Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இவைகளை சாப்பிட்டா.. புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்

Posted on October 13, 2014 by admin

இவைகளை சாப்பிட்டா.. புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்

இதெல்லாம் சாப்பிட்டா ‘புரோஸ்டேட் புற்றுநோய்’ வருவதற்கான சான்ஸ் அதிகரிக்கலாம்…!

நகரும் வேகமான உலகத்தில் நாமும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள் தான் பல. அதில் முதன்மையான இழப்பாக கருப்படுவது உடல் ஆரோக்கியம். இன்றைய சுற்றுச்சூழலும், ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் நமக்கு பலவித வியாதிகளை உண்டாக்குகிறது. அவைகள் லேசானது முதல், உயிரை கொள்ளும் வரை செல்லும். அப்படி ஒரு உயிர் கொல்லி வியாதி தான் புற்றுநோய். பல விதமான புற்றுநோய்களில் ஒன்று தான் புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer).

நாம் தினசரி சந்திக்கும் பல உடல்நல பிரச்சனைகளில் ஒன்று தான் புரோஸ்டேட் ஆரோக்கியம். அதனை சரிவர பராமரிக்காமல் போனால் புற்றுநோயை உண்டாக்கிவிடும். புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்வதில் என்ன பயன்? எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இங்கு குறிப்பிட்டுள்ள சில உணவுகள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அவைகளை உங்கள் உணவு பட்டியலில் இருந்து நீக்குவது அவசியமான ஒன்றாகும்.

புரோஸ்டேட் ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!

1. சிவப்பு மற்றும் பதப்படுத்திய இறைச்சிகள்.

சிவப்பு மற்றும் பதப்படுத்திய இறைச்சிகளை அதிகமாக உண்ணுவது பலவிதத்தில் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும். அதில் முக்கியமான ஒரு பாதிப்பு தான் புரோஸ்டேட் புற்றுநோய். சிவப்பு மாமிசத்தை அதிகமாக உண்ணுபவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட 12 சதவீதம் அதிகமாக உள்ளது. அதே போல் இந்த புற்றுநோய் முற்றிய நிலைக்கு மாறுவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட, இவர்களுக்கே 33 சதவீதம் அதிகமாக உள்ளது.

2. ஆர்கானிக் அற்ற மாமிசம்.

சந்தையில் உள்ள மாமிசங்களில் ஆர்கானிக் அற்ற மாமிசங்களே அதிகம். ஹார்மோன்கள், ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் ஸ்டீராய்ட்டுகள் போன்றவைகளை பயன்படுத்தி, உண்ணக் கூடாத உணவுகளை உண்ண வைத்து வளர்க்கப்படும் மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஆட்டுக்கறி மற்றும் கன்றிறைச்சி இதில் அடக்கம். அவை புரோஸ்டேட்டிற்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

3. கால்சியம் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்

கால்சியம் அடங்கிய உணவுகள் மற்றும் பால் சார்ந்த பொருட்களால் புரோஸ்டேட் புற்றுநோயின் இடர்பாடு அதிகமாக உள்ளது. அதிகமாக பால் பொருட்களை உட்கொண்டால், அதிலுள்ள கொழுப்பின் அளவு உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது புரோஸ்டேட்டின் ஆரோக்கியத்தையும் பெரிதளவில் பாதிக்கும்.

4. பதப்படுத்தப்பட்ட தக்காளிகள் மற்றும் தக்காளி சார்ந்த பொருட்கள்.

தக்காளியும், தக்காளியை சார்ந்த பொருட்களும் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பது உண்மை தான். அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள அளவிற்கு அதிகமான லைகோஃபீன். ஆனால் பதப்படுத்தப்பட்ட தக்காளி சார்ந்த பொருட்களை உண்ணவே கூடாது. இதனால் தகர டப்பாவை சுற்றியுள்ள ரெசினில் (பசை) பிஸ்பெனொல்-ஏ என்ற செயற்கை ஈஸ்ட்ரோஜென் உள்ளதால், அவை தக்காளிகளில் கலந்து அவைகளை அமிலத்தன்மையுடன் மாற்றும்.

5. மைக்ரோ ஓவனில் செய்யப்பட பாப்கார்ன்.

பாப்கார்ன் என்பது நார்ச்சத்தின் மூலமாக இருப்பது உண்மை தான். ஆனால் மைக்ரோ ஓவனில் செய்த பாப்கார்ன்னை தவிர்க்கவும். மைக்ரோ ஓவனில் தயார் செய்து, பையில் அடைக்கப்பட்டுள்ள பாப்கார்னில் ரசாயனங்கள் கலந்திருக்கும். அதில் மலட்டு தன்மைக்கு சம்பந்தமான பெர்ப்லூரோ ஆக்டனாயிக் அமிலமும் அடங்கியுள்ளது.

6. ஆர்கானிக் அற்ற உருளைக்கிழங்குகள்.

கொழுப்பு இல்லாத அதிக நார்ச்சத்து அடங்கிய நன்மை வாய்ந்த உணவாக விளங்குகிறது உருளைக்கிழங்கு. ஆனால் அவைகளில் பலதரப்பட்ட விஷங்கள் ஏற்றப்படுகிறது. இப்படி உருளைக்கிழங்கின் உள்வரை செல்லும் ரசயானங்களை, அவைகளை நீரில் நன்கு கழுவினாலும் போகாது. இதற்கு ஒரே தீர்வு ஆர்கானிக் உருளைக்கிழங்குகளை பயன்படுத்துவது.

7. அதிகமாக வறுத்த உருளைக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ்.

அதிகமாக வறுத்த உருளைக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவைகளில் பூரிதக் கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக பதிந்திருக்கும். உருளைக்கிழங்கில் அஸ்பராஜின் என்ற அமினோ அமிலம் இருக்கிறது. இதனை 248F மேல் சூடுபடுத்தினால், அக்ரிலமைடு என்ற பொருள் உருவாகும். இது புற்றுநோயை உருவாக்கும்.

8. சர்க்கரை.

சர்க்கரையினால் புற்றுநோய் வேகமாக பரவும். அதனால் சில இனிப்பு வகைகளை கைவிடுவது நல்லதாகும். சர்க்கரைக்கு பதிலாக பழங்களை உட்கொண்டால், அதிலிருந்து ஊட்டச்சத்துக்களாவது உடலில் போய் சேரும் அல்லவா? அதனுடன் உடலுக்கு அன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் கிடைக்கும்.

9. ஆளி விதை.

ஆளி விதை மற்றும் அதன் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அடங்கியுள்ளது. இவை கட்டிகளை வரவழைத்து புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும்.

10. தூய்மைப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்.

அதிக அளவில் வெண்ணிற மாவை உணவில் சேர்த்துக் கொள்வதால், புரோஸ்டேட்டின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றில்லை. ஆனால் முழு தானியங்களை உட்கொள்ளும் அளவு குறைவதால் நார்ச்சத்து குறையும். அதனால் புரோஸ்டேட்டின் ஆரோக்கியமும் கெட்டுப் போகலாம்.

11. காப்ஃபைன்.

காபி மற்றும் காப்ஃபைன் அடங்கிய பானங்களால், நீர்ப்பையில் எரிச்சல் ஏற்படுவதால், இவை புரோஸ்டேட்டில் ஏற்படும் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடும்.

12. மதுபானம்.

காப்ஃபைன் போலவே மதுபானமும் சிறுநீர் சுரப்பதை அதிகரிக்கும். அதனால் சிறுநீர் குழாய் வழிகளில் எரிச்சல் ஏற்படும். மேலும் மதுபானம் குடிக்கும் போது, ஒரே நேரத்தில் அதிக அளவில் பானம் உள்ளே செல்வதால், புரோஸ்டேட்டில் அதிக அழுத்தத்தை கொடுக்கும்.

source; http://chittarkottai.com/wp/2014/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

43 + = 49

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb