இன்றைய தலைப்பு
பத்து மாதங்கள்
பசி பட்டினி
பசி பத்தினி
பட்டவள்…
பத்து மாதங்கள்
மொத்த அனுபவம் பெற்றவள்
பத்து மாதங்கள்
சித்த சுபாவங்கள்
கண்டவள்
பத்து மாதங்கள்
காத்து பூத்தவள்
அவள்….
மேடைகள் வேண்டும்
பட்டிமன்றங்கள் வேண்டும்
பாடத்திட்டங்கள் வேண்டும்
படிப்பறைகள் வேண்டும்
அவள் கைக்குழந்தைக்காக
அந்தத் தாய் பட்ட
கஸ்ட்டாங்கள்
பாடி முடிக்க…
விஞ்ஞான கூடங்களும்
இரசாயண மடங்களும்
போதாது
அந்த அனுபவத்தை அளக்க…!
மழலை ரகலைகளுடன்
மனசின் இன்பம் சுரக்க
கண்டவள்
தாளாட்டுப் பாடங்கள்
காற்றின் கீதங்கள்
தாய்மையின் ஓசைகள் தாவிப்பாயும்
சந்தோச ராகங்கள்
வெளியிட்டவள் அவள்….
மழலை மொழிகள்
மகிமைச் செழிப்புக்கள்
ஒரு தாய் சேயின்
இதய தாலாட்டுக்கள்…
தத்தெடுத்த
தர்மம் அவள்
தாய்க் குலத் தலைவி அவள்…
அவள் வரவு
தாயின் சிரிப்பு
தந்தையின் விரைப்பு?
பூமியின் கனகணப்பு….
சனத்தொகையின் அதிகரிப்பு
வஞ்சமில்லா நெஞ்சுபடைத்த
பின்ஞு கரமசைக்கும்
மழலை மொழி பாடும்
குட்டி குழந்தை பாசத்தில்
காலம் கடத்துகிறாள்
அவள்…
அந்தத் தாய்,
அவள்தான்
இன்றையத் தலைப்பு.
source: http://changesdo.blogspot.in/