ஒரே மாதிரியான உறவு தான்! ஒன்று ஆரோக்கியத்தையும் மற்றொன்று விபரீதத்தையும் ஏற்படுத்துகிறது!
[ திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1905, 5065, 5066)
தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணமும் அதன் மூலம் ஏற்படும் நல்ல உறவும், ஆரோக்கியமும் நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.]
நல்ல உறவு வச்சிக்கிட்டா ஹார்ட் சிறப்பாக இயக்குமாம்!
அனுமதிக்கப்பட்ட (கணன்-மனைவி) (உடல்)உறவு உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது என்று நிபணர்கள் கூறுகின்றனர்.
உடலின் ரத்த ஒட்டம் சீராகிறதாம். இதயம் தொடர்பான நோய்கள் குணமடைவதோடு உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர்.
ரத்த ஓட்டம் சீராகும்
செக்ஸ் உறவின் உச்சக்கட்டத்தில் உணர்வுகளினால் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.
இதயநோய்கள் குணமடையும்
உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்கிறார் பெர்மன். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்கிறார் இந்த பாலியல் நிபுணர்.
உற்சாகம் அதிகரிக்கும்
ஆர்கஸத்தின் போது எண்டோர்பின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. இது உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும்.
சீரான உறக்கம்
உடலும் உள்ளமும் அமைதியடைந்து உறக்கம் எளிதாக வரும் என்கின்றனர் நிபுணர்கள். தூக்ககுறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 1,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பின் நிம்மதியாகஉறங்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.
புத்திக்கூர்மை அதிகமாகும்
தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்களை விட உறவில் ஈடுபடாத பெண்களில் புத்திக்கூர்மையில் சில சிக்கல்கள் இருந்ததாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் Logan Levkoff, Ph.D தெரிவித்துள்ளார். ஆர்கஸம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகப்பதோடு, அவர்களின் முடிவெடுக்கும் திறன், புத்திக்கூர்மை போன்றவைகளை அதிகரிக்கிறது என்கின்றார் இந்த பாலியல் நிபுணர்.
மூளையின் ஆரோக்கியம்
ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் விரைவாக பாய்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது இது நிரூபிக்கப்பட்டது. ஆர்கஸத்திற்குப்பின்னர் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இயற்கை வலி நிவாரணி
உடல்வலியோ மன வலியோ இரண்டையும் போக்கும் இயற்கை வலி நிவாரணி செக்ஸ். ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக பாயும் பொழுது உடலில் ஆங்காங்கே ரத்தம் தேங்கியிருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு நன்மை செய்கிறதாம். சோர்வு, மன அழுத்தம் போன்றவைகள்ஏற்பட்டிருந்தாலும், தலைவலி இருந்தாலும் அவற்றை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது ஆர்கஸத்தின் போது சுரக்கும் ஹார்மோன்கள் என்கிறார் பெர்மன்.
கள்ள உறவு வச்சிக்கிட்டா ஹார்ட் அட்டாக் வருமாம்!
அனுமதிக்கப்படாத (கணவன்-மனைவி அல்லாத) (கள்ள)உறவு உடலுக்கு பெரும் கேடு விளைவித்து இதயத்துடிப்பை நிருத்தி அகால மரணத்திற்கு இட்டுச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆபத்தானது
துணைக்குத் தெரியாமல் கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கள்ள உறவானது முதலில் சுவாரஸ்யமாகஇருந்தாலும் நாளடைவில் அதுவே உயிருக்கு ஆபத்தானதாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கொலைகளுக்குக் காரணமாகிறது.
இன்றைக்கு ஊடகங்களில் சிறப்பு செய்திகளாக இடம்பெறுபவை கள்ளக்காதல் செய்திகள்தான். இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது, குழந்தைகளை கொல்வது என பெரும்பாலான கள்ளத் தொடர்புகள் மரணத்தில்தான் முடிகின்றன. இந்த கள்ளத் தொடர்புகளைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்பதுதான் அது.
இது தொடர்பாக இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மனைவி யை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 மடங்கு மரணங்கள்
மனைவி க்கு தெரியாமல் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மனரீதியாக குற்ற உணர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவர். மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஏற்படும் அதிக பதட்டமும், ஆர்வமும் காரணமாக 3 மடங்கு அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குடித்து விட்டு உறவில் ஈடுபடுபவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
கள்ளக் காதல் செய்பவர்கள் எதற்கும் கொஞ்சம் யோசித்துக் கொள்வது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இறைவன் இருக்கிறான் அவனே இப்பிரபஞ்சத்தை படைத்து அவனே இயக்குகிறான் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்களை நாம் வாழும் காலங்களிலேயே கண்டு வருகிறோம்.
அதற்கு இதுவும் ஒரு உதராணமாகத் திகழ்கிறது ஒரே மாதிரியான உறவு தான் ஒன்று ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது மற்றொன்று ஆரோக்கியத்தை அழித்து விபரீதத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் உலகம் முழுவதும் பரவிய எய்ட்ஸ் கிருமிகளை அழிக்க முடியாமல் மனித சமுதாயம் திணறுவதிலிருந்து இறைவனை மறுப்பவர்களும், மறப்பவர்களும் புரிந்து கொள்வார்கள்.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)
உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1905, 5065, 5066)
தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணமும் அதன் மூலம் ஏற்படும் நல்ல உறவும், ஆரோக்கியமும் நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
source: http://unmai4u.blogspot.in/