பெண்களின் கவச உடை ஹிஜாபை கலாச்சார சீர்கேட்டின் குறியாக மாற்றிவிடாதீர்கள்!
பெண்களின் கவச உடை என இஸ்லாத்தில் உயர்த்தி கூறப்படும் ஹிஜாப் இன்று பல அனாச்சார செயல்பாடுகளால் சீரழிகிறது என்பதில் உண்மையில்லாமல் இல்லை!
பெண்கள் இப்பொழுது ஹிஜாபும் புர்காவும் அணிவது தங்கள் அழகை பிறத்தியாரிடமிருந்து மறைக்கவா அல்லது தான் யார், தாம் எங்கே போகிறோம் என்ற அடையாளங்களை பிறரிடமிருந்து ஒளித்துக்கொள்ளவா? என்றே தெரியவில்லை?
இந்த பெண்கள் புர்கா என்ற முகமூடியை பயன்படுத்தி யாரோடு வேண்டமென்றாலும் எங்கு வேண்டுமானாலும் யாருக்கும் தெரியாமல் சென்று வரலாம் ,நம்மைத் தெரிந்தவர்கள் கூட முகத்தை மறைத்துக்கொண்டால் கண்டுபிடிக்க இயலாது என்ற தைரியத்தில் அச்சமின்றி கூச்சமின்றி திரிகிறார்கள், உண்மையில் இறையச்சத்தோடு உள்ளச்சத்தோடு இவர்கள் அணிவதில்லை என்றே தெரிகிறது.
திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா என்று வீட்டில் கேட்டால் நமக்கு வயிற்றை கலக்குகிறது, இவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் அனுதினமும் நாம் சந்திக்கும் பெண்கள் பொது இடங்களில் இந்த புர்காவை அணிந்துகொண்டு சேட்டைகள் செய்யும் கூட்டத்தில் ஒருத்தியாக இருப்பாரோ என்ற அச்சம்தான் மேலிடுகிறது இதனால் திருமண ஆசை என்பதே வருவதில்லை.
அந்தக்காலத்தில் தான் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடிய பெற்றோர் -இவன் நல்லவனாயிருப்பானா? ஒழுக்கமானவனா? நம்ம பொண்ணை கண்கலங்காம காப்பாத்துவானா?வேறு கெட்டபழக்கவழக்கம் உள்ளவனாக இருந்தால் என்ன செய்வது?நம் மகளின் வாழ்க்கை என்னாகும்? போன்ற பல குழப்பத்தில் இருப்பார்கள், ஆனால் தற்போது நிலைமை தலைகீழ்…
ஆண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர் தற்போது அவர்களது மணவாழ்க்கை நிலைக்குமா?அல்லது வீட்டிற்கு வரும் மருமகள் ஒழுக்கமாக இருப்பாளா? சோசலிசம் என்ற பெயரில் ஆண் நண்பர்கள் சகவாசத்தில் உள்ளவளாக இருந்தால் மகனின் நிலைமை என்னாகும்? போன்ற குழப்பக் கேள்விகளோடு வலம் வருகிறார்கள்
எது எப்படி இருந்தாலும் அது குடும்ப மானம் கவுரவம் என்பதல்லாம் எப்போதும் பெண்களை வைத்தே எடைபோடப்படும் ,ஒரு வீட்டில் பெண் எத்தனை செல்லமாக செல்வாக்காக வளந்தாலும் அவள் பொதுஇடம் என்று வந்துவிட்டால் கண்ணியமாகவும் சர்வகவனமாகவும் நடக்க வேண்டும் ,நம் நடத்தைகளை வைத்தே நம்மையும் நம் பெற்றோரையும் நம் குடும்பத்தையும் அடுத்தவர் மதிப்பீடு செய்வர் என்ற உறுதியான எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்
தோழிகளோடு சேர்ந்து பஸ் நிலையங்கள் இரயில் நிலையங்கள் கல்வி நிலையங்கள் பொது இடங்களான கடைகள் ஓட்டல்கள் போன்ற இடங்களில் நாணம் இன்றி சத்தமாக சிரித்து பேசி கும்மாளம் அடிப்பது ,ஆண்கள் போலவே தோழியரோடு கலாட்டா செய்து அடித்து விளையாடுவது, பொழுதுபோக்காக வாய்தகறாரில் ஈடுபடவது ,நாங்கள் கலாய்க்கிறோம் என்ற பெயரில் ஆஹா… ஊஹூ… ஹேய்… போன்ற அசிங்க வார்த்தைகளால் கத்துவது -இதுபோன்ற செயல்களை ரசிக்கும் உங்கள் ஆண் நண்பன் நிச்சயம் உங்களின் அந்தரங்கத்தையும் ரசிப்பவனாகவே இருப்பான்.
யார் உங்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அதட்டி அறிவுரை சொல்வாரோ அவரே சிறந்த நண்பர்.
பெண்களே!
உங்கள் குடும்பத்தின் நலன் உங்கள் கைகளில் தான் உள்ளது – பெண்கள் அடக்கமாக ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்பதே நல்ல ஆண்களின் விருப்பம்! நம் பெற்றோரின் மரியாதை நம் நடத்தையில்தான் உள்ளது.
இது அறிவுரை அல்ல ஒரு சிறிய ஆலோசனை -இன்று நாம் விதைக்கும் விதை விணை ஆவதும் விளைச்சலாவதும் பெண்களாகிய நம் கைகளில் தான் உள்ளது!
நம்மை வைத்தே நாளை நம் பிள்ளைகள் மதிக்கப்படுவார்கள், நாளை அவர்கள் பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும்கூட சிலர் நம்மை சுட்டிக்காட்டி இதோ இருக்குதே இது பண்ணாத அட்டகாசம் இல்லை பொறுக்கி மாதிரி திரியும் இது பசங்கள மட்டும் என்ன ஒழுங்காவா வளக்கும் என்பது போல நம்மை சாடை பேசி நம் பிள்ளைகளை அவமானப்படுத்துவார்கள்!
ஹிஜாப் என்ற ஆடையை அதன் நன்மை கருதி அணிவோம், நாம் செய்யும் கலாச்சார சீர்கேடுகளுக்கு துணை செய்யும் ஒரு ஹராமாக அதனை ஆக்கிவிட வேண்டும்.
கடைசியாக ஒரு வார்த்தை – தற்காலம் தாடி வைத்து தொப்பி போட்டவனெல்லாம் முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்லும் அளவிற்கு இந்த கேடுகெட்ட ஊடகம் நம்மை அவமானப்படத்தி இழிவு செய்துவிட்டது அந்த கறையை துடைக்க நம் உடன்பிறப்புகள் படாதுடாடு பட்டு வருகிறார்கள், அதேபோல புர்கா என்பது இஸ்லாமிய ஆடை ஆதலால் அதனை மாற்றுமதத்தவர் யாரும் அணிந்து தவறுகள் செய்தாலும் வெளிப்புறத்தில் இருந்து பார்ப்போர் அவற்றை முஸ்லிம் பெண்கள் செய்வதாகவே நினைப்பர் இதன் காரணமாக ஹிஜாப் போட்டவள் எல்லோரும் வேசிகள் என்ற அபாண்டத்தை யாரும் நம் மீது பதிப்பதற்குள் நாம் திருந்திக்கொள்வோம்.
பொறுப்புணர்ந்து நடப்பது ஒவ்வொரு முஹ்மினின் கடமை ,பொறுப்பை உணர்வோம் சமூகத்தில் மதிப்பை பெறுவோம்.
-சகோதரன்ஆதங்கம்