பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் விசித்திரமான அறிகுறிகள்!
முன்பெல்லாம் பெண்களுக்கெல்லாம் மாரடைப்பு எனும் நெஞ்சு வலி வருவது அரிதாகத் தான் இருந்தது. மேலும் ஆண்களுக்கு மட்டும் தான் நெஞ்சு வலி வரும் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்தக் காலத்தில் ஆண்களைப் போலவே பெரும்பாலான பெண்களுக்கும் நெஞ்சு வலி வருவது சாதாரணமாகிவிட்டது.
நெஞ்சு வலிதான் பெண்களைக் கொல்லும் முதல் எதிரி என்றும் கூறப்படுகிறது. 2012 இல் ரோஸி ஓ’டன்னல் என்ற பெண்ணுக்கு, மற்ற பெண்களுக்கு வருவதைப் போல “ஹாலிவுட் நெஞ்சு வலி” வரவில்லை. மாறாக, அவர் மார்பு மற்றும் கைகளில் வலி ஆகியவற்றுடன் வயிற்றுப்போக்கு மற்றும் தோல் ஈரமாவது ஆகியவற்றால் அவதிப்பட்டார்.
இங்கு அப்படி பெண்களுக்கு மாரடைப்பு வந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில விசித்திரமான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
மூச்சு விடுவதில் சிரமம்
நெஞ்சு வலியால் அவதிப்படும் பெண்களில் 42% பேர் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாம். இது எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று வரும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு இந்த அறிகுறி அதிகம் என்று கூறப்படுகிறது.
மேல் உடம்பு வலி
பொதுவாகவே நெஞ்சு வலி வரும் போது உடம்பின் மேல் பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. கழுத்து, பல், தாடை, முதுகு, கைகள் (குறிப்பாக இடது கை) மற்றும் தோள்பட்டை ஆகியவற்றில் வலி ஏற்படும். நரம்புகள் மூலம் இவற்றுக்கு இதயத்துடன் இணைப்பு இருப்பதால், நெஞ்சு வலி வரும் போது இந்த பாகங்களிலும் வலி ஏற்படுகிறது.
வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி
இந்த அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்குத் தான் 2 மடங்கு அதிகம். நெஞ்சு வலி வரும் போது, இதயத்துக்குக் கீழ்ப்பகுதியில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன.
களைப்பு, தூக்கம்
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களில் பாதிப் பேருக்கு மேல் களைப்பு ஏற்படுகிறது. 515 பெண்களைப் பரிசோதித்ததில், அவர்களில் 70.7 சதவீதத்தினர் களைப்பால் அவதிப்பட்டனர். அதே போல், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குத் தூக்கத்தில் பிரச்சனைகள் வந்தன.
ஃப்ளூ காய்ச்சல்
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் ஏற்படும். இதனால் அவர்களுக்குக் களைப்பும் வரும்.
குளிர் வியர்வை
பெண்களுக்கு மெனோபாஸ் வராத நேரத்தில் குளிர் வியர்வை ஏற்பட்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அது நெஞ்சு வலியின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அப்போது உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவது அவசியம்.
source: http://tamil.boldsky.com/health/heart/2014/heart-attack-symptoms-women-006150.html#slide747297