முஸ்லிம்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது
[ முஸ்லிம்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது. ‘நாம் இவ்வாறு தீண்டாமையை தொடர்ந்தால் அனைத்து மக்களும் இஸ்லாத்தின் பக்கம் சென்று விடுவார்கள்’ என்ற பயத்தினால் பல ஆதிக்க சாதியினர் தங்களின் தீண்டாமை உணர்வை ஓரளவு குறைத்துக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் தமிழகத்தை தொட்டதால் தமிழர்கள் அடைந்த மறுமலர்ச்சி இது.]
படையெடுப்புகளுக்கு முன்பாகவே தமிழகம் வந்த இஸ்லாம் தமிழ்ப் பண்பாட்டோடு பிரிக்க முடியாதபடி நெருக்கமாகக் கலந்துவிட்டது. தமிழ் இலக்கிய மரபை அடியொற்றித் தமிழ் முஸ்லிம் புலவர்கள் ஏராளமாக காப்பியங்களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்திருக்கின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்சந்தமாலை என்ற செய்யுள் தமிழக முஸ்லிம்களின் தொன்மையைக் காட்டக்கூடியதாக இருக்கிறது. (தமிழ் இந்து நாளிதழ் 24-08-2014)
பல கற்பனைக் கதைகளை தமிழில் புனைந்த முஸ்லிம்கள் இறை வேதமான குர்ஆனை தமிழில் மொழி பெயர்ப்போம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வை மொழி பெயர்ப்போம் என்று ஏனோ தோனவில்லை. மார்க்க அறிஞர்களும் இதற்கான முயற்சியில் இறங்கவில்லை.
கடந்த நூறு வருடங்களுக்கு முன்புதான் குர்ஆனின் மொழி பெயர்ப்பை அப்துல் ஹமீது (ஏகேஏ அப்துல் சமதின் தகப்பனார்) அவர்கள் முதன் முதலாக வெளியிட்டார். அதற்கும் மார்க்க அறிஞர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.
இவ்வாறு இறைவன் என்ன மனிதர்களிடம் பேசுகிறான் என்று விளங்காமலேயே 1300 வருடங்களாக முஸ்லிம்கள் இந்த தமிழகத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். குர்ஆனை மொழி பெயர்க்காமல் தங்கள் கற்பனையை விரித்து பல கட்டுக் கதைகளை இஸ்லாமிய சரித்திமாக வடிக்க ஆரம்பித்தனர். ‘விறகு வெட்டியார் கிஸா’ ‘பப்பரத்தியார் அம்மாணை’ ‘சீறாப் புராணம்’ என்று கற்பனை கலந்த பல காவியங்களை படைக்க ஆரம்பித்தனர்.
எனது பாட்டி ராகமிட்டு பல பாடல்ளை தமிழில் பாடுவார். கேட்க மிக ரம்மியமாக இருக்கும். சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இது போல் உண்மையை தெளிவாக விளங்காமலேயே பல கோடி முஸ்லிம்கள் இந்த உலகை விட்டு சென்று விட்டனர்.
மேலும் தமிழக முஸ்லிம்களின் வீடுகளில்தான் தற்போது தமிழ் வாழ்கிறது. படித்த முஸ்லிம்கள் கூட ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு உணர்வால் இன்று வரை ஆங்கிலம் கலக்காத தமிழையே பேசி வருகின்றனர்.
முஸ்லிம்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது. ‘நாம் இவ்வாறு தீண்டாமையை தொடர்ந்தால் அனைத்து மக்களும் இஸ்லாத்தின் பக்கம் சென்று விடுவார்கள்’ என்ற பயத்தினால் பல ஆதிக்க சாதியினர் தங்களின் தீண்டாமை உணர்வை ஓரளவு குறைத்துக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் தமிழகத்தை தொட்டதால் தமிழர்கள் அடைந்த மறுமலர்ச்சி இது.
‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதற்கு ‘உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக’ என்று வாழ்த்த அதை ஏற்பவரும் ‘அப்படியே உங்களுக்கும் ஆகட்டுமாக!’ என்று சொல்வது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. இதனை விரும்பியவர்கள் தமிழிலும் சொல்லிக் கொள்ளலாம். தமிழில் அப்படி ஒரு வழக்கம் முன்பு இல்லாததால் அரபியில் அதனை சொல்கிறோம். ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது தவறில்லையே!
-இதுதான் இஸ்லாம்.