நம் உடலில் கண்டுகொள்ளப்படாத பகுதி….
நாமும் உடலில் உள்ள பல உறுப்புகளை பற்றி கவனம் செலுத்தி இருப்போம். செலுத்தி கொண்டும் இருக்கிறோம். ஆனாலும் பல வருஷமா நம்ம கூட இருந்தும் நாம் இந்த உறுப்ப கண்டுக்கிறதே இல்லங்க. என்ன உறுப்புன்னு புரிஞ்சு இருக்கும் என நினைகிறேன். அதாங்க நம்ம முதுகு. நேரா பார்க்க முடியல என்றாலும் நம்மை நேராக நடதுகுற அங்கம் இது தான். (அடடே!)
மேலும் முதுகை பற்றி யோசித்து பார்த்தால் தோல்வி அல்லது இயலாமையின் அடையாளமாகவே இதுவரை நாம் கேள்வி பட்டு வருகிறோம், இந்த வண்ணமாகவே இலக்கியங்களிலும் காட்டப்பட்டு வருகிறது. புறமுதுகில் பட்டயம் ஏறினால் அது குலமானம் போனதாக தாயும் எண்ணி தன் மகனோடு சேர்ந்து உயிர்விடுவது என பல கதைகள் நாம் கேள்வியும் பட்டு இருக்கிறோம்.
அது போலவே எதிர்மாறாக ஒருவரை பாராட்டும் போது அந்த வெற்றிக்கு பெக்போனே (BACKBONE ) நீங்க தாங்க என்று பலர் பாராட்டுவதையும் நாம் கேள்வி பட்டு இருக்கிறோம்..
பலர் மறந்து போன சிலர் பேசும் முதுகை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
கட்டமைப்பு
முதுகை எடுத்தோமானால் கரு உருவான 18 ஆம் நாளிலிருந்தே முதுகெலும்பும் முதுகுத்துண்டும் உருவாக ஆரம்பித்து விடும்.
ஆரம்பத்தில் உருவான முதுகெலும்பு திறந்த படி இருக்கும். பின் 29 ஆவது நாள் தானாகவே அது மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்புப் பகுதி வரையில் நீண்டு இருக்கும்.
முதுகெலும்பு ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில்
முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்)
12 எலும்புகள் மார்புப் பகுதியிலும் (தெராசிக்)
5 எலும்புகள் இடுப்புப் பகுதியிலும் (லம்பார்)
5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்)
கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது.
இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும் இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக்கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.
இந்த டிஸ்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.