காஸா படுகொலை – பொய் பிரசாரம் செய்த சு.சுவாமியை அம்பலப்படுத்தியது அல்ஜசீரா
காஸா இனப்படுகொலை தொடர்பான செய்திகளில் ஷோலே படக் காட்சிகளை அல்ஜசீரா டிவி ஒளிபரப்புவதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ஃபேஸ்புக்கில் பொய்யான பிரசாரம் மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்தி சுமார் 2,500 பேரை படுகொலை செய்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பிஞ்சுக் குழந்தைகள். இந்த இனப்படுகொலைகள் தொடர்பான செய்திகளில் ‘ஷோலே’ இந்தி திரைப்படக் காட்சிகளை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்று ஸ்கீர்ன்ஷாட் ஒன்றை சுப்பிரமணியன் சுவாமி 2 நாட்களுக்கு முன்பு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்தார்.
அந்த ஸ்கிரீன்ஷாட்டில் அல்ஜசீரா டிவி லோகோ போல இடம் பெற்றிருந்தது. ஆனால் ஒரிஜனல் லோகோவில் இருந்து சற்றே மாறி இருந்தது. இது ஃபேஸ்புக்கில் படுவேகமாக பரவியது. ஆனால் அல்ஜசீரா தொலைக்காட்சியோ, சுப்பிரமணியன் சுவாமியின் பதிவைப் பார்த்து சிரிக்க மட்டுமே முடிகிறது.. எங்கள் லோகோவையாவது சரியாக போடுங்கள் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
தான் அம்பலப்பட்டுப் போனதால் உடனடியாக அந்தப் பதிவை சுப்பிரமணியன் சுவாமி தமது பக்கத்தில் இருந்தே நீக்கிவிட்டார். ஆனால் அல்ஜசீராவோ சுப்பிரமணியன் சுவாமியின் பதிவை ஸ்கிரீன்ஷாட்டுடன் போட்டு அம்பலப்படுத்தியிருக்கிறது.
Read more at: http://tamil.oneindia.in/news/india/al-jazeera-gives-reply-subramanian-swamy-s-allegation-210523.html