தெய்வீகக் குழந்தை என்றுகூறி மண்ணில் புதைத்துக் கொன்ற விபரீதம்!
பரத்பூர் (ராஜஸ்தான்) செப். 22- தெய்வ சக்தி குழந்தை என்று கூறி இரண்டு வயது குழந்தையை மண் ணில் புதைத்த கொடுமை ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கும்பார் கிராமத்தைச் சேர்ந்த இணையர்களுக்கு குஷ்பூ என்ற 2 வயதுக்குழந்தை இருந்தது. இக் குழந்தை குறைமாதத்தில் பிறந்ததால் அவ்வப்போது வலிப்பு வரும். சரியான மருத்துவ சிகிச்சை எடுத்து நன்றாக குணப்படுத்த முடியும். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே குழந்தையின் பெற் றோர்கள் குழந்தைக்கு தெய்வ சக்தி இருக்கிறது, காளி இவள் உடலில் தங்கி இருக்கிறார்.
அவ்வப் போது தனது ஆக்ரோசத்தைக் காட்டி வருகிறாள் என்று ஊரெல்லாம் நம்ப வைத்தார்கள். ஊர்க்காரர் களும் இந்தக்குழந்தையை அவ்வப் போது வந்து பூசை செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் மாகாளி கனவில் வந்து தனது தெய்வீக சக்தியை நிரூபிக்க புதைமண்ணில் இருந்து வருவேன் என்று கூறியதாக கூறி குழந்தையை ஊரார் முன்பு உயிரோடு புதைத்து விட்டனர்.
அது மட்டுமல்லாமல் குழந்தை புதைத்த இடத்தில் கூடாரம் கட்டி ஊரார் எல்லாம் ஒன்று சேர்ந்து பூசைகள் செய்ய ஆரம்பித்து விட்டனர். இது மட்டுமல்ல; இந்த விவரம் பக்கத்து ஊர்களுக்கும் பரவ ஊர்மக்கள் குழந்தை உயிரோடு வரு வதைப் பார்க்க குவிந்து விட்டனர்.
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று இந்த காட்சியை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டு இருந்தது.
இந்த விவகாரம் எப்படியோ காவல்துறைக்கு தெரியவே பரத்பூர் காவல்துறை இணை ஆய்வாளர் சம்பவ இடத் திற்கு வந்து குழந்தையை தோண்டி எடுக்க உத்தர விட்டார்.
ஆனால் உள்ளூர்க்காரர்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க அதிக காவலர்களை அவ்விடத்திற்கு கொண்டு வந்து அனைவரையும் விரட்ட வேண்டியதாயிற்று இறுதி யில் புதைகுழியில் இருந்து குழந் தையை தோண்டி எடுத்தால் குழந்தை இறந்து போயிருந்தது.
உடனடியாக குழந்தையை பரத்பூர் மருத்துவமனையில் பிரேத பரிசோ தனைக்காக சேர்த்தனர். பிரேத பரி சோதனையில் குழந்தைக்கு வயிற் றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிர் விட்டது தெரிய வந்தது. குழந்தை உயிருடன் புதைக்கப் பட்டு மூச்சுத்திணறலால் இறந்தது உறுதிசெய்யப்பட்டது. இது தொடர் பாக யார்மீதும் இதுவரை வழக்குப் பதிவுசெய்யப்படவில்லையாம்.
source: http://viduthalai.in/