Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இனம் கண்டு கொள்ளுங்கள்- தெளிந்த நீரோடையும், கலங்கிய குட்டையும் ஒன்றாகாது

Posted on September 10, 2014 by admin

இனம் கண்டு கொள்ளுங்கள் – தெளிந்த நீரோடையும், கலங்கிய குட்டையும் ஒன்றாகாது

அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் நம்மில் நலிந்தப் பிரிவினருக்காக செய்யும் சமுதாயப் பணிகள், மற்றும் மக்களை மார்க்கத்தின்பால் அழைக்கும் அழைப்புப் பணிகள் அல்லாஹ்வுடைய திருப்பொருத்ததை நாடியதாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவைகள் அல்லாஹ்விடத்தில் ஈடேற்றம் பெறும்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியதாக நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமெனில் அவைகள் இரண்டை தழுவியதாக இருக்க வேண்டும்.

அவைகள் :

அல்லாஹ்வின் கலாம் (வார்த்தைகள்) அடங்கிய திருக்குர்ஆனையும் அகிலத்தாருக்கு அருட்கொiடையாயக அனுப்பப்பட்ட அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தூய வாழ்க்கையுமாகும்.

இது இரண்டையும் தழுவி அழைக்கின்ற அழைப்புப்பணியும், இந்த இரண்டுடைய உபதேசத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்கின்ற சமுதாயச்சேவைகள் மட்டுமே அல்லாஹ்விடத்தில் நமக்கு நற்கூலியை ஈட்டித் தருவதாக அமையும்.

இவை அல்லாமல் (உலக) நோக்கத்துடன் வேறு (மாற்று மத அத்வைத) சித்தாந்தங்களின் அடிப்படையில் செயலாற்றினால் அவைகள் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடும். அதுமட்டுமல்லாது வேறு (மாற்று மத அத்வைத) சித்தாந்தங்களின் அடிப்படையில் பணியாற்றும் முஸ்லீம் அமைப்புகளும் நம்மிடம் இருக்கச்செய்கின்றன அவைகளும் வசூல் காலங்கள் நெருங்கி விட்டால் மட்டும் குர்ஆன் – ஹதீஸ்கள் கூறும் தான தர்ம உபதேசங்களை கையில் பிடித்துக் கொண்டு பாமர மக்களிடம் வசூல் வேட்டையில் களம் இறங்குவார்கள் வசூல் முடிந்தப் பிறகு ஏகத்துவத்திற்கு எதிராக குரலெழுப்பக் கூடிய ஜமாலி வகையறாக்களுடைய கைகோரத்துக் கொண்டு அவர்களது கூட்டங்களுக்கு கூலிப்படையை (தினக் கூலி தொண்டர்களை) அனுப்பி வைக்கும் பணியில் ரகசியமாகவும் சில வேலை பராகசியமாவும் ஈடுபடுவார்கள் .

தெளிந்த நீரோடையும், கலங்கிய குட்டையும் ஒன்றாகாது.

இன்னும் மனிதர்களில் ”நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். 2:8

(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. 2:9

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மேற்கானும் திருமறை வசனத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இரட்டை வேடம் தறித்து முஸ்லிம்களை ஏமாற்றி வந்த யூதர்களுடைய உள் நோக்கத்தைக் குறித்து இறக்கி ஏகத்துவ வாதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்தான்.

இன்றும் அதே செயல் (நாங்களும் தவ்ஙீத் வாதிகள் தான் எனும் வேடம்) தொடருகிறது, தங்களது ஊடகங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின் பற்றி சேவை புரிவோரை சொல்லொனாச் சொற்களைக்கொண்டு ஏளனம் கூறுபவர்கள் வசூல் செய்யும் காலங்களில் மட்டும் ஏகத்துவ அடிப்படையில் வசூலித்து, விநியோகம் செய்யப்படுவதாக கூறி உங்களை ஏமாற்ற வருவார்கள் நீங்கள் ஏமாந்து விடக்கூடாது.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் எங்களிடத்திலும் இன்னும் தவஹீத் ஆலிம்கள் இருக்கவேச் செய்கின்றனர் என்று அவர்கள் கூறுவார்களேயானால் அவர்களது ஊடகங்களில் நாங்கள் எந்த மத்ஹபையும் சார்ந்தவர்களல்ல ஹந்தூரி கூடு கொடி ஊர்வலத்திற்கு எதிரானவர்கள், ஹத்தம் பாத்திஹாவுக்கு எதிரானவர்கள், மௌலூதுக்கு எதிரானவர்கள், பள்ளிவாசல்களில் கட்டி தொங்க விடப்பட்டுள்ள மத்ஹபுக்கு ஆதரவான போர்டுகளை உடைத்தெரிவதற்கு நாங்களும் தொடர்ந்து போராடுவோம் தொழுகையில் விரலலசைப்பது உயிரிலும் மேலானது (காரணம் நபி வழி) என்று எழுதி அவர்களது ஊடகங்களில் போல்டு எழுத்துக்களில் எழுதி அறிவிக்கச் சொல்லுங்கள் அவ்வாறு அவர்கள் செய்யவில்லையென்றால் அது இடிமுழக்க அமைப்பாக இருந்தாலும் சரி, கள்ள பைஅத் அமைப்பாக இருந்தாலும் சரி, அடுத்தவனுடைய வியர்வையில் உதயமான கொடியையும், கட்சியையும் அமுக்கிக் கொண்ட அமைப்பாக இருந்தாலும் சரி அவ்வமைப்புகள் அனைத்தும் ஜமாலி கோஷ்டி தான் என்று தெரிந்து கொள்ளுங்கள் .

(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்;, இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. 6:70

உங்களுடைய நற்செயல்களும், உங்களுடைய பொருள்களும் வீன் விரயம் ஆகாமல் அவைகள் உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் பலன் ஈட்டித் தர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவைகளை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி அல்லாஹ்வுடைய கூற்றையும், அவனது தூதருடைய வாழ்க்கையையும் பின்பற்றி சமுதாயப்பணி செய்வோருக்கு வழங்கி அதற்கான மறுமையின் பலனை அறுவடை செய்து கொள்ளுங்கள்.

உங்களிடமிருந்து வசூலிக்கும் ஒவ்வொருப் பைசாவுக்கும் தெளிவான கணக்கு புள்ளி விபரங்களுடன் உணர்வில் எழுதப்படும், இவ்வாறு எழுதப்படுவதன் மூலமாக உலகின் எந்த மூளையிலிருந்து எவர் நிதி வசூல் செய்து அனுப்பப்பட்டாலும் அந்த சகோதரர் அனுப்பிய இடத்திலிருந்து கொண்டே தெளிவாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இதன்மூலம் அடைந்து கொள்ளலாம்.

செலவு அதிகம் காட்டப்பட்டதாக உணர்வு கட்டிங் ஸ்கேனிங்கை அடிக்கடி காட்டுவார்கள் உண்மை அது தான் ஒரு நாள் நடத்திய விளம்பரமோ சூட்டிங்கோ அல்ல மாறாக வருடத்தைக் கடந்ததாகும் இவர்கனைப் போல் அமுக்கிக் கொள்ள வில்லை என்பதை ஒன்றுக்குப் பலமுறை கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

”எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) 3:53.

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். ”எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். 5:83 .

அஸ்ஸலாமு அலைக்கும்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

source: http://velicham2006.blogspot.in/2006/09/blog-post_13.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

60 − = 55

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb