Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நகைச்சுவையும், கார்ட்டூனும் நம்மை அறியாமல் செய்யும் பாவங்களே!

Posted on November 21, 2014 by admin

நகைச்சுவையும், கார்ட்டூனும் நம்மை அறியாமல் செய்யும் பாவங்களே!

  rasminmisc  

குழந்தை வளர்ப்பு, சமூகக் கொடுமைகள் மனித உடலும், உள்ளமும் அடிக்கடி களைப்புக்கும், கவலைக்கும் உள்ளாகின்றன. எந்தவொரு மனிதனும் தான் இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட ஏதோ ஒரு வழிமுறையை கையாளுகின்றான். எவ்வாராயினும் அவ்வழிமுறை இஸ்லாம் காட்டிய வழியில் அமைந்திட வேண்டும்.

சிறுவர், பெரியவர்கள் உட்பட அனைவரும் ஏதோவொரு வகையில் தொலைக்காட்சியின் பக்கம் சாய்ந்தே உள்ளனர். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவதையும் பார்க்க தீய முறையில் பயன்படுத்துவோரே அதிகம். இதுவே தற்காலத்தின் நிலைமையாக மாறியுள்ளது.

ஏதோவொரு வகையில் திரைப்படங்கள் சீரழிவுக்கு இட்டுச் செல்பவை என நாம் புரிந்து வைத்திருந்தாலும், தாம் பார்த்து ரசிக்கும் நகைச்சுவை காட்சிகள், காட்டூன் போன்றவற்றை அற்பமாக எண்ணி நகைசுவை தானே என்ற நகைசுவையான முறையில் சமாளிக்கின்றார்கள்.

நகைச்சுவைக் காட்சிகளினதும், காட்டூன் திரைப்படங்களின் வளர்ச்சியின் வேகம் எந்தளவுக்கென்றால் இவையிரண்டுக்குமே தனித்தனி அலைவரிசைகளும், பிரத்தியேக சீ.டி க்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரயாரம் செய்யும் வாகனங்களில் கூட சினிமாப் படங்களை விட இவைகளே அதிகமாக ஒளிபரப்பப்படுகின்றன. இவைகளை சிரித்து மகிழ பார்க்கும் சகோதரர்கள் இவைகளினால் ஏற்படும் விபரீதங்களை ஒரு கணம் சிந்திக்கட்டும்.

ஒளிபரப்பப் படும் நகைச்சுவை மற்றும் காட்டூன் திரைப்படங்களைப் பொருத்த வரையில் மொழி வேறுபாடு இன்றி அனைவரினாலும் வரவேற்கப்படுகின்றது. ஆனால் இன்றைய சமூகம் அழிவின்பால் செல்ல இவைகளும் ஓர் முக்கிய காரணம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

சினிமாக்களின் ஒரு பகுதியே இந்த நகைச்சுவைகளாகும். சினிமாவில் கதாபாத்திரங்களாக உள்ள நடிகர்களே நகைச்சுவையிலும் உருவெடக்கின்றார்கள். ஒரு திரைப்படத்தை ரசனையோடு மக்கள் தொடர்ந்தும் பார்வையிட இயக்குனர்கள் செய்யும் சதி தான் நகைச்சுவைக் காட்சி என்ற மாய வலை.

இன்று சினிமாக்களை பார்ப்பதற்கு தடையாக இருக்கும் காரணிகளே நகைச்சுவையும் நாம் புரக்கணிக்க வேண்டிய ஒன்று என்பதற்கு போதுமான காரணங்களாகும். விபச்சாரத்தைத் தூண்டும் காட்சிகள், இசையுடன் மெருகூட்டப்பட்ட காட்சிகள், ஒருவனை அவன் விரும்பாவிடத்தில் கிண்டல் செய்து மகிழ்விக்கும் காட்சிகள் என ஏராளமான காட்சிகளை நாம் நகைச்சுவையின் பேரால் ரசித்து அனுபவிக்கின்றோம். முழுத் திரைப்படத்திற்கும் அரை குறையாக ஆடை அணிந்த பெண்கள் தான் காமடிக் காட்சிகளிலும் கதாபாத்திரங்களாக தோன்றுகின்றார்கள்.

நகைச்சுவைக் காட்சிகளுக்கென்று பிரத்தியேகமான, ஒழுக்கமான ஆடை என்பது கிடையாது. உழைக்கத் துப்பில்லாதவனும் உடலைக் காட்டி பணம் சம்பாதிப்பவளும் கொஞ்சிக் குலாவி தடவும் காட்சிகள் கூட இந்த நகைச்சுவைக் காட்சிகளில் இடம் பெருகின்றன. இவைகளை வயது வித்தியாசமின்றி, உறவு வித்தியாசமின்றி கைதட்டி, சிரித்து ரசித்து வருகின்றோம். இப்படி நம்மை அறிந்தும், அறியாமலும் நமது கண்களினால் செய்யும் இந்தக் காரியங்கள் நம்மை விபச்சாரம் செய்த குற்றத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி 2710)

மேற்கண்ட செய்தியில் கண்கள் விபச்சாரம் செய்கின்றது என்று நபியவர்கள் கூறும் செய்தியின் தொடர்ச்சியில் நறுமணம் பூசிக் கொண்டு ஆண்கள் இருக்கும் சபைக்குச் செல்லும் பெண்களை நபியவர்கள் எச்சரிக்கின்றார்கள். காரணம் ஆண்கள் அந்தப் பெண்ணை பார்ப்பதின் ஊடாக கண்கள் செய்யும் விபச்சாரம் என்ற பாவத்தை செய்வதற்கு இது வழிவகுக்கின்றது. நகைச்சுவை மற்றும் காட்டூன் காட்சிகளில் தங்களை மறப்பவர்களே இந்த ஹதீஸை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த நகைச்சுவை காட்சிகளில் இசையும் கலந்து காட்சிகளை மெருகூட்டுகின்றனர். இசை ஹராம் என்று தெரிந்த பின்னர் சினிமா பாடல் உட்பட நாகூர் ஹனீபாவின் பாடல்களைக் கூட தவித்துக் கொண்ட எமது சமூகம் நகைச்சுவையையும், அதில் இடம் பெரும் இசையையும் மாத்திரம் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அபூஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது) நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் ‘நாளை எங்களிடம் வா’ என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும்இ பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். (நூல்: புகாரி 5590)

நகைச்சுவையின் பேரால் பொய் சொல்லுதல். நாம் ரசித்து ருசித்து பார்க்கும் எந்தவொரு நாகைச்சுவையாக இருந்தாலும் அதில் தெளிவான பொய் கலந்திருக்கின்றது. இந்தப் பொய்களை ரசித்துப் பார்ப்பவர்கள் அதற்குத் துணை செல்கின்றார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பொய் பேசுவதைப் பற்றிய நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்” என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும் பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்” என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து “அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)” என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)

நகைச்சுவை என்ற பெயரில் திரைப்படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகளை பார்த்து ரசிப்பதினால் முழு திரைப்படத்தின் காட்சிகளையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தினால் மனிதன் தூண்டப்பட்டு ஷைத்தானின் வலைக்குள் இலேசாக வீழ்ந்து விடுகின்றோம்.

காமத்தை உண்டாக்கும் காட்டூன் காட்சிகள். சிறுவர்களுக்கு என குறிப்பிட்ட நேரங்களில் ஒளிபரப்பப்பட்ட காட்டூன் காட்சிகள் இன்று நவீன மயமாக்கப்பட்டு பெரியவர்களும் கூட ரசித்துப் பார்க்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதற்கென குறிப்பிட்ட அலைவரிசைகள் கூட இன்று உருவாக்கப்பட்டுள்ளன. அநேகமான சிறுவர்களைப் பொருத்த வரையில் விடுமுறைக் காலங்களில் காலை எழுந்தது முதல் படுக்கைக்கு செல்லும் வரையில் காட்டூன் திரைப்படங்களுடனேயே காலத்தை செலவிடுகின்றனர்.

சிறுவர்களை அதிகம் கவருவதாக சொல்லப்படும். (ஷ்ரக் (Shrek) – செட்றிக் (Cedrick) – டொம் என்ட் ஜெரி (Tom and Jerry) இது போன்ற இன்னும் பல கார்ட்டூன் திரைப்படங்களில் கூட முத்தக் காட்சிகள், காதல் வசனங்கள் என்பவை தாராளமாக இடம் பெற்றிருப்பதை காணலாம்.

மிருகங்களுடன் தொடர்பு பட்டதாக எடுக்கப்படும் காட்டூன் திரைப்படங்களில் கூட ஆபாசமான செயல்பாடுகளை மிருகங்களுடன் தொடர்பு படுத்தி எடுத்திருப்பதை காணலாம். எலியும், பூனையும் விளையாட்டு என்ற பெயரில் முத்தக்காட்சிகளும், ஆபாசமான காட்சிகளும் இவற்றில் தாரளாமாக இடம் பெற்றிருக்கின்றன. ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட செட்ரிக் என்ற தொடர் 8 வயது சிறுவனின் காதல் கதையை இலக்காக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் குழந்தைகளின் உள்ளங்களில் இக்கார்ட்டூன்களினால் பாலியல் ஆசைகள் தாராளமாகவே விதைக்கப்படுகின்றன. ஜெக்கிசான் போன்ற சில மெஜிக் காட்டூன்கள் இஸ்லாமிய கொள்கைக்கு நேரடி மாற்றமான கொள்கைகளை சிறுவர்களின் உள்ளங்களில் பதியச் செய்கின்றன. அல்லாஹ்வை மாத்திரம் வணங்கக் கூடியவனாக, அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரிய வல்லமைகளை அவனுக்கு மாத்திரமே உரியது என்று நம்பும் வகையில் வார்த்தெடுக்ப்பட வேண்டிய சிறுவர்களின் உள்ளங்களில் இது போன்ற கார்ட்டூன்கள் மார்க்கத்திற்கு நேர் எதிரான கொள்கைகளை விதைக்கின்றன.

இந்த காட்டூன் காட்சிகளில் மார்க்கம் தடுத்த இசையும் தாராளமாகவே இடம் பெற்றிருப்பதை நாம் அறியலாம். நகைசுவை, கார்ட்டூன் போன்றவற்றைப் பார்க்கும் சகோதரர்களே இவ்விரண்டினாலும் உங்கள் பொன்னான நேரங்கள் வீனடிக்கப்படுவதை ஏனோ நீங்கள் உணருவதில்லை? அல்லாஹ் நாளை மறுமையில் உங்கள் பொன்னான நேரங்களைப் பற்றி தொடுக்கும் கேள்விகளுக்கு பதில் வைத்திருக்கின்றீர்களா?

-Rasmin Misc

source: http://rasminmisc.com/cartooncomedy/#sthash.oA8BSgBl.dpuf

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 83 = 87

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb