Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமண பயமா? திருமணம் என்பது சிக்கலா?

Posted on October 29, 2014 by admin

திருமண பயமா? திருமணம் என்பது சிக்கலா?

கேள்வி : என் மனதில் திருமணம் என்பது ஒருவித மீளமுடியாத பொறுப்பில் சிக்கிக்கொள்வது என்று தோன்றுகிறது. நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகளும், எதிர்பார்ப்பும் இந்த உறவில் இருக்கிறது. இப்படி எதிர்பார்ப்பு இல்லாத உறவு அமைய முடியாதா?

பதில்:  எங்கே உறவு இருந்தாலும், அங்கே ஒரு எதிர்பார்ப்பு இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஏதோ ஒரு தேவை இருப்பதால் தானே எந்த உறவும் அமைகிறது? எந்தத் தேவையும் இல்லாத நிலை இருந்தால், அடுத்தவரை நாடி உறவு அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே?

எதிர்பார்ப்பு இல்லாத உறவு என்பதெல்லாம் பாசாங்கு ஆன்மீகவாதிகளின் சிபாரிசு. இதையெல்லாம் நம்பி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

எங்கோ இருக்கும் வெறுமையை நிரப்பி, உங்களைத் திருப்திப் படுத்திக் கொள்ளத்தான் நீங்கள் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் தேவைக்காகத் தான் இந்த உறவை நாடினீர்கள் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்தால் போதும்.

‘அப்படி எதுவும் இல்லை, இன்னொரு உயிரை சந்தோஷப் படுத்துவதற்காகத் தான் அதனுடன் உறவு கொண்டேன்’ என்று நீங்கள் சொன்னாலும், அந்த உயிரை சந்தோஷப்படுத்த விரும்பியது நீங்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அந்த விதத்தில் பார்த்தால் உங்கள் விருப்பத்தை தானே அந்த உறவு நிறைவேற்றி இருக்கிறது? இந்த அடிப்படையை உணர்ந்தால், அந்த இன்னொரு உயிரை நீங்கள் மதிக்கத் தொடங்கி விடுவீர்கள். ஓரு உயிரை எப்போது மதிக்கிறீர்களோ, அவ்வுயிருக்கு நீங்கள் பொறுப்பேற்பது தானாக நிகழும்.

இந்தப் பொறுப்புணர்வு இல்லையென்றால், உறவுகள் உணர்ச்சிக் கொந்தளிப்புகளாக மட்டுமே இருக்கும். எவ்வித பாதுகாப்பு உணர்வும் இல்லாமல், அது பதற்றத்தில் தத்தளிக்கும். பொறுப்பேற்கத் தயங்கும் மேற்கத்திய உறவுகளில் இதை அதிகம் காணமுடியும்.

வியாபாரமாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, உடல், மன உணர்ச்சி ரீதியான கொந்தளிப்புகள் அடங்கினால் தான், அடுத்த கட்டத்தைப் பற்றி ஒருவர் தீர்க்கமாக யோசிக்க முடியம்.

கேள்வி :  “இன்னும் சில வாரங்களில் எனக்கு திருமணம் நடக்கப்போகிறது. கணவராக வருபவர் எப்படி இருப்பாரோ, புதிய வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற அச்சம் என்னைப் பிடித்து ஆட்டுகிறது. திருமண நாள் நெருங்க நெருங்க கலக்கமாக இருக்கிறது. இந்த அச்சத்தைத் துரத்துவது எப்படி?”

பதில் : ஐந்து குரங்குகள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டன. கூண்டின் கதவு பூட்டப்படவில்லை. இதைக் கவனித்து ஒரு குரங்கு தாழை திறக்க முயன்றபோது, மற்ற நான்கு குரங்குகளின் மீது வெந்நீர் வீசப்பட்டது. அந்தக் குரங்குகள் பயந்தன.

தாழ்ப்பாளில் கை வைத்ததால்தான் இப்படி ஆயிற்று என்று கருதி, வெளியேறப் பார்த்த குரங்கைத் தாக்கின. உள்ளே இழுத்துப் போட்டன. புதிதாக எதையாவது முயற்சி செய்யப்போய், இருப்பதையும் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் பலரை ஆட்டுவிக்கிறது.

பின்னர், உள்ளே இருந்த ஐந்து குரங்குகளில் ஒன்று வெளியே எடுக்கப்பட்டு, புதிய குரங்கு ஒன்று உள்ளே செலுத்தப்பட்டது. அந்தக் குரங்கு கதவுப் பக்கம் போனது. இப்போது, சுடுநீர் வீசப்படுவதற்கு முன்பாகவே மற்ற நான்கு குரங்குகளும் அதைத் தாக்கின.

இப்படி ஒவ்வொரு குரங்காக வெளியேற்றப்பட்டு, ஒரு கட்டத்தில் உள்ளே ஐந்து குரங்குகளும் மாற்றப்பட்டிருந்தன. அவற்றில் எதன் மீதும் கொதிநீர் வீசப்படவில்லை. ஆனாலும், காரணம் புரியாமலேயே, எந்தக் குரங்கு கதவுப் பக்கம் போனாலும், அது தாக்கப்பட வேண்டும் என்பது அங்கே எழுதப்படாத சட்டமாகிவிட்டது.

இதே நிலைதான் மனித இனத்துக்கும் நேர்ந்திருக்கிறது. ஆதி மனிதனுக்குத் தன் உயிர் குறித்து நேர்ந்த அச்சம், வழிவழியாக இன்று வரை தொடர்கிறது. அச்சம் இல்லை என்றால், பெரும்பாலானவர்கள் இறைவனை வணங்குவதையே நிறுத்திவிடுவார்கள்.

புதியவற்றைத் தவிர்ப்பதற்கே மனிதமனம் அதிகமாக விழைகிறது. மாற்றங்களே இல்லாமல், அதே அனுபவங்களே நேர்ந்து கொண்டு இருந்தால், வாழ்க்கையே மந்தமாகிவிடும்.

மகன் தன் சிறுவயதில் பெற்றோருடன் எடுத்துக் கொணட புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான். “இந்த போட்டோவில் உன் பக்கத்தில் நிற்பது யார் அம்மா?”

“உன் அப்பாடா!” மகன் அம்மாவை ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்தான்.

“நன்றாக கருகருவென்ற முடியுடன், ஸ்மார்ட்டாகத் தெரிகிறாரே! அவரை விட்டுவிட்டு, தொப்பையும் வழுக்கையுமாக இருக்கும் இந்த ஆளுடன் ஏன் அம்மா வாழ்கிறோம்?” என்றான்.

மாற்றங்கள்தாம் வாழ்க்கையின் சுவாரஸ்யம்! மாற்றங்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. உங்கள் பயத்தை வலிந்து துரத்த முடியாது. நீங்கள் வாளெடுத்து வீரராகிவிட்டால், அச்சம் காணாமல் போய்விடுமா? அப்படியும் சொல்ல முடியாது.

எதற்காக உங்கள் வீரத்தை நிலைநாட்டப் பார்க்கிறீர்கள்? எதிரி என்று ஒருவனைக் கருதியதுமே, அவனைப் பற்றிய அச்சம் பிறந்துவிடுகிறது. அந்த அச்சத்தினால், வீரத்தை வெளிப்படுத்திக் காட்சிக்கு வைக்க வேண்டி இருக்கிறது.

 அச்சம் மாறுவேடம் போட்டு ஆயுதம் ஏந்தினால், அதை வீரம் என்று நினைத்து விடுவதா? திருமணம் முடிந்ததும், அடுத்தவரை ஆளும் வாய்ப்பு கிடைக்குமா, அல்லது ஆளப்படும் பரிதாபம் நேருமா என்ற அச்சம் உங்களை செலுத்துகிறது. இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு அல்லவா திருமணம்?

எதிர்பார்ப்பில்லாத அன்பைப் பகிர்ந்து கொள்வதை விடுத்து, ஆதாயங்களை மட்டுமே தேடத் துவங்கும்போதுதான் அது கசப்பாகிப் போகிறது. அங்கே அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்தாலும் பயணம் சுகமாக அமைந்துவிடும்.

இதைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் பாதுகாப்பைப் பற்றியே கவலை கொண்டு இருப்பதால்தான் அச்சம் என்பது அடிப்படை உணர்வாகிவிட்டது. உங்களுடைய மற்ற உணர்வுகள் எல்லாமே அதிலிருந்து வேர் பிடித்து எழுந்தவை ஆகிவிட்டன.

உங்கள் அச்சத்தைக் களைவது எப்படி? நீங்களே ஒரு டைனோசரை உருவாக்கிவிட்டு, அதிலிருந்து தப்பித்து ஓடுவது எப்படி என்று யோசிப்பவரைப் போன்ற நிலையில் இருக்கிறீர்கள். அச்சம் இயல்பானதல்ல. அதை உருவாக்குவதே நீங்கள்தான். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அச்சத்தைத் துரத்த வேண்டும் என்று முனையாதீர்கள். அச்சத்தை உருவாக்காமலேயே இருப்பது எப்படி என்று பாருங்கள்.

source: http://tamilblog>.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

82 + = 90

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb