கவர்ச்சியாக உடையணியும் பெண்களே!
இப்படி ஆடைகள் அணிவதன் மூலம்
என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
[ பெண்கள் ஆபாசமாக, உடலை மிகுதியாக வெளிக்காட்டிக்கொள்ளும் விதமாக உடை அணிவதுதான் மாடர்ன் என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
மாடர்னாக இருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து பெண்கள் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும். ‘மாடர்ன் என்று நான் நினைப்பது உண்மையில் என் விருப்பம்தானா? அல்லது என் மேல் திணிக்கப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பிக்கொண்டு அதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இதுதான் மாடர்ன் என்று கவர்ச்சியான உடைகளை அவள் மீது மற்றவர்கள் திணிப்பதை அவள் ஏற்கக் கூடாது.
இப்படி ஆடைகள் அணிவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? இதனால் பிரச்சினைகளைத்தான் வரவேற்கிறீர்கள். இறுக்கமாக ஆடைகள் அணிவதன் மூலம்தான் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமா?
பெண்களின் மார்பளவு, இடுப்பளவு, உடல் கட்டமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வேறு யாரோ தீர்மானித்து, அவற்றைதான் சந்தையில் விற்கிறார்கள். இந்த வலையில் விழும் டீன் ஏஜ் பெண்கள் இவற்றை அணிவதற்கேற்ப தன் உடலமைப்பை மாற்றிக்கொள்ள போராடி வருகிறார்கள்.
இப்போது திருமணமான இளம் பெண்களும்கூட இந்த வலையில் எளிதில் மாட்டிக்கொள்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே நிறைய உடல் பயிற்சிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள். குழந்தை பிறந்த பின்பு இன்னும் அதிகமான உடற்பயிற்சிகள். காரணம் கேட்டால் குண்டாகிவிடக் கூடாதாம். இவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆடைகளை இவர்கள் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற வியாபார நோக்குக்குப் பலியாகிறார்கள். இதன் மூலம் அவர்கள் மனதையும் உடலையும் யாரோ ஒருவர் கட்டுப்படுத்துகிறார். ]
பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் சுரண்டலுக்கான தீர்வில் ஆண்களை எதிர் நிலையில் வைத்துத்தான் பார்க்க வேண்டுமா? அல்லது அவர்களையும் உள்ளடக்கிய ஒரு தீர்வு சாத்தியமா?
நிச்சயமாக. இன்று பெண் விடுதலைக்கு, பெண்ணியத்துக்கு அதிகம் பங்களித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆண்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம். அவர்களை உள்ளடக்காத எந்தத் தீர்வையும் நாம் கொண்டுவரவே முடியாது. இன்றுள்ள பெண் போலீஸாரின் மனோபாவம் எப்படி இருக்கிறது? இவர்கள் பெண்களுக்கு எந்தளவு உதவுவார்கள்? ஒரு பெண் ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குப் போய்விட்டால், அவர்கள் கேட்கும் கேவலமான கேள்விகளை ஆண்கள்கூட கேட்பதில்லை. முதலில் அவர்களை சரிசெய்ய வேண்டும். பெண்களுக்கு உதவக்கூடிய அதிகாரத்தில் உள்ள பெண்களை,ஆசிரியர்களை முதலில் சென்சிடைஸ் செய்ய வேண்டும். இதற்கு அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
ஆண்மை என்பது மிகப் பெரிய விஷயம் போலவும், அது இல்லாமல் போவது மிகவும் கேவலமான ஒரு விஷயம் போலவும் கருதப்படுகிறது. இயற்கையிலேயே ஆண்மை இல்லாத ஆண்களும், கருத்தரிக்க இயலாத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஒரு அறிவியல் சார்ந்த விஷயம் என்பதைத் தாண்டி, அதற்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி, ஆண்மை, பெண்மை என்கிற கருத்தியலை ஏற்படுத்திவிட்டனர். இதுதான் இன்று சமூகத்தில் இவ்வளவு ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு இன்னமும் பொதுக்களங்களில் உரிமை மறுக்கப்பட்டுத்தான் வருகிறது. முதலில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை பெற்றுத்தர அரசு முயல வேண்டும். அவை என்னென்ன, அதற்கு ஆண்களின் பங்களிப்பு என்ன என்பனவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கல்வி மூலமாகவோ அல்லது தகவல் மையங்களை, சென்சிடைசிங் புரோகிராம்கள் ஏற்பாடு செய்வதன் மூலமும் இதைச் செய்யலாம். இதைத் தனியாகக்கூட செய்யலாம். ஆணையும் பெண்ணையும், குறிப்பாகப் பதின் பருவத்தில் இருப்பவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதை விடுத்து, தண்டிப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்றே எனக்குத் தோன்றுகிறது. இதனால், தண்டனையே வேண்டாம் என்று நான் கூறவில்லை. பாலியல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவன் வெளிவரும்போது திருந்திய நபராகவா வருகிறான்? போதை அடிமை போல, அவன் ஒரு செக்ஸ் அடிமை. இதுவும் மனநோய்தான். அதை அவன் மீண்டும் செய்யாமல் இருப்பதை எந்த தண்டனை உறுதி செய்யும்?
அவன் திரும்பிய இடமெல்லாம் அவனது செக்ஸ் அடிமைத்தனத்தைத் தூண்டும் விஷயங்களே காணப்படுகின்றன. ஊடகங்கள், இணையதளம், பத்திரிகைகள் இப்படி எல்லாமே. பெண்ணின் கவர்ச்சிப் படங்களால் ஆண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதா என்று நான் இவர்களிடம் கேட்கிறேன். ஆண்களைக் கவரவே இவற்றைப் பயன்படுத்துகின்றன. ஆண்கள் கவரப்படுவதுதான் அதற்கான பலன் என்று இருக்கும்போது, அதன் விளைவுகளும் இருக்கும்.
பெண்கள் ஆபாசமாக, உடலை மிகுதியாக வெளிக்காட்டிக்கொள்ளும் விதமாக உடை அணிவதுதான் மாடர்ன் என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும். மாடர்னாக இருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும். ‘மாடர்ன் என்று நான் நினைப்பது உண்மையில் என் விருப்பம்தானா? அல்லது என் மேல் திணிக்கப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பிக்கொண்டு அதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதாவது ஒரு பெண் என்ன உடை அணிந்தாலும் அது அவளது தீர்மானமாக இருக்க வேண்டுமே தவிர, இதுதான் மாடர்ன் என்று கவர்ச்சியான உடைகளை அவள் மீது மற்றவர்கள் திணிப்பதை அவள் ஏற்கக் கூடாது.
ஆண், பெண் இருவருக்குமே பொறுப்புணர்வு வேண்டும். இந்தப் பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுத்துவிட்டாலே எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்.
நவீன உடை அணியும் பெண்கள் மட்டும்தான் இதில் பாதிக்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. சாதாரண உடை அணிந்த தலித் பெண், பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள், ‘சாதாரண உடை’ அணிந்த நடுத்தர வயதுப் பெண்கள் ஆகியோரும்தானே பாதிக்கப்படுகிறார்கள்? இதற்கும் நவீன உடை அணிவதற்கும் என்ன சம்பந்தம்?.
நவீன உடை அணிவதுதான் பிரச்சினைக்குக் காரணம் என்று நான் சொல்லவில்லை. இந்தக் கோணத்திலும் சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜீன்ஸ், டி.ஷர்ட் போன்ற உடைகளை அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உடலுறுப்புகளைக் காண்பிக்கும் ஆடைகள் நவீனம் என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படுவதைப் பற்றி யோசிக்கச் சொல்கிறேன். கவர்ச்சி ஆடைகளை அணிந்துகொண்டு ஒரு பணக்காரப் பெண் காரில் பாதுகாப்பாகப் போய்விடுவாள். ஆனால், ஒரு பொது இடத்தில் அவர்களைப் பார்க்கும் ஆண், லோயர் மிடில் கிளாஸாகவோ அல்லது அதற்கும் கீழாகவோ இருக்கலாம். இவர்களை எட்ட முடியாத அவர்கள், தங்களுக்கு எளிதாகக் கிடைக்கும் யாரையாவது தன் வெறிக்கு ஆளாக்கிக்கொண்டு திருப்தி அடைகிறார்கள்.
கவர்ச்சியாக உடையணியும் பெண்களிடம் நான் கேட்பது இதைத்தான், இப்படி ஆடைகள் அணிவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? இதனால் பிரச்சினைகளைத்தான் வரவேற்கிறீர்கள். இறுக்கமாக ஆடைகள் அணிவதன் மூலம்தான் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமா? பெண்களின் மார்பளவு, இடுப்பளவு, உடல் கட்டமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வேறு யாரோ தீர்மானித்து, அவற்றைதான் சந்தையில் விற்கிறார்கள். இந்த வலையில் விழும் டீன் ஏஜ் பெண்கள் இவற்றை அணிவதற்கேற்ப தன் உடலமைப்பை மாற்றிக்கொள்ள போராடி வருகிறார்கள்.
இப்போது திருமணமான இளம் பெண்களும்கூட இந்த வலையில் எளிதில் மாட்டிக்கொள்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே நிறைய உடல் பயிற்சிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள். குழந்தை பிறந்த பின்பு இன்னும் அதிகமான உடற்பயிற்சிகள். காரணம் கேட்டால் குண்டாகிவிடக் கூடாதாம். இவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆடைகளை இவர்கள் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற வியாபார நோக்குக்குப் பலியாகிறார்கள். இதன் மூலம் அவர்கள் மனதையும் உடலையும் யாரோ ஒருவர் கட்டுப்படுத்துகிறார். நானும் இத்தனை மனநிலைகளையும் கடந்து வந்திருக்கிறேன். என்னை நானே கேள்வி எழுப்பிக்கொண்டு, என் உண்மையான சொந்த விருப்பப்படி இப்போது நடந்துகொள்கிறேன். உண்மையில் பெரும் விடுதலை உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
பெண்கள் மீதான வன்முறை பெண் சிசுக் கொலைகளிலிருந்து தொடங்குகிறது. இதுவே இந்திய சமுதாயத்தில் பெண்களின் நிலைக்கான கண்கூடான சாட்சியாக விளங்குகிறது. இந்தியாவில் பெருகிவரும் பெண் சிசுக்கொலை விகிதம், ஆண்களுக்கு மட்டுமே பிறப்பதற்கான உரிமை இருக்கிறது, அவன் கடவுளுக்கு நிகரானவன், அவன் உலகத்தின் அனைத்து சவுகரியங்களுக்கும் உரிமையுள்ளவன் என்ற சிந்தனை வேரூன்றியிருப்பதைக் காண்பிக்கிறது. ஆண்-பெண் பாரபட்சம் இதிலிருந்து தொடங்குகிறது. இதுபோன்ற அடிப்படைக் பிரச்சினைகள் களைய்படவில்லையென்றால் பாலியல் வன்முறைகள் குறையப்போவதில்லை.ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்
சந்திப்பு: அரவிந்தன், எஸ்.கோபாலகிருஷ்ணன்
நன்றி: பொங்குதமிழ்