[ நாடோடி கூடங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்று கொண்டிருந்த காட்டரபி இன மக்களை இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும், தனித்தன்மை உடைய சமூகமாகவும், உலகிற்கு சத்திய ஒளியை எடுத்து சென்றவர்களாகவும் உருவாக்கியது என்பதை முதலாளித்துவ வாதிகள் நன்கு அறிவார்கள்.
அந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம் பலநூற்றாண்டுகள் கடந்து நின்றது. அவர்களது ஆட்சி காலத்திலதான் நீதியும் நேர்மையும், பாதுகாப்பும் நல்ல பண்புகளும் செழித்து வளர்ந்தது.
எனவே முஸ்லிம் சமூகம் மறுமலர்ச்சி பெற்று இந்த உலகில் மீண்டும் தலைமைத்துவம் பெற்றுவிடும் என அஞ்சியே முதலாளித்துவ வாதிகள் முஸ்லிம் நாடுகளை குறி வைத்து இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.]
அமெரிக்கா அரபு நாடுகளை குறி வைப்பது ஏன்?
கரை செல்வன்
ஒரு பரவலான கருத்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது அது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுளின் மீது போர்தொடுப்பது எண்ணெய் வளத்திற்க்காகத்தான் என்பதாகும். ஆனால் உண்மை அப்படி அல்ல.
வரலாறு அதை வேறு விதமாக நமக்கு கூறுகிறது. எண்ணெய் வளம் மட்டுமே காரணம் என்றால் சிலுவை போர்களே தேவைப்பட்டு இருக்காது.
உண்மை என்னவென்றால் எண்ணெய் வளங்களை அவர்கள் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான போர்களை முன்னெடுத்து செல்வதற்கு அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைக்கிறது.
பின்னர் ஏன்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளின் மீது தொடர் போரை நிகழ்த்துகிறார்கள்?
சோசலிசம் என்னும் பொதுவுடைமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றது. ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி.பி 1917 ஆம் ஆண்டு அதன் அரசு அமைக்கப்பட்டபோது சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது. இந்த அரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்றழைக்கப்பட்டது.
சோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது . சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றதும் மக்கள் பொது உடமை சித்தாந்தங்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர்.
இதன் விளைவாக முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும் முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இல்லை என ஆயிற்று. முதலாளித்துவ சித்தாந்தத்தின் தலைவனாக அமெரிக்க இருக்கிறது.
அது ஒவ்வொரு நாட்டிலும் தனது கொள்கைகளை திணிக்கிறது. அல்லது சில சாதிகளின் மூலம் அரங்கேற்றுகிறது.
சோஷலிச கொள்கைகளில் வாழ்ந்த மக்கள் அது வீழ்ச்சியுற்றதும் அதனை முற்றிலுமாக கைவிட்டு வேறு பாதைக்கு திரும்பினர். ஆனால் முஸ்லிம் நாடுகளில் கிலாஃபத்துக்கு கீழ் வாழ்ந்த முஸ்லிம்கள் கிலாஃபத் வீழ்ச்சியுற்றாலும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இன்னும் தொடர்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
முதலாளித்துவ கோட்பாட்டை உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவு எதிர்ப்புகள் காணப்படவில்லை. ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாட்டை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அதன் வழி நடக்கும் கனடா, ஆஸ்த்ரேலியா, நியுசிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசை நாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட நாடுகள், பொது உடமை கோட்பாட்டை துறந்துவிட்டு முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கையாக மாற்றிகொண்ட நாடுகளும் அடங்கும்.
இந்தநாடுகள் முதலாளித்துவ கோட்பாட்டை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுகொண்டார்கள். மேலும் லத்தீன் அமெரிக்கா தூரக்கிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்கு எந்த வித சித்தாந்தமும் கிடையாது. முதலாளித்துவ கோட்பாட்டிற்கு அங்கு எந்த எதிர்ப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
ஆகவே சித்தாந்தே ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்றுகொள்ளாத நாடுகளாக உள்ளன. இந்த சமூகம் தன் வசம் இஸ்லாம் என்ற உயரிய சித்தாந்தத்தை வைத்திருக்கிறது.
நாடோடி கூடங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்று கொண்டிருந்த காட்டரபி இன மக்களை இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும், தனித்தன்மை உடைய சமூகமாகவும், உலகிற்கு சத்திய ஒளியை எடுத்து சென்றவர்களாகவும் உருவாக்கியதை என்பதை முதலாளித்துவ வாதிகள் நன்கு அறிவார்கள். அந்த முஸ்லிம்களின் தலைமைத்துவம் பலநூற்றாண்டுகள் கடந்து நின்றது அவர்களது ஆட்சிகால்த்திலதான் நீதியும் நேர்மையும், பாதுகாப்பும் நல்ல பண்புகளும் செழித்து வளர்ந்தது.
எனவே முஸ்லிம் சமூகம் மறுமலர்ச்சி பெற்று இந்த உலகில் மீண்டும் தலைமைத்துவம் பெற்றுவிடும் என அஞ்சியே முதலாளித்துவ வாதிகள் முஸ்லிம் நாடுகளை குறி வைத்து இயங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்த்தால் இன்னும் பல பல உண்மைகள் வெளிப்படும