ஜேம்ஸ் ஃபாலி கொலை பற்றி இன்றைய (26.08.2014) “தி இந்து” தலையங்கமும், உண்மையின் மறுபக்கமும்
[ ஒரு ஆட்டை அறுக்கும்போது கூட அதற்கு வலி தெரியாமல் அறுக்க வேண்டும் என்று கூறுகின்றது இஸ்லாமிய மார்க்கம்.அப்படி இருக்கையில் ஒரு மனிதனை இவ்வாறு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இதை யார் செய்து இருந்தாலும் அதை வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.அதே நேரத்தில் இந்த கானொளி காட்சி போலி என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
ஐ.எஸ். போன்ற அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளால் உலக அளவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்து விடவில்லை .மாறாக முஸ்லிம் மக்களின் மீது தவறான முத்திரை குத்தப்படுவதற்கான வலுவான காரணங்களயே அவை உருவாக்குகின்றன.]
“தி இந்து” தலையங்கம் :
கழுத்தறுபடும் மானுடம்
அமெரிக்கா மீதான வஞ்சத்தை அப்பாவி ஒருவர் மீது வெளிப்படுத்தியிருக்கிறது ஐ.எஸ். அமைப்பு. அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலியை ஐ.எஸ். அமைப்பினர் கழுத்தை அறுத்துக் கொன்றதற்கு என்ன நியாயத்தைக் கூற முடியும்?
ஃபோலியை 2012 நவம்பர் 22-ம் தேதி அவர்கள் கடத்தியுள்ளனர். அவரை விடுதலை செய்ய 10 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் 600 கோடி ரூபாய்) பிணைத்தொகை கேட்டுள்ளனர். பிணைத்தொகை கொடுக்க மறுத்த அமெரிக்க அரசு அவரை மீட்க அதிரடிப் படையை அனுப்பியது. ஆனால், அவர்கள் ஃபோலியைத் தேடிய இடம் வேறு.
இராக்கில் ஐ.எஸ். கைப்பற்றிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கிப் பெரும் சேதத்தை விளைவித்ததால் ஆத்திரமடைந்து ஃபோலியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அடுத்த நடவடிக்கையைப் பார்த்த பிறகு, தங்களிடம் சிக்கியுள்ள இன்னொரு அமெரிக்க பத்திரிகையாளர்பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் ஐ.எஸ். அறிவித்துள்ளது.
அல்-காய்தா இயக்கத்திலிருந்து பிறந்த இந்தப் புதிய இயக்கம் அதைவிட தீவிரத்துடன் செயல்பட நினைக்கிறது. இந்த அமைப்பு முதலில் வெளிப்பட்ட இராக்கில் உள்ள சன்னி பிரிவு முஸ்லிம்கள்கூட இதன் வன்செயல்களையும் தீவிரப் போக்கையும் ஆதரிக்கவில்லை.
சிரியா, இராக் ஆகிய இரண்டு நாடுகளின் மீது கவனம் செலுத்தி, தன்னுடைய ஆட்சிக்கென்று ஒரு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றி விடத் துடிக்கிறது ஐ.எஸ். மேலும் லெவன்ட் என்ற பெரிய நாட்டையும் உருவாக்கப்போவதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இதில் சிரியா, இராக் தவிர ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், சைப்ரஸ், துருக்கி ஆகியவற்றையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பினர் ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், டுரூஸ்கள், ஷபாக்குகள், மாண்டீன்கள், யாஜிடிக்கள் ஆகியோரையும் கடுமையாகத் தாக்கிவருகின்றனர்.
இராக்கில் சதாம் உசைன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு ஏற்பட்ட குழப்பத்தையும் வன்செயல்களையும் பயன்படுத்திக்கொண்டு உருவான அமைப்புதான் ஐ.எஸ். சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸ்ஸாத்துக்கு எதிராகக் கிளம்பிய பயங்கரவாத அமைப்புகள் பலவற்றுக்கும் அமெரிக்காதான் ஆதரவு தந்தது. அதிலும் லாபம் அடைந்தது ஐ.எஸ். இவ்வாறாக சிரியா, இராக் ஆகிய இரு நாடுகளிலும் இப்போது குழப்பம் நிலவவும், ஐ.எஸ். ஆதிக்கம் செலுத்தவும் ஒருவகையில் அமெரிக்காதான் காரணமாக இருந்திருக்கிறது. அல்-காய்தாவைப் போலவே, அமெரிக்கா வளர்த்த கடா இப்போது அதன் மார்பில் பாய முயல்கிறது.
தங்கள் நாட்டில் ஊடுருவ முயல்பவர்களை எதிர்ப்பது நியாயம்தான். ஆனால், இடையில் உள்ள அப்பாவிகளையும், சிறுபான்மையினரையும் அழித்துத் தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் நிறுவ முயல்வது எந்த விதத்தில் நியாயம்? ஐ.எஸ். போன்ற அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளால் உலக அளவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்துவிடவில்லை. மாறாக, முஸ்லிம் மக்களின் மீது தவறான முத்திரை குத்தப்படுவதற்கான வலுவான காரணங்களையே அவை உருவாக்குகின்றன. அமெரிக்கா
மீதான வஞ்சத்தை அப்பாவி ஒருவர் மீது வெளிப்படுத்தியிருக்கிறது ஐ.எஸ். அமைப்பு. அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலியை ஐ.எஸ். அமைப்பினர் கழுத்தை அறுத்துக் கொன்றதற்கு என்ன நியாயத்தைக் கூற முடியும்?
ஃபோலியை 2012 நவம்பர் 22-ம் தேதி அவர்கள் கடத்தியுள்ளனர். அவரை விடுதலை செய்ய 10 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் 600 கோடி ரூபாய்) பிணைத்தொகை கேட்டுள்ளனர். பிணைத்தொகை கொடுக்க மறுத்த அமெரிக்க அரசு அவரை மீட்க அதிரடிப் படையை அனுப்பியது. ஆனால், அவர்கள் ஃபோலியைத் தேடிய இடம் வேறு. இராக்கில் ஐ.எஸ். கைப்பற்றிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கிப் பெரும் சேதத்தை விளைவித்ததால் ஆத்திரமடைந்து ஃபோலியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அடுத்த நடவடிக்கையைப் பார்த்த பிறகு, தங்களிடம் சிக்கியுள்ள இன்னொரு அமெரிக்க பத்திரிகையாளர்பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் ஐ.எஸ். அறிவித்துள்ளது.
அல்-காய்தா இயக்கத்திலிருந்து பிறந்த இந்தப் புதிய இயக்கம் அதைவிட தீவிரத்துடன் செயல்பட நினைக்கிறது. இந்த அமைப்பு முதலில் வெளிப்பட்ட இராக்கில் உள்ள சன்னி பிரிவு முஸ்லிம்கள்கூட இதன் வன்செயல்களையும் தீவிரப் போக்கையும் ஆதரிக்கவில்லை. சிரியா, இராக் ஆகிய இரண்டு நாடுகளின் மீது கவனம் செலுத்தி, தன்னுடைய ஆட்சிக்கென்று ஒரு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றி விடத் துடிக்கிறது ஐ.எஸ். மேலும் லெவன்ட் என்ற பெரிய நாட்டையும் உருவாக்கப்போவதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இதில் சிரியா, இராக் தவிர ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், சைப்ரஸ், துருக்கி ஆகியவற்றையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பினர் ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், டுரூஸ்கள், ஷபாக்குகள், மாண்டீன்கள், யாஜிடிக்கள் ஆகியோரையும் கடுமையாகத் தாக்கிவருகின்றனர்.
இராக்கில் சதாம் உசைன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு ஏற்பட்ட குழப்பத்தையும் வன்செயல்களையும் பயன்படுத்திக்கொண்டு உருவான அமைப்புதான் ஐ.எஸ். சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸ்ஸாத்துக்கு எதிராகக் கிளம்பிய பயங்கரவாத அமைப்புகள் பலவற்றுக்கும் அமெரிக்காதான் ஆதரவு தந்தது. அதிலும் லாபம் அடைந்தது ஐ.எஸ். இவ்வாறாக சிரியா, இராக் ஆகிய இரு நாடுகளிலும் இப்போது குழப்பம் நிலவவும், ஐ.எஸ். ஆதிக்கம் செலுத்தவும் ஒருவகையில் அமெரிக்காதான் காரணமாக இருந்திருக்கிறது. அல்-காய்தாவைப் போலவே, அமெரிக்கா வளர்த்த கடா இப்போது அதன் மார்பில் பாய முயல்கிறது.
தங்கள் நாட்டில் ஊடுருவ முயல்பவர்களை எதிர்ப்பது நியாயம்தான். ஆனால், இடையில் உள்ள அப்பாவிகளையும், சிறுபான்மையினரையும் அழித்துத் தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் நிறுவ முயல்வது எந்த விதத்தில் நியாயம்? ஐ.எஸ். போன்ற அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளால் உலக அளவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்துவிடவில்லை. மாறாக, முஸ்லிம் மக்களின் மீது தவறான முத்திரை குத்தப்படுவதற்கான வலுவான காரணங்களையே அவை உருவாக்குகின்றன. (-“தி இந்து” 26 08 2014)
ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்மங்கள்!
‘ஐசிஐஎஸ் அமைப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… நம்புங்க மக்களே… நம்புங்க’ -ஒபாமா
ஐசிஐஎஸ் அமைப்பானது அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு என்பதற்கு ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன.
2012 நவம்பர் மாதம் ஜேம்ஸ் ஃபாலி கடத்தப்பட்டு காணாமல்போயுள்ளார். அப்போது, சிரிய அரச படைகளே அவரைக் கடத்திச் சென்றதாக, வட அமெரிக்க ஊடகங்கள் சில அறிவித்தன. அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜேம்ஸ் ஃபாலி, இதே ISIS பயங்கரவாத நண்பர்கள் கொடுத்த தகவல்களைத் தான், செய்திகளாக சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.
ஜேம்ஸ் ஃபாலி என்ற அமெரிக்க ஊடகவியலாளரின் கொலை, உண்மையிலேயே நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், அதைக் கொண்டு உலக மக்கள் முழுவதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்துவதற்கு, ஊடகங்கள் அயராது பாடுபட்டன. என்ன இருந்தாலும், அமெரிக்க இரத்தம் விலை மதிப்பற்றது அல்லவா?
ஒரு ISIS ஜிகாதிப் போராளி, அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி (James Foley) இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. Google நிறுவனத்திற்கு சொந்தமான Youtube, அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது.
இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. Twitter நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர் கணக்கு இடைநிறுத்தப் படும் என்று அறிவித்தது. ஏற்கனவே பகிர்ந்து கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு டிவிட்டர் பக்கம் வர விடாமல் தண்டிக்கப் பட்டார்கள்.
இந்தத் தகவலை டிவிட்டரே நேரடியாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஏற்கனவே, ISIS சிரியாவில் பலரது தலைகளை துண்டித்து, அவற்றை பகிரங்கமாக இணையத்தில் வெளியிட்டது. அவை டிவிட்டரில் பல தடவைகள் பகிர்ந்து கொள்ளப் பட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
ஜேம்ஸ் ஃபாலி கொலைக் காட்சிகளை காட்டும், அமெரிக்க அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்ட புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டன. அதைத் தான் தற்போது எல்லா ஊடகங்களும், சமூக வலையமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் ISIS ஏற்கனவே பல நூற்றுக் கணக்கானோரின் தலைகளை வெட்டிய பொழுது கவனிக்காத ஊடகங்கள், ஒரு அமெரிக்கரின் கொலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.
அமெரிக்கா தானே வளர்த்து விட்ட இசிஸ் எனும் பூதத்துடன் போரிட்டு அடக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்றது. இது வரை காலமும், அமெரிக்க விமானங்கள் போட்ட குண்டுகள் இசிஸ் அமைப்பை நிலைகுலைய வைக்கவில்லை. யாருமற்ற பாலைவனத்தில் குண்டு போட்டால் என்ன பிரயோசனம்? எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத இந்த தீவிரவாதிகளை ஒடுக்குவது அமெரிக்காவுக்கு பெரிய வேலையே அல்ல. ஆனாலும் அவர்கள் காரியம் முடியும் வரை செய்ய மாட்டார்கள். 🙂
முன்பு தாலிபான்களை வளர விட்டு ரஷ்யாவுக்கு நெருக்கடியை கொடுத்தனர். பிறகு வேலை முடிந்தவுடன் தாலிபான்களை அழிக்கிறோம் என்று சொல்லி ஆப்கனை ஆக்கிரமித்தனர். அதே போல் சிரியாவுக்கும், ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும் நெருக்கடி கொடுக்க ஐசிஐஎஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு ஆதரவும் கொடுத்தனர். அவர்களின் வேலை முடிந்தவுடன் ‘தீவிரவாதிகளை அழிக்கிறோம்’ என்ற பெயரில் ஈராக்கிலும், சிரியாவிலும் தங்கள் கடையை பரப்பி ஆயுத வியாபாரத்தை ஜோராக நடத்த ஆரம்பிப்பர். இதன் கடைசி கட்டம் தான் ஐசிஐஎஸை ஒழிக்க போகிறோம் என்று அமெரிக்கா களம் இறங்கியிருக்கிறது.
நமது நாட்டிலும் நமது உளவுத்துறை ‘இந்தியன் முஜாஹிதீன்’ என்ற கற்பனை அமைப்பை உருவாக்கி அனைத்து தீவிரவாத செயல்களையும் ஊக்குவித்து பழியை அந்த அமைப்பின் மேலும் அப்பாவி இஸ்லாமியர்கள் மேலும் போட்டு வந்ததை நாமெல்லாம் அறிவோம். அரசு மட்டத்தில் இஸ்ரேலின் மொசாத் பல உதவிகளை நமது ராணுவத்துக்கு செய்து வருவதும் நாம் அறிவோம். அதே ஃபார்முலாதான் ஈராக்கிலும், சிரியாவிலும் செயல்படுத்தப்படுகிறது.
உசாமா பின் லாடனை வேலை முடிந்தவுடன் எவ்வாறு கொன்றார்களோ அதே போல் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதிக்கும் அந்த நிலைமையே வரலாம். அமெரிக்க, யூத அரசியல் பகடைக் காயில் அடுத்த விட்டில் பூச்சி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பென்றால் மிகையாகாது.
ஐசிஐஎஸ்ஸை அமெரிக்கா வளர்த்து விட்டதால் இஸ்லாத்தின் பெயரையும் களங்கப்படுத்தி அமெரிக்காவில் இஸ்லாம் பரவுவதை இதன் மூலம் தடுக்க முடியும். ஈராக்கிலும், சிரியாவிலும் தனது ராணுவத்தை நிலை நிறுத்தி பல ஆண்டு காலம் அந்நாட்டு செல்வங்களை கொள்ளையடிக்கவும் முடியும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
source: http://suvanappiriyan.blogspot.in/2014/08/blog-post_78.html