Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அல்லாஹ் ஒருமையானவன்! (அல்லாஹ் அஹத்)

Posted on September 30, 2014 by admin

அல்லாஹ் ஒருமையானவன்! (அல்லாஹ் அஹத்)

  முஹிப்புல் இஸ்லாம்  

எளிமை :

படிப்பறிவில்லாத பாமரனும் எளிதாய்ப் புரியும் வண்ணம் அல்லாஹ்வின் ஒருமை-ஐ அல்லாஹ் அல்குர்ஆனில் படம் பிடித்துக் காட்டியுள்ளான். வாழ்வின் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் ஒருமையைப் பிரதிபலிக்கச் செய்வது மானுடத்தின் நீங்காக் கடமை. இறை ஒருமை மொழிய, எழுத, முழங்க மட்டுமன்று. வாழ்வில் வாழ்வியலாக்கி ஒழுகுவதற்கே!

ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் நுணுக்கமும் நுட்பமும் நிறைந்த வார்த்தைகள், அல்லாஹ்வின் அருளுரையாய் இறை ஒருமையைக் கற்றுத் தருகின்றன. நயமிகு நயத்தக்க வார்த்தைகள் அல்லாஹ்வின் ஒருமையின் தனித்துவத்தை நிலை நிறுத்துகின்றன.

அல்லாஹ்வின் ஒருமையைச் சுட்டுவதற்கு ஆளப்பட்டுள்ள ஆழமான வார்த்தைகள் பண்டிதரைப் பரவசப்படுத்துவதற்கன்று; வியப்பில் ஆழ்த்துவதற்குமன்று; ரசிப்பதற்கும் அன்று.

படித்தால் புரியாத பண்டித கடின மொழி நடை அல்லாஹ்வின் அருளுரைகளில் தவிர்க்கப்பட்டுள்ளது. இனிய எளிய நடை குர்ஆன் கருத்துக் களை பாமரர்க்கும் இலகுவாய் கொண்டு சேர்த்து விடுகிறது. அதற்கோர் குறிக்கத்தக்க எடுத்துக்காட்டு “சூரத்துல் இஹ்லாஸ்’. சுருங்கக் கூறி விளங்க வைப்பது குர்ஆனின் தனித்துவம். அதற்கு ஓர் சோற்றுப் பதம் சூரத்துல் இஹ்லாஸ்.

சூத்திரம் :

பிரம்மாண்ட இறைக் கோட்பாட்டின் இரத்தினச் சுருக்கம் சூரத்துல் இஹ்லாஸ்.

1. சொல்லுக! (நபியே பிரகனப்படுத்துக) அவன் அல்லாஹ் (இறைவன்) ஒருவன் : (குல் ஹுவல் லாஹு அஹத்).

2. அல்லாஹ் தேவையற்றவன் :

“அல்லாஹுஸ்ஸமத்’.

3. அவன்(எவரையும்) பெறவுமில்லை : “லம்யலித்’, அவன்(எவராலும்) பெறப்படவுமில்லை: வலம் யூலத்.

4. அன்றி அவனுக்கு நிகராய் எவரும் (எதுவும்) இல்லை: “வலம் யகுல்லஹு குஃப்வன் அஹத்;.

பரந்த பொருள், விரிந்த விளக்கத்தை உள்ளடக் கியதுதான், அல் இஹ்லாஸ் அத்தியாயம். இறை அருளிய நான்கு சிறு வாக்கியங்களின் இரத்தினச் சுருக்கம்.

ஒவ்வொரு கணக்கிற்கும் சூத்திரம் உள்ளது. சில சூத்திரம் எளிமையானவை. பல சூத்திரம் கடுமை யானவை. அதன் காரணம், கணக்குப் போடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குறையுள்ள மனிதர்கள் கண்ட சூத்திரங்களின் குறைபாடு இது.

மனிதர்கள் கண்ட சூத்திரம் கடுமையானது, கடினமானது, சிக்கலானது. குறைவுள்ள மனிதர் களின் தவறு செய்யும் இயல்பு, மனித பலகீனம். குறைகட்கும், தவறுகட்கும் அப்பாற்பட்ட நிறை வாளன், ஏகன் அல்லாஹ். நிறைவுகள் அனைத்தின் ஒரே உரிமையாளன், இறை ஒருமையை சிக்கல் ஏதும் இல்லாத எளிய சூத்திரமாய் அருளியுள்ளான். உள்ளடக்கம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. அல்லாஹ்வின் ஒருமையின் உள்ளடக்கமாய்த் திகழ்வது அல் இஹ்லாஸின் தனித்துவம். 112வது அத்தியாயம் அல் இஹ்லாஸ், அல்குர்ஆனின் மணிமகுடம்.

அத்தியாயப் பெயர், “அல்இஹ்லாஸ்’, “ஏகத்துவம்’ அல்லாஹ்வின் ஒருமையை அருமையாய் உணர்த் துகிறது. எப்படி இவ்வத்தியாயம் அல்லாஹ்வின் ஒருமையைக் காட்டப் போகிறது? பெயரே இவ்வத்தி யாயத்தைக் கற்கும் ஆவலைத் தூண்டுகிறது.

பொருத்தமான பொருட் பொலிவுள்ள வார்த்தை கள் அல்லாஹ்வின் ஒருமையின் சாரம்சத்தை அப்படியே பிழிவாய்த் தருகிறது. இப்படி இவ்வத்தி யாய மகிமையை வகைப்படுத்தலாம். சொல்லில் எழுத்தில் மட்டுப் படுத்திவிட இயலாது.

பல்வேறு சந்தர்ப்பச் சூழ்நிலைகளில் பல்வேறு கோணங்களில் இவ்வத்தியாயச் சிறப்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிகரமாக்கிக் காட்டியுள்ளார்கள், இதோ அதில் ஒன்று.

“எனது உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது பிரமாணமாக இந்த அத்தியாயம் திருகுர்ஆனில் மூன்றில் ஒரு பாகமாய் இருக்கும்’ (தகவலாளர்: அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு பதிவாளர்கள்: Al-Buhari, Abu Dawud 2:152 and An-Nasai in Al-Kubra 5:6)

அல்லாஹ்வின் ஒருமையைத் தெளிவாய் உணர்த்தும் “அல் இஹ்லாஸ் அத்தியாயம், குர் ஆனில் மூன்றில் ஒருபாகம் என நபி(ஸல்) உயர்த்திக் காட்டுகிறார்கள். இவ்வத்தியாயச் சிறப்புக்கு இதைவிட வேறு சான்று ஏதும் தேவையில்லை.

அஹத் :

“குல்ஹுவல்லாஹு அஹத்..
வலம் ய குல்லஹு குஃபவன் அஹத்’

முதலாவது துவக்க வாக்கிய முடிவில் “அஹத்’ அத்தியாயத்தை நிறைவு செய்யும் நான்காம் வாக்கிய முடிவில் “அஹத்’ என்ற வார்த்தை ஆளப்பட்டுள்ளது.

அவன் அல்லாஹ்(இறைவன்) ஒருவன், என்று மக்கள் சமுதாயத்துக்குப் பிரகடனப்படுத்தி விடுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். முதலாம், நான்காம் வாக்கியங்கள் “அஹத்’ என்ற வார்த்தையால் நிறைவு பெற்றுள்ளன.

ஒன்றைக் குறிக்க அரபு மொழியில் வாஹித், அஹத் என்னும் இரு வேறு வார்த்தைகள் ஆளப்படுகின்றன. ஒன்று என்பதைக் குறிக்கும் பொது வார்த்தை வாஹித். ஒரு மனிதன், ஒரு பறவை, ஒரு பொருள்ஸ இப்படி எந்த ஒன்றையும் ஒருமையில் சுட்டும் பொது வார்த்தை வாஹித்.

ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் காட்டவும், குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சுட்டுவதற்கும் இன்றள வும் அரபு மக்கள் அன்றாட வழக்கத்தில் உள்ளது வாஹித்.

(ஸ.”வாஹித்’ எனும் சொல் தன்னுள் பலவற்றை வைத்து இருக்கும் எல்லா பொருள்களுக்கும் பயன் படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு மனிதன், ஒரு நாடு, ஓர் உலகம் இவையனைத்தையும் வாஹித் எனக் கூறுகின்றனர். (நூல்: திருகுர்ஆன், நு மூலம், நு தமிழாக்கம், நு விளக்கவுரை பக். : 1153 IFT வெளியீடு, சென்னை, 10ம் பதிப்பு 2008)

அல்லாஹ்வின் ஒருமையை நிலைநிறுத்தும் போது குறிப்பாக அஹத் சிறப்பாக ஆளப்படுகிறது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற ஒரே இறை வனை ஒருவன் என்று அல்லாஹ்வின் ஒருமையை அஹத் நிலைநிறுத்துகிறது. குல்ஹு வல்லாஹு அஹத், பிரகடனப்படுத்துக, அவன் அல்லாஹ் ஒருவனே! அந்த அல்லாஹ், ஒருமையில் தனித்து இலங்குவது ஏன்?

வலம் யகுல்லஹு குஃப்வன் அஹத், அவன் போன்று எவரும் (எதுவும்) இல்லை, அன்றியும் அவனுக்கு ஒப்பாக எவரும் (எதுவும்) இல்லை. And there is none comparable to him. . மேலும் எவரும் (எதுவும்) அவனுக்குச் சமமாக இல்லை, அவனுக்கு நிகராய் எவரும் (எதுவும்) இல்லை. அஹத், அல்லாஹ்வின் ஒருமையை நிலை நிறுத்துகிறது, நிறைவும் செய்கிறது.

அல்லாஹ்வின் ஒருமை :

எந்த ஒன்றுக்கு, எந்த ஒருவனுக்கு நிகராய், ஒப்பாய், சமமாய், இணையாய்ஸ இன்னொன்று இல்லையோ, இன்னொருவன் இல்லையோ, அந்த ஒருவன் தான் ஒரே இறைவன், அல்லாஹ்.

அல்குர்ஆன் விரிவுரையாளர் E.M.அப்துர் ரஹ்மான் அவர்கள், அஹத் என்ற பதமானது: “எந்த ஒன்றும் அந்த ஒன்றுக்குச் சமானமாக இருக்க முடியாதோ அந்த ஒன்றை மட்டும் குறிக்கும்.

அஹத் என்ற பதமானது தனக்கு எவ்வகை யிலும் நிகரில்லாத அல்லாஹ் ஒருவனை மட்டும் குறிப்பதற்காக உபயோகப்படுத்தப்படும்ஸ’ (அன்வாருல் குர்ஆன், பக்: 25, அம்மஜுஸ்வின் தமிழ் தப்ஸீர், ஆதம் ட்ரஸ்ட், கூத்தாநல்லூர், முதல் வெளியீடு 1955)

அல்லாஹ் குறித்த எமது ஆய்வுகளில்

அல்லாஹ்வின் ஒருமை

அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்

இரண்டும் திரும்பத் திரும்ப வருவது ஏன் என நண்பர்கள் அடிக்கடி வினவுவர். “அஹத்’ என்பது தான் அல்லாஹ்வின் ஒருமையையும், அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதையும் கற்றுத் தருகிறது எப்படி? அல்லாஹ் ஒருவன், என அல்லாஹ்வின் ஒருமையை, “அல்லாஹ் அஹத் கற்றுத் தருகிறது. மேலும் எவரும் (எதுவும்) அவனுக்குச் சமமாக இல்லை என்று அல்லாஹ்வை ஒருமைப்படுத்து தலைக் கற்றுத் தருகிறது. “வலம் யகுல்லஹு குஃப்வன் அஹத்’.

அல்லாஹ் எவர்க்கும் எதற்கும்

சமமானவன் அல்லன்!

இணையானவன் அல்லன்!

ஒப்பானவன் அல்லன்!

அவனுக்கு நிகர் அவன் மட்டுமே! வேறு எவரும் அல்லர், வேறு எதுவும் அல்ல என்று அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்! உணர்த்துவது அஹத்.

வாழ்வியல் அறநெறி :

அல்லாஹ் அருளிய அல்லாஹ்வின் ஒருமை ஒரு வாழ்வியல் அறநெறி! வெற்று வேந்தாதமும் அல்ல! தத்துவமும் அன்று. எழுதவும், பேசவும் வெறும் முழக்கத்திற்குரிய கோட்பாடாய் மட்டும் அல்லாஹ் அதை அருளவில்லை.

கொள்கையாய் அல்லாஹ் அருளியதே இறை ஒருமை! அல்லாஹ்வின் மேற்பார்வையில் அனைத்து நபிமார்களாலும் வாழ்வியலாக்கிக் காட்டப்பட்டுவிட்டது. அல்லாஹ்வின் ஒருமையின் தனித்துவமும், தனித்தச் சிறப்பும் இஃதே.

நபிமார்களைத் தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்ற சாதாரண சாமான்யர் வாழ்வும் இறை ஒருமையின் பிரதிபலிப்பாய்ப் பதிவுகளாகியுள்ளன. அல்லாஹ் வின் ஒருமையின் உன்னதம் இதுதான். இன்றளவும் இந்நன்னிலை நீடிக்கிறது. இன்ஷா அல்லாஹ் இவ்வுலகு உள்ளளவும் இவ்வுன்னதம் நீடிக்கும்.

அல்லாஹ்வின் ஒருமையை வாழ்வியலாக்கி யோர், வாழ்வியலாக்குவோர் எல்லாக் காலங்களி லும் எண்ணிக்கையில் குறைவானவர்களே! இம்மை இழிவுகளால், இடர்களால் எத்தனை எத்தனை இன்னல்களுக்கு ஆளாகியிருந்தாலும் கோடிட்டு கொள்க. இன்ஷா அல்லாஹ், மறுமையில் வாகை சூடப்போகும் வெற்றியாளர்கள் இவர்களே!

வாழ்வால் அல்லாஹ்வின் ஒருமைக்கு மகுடம் சூட்டிய அவர்களை, இடையறாத அருள் மழையால் அல்லாஹ் மறுமையில் கெளரவிக்கிறான். அல்லாஹ் வின் ஒருமையின் அருமைக்கு இதைவிட வேறு அத் தாட்சி எதுவும் தேவையில்லை. உணர்க, உணர்த்துக.

ஒருமைப்படுத்துதல் :

அல்லாஹ் ஒருமையானவன் என்பதோடு அல்லாஹ்வின் ஒருமை நின்றுவிடவில்லை. இறை வன் தொடர்புடைய எதுவும், எப்போதும், தனித்து ஒருமையில் துவங்குவது காண்க. (112:1). தனித்து ஒருமையில் தொடர்வதும் காண்க. (அல்குர்ஆன் : 112:2,3) தனித்து ஒருமையில் நிறைவு பெறுவதும் காண்க. (அல்குர்ஆன் : 112:4)

அல்லாஹ்வின் ஒருமை, அதை வாழ்வில் வாழ் வியலாக்குவதால்தான் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துதல். அதற்கோர் எளிய, இனிய, இரத்தினச் சுருக்க சூத்திரமாய் “அல்இஹ்லாஸ்’ ஒளிர்கிறது. வாசிக்க, எழுத்தில், பேச்சில் மேற்கோளாக்கஸ. முழக்கத்திற்குரிய கோட்பாடாய் மட்டும் “அல்இஹ் லாஸ்’ அருளப்படவில்லை. வாழ்வை நெறிப்படுத் தும் வாழ்வியல் அறநெறியாக அல்லாஹ், “அல்இஹ்லாஸை’ அருளியுள்ளான். கோடிட்டுக் கொள்க. எந்நிலையிலும் மறவாது நினைவில் நிறுத்திக் கொள்க.

உதடுகளால் ஏற்று உள்ளத்தால் செயலால் இறை ஒருமையைச் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தியத் தேசப் பெயர் தாங்கிகளே! முஸ்லிம் போலி களே! இதுவரை எப்படியோ போகட்டும். விட்டு விடுக. இனியேனும் இறை ஒருமையின் உன்னதம் உங்கள் உள்ளங்களை விழிப்படையச் செய்யட்டும். அல் லாஹ்வின் ஒருமையின் பிரதிபலிப்பாய் உங்கள் வாழ்வு சிறக்கட்டும்; முயற்சி செய்க. உழைத்திடுக. அல்லாஹ் அருள் செய்வானாக. ஆமீன்.

முன் வருக!

சர்வதேச அளவில் ஏற்றோர் கணிசமாயிருப்பி னும், பிரிவார் கைங்கரியத்தால் இறை ஒருமை,ஷிர்க்’, இறைக்கிணையாக்குதலாய் உருமாற்றப் பட்டுவிட்டது. பிரிவார்களிடம் சிக்கிய இறை ஒருமை, குரங்குக்கைப் பூமாலையாகி விட்டது. “அஸ்தஃ பிருல்லாஹ்’, அல்லாஹ் காத்தருள்வானாக. ஆமீன்.

அல்லாஹ்வின் ஒருமையின் தனித்துவத்தைத் துவங்குவது அஹத். நிறைவு செய்வதும் அஹத். அதை இந்த ஆய்வில் தனித்துவத்தோடு நிறுவு வதற்கு அருள் பாலித்த அல்லாஹ்விற்கே அனைத் துப் புகழும், பெருமையும்!

அல்ஹம்துலில்லாஹ்.

source: http://annajaath.com/archives/6938

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 88 = 95

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb