சட்டத்துக்கு சவால் விடும் 9 சாமியார்கள்!
இதுதான் இந்த ஞானபூமியின் லட்சணம்!
நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
சம தர்மமும், மதச் சார்பின்மையும் நோக்காகக் கொண்ட நாட்டில் மதவெறியும், சனாதன சாமியார்களின் போட்டி அரசும், காவிகளையே அதிரச் செய்யும், காவிக் காலிகளின் ராஜ்யம் உலகத்தார்முன் நம்மைத் தலைகுனிய வைக்கிறது!
ஹிந்து மதத்தினைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன ஏடுகளாலேயேகூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு, சாமியார்கள் என்ற ரவுடிகளின் ராஜ்யம், சனாதனத்தின் போர்வை தனா – தனம் கொடிகட்டிப் பறக்கிறது!
ஹரியானாவில் உள்ள ராம்பால் என்ற அய்-டெக் சாமியார் (பாலிடெக்னிக் பட்டயம் படித்தவர்) பல கோடி சொத்துக்கள் – மடங்கள் – அப்பாவி சீடர்களைக் கொண்ட அகம்பாவத்தின் சின்னமாகத் திகழுகிறார்.
சட்டங்களையும், சர்க்காரையும் சவாலுக்கு அழைக்கிறார்.
நீதிமன்றங்களை மதிக்கத் தயாரில்லை என்பது போன்று ஒரு போட்டி அரசினையே அரசுகளுக்கு எதிராக நடத்தி, ஆணவத்தின் நுனிக்கொம்பில் ஏறி அவனியோருக்கு, அதிசயக் காட்சியானார்.
அவர் மட்டுமா? இந்தியாவின் சாமியார், சாமி யாரிணிகள் பட்டியல் கணக்கிலடங்கா!
சாமியாராக என்ன தேவை – காவி உடை, இல்லை யேல் ஒரு கோவணம், அதுவும் இல்லையென்றால், முழு நிர்வாண சாமியார் – 100-க்கு 150 சதவிகித சக்தி வாய்ந்த சாமியார் என்றழைத்துக் கொள்ள, சங்கோஜப்படாத முன்னாள், இந்நாள் கிரிமினல்கள்!
இதுபற்றி பார்ப்பன நாளேடான தினமலர் ஏட்டில் வந்துள்ள செய்தியையும், படத்தினையும் அப்படியே தந்திருக்கின்றோம் (அருகில் காண்க).
மத்திய அரசையும், மற்ற முந்தைய நேபாளத்தையும் கையில் வைத்திருப்பதாகச் சொன்ன, சொல்லும் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் முதல், இரண்டாம் குற்றவாளிகளாக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குமேல் ஜெயிலில் இருந்து, பிறகு பெயிலில் வந்து, 89 பிறழ் சாட்சியங்களை யெல்லாம் வைத்தும், நீதிபதியிடமே பேசியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பல்வேறு புகார்களுக்குப் பிறகு எப்படியோ கொலை வழக்கில் விடுதலை வாங்கி விட்டும், அதற்குமேல் அப்பீல் தாக்கல் செய்யும் ஆணையையும் சில புரோக்கர் சாமிகளின்மூலம் ரத்து செய்ய வைத்தும், தனி ராஜ்யம் நடத்திடும், சட்டத்தையே ஊமையாக்கிய காஞ்சி சாமியார்களும் ஏனோ இதில் இடம்பெறவில்லை; ஒரு பிரபல பார்ப்பன எழுத்தாளரான ஒரு பெண்மணியிடம் இந்த யோக்கிய சிகாமணி நடத்தைபற்றி அவரே சாட்சியம் சொன்னதும்கூட எடுபடவில்லை.
எல்லாம் குப்பைத் தொட்டியில் அல்லது ஊறுகாய் ஜாடியில்!
சாமியார் காலில் விழும் முண்டங்களே! உங்களுக்கு இப்போதாவது புத்தி வருமா?
– ஊசிமிளகாய்
Read more: http://viduthalai.in/e-paper/91484.html#ixzz3JcX9rgy8