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன. சுமார் 30 செ.மீ விட்டத்தில் 10 கி.மீ வரை துளையிடுவதற்கான கருவிகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
பூமியின் 68 சதவீதமான நிறைக்குக் காரணமாக இருக்கும் “மேண்டில்” பகுதியில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்வதின் மூலம் பூமியில் உயிர்கள் உருவான ரகசியத்திற்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால் தோண்டுவதற்கான இந்த முயற்ச்சியும் 2020 ம் ஆண்டுக்கு முன்னர் சாத்தியமில்லை.
நன்றி : புதிய தலைமுறை இரவுச் செய்திகள் – சர்வதேசம் (10.11.2014)
source: http://suvanappiriyan.blogspot.in/2014/11/blog-post_56.html