Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“மகளே! உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்! நீ ஓதும் குர்ஆனை தொடர்ந்து ஓது, அதுதான் உன்னை பாதுகாக்கும்ம்ம்..”

Posted on August 24, 2014 by admin

(கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்)

பராஆ எகிப்தை சேர்ந்த 10 வயது சிறுமி. பெற்றோர்களுடன் ஸஊதி அரேபியாவில் வசித்து வந்தாள். அவரது பெற்றோர்கள் ஒரு வைத்தியசாலையில் வேளை செய்து வந்தனர்.

மகிழ்ச்சி அந்தக் குடும்பத்தில் நிறைந்திருந்தது. பராஆ மிகத் திறமையான சிறுமி இந்த 10 வயதிலேயே குர்ஆனை அதன் சட்டங்களோடு மனனமிட்டிருந்தாள்.

அந்த மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒரு சோக சம்பவம். எந்த விதமான முன்னடையாளமுமின்றி தாய் நோய் வாய்ப்படுகிறார். வைத்திய பாிசோதனையில் கென்ஸர் அதன் இறுதி நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தொிவித்தனர்.

இந்த விடயத்தை மகளிடத்தில் தொிவிக்க வேண்டாம் என தாய் கேட்டுக்கொண்டாள். இந்த இளம் வயதில் அதைத் தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை சொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார்.

மகள் தினம் தோறும் வைத்தியசாலைக்குப் போய் தாயிடம் அமர்ந்து குர்ஆனை ஓதுவாள். ஒரு முறை தன் சின்ன மகளிடம் மறைமுகமாக தனது மரணத்தை சொல்லி வைக்க தாய் நினைத்தாள் –

“பராஆ! உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன். நீ ஓதும் குர்ஆனை தொடர்ந்து ஓது. அதுதான் உன்னை பாதுகாக்கும்ம்ம்…” என்ற கூறி வைத்தாள். முழுமையாக தாயின் நோக்கத்தைப் புாியாது விட்டாலும் சில மாற்றங்களை உணர்ந்தாள் பராஆ.

ஒரு நாள் காலை வைத்தயாசலையிலிருந்து தந்தைக்கு ஓர் அழைப்பு வந்தது. செய்தி என்ன என்று முழுமையாகத் தொியாத நிலையில் பராஆவை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றார் தந்தை.

பராஆவிற்கு அதிர்ச்சியான செய்தி எதுவும் தொியக் கூடாது என்ற நோக்கில் “பராஆ! நீ வாகனத்திற்குள் இருந்துகொள். இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பதட்டத்துடன் வேகமாக வீதியைக் கடந்தார்.

ஆனால்…..

பராஆவின் இரு கண்களுக்கு முன்னாலேயே தந்தை வேகமாக ஒரு வாகனத்தில் மோதுண்டு விழுகிறார். அழுகையோடு பராஆ வீதிக்கு ஓடி வந்து தந்தையின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறாள். ஆம் தந்தை உயிரை இழந்தார்.

பராஆவை வேதனையை அதிகரிக்க இருந்த அடுத்த கவலையான செய்தியை வைத்தியர்கள் மறைத்து விட்டனர்.

ஆனாலும் எத்தனை நாட்கள் மறைக்கலாம் 5 நாட்களில் தாயின் உடல் மண்ணறை நோக்கி சுமந்து செல்லப்படும் செய்தியை அவளுக்குத் தொிவித்தார்கள். கதறியழுதாள் பராஆ.

உறவினர்களின்றி ஸஊதியிலே தனித்துப் போன பராஆவை எகிப்தில் அவளது உறவினர்களிடம் அனுப்ப நண்பர்கள் ஆலோசித்தனர்.

ஆனால்…

சில நாட்களில் திடீரென பராஆ நோய்வாய்ப்பட்டாள். வைத்தியாசாலைப் பாிசோதனையில் மிக மோசமான கென்ஸர் தாக்கியுள்ளது என வைத்தியர்கள் தொிவித்தார்கள்.இந்த செய்தி பராஆவுக்கு தொிய வந்ததும் புன்னகைத்தாள்.

“எனது தந்தையும் தாயையும் பார்க்கப் போறேன்” என்று எல்லோருக்கும் முன்னால் ஆனந்தத்துடன் கூறினாள்.

செய்தியறிந்த ஸஊதி தனவந்தர் ஒருவர் பராஆவை தனது முழு செலவிலும் யுகேயிற்கு அனுப்பி மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார்.

ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட பராஆவின் நோய் முற்றிக்கொண்டே வந்தது. இறுதியில் அந்த இளம் உடலின் இரு கால்களும் வெட்டப்பட்டன.

சில மாதங்களில் பராஆவைஅல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஆனாலும் …

அந்த இளம் பிஞ்சு வைத்தியசாலையில் இருந்த காலத்தில் அனைத்து மீடியாக்களும் தொடர்பு கொண்டன. அனைத்தையும் யுடியுபில் நீங்கள் காணலாம்.அந்த சின்ன மகள் ஓதிய ஓதல்கள் கவிதைகள் அனைவரையும் அழ வைத்தன. ஆம் உங்களையும் அழவைக்கும் கேட்டுப்பாருங்கள். படிப்பினை பெறுவோம்.

source: http://mujahidsrilanki.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 12 = 19

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb