விபச்சாரத்தின் மறு பெயர் ‘காதல்’!
[ o முத்தமிடுவோர் தினம்,
o நிர்வாணமாக இருப்போர் தினம்,
o இறுகக் கட்டியணைப்போர் தினம்,
o ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,
o பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு கருதுகின்றது.
விபச்சாரத்திற்கு துணை போகும் பெற்றோர்கள். மேற்கு நாடுகளின் தற்போதைய நிலை எந்தளவுக்கு மோசமான காலாசாரத்தை தோற்றுவித்துள்ளது என்றால், ஒரு பெண் பிள்ளை சக மாணவர்களுடன் சுற்றுலா செல்கிறாள் என்றால் குறிப்பிட்ட பிள்ளையின் பெற்றோர் பிள்ளையில் கைப் பையில் (ஹேன் பேக்) கருத்தடை மாத்திரைகளை வைத்து அனுப்ப வேண்டும். இல்லாத பட்சத்தில் அரசாங்கம் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும். நவீனம் என்ற பெயரில் ஒழுக்க நாகரீகம் கேள்விக் குறியாக்கப்படும் அவலம் நிகழ்வதை எத்தனை பெற்றோர்கள் உணர்கிறார்கள்?
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது! ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசிட் ஊற்றினான் போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?]
விபச்சாரத்தின் மறு பெயர் ‘காதல்’!
சமூகக் கொடுமைகள், பொதுவானவை உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது. இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.
o முத்தமிடுவோர் தினம்,
o நிர்வாணமாக இருப்போர் தினம்,
o இறுகக் கட்டியணைப்போர் தினம்,
o ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,
o பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு கருதுகின்றது.
கடந்த 2012 ஜனவரி மாதத்தில் நிர்வாணமாக இருப்போர் தினம் என்றொன்றை ரஷ்ய மக்கள் கொண்டாடியதும், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் நிர்வாணமாக காட்சி தந்ததையும் மிகப் பெரிய சாதனையாக ஊடகங்கள் கொண்டாடின.
அதே ஜனவரி மாதத்தில் முழு உடம்பையும் காட்டிக் கொண்டு திரியும் சுமார் இருபத்தி ஐயாயிரம் பெண்களை ஓரிடத்தில் கூட்டி உலகிலேயே அதிகமான நிர்வாணிகள் ஒன்றினைந்த இடம் என்ற உலக சாதனையை(?) படைத்தமை ஒழுக்க விழுமியங்களை பேணிப் பாதுகாப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.
இது வரைக்கும் பல நாடுகளிலும் ஒழுக்க சீர் கேட்டை ஆதரிக்கும் தருதலைகள் முன்வைத்த ஒரு கோரிக்கைகளில் ஒன்றுதான் பாலியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதில் ஆண் பெண் வித்தியாசமின்றி பாலியல் தொடர்பான செய்திகள் செயல்பாட்டுடன் விபரிக்கப்பட வேண்டும் என்பது.
பல நாடுகளும் இந்தக் கோரிக்கையை கண்டு கொண்டாலும், வெளிப்படையாக அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்தன. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் பாலியல் தொடர்பான கற்கைகள் மற்றும் செயல்பாட்டு விளக்கம் கொடுக்கும் கல்லூரியை ஒரு பெண் ஆசிரியர் (?) ஆரம்பித்துள்ளார்.
தாய்ப் பாலில் “ஐஸ் க்ரீம்” குழந்தைக்காக தாயிடம் இருந்து கிடைக்கும் தாய் பாலை விற்பனைப் பொருளாக ஆக்கிய கொடுமையை தற்கால நவீன (?) யுகத்தில் நாம் பார்க்கக் கிடைக்கிறது எவ்வளவு பெரிய அவலம்? ஆம் தாய்ப் பால் மூலம் செய்யப்பட்ட “ஐஸ் க்ரீம்” ஆஸ்த்ரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. வெட்கக் கேட்டின் உச்சத்திற்கே மேற்கத்தேயம் சென்று விட்டது.
விபச்சாரத்திற்கு துணை போகும் பெற்றோர்கள். மேற்கு நாடுகளின் தற்போதைய நிலை எந்தளவுக்கு மோசமான காலாசாரத்தை தோற்றுவித்துள்ளது என்றால், ஒரு பெண் பிள்ளை சக மாணவர்களுடன் சுற்றுலா செல்கிறாள் என்றால் குறிப்பிட்ட பிள்ளையின் பெற்றோர் பிள்ளையில் கைப் பையில் (ஹேன் பேக்) கருத்தடை மாத்திரைகளை வைத்து அனுப்ப வேண்டும். இல்லாத பட்சத்தில் அரசாங்கம் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும். நவீனம் என்ற பெயரில் ஒழுக்க நாகரீகம் கேள்விக் குறியாக்கப்படும் அவலம் நிகழ்வதை எத்தனை பெற்றோர்கள் உணர்கிறார்கள்?
கழிசடைகளுக்கு ஒரு தினமா? கலாசார சீர்கேட்டுக்கு தினங்களை உண்டாக்கிய கழிசடைகள் சிலர் பெப்ரவரி 14ம் தேதியை காதலர்கள் தினம் என்று அழைக்கிறார்கள். கிறித்தவ மத போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள்,இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது. நமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்தியகலாசாரம் என்ற பேயரில் ஒழுக்கம் இங்கும் கேள்விக் குறியாக்கப் படுகின்றது. இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி‘அடப்பாவி உனக்கு காதலியே இல்லையா? நீயேல்லாம் வாழ்ந்தே பயனில்லை என்று நண்பர்கள்(?) பேசிக்கொள்ளும் அளவிற்கு முக்கியமான விஷயமாக மாறி விட்டது.
கவலைக் குறிய விஷம் என்னவெனில் இஸ்லாமிய இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வோ இஸ்லாமிய ஒழுக்க வாழ்வைப் பற்றிய நம் பெற்றோர்களிடத்திலும், பிள்ளைகளிடத்திலும்,இல்லாமையே.
மனிதத் தன்மையின் அடிப்படை வெட்கமே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், “நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்”என்பதும். அபூ மஸ்ஊத் உக்பா பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், (புகாரி – 3483)
வெட்க உணர்வு இல்லாதவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நபியவர்கள் சொல்வதிலிருந்து வெட்கம் என்ற உணர்வு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமன்றி வெட்கம் இஸ்லாமியனிடம் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளிலும் ஒன்றாகும்.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6243)
தவறான பார்வையையும், சிந்தனையையும்,பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை. திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்”என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)
மேற்கூறிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
செல்போனும் குழந்தைச் சீரழிவும். பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது. எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது,அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர். பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளாக மாறாமல் தடுக்கலாம். இந்த காதல் என்ற சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர்குலைந்து விட்டது. இதன் காரணமாக தற்காலத்தில் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது.
இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது. காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் மாத்திரம் காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி – தமிழ்நாடு பதிப்பு 8-5-2010).
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது! ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசிட் ஊற்றினான் போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள். இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்! சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
பிப்ரவரி 14 ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது (தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).
அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.
– Rasmin Misc
source: http://rasminmisc.com/vibacharathin-peyer-kathal/#sthash.nfDEdby7.dpuf