பந்தலுக்குள் பதினாயிரம்!
வழக்கம் போல அன்றும் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தபின் தொடர்ந்து புதிய சலாம் பின்னாலருந்து அஸ்ஸலாமு அலைக்கும் ஓங்கி ஒலித்த அந்தக் குரல் வந்த திசையைப் பார்க்க, தொழுகையாளிகளை திருப்பிய அந்த சலாம் ஒரு இளைஞனிடமிருந்து. தொடர்ந்து அவர் சொன்ன சில செய்திகள் அந்தப்பள்ளிவாசலில் சுவர்களில் பட்டு விடைதேடி எங்கோ செல்லத் தலைப்பட்டன.
“உதவி செய்யுங்கள் வாப்பா எனக்கு இரண்டு சகோதரிகள் கலியாணம் செய்துவைக்க வசதியில்லாமல் கஷ்டப்படுறேன்.கையில காசில்லாமல் அவர்களைக் கட்டிக்கொடுக்க வழியில்லாம உங்களின் உதவி தேடி வந்திருக்கேன். அல்லாஹ்வின் குமர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு ஆகிரத்துக்கும் கூட வரும்”.
கையேந்தி நின்றவரின் வாயில் கிளம்பிய இந்த வார்த்தைகள் மனசை என்னவோ செய்தன. நாற்பது பேர் தொழுது முடித்துச் செல்கையில் கையில் கொடுக்கும் ஒரு ரூபாய், ஐம்பது காசுகள் எல்லாம் அவரது அன்றாட சாப்பாட்டுக்கு கூட தேறுமோ என்னவோ!.
கீழே ஒரு நல்ல துண்டு ஒன்றை விரித்திரிந்த அந்த சகோதரர் தன்னைக் கடக்கும் முசல்லிகளையும் துண்டில் விழும் சல்லிகளையும் பார்வையினால் படம் பிடித்துக் கொண்டு நிலையாக நின்றார் வெளிப்பள்ளியில்.
அவருக்கு சுமார் முப்பது முப்பத்தைந்து வயது இருக்கலாம்ஸ கொஞ்சம் மழிக்காமல் முகம் மயிரோடி இருந்ததுஸ அருகில் தப்லீக் ஜமாத்தார்களின் மசோரா நடந்துக்கிட்டிருந்தது, எப்பா கொஞ்சம் தள்ளி நின்னு கேளு, அதோ அந்தத் தூணுக்குப்போஸ இப்படித்தான் நிறைய பேர் வாராங்க. அவங்களுக்கு காசு புடுங்க இது ஒரு வழி இப்ப இவன் கையில் கிடைச்சது குமருகாரியம், தொழுது விட்டுக் கலைந்த அந்த வயதான மனிதர் தனது தாடியை நீவிக்கொண்டே சக நண்பரிடம் சொல்லிக்கொண்டு போனார்.
தனது குடும்பம் தனது தேவை தனது கடமை முதலியன ஒரு இளைஞரை பிச்சை எடுக்க வைத்ததென்னவோ உண்மை. அவர் கோரிக்கையின் ஒளிப்பில் தொக்கிநிற்கும் குமருகாரியம் உண்மையா இல்லையா என்பது தெரியவில்லைஸ அப்படியென்ன மலை இங்கு பெண்களை திருமணம் செய்து கொடுப்பது யோசிக்க யாரும் முன்வருவது இல்லை. காரணம் தன் வீட்டின் தன் மக்களின் ஆண் அல்லது பெண் மக்களின் திருமணங்கள் தமது பெருமையை வசதியை தனது பணபலத்தை காட்டுவதற்காக நாம் பயன்படுத்த ஆரம்பித்து நாட்கள் பலவாகிவிட்டன.
நாம் வாழும் இந்த மார்க்கத்தில் நமக்கு வழிகாட்டிய நபியின் சபையில் வழக்கமாக அமரும் தோழரின் திருமணம் கூட நபியின் கவனத்திற்கு வராமல் எளிமையாக நிகழ்ந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உண்டுஸ அவை ஏட்டுச்சுரைக்காய் அளவில் நம்முடன் நம் வாழ்க்கையில் எந்த விதத்திலும் தொடர்பு படுத்தாதவாறு கவனமாக நாம் பார்த்துக் கொண்டோம்.
நம் சமுதாயம் இன்று திருமணம் என்பதை ஒரு பெருத்த செலவுடன் கூடியதாக ஆக்கிவிட்டது. இத்தனைக்கும் அந்தத் திருமணத்திற்காக நிகழ்த்தும் அததனை பணவிரயங்களுக்கும் அதற்கான நிகழ்வுகளில் நம் ஆலிம் பெருமக்கள் மார்க்ககல்வி கற்ற கல்வியாளர்கள் ஆலிமாகள் எனப்படும் நவீன இஸ்லாமிய பெண் கல்வியாளர்கள் தவறாமல் கலந்துகொள்கிறார்கள்.
அதன் தொடக்கமாக அவர்களே உறுத்தல் வெத்தலபாக்கு (நிச்சயம் செய்தல்) தொடங்கி தனது முகல்லா மக்கள் கூடியுள்ள சபையில் “எல்லாம் பேசிக்கிட்டீகளா”ன்னு பூடகமாகக் கேட்டு சரி பாத்திஹான்னு சொல்லி கைப்படம் விரிக்கிறது பாவமில்லையா…
இஸ்லாம் எளியது இது நபி சொன்னது.
இஸ்லாமிய வழித்திருமணங்கள் எளிமையானவை நாம் அனைவரும் நன்றாக உணர்ந்தவை.
அப்படியானால் இவை என்ன எங்கிருந்து நாம் கற்றோம். எப்பொழுது நாம் விடுவோம்.
தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்காக தன் சமூகத்தாரின் மத்தில் சமுக்கம் விரித்து பிச்சை கேட்கும் நிலைக்கு இன்று இஸ்லாம் உண்மையில் ஒரு இஸ்லாமியனைத் தள்ளுமானால் அதைவிட வெட்கக்கேடு வேறு என்ன…
சில வருடங்களுக்கு முன் ஒரு நோன்பு நாள் இரவில் மக்கா மஸ்ஜித் இமாம் காசிமி யின் தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் கேள்விபதில் நிகழ்ச்சியில் அவரிடம் கேட்டேன். இங்கு சமூக அளவில் நிகழும் அனைத்து அனாச்சாரங்களும் உலமாக்கள் முன்னிலையில் அவர்களின் பங்களிப்பில் தானே நிகழ்கிறதுஸ. அதை நம் அசரத் மார்கள் எப்போது முழுமையாக எதிர்க்கத் தலைப்படப் போகிறார்கள், உதாரணமாக பணம் வாங்கி நடத்தும் திருமணங்களில் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம் என உலமாக்கள் கூடி ஒரு முடிவு எடுத்து அதனை நடை முறை செய்து உங்களின் மதிப்பை எங்களைப் போன்றோர் மத்தியில் எப்பொழுது உயர்த்துவீர்கள் எனக்கேட்டேன்.
கேள்வியை உள்வாங்கி அவர் சொன்னது, இந்த சமூக கேடுகள் அதனால் விளையும் பாதகங்கள் எல்லாம் மிகக் கொடுமையானவை அல்லாவும் ரசூலும் வெறுப்பவை இதில் மாற்றுக் கருத்து இல்லை ஆயினும் ஏழை உலமாக்களும் தங்களின் பிழைப்புக்கு அந்த முகல்லத்தை சார்ந்து தானே வாழ வேண்டியுள்ளதுஸ வட்டி வாங்கும் பள்ளிவாசலின் காரியதரிசிக்கு பயந்து வட்டியின் தீமைகளைக் கூட அவர் சொல்லமுடியாமல் வாழும் எத்தனையோ ஆலிம்கள் உள்ளனர்ஸ நிர்வாகம் கோபப் பட்டுவிட்டால் பெட்டியைக் கட்டு என்று சொல்வார்கள்ஸ பிள்ளை குட்டிகளுடன் வாழ்க்கையில் போராடப் பயந்த அவர்களின் இந்த இடைவெளியில் தான் இந்த ஆடம்பர அனாச்சாரங்கள் வேர்விட்டு விரிந்து பரவிவிட்டது என்றார்.
எனக்கான லைன் கட்டாயிட்டுது…
என்ன செய்றது, உண்மை அது தானே…
நாம் தான் உணரனும். பந்தலில் கட்டப்பட்ட துணிகள் எல்லாம் பாழும் ஏழைகளின் உடுதுணிகள், பலாச்சோற்றில் இடப்படும் உப்பு அந்தக் குமர்களின் கண்ணீரின் கரிப்புகள், இறைச்சியின் ஒவ்வொரு துண்டங்களும் பஸ்பமாய் அவர்தம் அடிவயிற்று நெருப்பின் சுவாலையில் வெந்ததென்றுஸ நாம் உணரும் நாள் நம் அருகில் வருமா…