அல்லாஹ்வுடைய சொல்லும் செயலும் என்றும் முரண்படுவதில்லை!
அல்குர்ஆன் அல்லாஹ்வின் சொல். நிரூபிக்கப் பட்ட அறிவியல் சான்றுகள் அல்லாஹ்வின் செயல். அல்லாஹ்வின் சொல்லும் செயலும் என்றும் முரண்படுவதில்லை.
முதல் மனிதரும் இறைத் தூதருமாகிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது காலத்திலிருந்து அவ்வப்போது மார்க்கமும் அறிவியலும் அந்த அந்த காலத்திற்கு ஏற்பப் பொருத்தமாக அல்லாஹ் மாற்றி வந்துள்ளான். அவ்வப்போது மார்க்கத்தையும் அறிவியலையும் கற்றுக் கொடுத்தவன் அல்லாஹ்தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன், ஹதீஃத் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளன. (பார்க்க: 11:37, 5: 31, 22:27, 2:125, 3:97, 21:80, 34:10,11, 21:81, 38:36, 34:12, 27:20-44, 18:83-99)
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது நேரடி வாரிசான மகன் காபீல் தனது உடன் பிறந்த சகோதரனை கொலை செய்துவிட்டு அதை எவ்வாறு மறைத்து அழிப்பது என்பதனை அறியாமல் பல நாட்கள் தடு மாறியபோது அல்லாஹ் அங்கே அனுப்பி வைத்த ஒரு காகம் பூமியைத் தோண்டி பிணத்தை மூடியதைக் கண்ட “”காபீல்” அவ்வறிவியலை செயல்படுத்திப் பிணத்தை மண்ணில் புதைத்தான். (அல்குர்ஆன் : 5:31. புகாரி, பாகம்-2, பக்கம்-70,71, பாடம்-32, மற்றும் பாகம்-7, பக்கம்-344. பாடம்-2, புகாரீ: 3335,6867,7321, முஸ்லிம் : 1677, 3465, தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம்-3, பக்-135-149)
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடைய உத்தரவின் பிரகாரம் அல்லாஹ் கற்றுக் கொடுத்த அளவுப் பிரமாண அறிவியலின்படி அவனது நேரடி கண்காணிப்பில் கப்பலை நேர்த்தியாகச் செய்து அதன் மூலம் தன்னையும் முஸ்லிம்களையும் நம்மையும் உலக அழிவு வரை வரக்கூடிய மற்ற மனிதர்களையும் பாதுகாத்துக் கொண்டார்கள். (அல்குர்ஆன் : 11:37, 7:64, 10:73, 29:15, 21:76, 37:76, 26:119, 21:77, தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம்-3, பக்கம்-796, பாகம்-4, பக்கம்- 540,622,623, 628.)
ஹஜ் செய்ய வருமாறு மக்களுக்கு அறிவிக்கும் படி நபி இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது அன்று இருந்த சிறந்த ஊடகமான உயரமான ஒரு மலை மீது ஏறி நின்று அறிவிப்புச் செய்தார்கள். (22:27 தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம்-6, பக்கம்-56,57)
புனித கஃபாவைப் புதுப்பித்துக் கட்டும்போது ஒரு உயரமான கல்லின்மீது ஏறி நின்று நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாலாபுறமும் கட்டி முடித்தார்கள். அவ்விடத்திற்கு “”மகாமே இப்றாஹீம்” என்று அழைக்கப்படுகிறது. (2:125 3:97, தஃப்ஸீர் இப்னு கஸீர் : பாகம்-1, பக்கம்- 400-412, பாகம்-2, பக்கம்-160-170)
இரும்பை உருக்கி ஓடவைத்து உலகில் முதன் முறையாக சிறந்த கவச உடைகளைத் தயாரிக்கும் அறிவியலை நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்தான். (அல்குர்ஆன்: 21:80, 34:10,11, தஃப்ஸீர் இப்னு கஸீர் : பாகம்-5 பக்கம்-903,904)
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் காற்றை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். அதன் காரணமாக அவர்கள் காலையிலும், மாலையிலும் விரும்பிய இடங்களுக்கு தனது படை பட்டாளங்களு டன் பயணம் செய்தார்கள். (21:81, 38:36, 34:12. தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம்-5, பக்கம்-904,905)
மேலும் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது காலத்தில் இருந்த மிகவும் ஏற்றமான தபால் சேவையாக பறவைகளையே செயல்படுத்தினார்கள். “”ஹுத் ஹுத்” பறவையிடம் ஸபா(யமன்) நாட்டு அரசிக்கு அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். இதன் காரணமாக அந்த அரசியும், ஆளுனர்களும், ஆலோசகர்களும், அவர்களுக்குக் கீழ் இருந்தவர்களும் இஸ்லாத்தில் வரக் காரணமாயிற்று. (27:20-44, தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம்-6, பக்கம்-661-685)
உலகை ஆட்சி செய்த மன்னர்களில் துல்கர் னைன் “”இஸ்க்கந்தர்” தமது பிரயாணத்தின்போது இரு மலைகளுக்கிடையே இடைவெளி உள்ள ஓரிடத்தை அடைந்தபோது அங்கே வசித்து வந்த அப்பாவி மனிதர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு அவ்வப்போது உயிர்களையும், பயிர்களையும் நாசப்படுத்தித் தொல்லை கொடுத்து வந்த “”யஃஜுஜ் மஃஜுஜ்” என்னும் கொள்ளைக் கூட்டத்தா ரின் குழப்பத்தை அடக்க வேண்டி இரு மலைகளுக் கிடையில் இரும்பையும், செம்பையும் உருக்கி ஓட வைத்து வலுவான அணை கட்டி யுக முடிவு நாள் வரை “”யஃஜுஜ் மஃஜுஜ்” கூட்டத்தார் அதில் ஏறவும், துளையிடவும் முடியாதவாறு செய்து கொடுத்து அந்த அப்பாவி மக்களுக்கு “”யஃஜுஜ் மஃஜுஜ்” கூட்டத்தாரின் தொல்லையிலிருந்து உலக அழிவு வரை பாது காப்பு அரண் அமைத்துக் கொடுத்தார் என்று குர்ஆன் பேசுகிறது. (18:83-99, தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம்-5, பக்கம் – 520-529)
(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர் களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக என்று 26:214வது வசனம் அருளப்பட்டபோது அன்று இருந்த சிறந்த ஊடகமான “”ஸஃபா” மலை உச்சியில் ஏறி நின்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைப்புக் கொடுத்தார்கள். (26:214. புகாரி: 3527,4771, 2753, 3073, 3525, 4971, 4973, ரஹீக், பக்கம்-100. தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம்-6, பக்கம்-626.)
உயரமான மிம்பரில் ஏறி நின்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுமுஆ உரையாற்றினார்கள். (புகாரி: 3584, 2095)
ஹஜ்ஜத்துல் விதா உரையின்போது “”கஸ்வா” என்னும் உயரமான ஒட்டகத்தில் அமர்ந்து மக்க ளுக்கு அறிவுரைப் பகர்ந்தார்கள். (ரஹீக்:பக்கம்-559)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவித்த “”அள்பா” என்னும் ஒட்டகம் வேறு எவராலும் முந்த முடியாத அளவுக்கு விரைவாக ஓடக்கூடியதாக இருந்த சிறந்த வாகனத் தையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவித்ததாக ஹதீஃத்கள் அறிவிக்கின்றன. புகாரி: 6501, 2872, 2871.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டுவதற்காக ஒட்டு மொத்த அரபிகளும், யூதர்களும் ஒவ்வொரு குலம், கோத்திரமாக சுமார் 10000 படை வீரர்களுடன் ஒன்று திரண்டு வந்தபோது ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்வைத்த அறிவியல் யுக்தியை கையாண்டு அகழி தோண்டியதன் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மையும் முஸ்லிம்களையும் பாதுகாத் துக் கொண்டார்கள்.
(ரஹீக்: பக்கம்-368-382, புகாரி: 4098-4119)
மக்காவிலுள்ள புனிதப் பள்ளியிலிருந்து “”ஈலியா” என்னுமிடத்தில் அமைந்துள்ள “”பைதுல் மக்திஸ்” -ல் இருக்கும் அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு ஓர் இரவில் அழைத்துச் செல்லப்பட்ட, (புனித “”மிஃராஜ்” பயணத்திற்காக) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த, கோவேறு கழுதையை விட சிறிய தும் கழுதையைவிட பெரியதுமான வெள்ளை நிறத் திலமைந்த நீளமான “”புராக்” எனும் மின்னல் வேக விசேஇ வாகனம் அல்லாஹ்வினால் மாத்திரமே முடியுமான அறிவியல் அற்புதச் சான்றாகும். 2:87,253, 5:110, 16:102, 19:17, 21:91, 26:193, 70:4, 78:38, 97:4
எனினும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒருநாள் வேகத்தில் விண்ணில் ஏறிச் செல்லக் கூடிய புனித ஆன்மாவாகிய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் ஏழு வானங்களையும் கடந்து சென்று வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உடல் ரீதியாகவும் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நெஞ்சைப் பிளந்து அறுவைச் சிகிச்சை செய்து) ஏற்படுத்தப்பட்டது.
17:1,60, ரஹீக்: பக்கம்-77,78,179, புகாரி :349, 3232, 3235, 3239, 3437, 3886, 3887, 3888, 4710, 4716, 6613, 7517, முஸ்லிம்: 159, 263, 267, 272,278, 280,283, 290,291,292 பைஹகீ, முஸ்னத் அஹ்மத் தஃப்ஸீர் இப்னு கஸீர்: பாகம்-5, பக்கம்-148-187, 283-286
நபி(ஸல்) அவர்கள் தமக்கேற்பட்ட ஒற்றைத் தலைவலி காரணமாக அன்று இருந்த சிறந்த அறி வியல் வைத்திய முறைப்படி தமது தலையின் நடுவே இரத்தம் உறிஞ்சி எடுத்து சுகம் அடைந்து கொண்டார்கள். (புகாரி: 1939,1836,1835, 5698-5702, 5683,5691)
இன்னும் ஏராளமான சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் விரிவை அஞ்சி போதுமாக்கிக் கொள்கிறேன். ஆக இறைத்தூதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது காலத்திலிருந்து இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலம் வரை வந்த நபிமார்கள் அநேகமானோர் அவரவர்களது காலத்தில் அறிமுக மான அதி உச்சகட்ட அறிவியல் காரணிகளைப் பயன்படுத்திப் பலன் பெற்றும் வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
இன்னும் சொல்லப்போனால் இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வாழ்வில் அன்சாரிகளது பேரீச்சை விவசாயத்தில் அதிகபட்ச விளைச்சலுக்காக மேற் கொண்ட அறிவியல் முறைமை ஒன்றில் குறுக்கிட்டு அதன் மூலம் விளைச்சல் பாதிக்கப்பட்டபோது நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; மார்க்க விசயமாக எதையேனும் ஒன்றை நான் ஏவி னால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். எனது சொந்த அபிப்பிராயத்திலிருந்து எதையாவது நான் சொன்னால் நான் மனிதன் என்பதை அறிந்து கொள்ளுங் கள். (உலக காரியங்களில் என்னைவிட நீங்களே அனுபவசாலிகளாக இருக்கலாம் என்று கூறி உலக அறிவியல் பிரகாரம் தாராளமாக நாம் செயல்படலாம் என்பதை அனுமதித்திருக்கிறார்கள்).
(அறிவிப்பு : ராஃபிஉ பின் கதீஜ் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
எனவே உலக அறிவியல் நலவுகளை குர்ஆன் ஹதீஃதோடு மோதாதவரை அவற்றைத் தாராளமாக எடுத்து அனுபவிப்பதில் தவறில்லை என்பதை மேற் கண்ட அறிவிப்பின் மூலம் காண முடிகிறது. கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு சொல்லி 1435 வருடங்கள் ஆகிவிட்டது. அன்று இருந்த எத்தனையோ நிலையிலிருந்து இவ்வுலகம் நவீன அறிவியல் விஞ்ஞான அடிப்படையில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. பூமி தட்டையானது, சூரியன் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது என்ற ஆதிகால மூட நம்பிக்கையிலிருந்து பூமி தட்டை யல்ல உருண்டை வடிவமானது. பால்வெளி மண்ட லத்தில் காணப்படும் எண்ணற்ற கோள்களில் மிகச் சிறிய கோளமே பூமியாகும். அது தன்னைத்தானும் சூரியனையும் சுற்றி வந்து கொண்டிருக்கிறது என்ற அறிவில் உண்மைகளை எல்லாம் மக்கள் இன்று அறிந்து வைத்துள்ளனர். பூமியை சுற்றிவரும் ஒரு துணைக்கோள்தான் சந்திரன் என்பதையும் மக்கள் இன்று அறிந்து வைத்துள்ளனர். 44 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன் வானவெளியில் பறந்து சென்று சந்திரனில் தனது காலைப் பதித்து விட்டான். அங்கி ருந்து அதன் மண்ணையும் ஆய்வுக்காக அள்ளிக் கொண்டு வந்து விட்டான்.
இன்று விண்வெளியில் பல சாட்டலைட்டுகள் சதாவும் பறந்த வண்ணம் பல அரிய அறிவியல் தகவல் களைத் தந்து கொண்டு இருக்கின்றன. அதனால் கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு தகவல் தொடர்புகள் மிகமிக எளிதாக ஆகிவிட்டன. உலகம் மிகச் சுருங்கிவிட்டது. மனிதர்களில் பலர் காற்று மண்டலத்தையும் புவியீர்ப்புச் சக்தியையும் தாண்டிச் சென்று விண்வெளியில் பல மாதங்கள், வருடங்கள் என ஆய்வு மையங்களில் மிதந்து கொண்டே இருக்கின்றனர். பல அரிய ஆய்வுகளைச் சேகரித்து இவ்வுலகிற்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். அடுத்து செவ் வாய் கிரகத்தில் மனிதன் தனது காலைப் பதிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றான்.
சூரியன், பூமி, சந்திரன் இவற்றின் சுழற்சிகளையும், ஓட்டங்களையும் கச்சிதமாகத் துல்லியமாகக் கணக் கிட்டு நூறு வருடங்களுக்குப் பின்னர் நிகழவிருக்கும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவற்றை யயல்லாம் எந்த நாட்டில், எந்தப் பிரதேசத்தில், எந்தத் திசையில் எத்தனை மணி, நிமிட, நொடிப் பொழுது களுக்கு நின்று நிலைத்திருக்கும் என்று இப்போதே மிகச் சரியாக பதிந்து வைத்திருக்கிறான். எப்போது எந்த கோள், கிரகம், நட்சத்திரும் பூமிக்கு அருகாமையில் வந்து செல்கிறது போன்ற தகவல்களையும், நொடிப் பொழுதில் சுமார் இரண்டு இலட்சம் ஆண்டு ஒளியின் வேகத்தையும், இந்த ஒளியின் வேகத்தில் பல இலட்சம் வருடங்கள் பிரயாணம் செய்து அடைய வேண்டிய தூரத்திலுள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள் கோள்களின் தன்மைகள், அதன் பருமன், சுற்றளவு, குறுக்களவுகளுடன் அதன் ஓட்ட வேகங்களையும் மிகச் சரியாகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறி வரு கிறார்கள். அவர்கள் கணக்கிட்டுக் கூறுவது போலவே எவ்விதத் தவறுமில்லாமல் கோள்களின் ஓட்டங்கள் இருந்து வருவதைப் பார்த்தும் வருகிறோம்.
பூமி ஒரு தடவை சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் என்று சொன்னாலும் 365.2422 நாட்க ளென்று தசம பின்னல் கணக்கு அடிப்படையில் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறியிருந்தும் நான்கு வருடங்களுக்கொருமுறை ஒரு நாளைக் கூட்டியும் 127 வருடங்களுக்கொருமுறை ஒரு நாளைக் குறைத்தும் இதிலுள்ள குறைபாட்டை சமநிலைப் படுத்திக் கொள்கின்றார்கள்.
மனிதர்களுக்காக இறைவன் தந்த மாத, வருட கணக்கிற்காக வலம் வரும் சந்திரனை முறைப்படி கணக்கிட்டால் பலநூறு ஆண்டுகளானாலும் எவ் விதக் குறைபாடும் ஏற்படாது என்பது இறைவன் எமக்கு ஏற்படுத்திய நியதியாகும். ஏற்கனவே ஆய்வு ரீதியாக 10000 ஆண்டுகளாக நிரூபித்து நிலை நாட்டப்பட்டும் வருகின்றது.
இவ்வாறு உலகம் நினைத்துப் பார்க்க முடியாதளவு விஞ்ஞானத்தில் முன்னேறியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் இன்றும் பிறையின் துல்லியமான ஓட்டத்தை வைத்து தங்களது முன்மாதிரி முன்னோர்களான (உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உட்பட) உத்தம ஸஹாபாக்கள் அறிமுகப்படுத்திய ஹிஜ்ரி காலண்டரை அதன் தூய வடிவத்தில் மனித குலத்திற்கு கொடுக்கத் தவறியது மாத்திரமல்ல, இன்றைய அதீநவீன அறிவியல் மூலம் பல வருட கால ஆய்வுகளுக்குப் பிறகு சந்திரனின் ஓட்டத்தை வைத்து மிகத் துல்லியமாக வகுத்துத் தமது சொந்தச் செலவில் அறிமுகப்படுத்துகிற ஹிஜ்ரி காலண்டரை உதாசீனம் செய்து நாஸாவுடையது, யூதர்களுடையது என்று 4:112 இறைவாக்குக் கூறுவது போல் அவர்கள் யூதர்களைப் பின்பற்றிக் கொண்டு அப்பழியை குர்ஆன், ஹதீஃதை மட்டும் பின்பற்றுவோர் மீது அவதூறாக வாரி இறைப்பதுடன் பலவிதமான பொய்களையும், புரளிகளையும், அவதூறுகளையும் மக்கள் மன்றத்தில் முன்வைக் கும்போது எடுபடாது போகவே அபூலகப் பாணியில் கடும் பிரயத்தனம் செய்வது மாத்திரமல்ல 13-வது கிறிஸ்தவ போப்பாண்டவர் “”கிரகரி” என்பவரால் தயாரிக்கப்பட்டு முழு உலகிலும் அறிமுகப்படுத்தப் பட்ட இஸ்லாத்திற்கு முரணான காலண்டரை போற் றிக் கொண்டும், திகதி ஒன்று நாள் மூன்று, நாள் ஒன்று திகதி மூன்று என்ற அடிப்படையிலான (குப்பையில் தூக்கிப் போடவேண்டிய) போலி காலண்டர்களைப் பின்பற்றி மூன்றுநாள் பெருநாள் கொண்டாடுவதைப் பார்த்து மற்றவர்கள் முஸ்லிம் களை எள்ளி நகையாடுவதைப் பெரும்பான்மை முஸ்லிம்கள் உணராமல் இருக்கிறார்கள்.
இந்த நவீன அறிவியல் நூற்றாண்டில் யூத, கிறித்தவ கண்டுபிடிப்புகளான விமானம், கணினி, தொலைத்தொடர்பு சாதனங்கள்ஸ என எத்த னையோ விசயங்களை அவர்களது இலகுவிற்காக நவீன சாதனங்களை பயன்படுத்திக் கொண்டு, பிறை விசயத்தில் மாத்திரம் ஒவ்வொரு மாதத்தின் தலைப் பிறையை இவர்கள் தங்களின் புறக்கண் ணால் பார்த்த பின்னரே மாதத்தை முடிவு செய்ய முடியுமென்ற பரிதாப மடமை நிலையில் இருக்கும் போது அவர்கள் எங்கே ஹிஜ்ரி வருட காலண்டரை கணக்கிடுவது?
இவர்கள் ஒரே ஒரு மாதத்திற்கு கூட காலண்டர் தயாரிக்க வக்கற்றவர்கள், 1434 இவ்வால் பிறையைப் புறக்கண்ணால் கண்ட நம்பகமான செய்தியைக் கூட நிராகரித்து ஹராமான நாளில் நோன்பு நோற்கச் சொன்ன அதி மேதாவிகள்தானே இவர்கள். இவர்கள் தானும் கெட்டுப் பிறரையும் வழிகெடுப் பதற்கான முக்கிய காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு ஹதீஃதுக்கு காலங்காலமாக தவறாக மொழி பெயர்த்துச் சொல்வதை அப்படியே கண்மூடி ஏற்றுச் செயல்படுவதால் ஏற்பட்ட விபரீதமே என்பது தெளிவாகிறது.
“”ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரூ லி ருஃயத்திஹி” என்பதில் வரும் “ருஃயத்” என்ற சொல் புறக்கண்ணால் பார்த்தல், அகக் கண்ணால் பார்த் தல், கனவால் பார்த்தல், உணர்வால் பார்த்தல், ஆய்வால் பார்த்தல், அறிவால் பார்த்தல், செய்தியால் பார்த்தல், தகவலால் பார்த்தல், கணக்கீட்டால் பார்த்தல்ஸ என்ற பல பொருள் கொண்ட விரிவான சொல்லாகும். “”ருஃயத்” என்ற அரபி வார்த்தை அல்குர்ஆனில் சுமார் 330 இடங்களுக்கும் மேலாக பல்வேறு திரிபுகளில் வந்துள்ளது.
அவற்றில் சில :
2:243,244,246,258,260, 3:23, 4:44,49, 51,60,77, 6:40,46,47, 7:149, 10:50, 11:28,29, 63,88, 12:4, 24,35,36,43, 14:9,19,24,28, 19:83, 22:18,63,65, 25:12,45, 26:225, 28:71,72, 35:8, 37:102, 39:38, 40:29, 41:52, 46:10, 56:58, 58:58, 67:28,30, 96:7, 105:1, 107:1, 110:2.
இப்படி சுமார் 330 இடங்களுக்கும் மேலாக இந்த “”ருஃயத்” என்ற அரபி வார்த்தை பல திரிபுகளில் அல்குர்ஆனில் இடம் பெற்றிருந்தாலும் விரல் விட்டு எண்ணுமளவுக்கு ஒரு சிலதே புறக்கண்ணால் பார்ப் பதைக் கூறுகின்றன. பெரும்பாலான வசனங்களில் மேலே குறிப்பிட்டபடி பல பொருள் கொண்டதாக இவ்வார்த்தை அல்குர்ஆனில் வருவதை நீங்களும் தெரிந்து கொண்டு தெளிவு பெறலாம்.
அல்குர்ஆனில் அல்லாஹ் மிகத் தெளிவாக “”யார் அம்மாதத்தை அடைகிறாரோ-சாட்சி சொல்கிறாரோ அவர் அதில் நோன்பை நோற்கட்டும்” 2:185, என்று கட்டளையிட்டிருக்கிறானே அல்லாமல் “”யார் அம் மாதத்தின் தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்க்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்” என்று கட்டளை யிடவில்லை. எனவே சூரியன், சந்திரன், பூமி ஆகிய வற்றின் இயல்பான என்றும் மாறாத ஓட்டத்தை வைத்துத் துல்லியமாக கணக்கிடப்பட்டதை தாராளமாக ஏற்றுச் செயல்படலாமென்பதில் சந்தேகமில்லை. இதற்கு அல்குர்ஆனிலோ ஹதீஃத்க ளிலோ எந்தத் தடையுமில்லை என்பதே தெளிவு.
எனவே ரமழான், இவ்வால், துல்ஹஜ் ஆகிய மாதங்களை கணக்கீட்டின் முறையில் முன்கூட்டியே துல்லியமாக அறிந்திருக்கையில், “”இல்லை இல்லை எங்கள் கண்களால் பிறையைக் கண்ட பின்னரே நோன்பையும் ஆரம்பித்து பெருநாளையும் கொண் டாடுவோமென்பது” மடமைவாதமில்லையா? இவர்கள் இரண்டு நாட்களை தவறவிட்டு மூன்றாம் நாளை முதல் நாளாக ஆரம்பிக்கையில் சென்று விட்ட இரு நாட்களையும் எங்கு கொண்டு சேர்ப்பார்களோ! சூரியன், சந்திரன், பூமி ஆகியவை அதன தன் பாதையில் சுழன்று கொண்டிருக்குமென அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இவர்களோ அவற்றின் சுழற்சிகளை எங்களது கண்கள்தான் தீர்மானிக்கு மென்கின்றனர். இவர்களின் கண் பார்வைக்காக இரண்டு, மூன்று நாட்கள் பிறை தாமதித்துச் செல்வ தாக நினைக்கின்றார்கள். கண்களால் பார்த்து பிடி பார்த்து விடு என பல நூற்றாண்டுக் காலமாக கூறிவருவது கண் பவரினால் தானோ?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உத்தம ஸஹாபாக்களும் பிறை பார்த்த அசல் முறையை இவர்கள் மக்களுக் குச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந் தால் 28 நோன்பு நோற்று பெருநாள் கொண்டாடி விட்டு விடுபட்ட ஒரு நோன்பை கழா செய்யவேண்டிய அவசியமில்லை. நோன்பு கடமையாக்கப்பட்டு சுமார் 9 வருட நோன்புகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர் கொண்ட போதிலும் இவ்வாறு 28 நோன்பு நோற்று ஒரு நோன்பை கழா செய்யும்படி சொன்ன சரித்திரம் இல்லை. இத்தனைக்கும் இன்றைய நவீனம் எதுவும் அன்று இல்லாத நிலையிலேயே மிகச் சரியாக பிறைகளைக் கணக்கிட்டுப் பேணி வந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. இன்று இவர்களைப் போன்று காலையில் உதித்து மாலையில் மறையப்போகும் இரண்டாவது பிறையை மஃரிப் நேரத்தில் மேற்குத் திசையில் பார்த்துவிட்டு பிறை பிறந்துவிட்டது மாதம் ஆரம்பித்து விட்டது என்று மூடத்தனமான பூச்சாண்டி காட்டி அடுத்த மூன்றாவது நாள் முதலாவது நோன்பு என்று மக்களை ஏமாற்றி வருவது பெரும் கொடூரமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நடை முறையோ இதற்கு முற்றிலும் மாற்றமாகவே இருக்கின்றது.
… நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃபான் மாதத்தின் நாட்களை மட்டும் (குறிப்பாக) கணக்கிடக் கூடியவர்களாக இருந்தார்கள். மற்ற மாதங்களின் நாட்களை அப்படி (குறிப்பாக) கணக்கிடவில்லை. (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அபூதாவூத், அஹ்மத்)
…ரமழானின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள “”இஃபான்” பிறைகளைக் கணக்கிட்டு வாருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி, அஹ்மத்)
மேற்கண்ட நபிமொழிகளைப் பேணி நாமும் முற் கூட்டியே பிறைகளின் படித்தரங்களைப் பார்த்து கணக்கிட்டு வரும் பழக்கத்தை மேற்கொள்வோமாகில் மிகச் சரியாக உரிய நாளில் நோன்பை ஆரம்பித்து ஒற்றைப்படை நாளில் “”லைலதுல் கத்ரை” அடைந்து ஹராமான நாளில் நோன்பு நோற்பதைத் தவிர்த்துப் பெருநாளைச் சிறப்பாகக் கொண்டாடலாம்.
அதனடிப்படையில் இவ்வருடம் 1435 இஃபான் மாதத்தின் இறுதிப் பிறையான “”உர்ஜுனில் கதீம்” (36:39) 29ம் நாளில் (26.06.2014) வியாழன் அன்று அதிகாலை ஃபஜ்ர் நேரம் கிழக்கு திசையில் காண முடியும். இன்ஷா அல்லாஹ்.
அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இஃபான் 30 (27.06.2014) மறைக்கப்படும் நாளாகும். ஆகையால் இஃபானைப் பூர்த்தி செய்து 28.06.2014 சனிக்கிழமை ரமழான் முதலாவது நாளாக தீர்மானித்து உரிய நாளில் நோன்பை ஆரம் பித்து அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைந்து கொள் ளக்கூடிய நல்லவர்கள் கூட்டத்தில் அல்லாஹ் நம்மனைவரையும் சேர்த்துக் கொள்வானாக!
ஆசிரியர் குறிப்பு : ஆறாம் வகுப்பைத் தாண்டாத ஒருவரின் ஆக்கமே இது. அவரே தனது மனமாற்றத்தைப் பற்றி எழுதுகிறார், படித்துப் பாருங்கள்.
எனது தூய பேரன்புமிக்க இஸ்லாமிய சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்களுக்கு….
நாம் இதுவரை நேரில் சந்தித்துக் கொள்ளாவிட்டாலும் 1991ல் இருந்து இதுவரை அல்லாஹ்வுக்காகவே தங்களை நேசித்து தங்களது நீடித்த ஆயுளுக்காகவும், தேகாரோக்கியத்திற்காகவும் தூய்மையான மனதுடன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் நெஞ்சங்களில் இவனும் ஒருவன்.
ஏன் செய்யக்கூடாது? நான் கடமைப்பட்டிருக்கிறேன். இஸ்லாம் என்கிற போர்வையில் 1984ம் ஆண்டிலிருந்து 1991வரை தஃப்லீக் பணியில் ஈடு படுத்திக் கொண்டு அதன் அனைத்து உஸுல்களை யும் பேணி 3 நாள், 40நாள், 4 மாதம், வருடம், பெண்கள் ஜமாஅத் என்று அலைந்து 1990ல் வரு டத்தை முடித்து 1991 ஜனவரி ஊர் வந்த வேளை அளவற்ற அருளாளனின் ஏற்பாடு 1988ன் 12 மாதங்களின் அந்நஜாத் செட் என் கைவசம் கிடைத்தது. கண்களுக்கும், கால்களுக்கும், கைகளுக்கும், சிந்தனைக்கும் தஃப்லீக் உஸூல் என்ற போர்வையில் போடப்பட்ட தடுப்புகளையும் விலங்குகளையும் உடைத்தெறிந்து என்னதான் என்று பார்ப்போம் என்ற எண்ணம் தோன்றி ஒன்று, இரண்டு, மூன்றுஸ என வாசிக்க வாசிக்க நான்காவது அந்நஜாத்துடன் எனது கண் திறந்தது.
மார்க்கம் என்கிற போர்வையில் நாமும் ஏமாற்றப் பட்டு மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டு போலித்தனமான மிதப்பில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிய வந்தது. எனது மேனி சிலிர்கிறது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தம். வாழ் வில் மறக்க முடியுமா அந்நஜாத்தை? வளர்க அதன் ஆயுள். எண்ணிப்பார்க்கிறேன். இந்த வானம் பூமிகளுக்கிடையே உள்ள படைப்புகளில் மிகக் கேடுகெட்ட படைப்பாகிய இந்த போலி புரோகித இனத்தினை அவர்களது சுயரூபத்தை இனங்கண்டு, இனங்காட்டி கசாப்புக் கடைக்காரனுக்கு முன்னால் செல்லும் ஆடு மாடுகள் போன்று குருட்டு பக்தியில் மதிப்பு மரியாதைகள் கொடுத்து கால் பிடித்து வந்த என் போன்ற எத்தனையோ ஜீவன்களுக்கு இதுதான் நேர்வழி என்று காட்டி விலங்குகளை உடைத்துத் தெளிவுபடுத்திய நூலல்லவா? அதனால்தான் நாளும் பொழுதும் ஒவ்வொரு தொழுகையிலும் தங்களுக்காக கண்கள் கசிய துஆ செய்கிறேன். நீடித்த ஆயுளுக்காகவும் அந்த நீடிக்கிற ஆயுளின் தேகாரோக்கியத்திற்காகவும்.
ஆனாலும் அல்லாஹ்வுடைய விதியை நாமறியோம். கவலைப்படுவதற்கில்லை. ஓர் அபூ அப்தில்லாஹ் போனால் ஓராயிரம் அபூ அப்தில்லாஹ்க்களை அல்லாஹ் இப்போது ரெடியாக வைத்துள்ளான். நற்செய்தி பெறுங்கள்; அல்லாஹ்வின் காலில் விழுவோம்; அவனைப் புகழ்வோம். (110:1-3.)
ஆறாம் வகுப்பைத் தாண்டாத, இம்மவ்லவிகளின் பாஷையில் அவாம்-பாமரர் 1991க்குப் பிறகு குர்ஆன், ஹதீஃதில் பாடுபட்டு 29:69 இறைவாக்குக் கூறுவது போல் “”ஜிஹாத்” செய்து இந்த அளவு நேர்வழி ஞானத்தைப் பெற்றுள்ளார் என்றால், இளங்கலை, முதுகலைப் பட்டதாரிகள், டாக்டர்கள், என்ஜினியர்கள், ஆடிட்டர்கள், உலகியல் அறிஞர்கள் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் பெருமை காரணமாக தாமும் வழி கெட்டு, தங்களை நம்பும் பெருங்கொண்ட மக்களையும் வழிகெடுத்து நரகில் தள்ளும் இம் மவ்லவிகளை முற்றிலும் புறக்கணித்து, 2:186 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வை மட்டுமே முற்றிலும் முழுவதுமாக நம்பி நேரடியாக குர்ஆன், ஹதீஃதில் 29:69 இறைவாக்குச் சொல்வது போல் பாடுபட்டால் அவர்களுக்கு நேர்வழி கிடைக்காதா? நிச்சயம் 6:153 இறைவாக்குச் சொல்லும் நேர்வழி கிடைக்கவே செய்யும். குர்ஆன் ஹதீஃதில் நேரடியாகப் பாடுபட முன் வாருங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக.
S.M. அமீர்(அபூ அஸீம்) நிந்தாவூர், இலங்கை. செல் 0094776096957
source: http://annajaath.com/?p=6950