Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வித்தியாசங்களே வலிமையானவை!

Posted on November 2, 2014 by admin

வெவ்வேறு ரசனைகளுடைய இரண்டு பேர் சேர்ந்து வாழும் இடம் தான் குடும்பம்

[ என்ன தான் கட்டம் கட்டி, தாயம் உருட்டி, குண்ட்லியில் பொருத்தம் பார்த்தாலும் ரசனைப் பொருத்தம் பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகாது. அப்படிப்பட்ட வெவ்வேறு ரசனைகளுடைய இரண்டு பேர் சேர்ந்து வாழும் இடம் தான் குடும்பம். என்னோட ரசனைதான் உனக்கு இருக்கணும், அல்லது என்னோட ரசனைகள் தான் உனக்கும் பிடிக்கணும் என ஒருவர் முரண்டு பிடித்தால் குடும்பத்தில் சிக்கலின் கண்ணி வெடி வெச்சாச்சுன்னு அர்த்தம்.

ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களிலும் இருவரும் வேறுபடலாம், அடுத்தவர் ரசனைகளை மதிக்கும்போது இருவருமே ஒன்றித்துப் போய்விடுவது வெகு சாத்தியம். இரயில் தண்டவாளத்தின் இரண்டு பாளங்களைப் போல! முட்டிக் கொள்ளாமல் மோதிக்கொள்ளாமல், அதே நேரம் இணைந்து பயணிப்பதே வாழ்வின் வெற்றி.

ஒருவேளை ஒரு ரசனை குடும்பத்தின் நிம்மதியையோ, எதிர்காலத்தையோ பாதிக்குமெனில் அதை கணவன் மனைவி இருவரும் பொறுமையாய், தகவல்களுடன் விவாதித்துக் கொள்வதே நல்லது. உதாரணமா, “திருடுறது எனக்கு ஒரு ஹாபி” என கணவன் சொன்னால் “அப்படியா.. சூப்பர், வாங்க திருடலாம்” என மனைவி சொல்லக் கூடாது! அத்தகைய விபரீத சூழல்கள் தவிர்த்த விஷயங்களில் இருவருமே வேறுபட்ட சிந்தனைகளுடன் இணைந்து பயணிக்க வேண்டியதும் அவசியம்.

அடுத்த நபருடைய விருப்பங்கள், வேலைகள், பணிகள், செயல்கள், ரசனைகள் குறித்துப் பேசுவது, விசாரிப்பது எல்லாம் ரொம்ப நல்ல விஷயம். “உன்னோட டிராயிங் ரொம்ப நல்லா இருந்துச்சு. போன வாரம் ஒரு டிராயிங் பண்ணிட்டிருந்தியே என்னாச்சு” போன்ற சின்னச் சின்ன விசாரிப்புகள் உறவை வலுப்படுத்தும். ]

வித்தியாசங்களே வலிமையானவை!

சின்ன வயதில் நிறைய பாட்டிக் கதைகள் கேட்டிருப்போம். அரசகுமாரியின் உயிரை ஏழு மலை, ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் கிளியின் உடலில் ஒளித்து வைத்திருப்பான் அரக்கன். அந்த அரக்கனைக் கொன்று இளவரசியை மீட்பான் இளவரசன். பிரம்ம பிரயர்த்தனத்துடன் இளவரசன் நடத்தும் வீர தீரப் போராட்டங்கள் மெய் சிலிர்க்க வைக்கும்.

குடும்ப வாழ்க்கையும் இத்தகைய ஒரு மிகப்பெரிய சவாலான, கஷ்டமான, போராட்டமான விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. பெரிய பெரிய போர்களிலல்ல, சின்னச் சின்ன விஷயங்களில் தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.

ஒரு மிகப்பெரிய தேரின் வலிமை சின்ன அச்சாணியில் இருக்கிறது. இந்த காலத்தில் தேரும் அச்சாணியும் மறந்து போயிருக்கும். வேண்டுமானால் ஒரு காரின் பயணம் அதன் உள்ளே உலவும் சில துளி பெட்ரோலில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். என்ன தான் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து போஸ் ஸ்பீக்கர் வாங்கி மாட்டினாலும், பெட்ரோல் இல்லாத வண்டி ஓடாது. எனவே இது சின்ன விஷயம் தானே, முதல்ல பெரிய விஷயங்களைக் கவனிப்போம் என்று இருந்து விடக் கூடாது. அடிப்படை விஷயங்களில் கவனம் தேவை!

ரசனையும் அப்படிப்பட்ட ஒரு சின்ன விஷயம் தான். ஆனா குடும்பத்தில் எத்தனை பெரிய கீறலை வேண்டுமானாலும் அது உருவாக்கிவிடும். ரசனைகளை மதியுங்கள், இது முதல் தேவை! அதாவது உங்க மனைவிக்கு ஓவியத்துல ஆர்வம் ன்னு வெச்சுக்கோங்க, அதை முதலில் மதியுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும். உங்களுக்கு ஓவியம்ன்னாலே அலர்ஜியா இருக்கலாம். அதுக்காக உங்க மனைவிகிட்டே போய், இதெல்லாம் ஒரு ரசனையா ? வெளங்கினாப்ல தான் என்றெல்லாம் எரிச்சல் மூட்டாதீர்கள்.

அதே போல தான் உங்கள் கணவருக்கு ஒருவேளை சிக்ஸ் பேக்ஸ் மோகம் இருக்கலாம். அதுக்காக டெய்லி காலையிலேயே தெருத்தெருவா ஓடிட்டே இருக்காரு, இல்லேன்னா ஜிம்ல போய் ஆஜராயிடராருன்னா அதை மதியுங்கள். ஆமா இவரு சிக்ஸ் பேக்ஸ் வெச்சா அப்படியே காசு கொட்டும் பாருங்க, சிஸ்க்த் சென்ஸை யூஸ் பண்ணுங்கப்பா என கடுப்படிக்காதீங்க. ஒவ்வொருவருக்குமான விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் தனித்தனியானவை. தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம் தான்னு சொல்லுவாங்க இல்லையா அது மாதிரி. அடுத்தவர் ரசனையை மதிப்பது முதல் தேவை.

இரண்டாவது, அந்த ரசனைக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஊக்கம் ஊட்டுவது. ஓவியக்கார மனைவிக்கு நீங்கள் ஓவியம் சார்ந்த ஏதாவது பரிசுகள் வாங்கிக் கொடுக்கலாம். பொருட்கள் வாங்கிக் குடுக்கலாம். “ஹேய்ஸ அடுத்த வாரம் ஒரு ஓவியக் கண்காட்சி நடக்குது. சேலத்துல. டீட்டெயில்ஸ் எல்லாம் கேட்டு வெச்சுட்டேன். நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாமே” என்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுங்கள். புரியாத ஓவியம் பற்றி உங்கள் மனைவி ஒரு லெக்சர் அடித்தால் பொறுமையாய் கேளுங்கள். காதுல ரத்தம் வருது கொஞ்சம் வாயை மூடறியா என சொல்லாதீங்க. ஒவ்வொருவருக்கும் அவரவர் ரசனைகளைப் பகிர்ந்து கொள்வதில் அலாதி இன்பம் இருக்கும் என்பது சர்வதேச உண்மை.

கொஞ்சம் ரிவர்ஸ் கியர் அடித்து உங்களுக்குத் திருமணமான அந்த ஹனிமூன் காலத்துக்குப் போய்ப் பாருங்கள். அல்லது திகட்டத் திகட்டக் காதலித்த காலத்துக்குப் போய்ப் பாருங்கள். “ம்ம்.. அப்புறம்” என்பதையே மூன்று மணி நேரம் மெய்மறந்து கேட்டிருப்பீங்க தானே ? என்ன சமையல், என்ன சாப்பாடு, காலைல பல் விளக்கிட்டியா ? இட்லிக்கு சட்னியா சாம்பாரா என்றெல்லாம் போனில் பேலன்ஸ் தீர்ந்து, அப்படியே பேட்டரியும் தீரும் வரை பேசித் தீர்த்திருப்பீர்கள் தானே ! அப்போ காதுல ரத்தம் வரலையா ? சோ, கொஞ்சம் ரிலாக்ஸ்! அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்பதற்குத் தேவை காதோ, பொறுமையோ அல்ல, அன்பு !

என்ன தான் கட்டம் கட்டி, தாயம் உருட்டி, குண்ட்லியில் பொருத்தம் பார்த்தாலும் ரசனைப் பொருத்தம் பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகாது. அப்படிப்பட்ட வெவ்வேறு ரசனைகளுடைய இரண்டு பேர் சேர்ந்து வாழும் இடம் தான் குடும்பம். என்னோட ரசனைதான் உனக்கு இருக்கணும், அல்லது என்னோட ரசனைகள் தான் உனக்கும் பிடிக்கணும் என ஒருவர் முரண்டு பிடித்தால் குடும்பத்தில் சிக்கலின் கண்ணி வெடி வெச்சாச்சுன்னு அர்த்தம். ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களிலும் இருவரும் வேறுபடலாம், அடுத்தவர் ரசனைகளை மதிக்கும்போது இருவருமே ஒன்றித்துப் போய்விடுவது வெகு சாத்தியம். இரயில் தண்டவாளத்தின் இரண்டு பாளங்களைப் போல! முட்டிக் கொள்ளாமல் மோதிக்கொள்ளாமல், அதே நேரம் இணைந்து பயணிப்பதே வாழ்வின் வெற்றி.

ஒரு டி.வி பாப்பதில் இருந்தே அந்த ரசனை வேறுபாட்டை நீங்க பாப்பீங்க. அஞ்சு நாள் டெஸ்ட் மேச்சை ஃபெவிகால் போட்டு ஒட்டினமாதிரி பாத்துட்டே இருப்பீங்க, ‘ஏங்க அந்த தென்றல் சீரியலை கொஞ்சம் போடுங்களேன்’ன்னு மனைவி கேட்டா, “ஆமா.. இந்த சீரியல்ஸ் தான் சீரியல் கில்லர்ஸ். இதனாலதான் குடும்பங்கள் கெட்டுப் போவுது. கலாச்சாரம் பாழாகுது” என சட்டென ரிமோட்டையே மைக்கா மாற்றி பேச ஆரம்பிக்காதீங்க. சரி நீ பாரு என புன்னகையுடன் ரிமோட் கொடுப்பதில் இருக்கிறது உங்கள் அன்பின் வெளிப்பாடு.

புடிச்ச நிறம், புடிச்ச டிரஸ் என இந்த புடிச்ச விஷயங்கள் ரெண்டு பேருக்கும் ஒண்ணா இருக்கணும்ன்னு அவசியமே இல்லை. ஆனால் அடுத்தவங்களுக்குப் புடிச்ச விஷயத்தை ஓவரா விமர்சிக்காமல் இருக்கப் பழகணும். எதிர் எதிர் ரசனைகள் வீட்ல இருக்கிறது ரொம்ப ரொம்ப சகஜம், ஆனால் அதெல்லாம் தனிமனித சின்னச் சின்ன விருப்பங்கள், ரசனைகள் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

ஒருவேளை ஒரு ரசனை குடும்பத்தின் நிம்மதியையோ, எதிர்காலத்தையோ பாதிக்குமெனில் அதை கணவன் மனைவி இருவரும் பொறுமையாய், தகவல்களுடன் விவாதித்துக் கொள்வதே நல்லது. உதாரணமா, “திருடுறது எனக்கு ஒரு ஹாபி” என கணவன் சொன்னால் “அப்படியா.. சூப்பர், வாங்க திருடலாம்” என மனைவி சொல்லக் கூடாது! அத்தகைய விபரீத சூழல்கள் தவிர்த்த விஷயங்களில் இருவருமே வேறுபட்ட சிந்தனைகளுடன் இணைந்து பயணிக்க வேண்டியதும் அவசியம்.

அடுத்த நபருடைய விருப்பங்கள், வேலைகள், பணிகள், செயல்கள், ரசனைகள் குறித்துப் பேசுவது, விசாரிப்பது எல்லாம் ரொம்ப நல்ல விஷயம். “உன்னோட டிராயிங் ரொம்ப நல்லா இருந்துச்சு. போன வாரம் ஒரு டிராயிங் பண்ணிட்டிருந்தியே என்னாச்சு” போன்ற சின்னச் சின்ன விசாரிப்புகள் உறவை வலுப்படுத்தும்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே போன்ற ரசனைகள் அமைந்தால் சிக்கல்கள் பெருமளவில் குறைந்து விடும். ஆனால் அது அமைவது கடினம். அப்படியே அமைந்தாலும் சிக்கல்கள் எழாது என்று சொல்வதற்கில்லை. “நீ என்ன கவிதை எழுதியிருக்கே, நான் எழுதினது தான் கவிதை” என கவித் தம்பதியர் சண்டை போட சாத்தியம் இருக்கு தானே!

ஒருவருடைய விருப்பத்தைப் பற்றி இன்னொருவர் பேசும்போது அது உப்பு சப்பற்ற விசாரிப்பாய் இல்லாமல் ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதம் அல்லது விமர்சனமாய் இருப்பது ரொம்ப நல்லது. “நீ குடுத்த காஃபி நல்லா இருந்துச்சு என்று சொல்லும் முன்னாடி, குடிச்சது காபியா டீயா என்பது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். கொஞ்சம் கொஞ்சம் விஷயங்களைப் புரிந்துகொண்டு, தெரிந்து கொண்டு பேசுவது உறவின் இறுக்கத்தை நிச்சயம் அதிகரிக்கும்.

ரசனைகள் தனித்தனியே இருந்தாலும் அவற்றை இருவருமே பகிர்ந்து கொள்ளும்போதும், அதைக்ககுறித்து சிலாகிக்கும் போதும், அது குறித்துப் பேசும்போதும் கணவன் மனைவி உரையாடல் அதிகரிக்கும். அது உறவை வலுப்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் வேறு வேறு ரசனைகள் உங்களை ரொம்பவே இறுக்கமாக்க உதவும்! உங்கள் தனிப்பட்ட ஹாபிக்கள் உங்களுடைய குடும்ப நேரத்தை திருடிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை!

ஒருவேளை கணவன் மனைவிக்கு ஆன்மீகத்தில் கூட வேறுபட்ட சிந்தனைகள் நம்பிக்கைகள் இருக்கலாம். அது உங்களுக்கு கொஞ்சம் கூட உடன்பாடற்ற ஒரு விஷயமாய் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழல்களில் அந்த விஷயத்தைக் குறித்து ஆக்ரோஷமாய் விவாதிப்பது, குத்திப் பேசிக் காயப்படுத்துவது போன்றவற்றை நிச்சயம் விலக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய ஆன்மீகத்தின் வெளிச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

கிரிக்கெட்டில் ஒரு அணி தோற்கும்போதெல்லாம் கேப்டனோ, பயிற்சியாளரோ ஒரு வாக்கியத்தைச் சொல்வார்கள். “வி ஆர் கோயிங் டு ஃபோகஸ் ஆன் த பேஸிக்ஸ்”!! எளிய உண்மை அது! அடிப்படையான சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது தான் அணியின் வெற்றிக்கும், குடும்பத்தின் வெற்றிக்கும் தேவை. அவை இல்லாமல் பெரிய பெரிய விஷயங்கள் சாத்தியமில்லை. தொலைவில் இருக்கும் சிகரத்தை அடைய, பாதத்துக்கு முன்னால் இருக்கும் பள்ளத்தை முதலில் சரி செய்ய வேண்டும். காலில் முள் தைத்தவன் பாதமெங்கும் வலி என்பான். முள்ளை அகற்றிவிட்டால் வலி நீங்கி வழி பிறக்கும்.

சுருக்கமாக, தம்பதியரின் ரசனை என்பது தனிப்பட்ட விஷயம். அதை மதியுங்கள். ஊக்குவியுங்கள். அதைப் பற்றிப் பேசுங்கள். அது குறித்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உறவு வலுப்படும்

-சேவியர்

source: https://sirippu.wordpress.com/2014/06/22/family_life_2/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb