ஆட்பலம் ஆயுதபலமல்ல மாபெரும் பலம்!
‘நிராகரிப்பவர்களே! நீங்கள் வெற்றியின் மூலம் தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி முஃமின்களுக்கு வந்துவிட்டது. இனியேனும் நீங்கள் தவறை விட்டும் விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும். நீங்கள் மீண்டும் போருக்கு வந்தால் நாங்களும் வருவோம். உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் என்று முஃமின்களே கூறி விடுங்கள்’ (அல்குர்ஆன் 8:19)
பத்ருப் போர் நிகழ்ச்சிகளை விமர்சிக்கும் குர்ஆன் விமர்சனத்தின் ஒரு பகுதியாக இந்த வசனம் அமைந்திருக்கிறது. காபிர்களின் சூழ்ச்சிகளுக்கு எதிராக இறைவன் சூழ்ச்சி செய்வான் என்ற உண்மையை இந்த அத்தியாயம் சொல்கிறது.
வழிகேட்டில் இருப்பவர்களையும், தான் கேளாததை அவர்களாகவே புணைந்து கூறுபவர்களையும், தனது உறவினர்களை வறுத்துபவர்களையும் இறைவா! தோல்வி அடையச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தவர்களாகவும், அல்லாஹ்வின் வெற்றித் தீர்ப்பை எதிர்பார்த்தவர்களாகவும் சற்று முன்பு போரை ஆரம்பித்துள்ள காபிர்களை நோக்கி இந்த வசனத்தால் சொல்லப்படுகிறது.
இது தான் அல்லாஹ்வின் வெற்றித் தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்த அபூஜஹலின் மிகச்சரியான துஆவாகவும் இருந்தது. காபிர்களின் முயற்சிக்கு தோல்வியே இறுதியாகும். இப்போது அவர்கள் விமர்சிக்கப்பட்ட வெற்றித் தீர்ப்பை தேடியவர்களாக நேரடியாக அல்லாஹ்விடமே வேண்டுகின்றனர்.
பத்ருப் போரில் நடந்தவை விதிவிலக்கானது அல்ல, உண்மையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படியே நடந்துள்ளது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இவர்களைவிட அவர்களின் படை அதிகமானோரை கொண்டிருந்தும் எந்த பலனையும் அளிக்க வில்லை. ஏனென்றால் இறைவன் எப்போதும் முஃமின்களுடன் இருக்கின்றான் என்பது மாறாத சட்டமாகும்.
‘நிராகரிப்பவர்களே! நீங்கள் வெற்றியின் மூலம் தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி முஃமின்களுக்கு வந்துவிட்டது. இனியேனும் நீங்கள் தவறை விட்டும் விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும். நீங்கள் மீண்டும் போருக்கு வந்தால் நாங்களும் வருவோம். உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் என்று முஃமின்களே கூறி விடுங்கள்’.
உங்களுக்கும் முஃமின்களுக்கும் இடையே இறைவனின் தீர்ப்பை நீங்கள் கேட்டு இருந்தீர்கள். வழிகேட்டில் இருப்பவர்களையும் உறவினர்களை வறுத்துபவர்களையும் அழித்து விடுமாறு நீங்கள் இறைவனிடம் துஆச் செய்து இருந்தீர்கள். உங்களுடைய வேண்டுகோளின் படி இதோ இறைவன், ‘தோல்வி உங்கள் பக்கம் தான்’ என்று பதிலளித்து விட்டான். எந்தக் கூட்டம் வழிகேட்டில் இருக்கிறது? எந்தக் கூட்டம் உறவினர்களை வறுத்துகிறது என்பதை இப்போது நீங்கள் உறுதியாக அறிந்து கொண்டீர்கள்.
காஃபிர்கள் தங்களது நிராகரிப்பை கைவிட்டு விடுமாறும், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொள்வதை கைவிடுமாறும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வதை கைவிடுமாறும் இங்கே அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ‘இனியேனும் நீங்கள் தவறை விட்டும் விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்’. ஆனால் இந்த உபதேசம் எச்சரிக்கையோடு இணைந்தே இருக்கிறது.
‘நீங்கள் மீண்டும் போருக்கு வந்தால் நாங்களும் வருவோம்’ அதன் விளைவு எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே, அதை எவ்வளவு பெரிய படையும், எத்தனை பெரிய ஆயுதங்களாலும் மாற்றவே முடியாது. ‘உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது’ அல்லாஹ் முஃமின்களின் பக்கம் இருக்க முடிவு செய்து விட்ட பிறகு எவ்வளவு பெரிய படையாக உங்கள் படை இருந்தாலும் என்ன பயன்?. ‘மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான்’ இது போன்ற போரின் இரு பக்கமும் ஒரு போதும் சமமாக இருக்காது.
ஒருபக்கம் அல்லாஹ்வே அவர்கள் பக்கம் இருக்கிற முஃமின்கள், மறுபக்கமோ அவர்களோடு போரிடும் சாதாரண மனிதர்களான காஃபிர்கள். இதுபோன்ற போரின் விளைவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான்.
அரேபியர்களில் நிராகரிப்பாளர்கள் இந்த உண்மையை அறிந்தவர்களாகவே இருந்தனர். வரலாற்றுப் புத்தகங்களில் வரும் சிந்தனையைக் கவருகிற கற்பனைப் பாத்திரங்களைப் போன்று தெளிவாக புரிந்து கொள்ள முடியாதவனாக அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டவனாக எல்லாம் வல்ல அல்லாஹ்வை அவர்கள் புரிந்து வைத்திருக்க வில்லை. அரேபியர்களின் நிராகரிப்பு, அல்லாஹ் இருப்பதை மறுக்கக் கூடிய அளவுக்கோ அல்லது உண்மை இஸ்லாத்தை முழுதும் நிராகரிக்கும் அளவுக்கோ சென்றுவிட வில்லை.
அவர்கள் அல்லாஹ்வுக்கு முழுதும் கட்டுப்படவில்லை, அவர்களது சட்டத்தையும் வாழ்க்கை நெறியையும் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து பெற்றனர் என்பது தான் இங்கே குறிப்பிடப்படும் நிராகரிப்பாகும்.
இறைவனின் உள்ளமையை ஏற்றுக் கொண்ட அவர்களுடைய ஒப்புதல் மூலத்திற்கும், சர்வசக்தனாக அவனை புரிந்து வைத்திருக்கிற அவர்களின் அறிவிற்கும் ஏற்ப, நிச்சயமாக அவர்கள் நடக்கவில்லை.
குரைஷிப்படை பாலைவனத்தில் சென்று கொண்டிருந்த போது, கப்பாப் பின் அய்மா அல்கைபரீ என்பவரோ அல்லது அவரது தந்தையோ உணவுக்காக அறுக்கப்பட்ட ஏராளமான ஒட்டகங்களை அவர்களுக்கு பரிசாக அனுப்பினார். இன்னும் ஆயுதங்களையும் போர்ப்படை வீரர்களையும் அவர்கள் கேட்ட மாத்திரத்தில் அனுப்பி வைக்க தாம் தயாராக இருப்பதாகவும் செய்;தி அனுப்பினார்.
அவரது மகனிடத்தில் அவர்கள் இந்த பதிலை கொடுத்தனுப்பினார்கள்: ‘நீங்கள் உங்களது கடமையை விட அதிகமாகவே செய்து விட்டீர்கள், அதற்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் சாதாரண மக்களோடு போருக்குச் சென்றால் நிச்சயமாக நாங்கள் அவர்களோடு சரிக்குச் சரியாக போர் செய்ய தகுதியானவர்களாக இருப்போம். ஆனால் முஹம்மது சொல்கிறபடி அல்லாஹ்வோடு போருக்குப் போனால் அவன் முன்பு எந்தப்படையும் நிற்காது’.
அல்அஹ்னஸ் இபுன் சுரைக் என்ற காஃபிர் அவனுடைய காஃ.
இன்னும் அரேபியர்களின் பிர்அவ்ன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அழைக்கப்பட்ட அபூஜஹ்ல் சொன்னான்: ‘எங்கள் இறைவா! நெருங்கிய உறவினர்களை வருத்துகிற, பொய்யை புனைகிற கூட்டத்தினரை இந்த நாளில் அழித்து விடு!’.
உத்பா பின் ரபீஆ என்பவர் ஒருவரை அபூஜஹ்லிடம் சண்டையிடாதிருக்க உபதேசிக்குமாறு அனுப்பிய போது அவன் சொன்னான்: ‘இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களுக்கும் முஹம்மதுவுக்கும் இடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்காத வரை நாங்கள் சண்டையிடுவதிலிருந்து பின் வாங்க மாட்டோம்’.
இந்த உதாரணங்கள் அவர்களது கடவுட்கொள்கைகளையும் அபாயகரமான எல்லாச் சூழ்நிலைகளிலும் அது அவர்களது மனதில் எந்த அளவுக்கு குடிகொண்டிருந்தது என்பதையும் காட்டுகிறது. அவர்கள் அல்லாஹ்வை முற்றிலுமா நிராகரித்தார்கள் என்ற கேள்விக்கே இங்கே இடமில்லை, அல்லது அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்து அறியக்கூடியவன் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவா இருந்தார்கள் என்ற கேள்விக்கும் இங்கே இடமில்லை, அல்லது இரண்டு கூட்டத்தினருக்கு இடையே அவனால் முழுமையான தீர்ப்பு வழங்க முடியும் என்பது பற்றி அவர்கள் அறியாமலா இருந்தார்கள் என்ற கேள்விக்கும் இங்கே இடமில்லை.
பிரட்சனையே அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பற்றியது தான். அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து அவர்களுடைய வாழ்க்கைத் திட்டத்தையும் சட்டத்தையும் பெற்று அதை அவர்கள் பின்பற்றியதே அந்த இணைவைத்தலாகும்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கிற ஏராளமான மக்கள் அதே நிராகரிப்பை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கா காபிர்களும் இப்ராஹீம் நபியை நம்பி அவரையே பின்பற்றுவதாக நினைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த தவறான நம்பிக்கை தான் வழிகேட்டில் இருக்கிற உறவிர்களை வருத்துகிற கூட்டத்தாரை அழித்து விடுமாறு அபூஜஹ்ல் இறைவனிடம் துஆச் செய்து, இறைத்தீர்ப்பை தேடுவதற்கு காரணமாயிற்று.
அவர்கள் செய்து வந்த சிலை வணக்கம், அல்லாஹ் தனக்குத்தானே இருப்பதாக சொன்ன பண்புகளைப் போன்று அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட எந்த இறைக்கோட்பாடுகளையும் தழுவியதாக இருக்க வில்லை. அவர்களின் சிலை வணக்கத்தைப் பற்றியும் சிலை வணக்கத் தத்துவத்தைப் பற்றியும் குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.
‘அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே அன்றி நாங்கள் அவர்களை வணங்க வில்லை, என்கின்றனர்’. (அல்குர்ஆன், அஜ்ஜுமர் 39:03)
இறைவனிடத்தில் இவர்களுக்காக அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்று நினைத்து தான் அப்போதைய சிலைவணக்கத்தின் நம்பிக்கையாக இருந்தது. ஆனாலும் பல தெய்வ நம்பிக்கையின் மிகமுக்கிய பகுதிகள் இவைகளாக இருக்க வில்லை.
சிலைகள் மூலம் பரிந்துரையைத் தேடும் கொள்கையை கைவிட்டு விட்டால் மட்டும் முஸ்லிம்களாகி விட முடியுமா என்ன? ‘அல்ஹுனபா’ என்பவர்கள் சிலை வணக்கத்தை கைவிட்டு விட்டு அல்லாஹ்வை மட்டுமே நம்பினார்கள், பார்க்கப்போனால் இவர்களையும் முஸ்லிம்களாக கருத வேண்டியதிருக்கும், ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் அல்லர்.
எல்லா வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்து, எல்லா வல்லமையும் அவனுக்கு மட்டுமே உரியது போன்ற அடிப்படை நம்பிக்கையையும் இஸ்லாம் உள்ளடக்குகிறது. அல்லாஹ்வை சர்வ சக்தனாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் எந்த இடத்தில் எப்போது வாழ்ந்திருந்தாலும் அவர்கள் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதை ஏற்றுக் கொண்டு அவனுக்கு வணக்கங்களை செய்து வந்தாலும் அவர்கள் பல தெய்வங்களை வணங்குபவர்களே.
இவைகளோடு மட்டும் அவர்கள் நின்று கொண்டால், அவர்கள் முஸ்லிம்கள் என்று எவராலும் கருதப்படாத அல்ஹுனபாஃ வைப் போன்றவர்களே ஆவார்கள். இஸ்லாத்தை முழுவதும் தெரிந்து கொள்ளும் பொழுது, அதன் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் பொழுது, இறை வல்லமையை ஒப்புக் கொள்ளும் பொழுது, இறைவன் அல்லாதவர்கள் உருவாக்கிய சட்டத்தையும், அமைப்பையும் அல்லது நம்பிக்கையையும் அல்லது பழக்கவழக்கங்களையும் ஒதுக்கித் தள்ளும் பொழுது தான் மக்கள் முஸ்லிம்களாக ஆகலாம். இது மட்டும் தான் உண்மை இஸ்லாத்தின் பொருளாகும்.
ஏனென்றால் இது தான் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்பதன் உண்மையான அர்த்தமாகும். இன்னும் இந்த உறுதிமொழியை உணர்ந்த மக்கள் அனைவரும் அறியாமைச் சமுதாயத்தையும் அதன் தலைமையையும் விட்டு விலகி, முஸ்லிமை தலைவராகக் கொண்ட ஒரே அமைப்பில் இணைய வேண்டும்.
எவர்கள் உண்மையில் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அவர்கள் இவற்றை பூரணமாக புரிந்து கொள்ள வேண்டும், அப்போது தான் அவர்கள் நம்பிக்கையிலும் நடத்தையிலும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டு ஏமாறாமல் இருக்க முடியும்.
எல்லா வல்லமையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் மேலே சொன்னவைகள் மட்டும் ஒருவர் முஸ்லிமாக ஆவதற்கு போதுமானது ஆகாது. அது சர்வவல்லமை பிறருக்கும் இருக்கிறது என்பதை நிராகரிப்பதையும், அறியாமைச் சமுதாயத்திற்கும் அவர்களது தலைமைக்கும் அரசாட்சி உரிமை இல்லை என்பதை நிரூபிப்பதையும் நடத்தையில் காட்டுவதாகும்.
உண்மை முஸ்லிம்களாக இருக்க விரும்பும் பலர் இந்த தந்திர வலையில் சிக்கி விடுகின்றனர், அதனால் இஸ்லாத்தின் உண்மை வடிவத்தை தெரிந்து அதிலேயே அவர்கள் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமாகும். பல தெய்வங்களை வணங்கிய மக்கா காபிர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் யார்? அவனிடத்தில் அவர்களுக்காக பரிந்துரைப்பதற்காக அவர்களின்; கைகளால் செய்த பாதுகாவலர்கள் யார்? என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு எவனுக்கு சர்வ வல்லமையும் உள்ளதோ அந்த சர்வ சக்தியில் தான் அவர்களின் நிராகரிப்பு இருந்தது.
மேலும், தத்ரூபமாக இஸ்லாத்தை இந்த உலகத்தில் திரும்ப நிலை நாட்டுவதற்கு கடும் முயற்ச்சியை மேற்க்கொள்ளும் முஸ்லிம்கள், இந்த உண்மையை முழுமையாக தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எல்லா மக்களுக்கும் அவற்றை சந்தேகத்திற்க்கிடமின்றி தெளிவு படுத்தவும் வேண்டும். இது வெறும் ஆரம்பம் தான்.
ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பு இந்த உண்மைக்கு மாற்றமாக எப்போது நடந்தாலும் அது நரகத்திற்கு செல்வது நிச்சயம். அது தனது கடமையை மிகவும் நேர்மையுடன் செய்தாலும், அதனால் ஏற்படும் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டாலும், மேலும் உறுதியாக அவர்களது கடமையை செய்தாலும் அது நரகத்திற்கு போவது நிச்சயம்.
source: http://islamthalam.wordpress.com