இவ்வுலகு மீது இவ்வளவு ஆசையா…!
[ நமது இதயங்களை ஷைத்தானிடம் விற்றுவிட்டோம். இறைவனை மறந்து விட்டோம். உலகில் நடைபெறும் அனைத்தும் ஏதோ காரணங்களுக்காகவே நிகழ்கின்றன. உலகம் முழுமையும் பாவங்களால் சூழப்பட்டு பாதிப்படைந்துள்ளது. ஒவ்வொரு இல்லத்திலும், ஒவ்வொரு மனிதனும் பாவம் என்ற நோயால் பீடிக்கப்பட்டுள்ளான். இவையணைத்தும் நம் முன்பாக ஒரு சில வினாக்களை எழுப்புகின்றன.
o நம் ஈமானின் வலிமை எவ்வளவு?
o இப்பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டுவருதல் எவ்வாறு?
o இவ்வுலகின் மீது இவ்வளவு ஆசை ஏன்?]
இவ்வுலகில் எல்லாமும் ஒரு காரணத்திற்காகவே நடக்கின்றன. பெரிய மாற்றத்தையும் சிறிய தடைகளையும் சந்தித்திருப்போம். நம்மில் சிலருக்கு முடிவில்லாத பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டேயிருந்திருக்கும். வேறு சிலருக்கு சில நாட்கள் அமைதி. பின் அமைதியற்ற நிலை. மீண்டும் அமைதி என மாறி மாறி இருந்திருக்கும். இந்த தொடர்ச்சி உலகம் முழுவதும் உள்ள நிலை! தன் செயல்களுக்குள் மூழ்கியிருப்பதற்காக ஷைத்தானால் உண்டாக்கப்பட்ட ஒழுங்கீனங்கள் இவை.
மது அருந்துதல், திருடுதல், கொலை செய்தல், பாவம் செய்தல், கூடுதலாக உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், பிள்ளைகள் இவர்களுக்குள்ளான விரோதம், பொறான்\மை, வெறுப்பு சுற்றிச் சூழ்ந்துள்ளன. குடும்பங்களே குடும்பங்களை அழிக்கின்றன.
அல்லாஹ் இவ்வுலகையும் அதன் வளத்தையும் படைத்த நோக்கம் மனிதன் வாழ்வதற்கு, வளத்தை முறையாகப் பயன்படுத்த கடின உழைப்பும், நேரமும் அவசியம். ஷைத்தான் இப்பாதையில் மனிதனைப் பயணிக்க விடாது தடுத்து, எளிய வகையில் பொருளீட்ட வைக்கிறேன் என்று வசீகரப்படுத்துகிறான். அந்த வாழ்க்கையிலேயே மூழ்கடித்து அல்லாஹ்வை எதிர்த்து தன்னைப் பின்பற்ற வைத்து ஆட்சி நடத்துகிறான். மனிதர்களிடம் பேராசை, பெருமை, உலகத் தேவைகளை உருவாக்குகிறான். சட்டத்திற்குப் புறம்பாக வளங்கள் செல்வம், பதவி, பயன், உணவு பெற வைக்கிறான்.
இவையணைத்தையும் செய்துவிட்டு ஷைத்தான் கையை மடித்துக் கட்டிக்கொண்டு இறைவனைப் பார்த்து “என்ன படைப்பைப் படைத்தாய்?” எனச் சிரிக்கிறான். நாம் வாழும் காலத் தலைமுறையினர் நம் கண் முன்பாக அழிந்து போகின்றனர்.
இயற்கை சீற்றங்கள் குறித்து நவீன மனிதனிடம் வினா தொடுத்தால், அறிவியலைப் பறைசாற்றி அதன் மீது பழி போடுவர்! மதம் தெரிந்தவரிடம் கேட்டால் உலகம் முடிவுக்கு வரப் போகிறது என்பர்! எந்த விளைவுகல் நிகழ்ந்தாலும் அவற்றிலிருந்து தப்பிக்கவியலாது! எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
நமது இதயங்களை ஷைத்தானிடம் விற்றுவிட்டோம். இறைவனை மறந்து விட்டோம். உலகில் நடைபெறும் அனைத்தும் ஏதோ காரணங்களுக்காகவே நிகழ்கின்றன. உலகம் முழுமையும் பாவங்களால் சூழப்பட்டு பாதிப்படைந்துள்ளது. ஒவ்வொரு இல்லத்திலும், ஒவ்வொரு மனிதனும் பாவம் என்ற நோயால் பீடிக்கப்பட்டுள்ளான். இவையணைத்தும் நம் முன்பாக ஒரு சில வினாக்களை எழுப்புகின்றன.
o நம் ஈமானின் வலிமை எவ்வளவு?
o இப்பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டுவருதல் எவ்வாறு?
o இவ்வுலகின் மீது இவ்வளவு ஆசை ஏன்?
அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் சோதனைகள் தருகிறான். சில நேரங்களில் தீவிரமான சிரமம் இன்னல்கள் அடைகிறோம். ஸபர்-பொறுமை காத்தல், தொழுகை கடைப்பிடித்தல் மூலமாக இவற்றை விட்டும் கடக்கலாம். வெற்றி காணலாம். பிரச்சனைகளுக்கு ஒரே இரவில் மாற்று மருந்து கிடைத்துவிடும் எனக் கருதிவிடக் கூடாது. அல்லாஹ்வின் காலவரையறை வரைக்கும் காத்திருப்பு தேவை. அல்லாஹ் தனது கருணையின் கதவை திறந்தால் நம் வாசல் வந்து கொட்டும்.
0 முழுமையான ஈமான் உள்ளவர் இறைவன் தரும் எந்த துயரத்தையும் ஏற்றுக் கொள்வார். அதற்கான நிவாரணம் வரும் வரை பொறுமை காப்பார்.
0 ஈமானில் குறைபாடுடையவர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்வார் அல்லது தற்கொலைக்கு முயல்வார்.
0 அறவே ஈமான் இல்லாதவர், தனது நிலையை சமூகத்திற்குள் தக்க வைப்பதற்காக திருடுவார், பொய் கூறுவார். அல்லா ஹ் தரும் எந்த சோதனைகளையும் ஏற்க மறுப்பார். தனது வாழ்க்கையை நடத்துவதற்காக எந்த செயலையும் செய்வார்.
உலக வாழ்க்கையில் மூழ்கி இறைவனை வணங்குவதை விட்டும் மறந்திருக்கிறோம். நமக்கு ஏற்படும் துன்பம், துயரங்களின் போது நாம் ரப்பையே(படைத்தவனையே) நினைவில் கொள்ள வேண்டும். அவன் முன் ‘ஸஜ்தா’ செய்ய வேண்டும்.
நமக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் ஒரு நொடியில் திருப்பி எடுத்துக் கொள்ளும் வல்லமையாளன் இறைவன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் மனத்துள் கொள்ள வேண்டும். இறைவன் வாக்குறுதி அளித்திருக்கிறான். “தன்னை நினைப்பவர்களை அவன் நினைப்பதாக”.
இன்னல், கஷ்டம் அனைத்தினுள்ளும் நல்ல காரணம் வழிவகை ஒன்றை வைத்திருக்கிறான். இறை நம்பிக்கையாளருக்கு அதனுள் நிச்சயமாக நிவாரணம் இருக்கிறது. கடும் கஷ்டங்களுக்குப் பிறகே அடையவியலும்.
– ஹைத்துருஸ்
(முஸ்லிம் முரசு அக்டோபர் 2014)