ஹமாஸின் பலம் எங்கிருந்து வந்தது?
ஹமாஸ் (Ḥarakat al-Muqāwamah al-ʾIslāmiyyah). 1987-ல் ஒரு பாடசாலையில் வைத்து இஹ்வானிய சிந்தனை கொண்டவர்களினால் உருவாக்கப்பட்ட இயக்கம். அன்றைய இலக்கு யூத தேசத்திற்கு பதிலாக பறிகொடுக்கப்பட்ட அதே நிலத்தில் ஓர் இஸ்லாமிய அரசை ஸ்தாபிப்பது. குறுகிய காலத்தினுள்ளேயே ஹமாஸ் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தன்னை தரமான ஸ்திரமான ஒரு நிலைக்கு வளர்த்துக் கொண்டுள்ளது.
காஸாவை பலஸ்தீன அதிகார சபையில் இருந்து பிரித்து தனது பரிபூரண கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. தென் லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் மக்களுடன் கலந்து வாழ்வது போல் இதுவும் தன்னையும் தன் போராட்டத்தையும் மக்களையும் வேறு வேறாக பிரிக்க முடியாத சத்தியாக நிலை கொண்டுள்ளது. இந்த யதார்த்தங்களின் அடிப்படையை புரிந்து கொண்டு காஸா களம் பற்றி பார்ப்போம்..
2012-ல் “Operation Pillar of Defense” எனும் பெயரில் காஸா மீது இஸ்ரேல் ஒரு இராணுவ ஊடுருவலை மேற்கொண்டிருந்தது. காஸாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்படும் ரொக்கெட்களை அழிப்பதும் அதன் தளங்களை ஒழிப்பதும் அதன் நோக்கமாக இருந்தது. 2014-ல் மீ்ண்டும் ஒரு இராணுவ நகர்வை அது மேற்கொண்டுள்ளது. “Operation Protective Edge” எனும் பெயரில் அது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஹமாஸின் நீண்ட தூர ஏவுகணைகளை அழிப்பது, அதன் தயாரிப்பு மையங்களை அழிப்பது, அந்த ஏவுகணைகளை லோஞ் செய்யும் ஏவுதளங்களை அழிப்பது, குறுந்தூர ரொக்கெட்கள், அதனை உற்பத்தி செய்யும் பக்டரிகளை அழிப்பது, அவை நகர்த்தப்படும் இடங்கள், டம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடங்கள் என்பவற்றை கண்டறிந்து அழிப்பது என இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளிற்கான நிகழ்ச்சி நிரல் ஏராளம்.
இப்போது சில கேள்விகளை கேட்போம். “2012-ல் ஒப்பரேசன் பில்லர் டிபென்ஸ் மூலம் எதை இஸ்ரேல் சாதித்தது? அது வெற்றி பெற்றிருந்தால் ஹமாஸ் இப்போது அதை விடவும் பன்மடங்கு பலமிக்கதாக எப்படி ரொக்கெட் தாக்குதலில் வளற்ச்சி அடைந்தது?, அப்படியென்றால் 2012-ல் இருந்த ரொக்கெட்களையே அழிக்க முடியாத இஸ்ரேலிய இராணுவத்திற்கு இப்போது 2014-ல் வழங்கப்பட்டுள்ள மிசன்களும், அசைன்மென்ட்களும் ஏராளம். எப்படி சாதிப்பார்கள்?.”
இதற்கான ஒரே விடை, “ஹமாஸ் வென்று விட்டது. 2012-ல் மட்டுமல்ல. 2014-இலும் கூட என்பதே.”
சரி இன்னும் சில கேள்விகளின் விடைகளையும் இப்போது பார்ப்போம். இதோ அவை…
ஹமாஸில் எத்தனை ஆயிரம் போராளிகள் உள்ளனர்?
15,000 ஆயுத சன்னத்தமுள்ள போராளிகள் அவர்கள் வசம் உள்ளனர். கூடவே 100,000 இற்கும் அதிகமான ஆயுத பயிற்ச்சி பெற்ற பலஸ்தீனர்கள் அதன் ஸிம்பதய்சர்களாக அல்லது அழைத்தால் வொலன்டியர்களாக களமிறங்க காத்திருக்கின்றனர். இஸ்ரேலிய பாதுகாப்பு படை – IDF சொல்கிறது, தாங்கள் சமகால தாக்குதல்களில் 1000 இற்கும் மேற்பட்ட ஹமாஸின் சிறப்புப் படையினரை கொன்றொழித்து விட்டதாக. இது இஸ்ரேல் முழுதும் பிரச்சாரப்படுத்தப்படும் செய்தி.
இதுவரை நடந்த காஸா தாக்குதல்களில் பலஸ்தீன சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் சொல்கின்றன 1400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக. அப்படியென்றால் 01, 05, 10, வயது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எல்லோரையும் அல்லவா ஹமாஸ் போராளிகள் லிஸ்டில் சேர்க்க வேண்டும். இந்த இடத்தில் இஸ்ரேல் இராணுவத்தின் பொய்கள் அம்பலமாவதன் ஊடாக அது தோற்றுப் போயுள்ளது மேலும் புலனாகிறது.
ஹமாஸின் போராற்றலை இஸ்ரேலிய இராணுவம் அழித்து விட்டதா?
IDF விடுத்த செய்திக் குறிப்பில் ஹமாஸின் கொம்பாட் யுனிட்களிற்கும், கொமாண்டோ யுனிட்களிற்கும் தாங்கள் பெரும் சேதத்தை நிகழ்த்தியுள்ளதாக. அப்படியென்றால் கடந்த திங்களில் Beit Hanoun, Shejaiya, Khan Younis போன்ற இடங்களில் இஸ்ரேலிய இராணுவத்தை தேடிச்சென்று அவர்களின் பின்வரிசையினுள் நுழைந்து தாக்குதல் நடாத்தியதும், ஒரு இஸ்ரேலிய சிப்பாயை உயிருடன் பிடித்து வந்தது எந்த யுனிட்?. ஆம் ஹமாஸின் இராணுவ யுனிட்கள் சேதமில்லாமல் எதிரி நிலை வரை சென்று தாக்குதல் நடாத்தி விட்டு தளம் திரும்பும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். யூத இராணுவம் பலஸ்தீனர்களை வேட்டையாட வந்த காலம் மாறி, யூத இராணுவத்தை பலஸ்தீனர்கள் தேடிச் சென்று வேட்டையாடும் காலம் நிகழ்கிறது இப்போது.
சமகாலத்தில் அல்-கஸ்ஸாம் போராளிகள் என்ன ஆயுதங்களை IDF-இற்கு எதிராக உபயோகம் செய்கிறார்கள்?
ஹிஸ்புல்லாஹ் லெபனானில் இஸ்ரேலிய படையினரை எதிர்கொண்ட அதே பாணி தாக்குதல்களையும், தற்காப்பு சமர்களையும் இப்போது ஹமாஸின் இராணுவ அணிகள் பின்பற்றுகின்றன. இவர்கள் இரு வகை யுக்திகளை கையாள்கின்றனர். தோளில் சுமந்து தாக்குதல்களை நடாத்தும் அன்டி டேங் லோஞ்சர்கள். இவை ரஸ்ய தயாரிப்புக்கள். RPG-29 ( ஆர்.பி.ஜி 07-ன் நவீன வடிவம். ஏவுகணை தொழில்நுட்பம்). இவற்றை தோளில் சுமந்து சென்று இலகுவாக எதிரி அரண்களை, டாங்கிகளை, கவச வாகனங்களை குளோஸ் ரெஞ்சில் கூட தாக்கலாம். 19 இஸ்ரேலிய படையினரை காவு கொண்ட Kibbutz Nahal Oz தாக்குதலில் இதன் பங்கு அளப்பரியது.
அடுத்தது IED (இம்புரூவ்ட் எக்ஸ்புளோசிவ் டிவைசஸ்). சுரங்கங்களில் பலஸ்தீனர்களை வேட்டையாட உள்நுழையும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரிற்கு வைக்கப்படும் பொறி இது. இதன் வெடிப்பானது இலக்கை அழிப்பது மட்டுமல்லாது அந்த டனலையும் சேர்த்து இடியச் செய்யும் வீரிடியம் வாய்ந்தது.
இப்போது இஸ்ரேலிய சிப்பாய்கள் அஞ்சும் விடயமெல்லாம் எப்போது தங்கள் அதிகாரிகள் தங்களை டனலினுள் இறங்கி சேர்ச் பண்ணுமாறு உத்தரவிடுவார்களோ என்பதே. மரணக்குழி எனும் ஹிப்ரு வார்த்தை இப்போது அந்த சிப்பாய்கள் வாய்களில் பிரசித்தம். காஸாவிற்கான டனல் கிளியரிங் ஒப்பரேசனை மேற்கொள்ளும் Brig. Gen. Micky Edelstein சொல்கையில் “நிச்யமான மரணத்தை நோக்கிய நகர்வாகவே இதனை நான் பார்க்கிறேன். இன்று சுரங்கங்களில் பொருத்தப்பட்டது நாளை காஸாவின் வீடுகளில் பொருத்தப்படலாம். முன்று நள்ளிரவில் கதவை உதைத்து உள்நுழைந்தது போல் இப்போது நாம் நுழைய முடியாது. வெடித்தல் குறைந்தது 10 சிப்பாய்களாவது நிலத்தில் சரிவர்.”. இது அவரது அனுபவ வசனங்கள்.
ஹமாஸிற்கு ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன?
சினாய் வளைகுடா வரை நீட்சி மிக்க டனல் பாதைகள் உள்ளன. அதிசயமாக இருக்கிறதா? உண்மை அது தான். கடந்த காலங்களில் ஹமாஸின் போராளிகள் சும்மா சாப்பிட்டு விட்டு உறங்கவில்லை. மிகக்கடுமையாக எதிர்கால சண்டைகளிற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தனர். அதன் பழம் நிறைந்த அறுவடை தான் இது. சினாயில் இருந்து எகிப்தின் ரபாஃ ஊடாக காஸா வரை இவை செல்கின்றன.
ஈரானிய ஆயுத முகவர்கள் லிபியாவின், சூடானின், ஈரானின் ஆயுதங்களை கடத்தி வந்து சினாயில் வைத்து ஹமாஸின் பிரதிநிதிகளிடம் கையளிக்கின்றனர். ஹமாஸ் சுரங்க பாதைகளை அமைக்கிறது என்பதனை இஸ்ரேலிய உளவமைப்பு “சின்-பெட்” 2012ல் எச்சரித்திருந்தது. இதனை விட கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா போன்றவற்றில் உள்ள அடிப்படைவாத அமைப்புக்களின் உதவியுடனும் இவை எகிப்து வரை கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளன. சினாயில் எகிப்திய படையினர் பலமற்று இருப்பது இதற்கு அதிக வாய்பாபன சந்தர்ப்பங்களை வழங்குகிறது.
சரி ஹமாஸின் பயிற்ச்சித்தளங்கள் எங்குள்ளன?
கடந்த ஜுலை 20-ல் இஸ்ரேலினால் பிடிக்கப்பட்ட ஒரு போராளி சொன்ன தகவல்கள் அவர்களை திடுக்கிட வைத்துள்ளன. “நான் காஸாவின் ஒரு தோட்டத்தில் பயிற்ச்சி பெற்றேன். ஒவ்வொரு வகை பயிற்ச்சிக்கும் ஒவ்வொரு இடமாக மாற்றப்பட்டோம். என்னுடன் சண்டையிட்ட போராளிகள் மலேசியாவின் பெருங்காடுகளினுள் பயின்றவர்கள்” என்றார். இதனை மலேசிய அரசு உடனடியாகவே நிராகரித்திருந்தது.
வெடிகுண்டு நிபுணத்துவ பயிற்ச்சிகளை ஈரானிலும் சூடானிலும் தனது உறுப்பினர்களை அனுப்பி சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றி வருகிறது ஹமாஸ்.
ஹமாஸின் டனல் வோர் பற்றி?
இதற்கு முன்பும் இதே சுரங்க பாதையின் ஊடாக கோப்ரல் Gilad Shalit ஜுன் 2006-ல் கடத்தப்பட்டிருந்தார். இதன் பின்னரே இதன் அனுகூலங்களை உணர்ந்த ஹமாஸ் பல சுரங்கங்களை அமைத்தது. 2012-ல் காஸா சண்டைகளின் பின்னர் விஜயம் செய்த கட்டார் மன்னர் காஸாவை புனர்நிர்மாணம் செய்ய பெருந்தொகை பணத்தை ஹமாஸிற்கு வழங்கினார். காஸா புனரமைக்கப்பட்டதோ இல்லையோ சுரங்கங்கள் கச்சிதமாகவே தோண்டப்பட்டுள்ளன.
டனல் டிக்கர் எனப்படும் சுரங்க அமைப்பாளர்கள் electric or pneumatic jackhammers வகை சாதனத்தின் ஊடாக ஒரு நாளைக்கு 04-05 மீட்டர் வரை தோண்டுகின்றனர். 18-25 மீட்டர் ஆழத்தில். (அங்கே தண்ணீர் ஊற்று வராது உழைப்பின் உன்னதம் இது. மிக கடுமையான உழைப்பு. பல வருடங்களாக. ஒரு தாக்குதல் நிகழ்த்தியவுடன் எதிரி இலக்கை கண்டறிந்து கைப்பற்றி தகர்த்து விடுவான். அப்படியானால் இந்த டனல் எவ்வளவு முக்கியத்துவமானவை. ஆயுதங்களை விடவும் பெறுமதியானவையல்லவா?
ஹமாஸின் ரொக்கெட்கள் பற்றி?
இவரகள் கணிசமானவற்றை ஈரானில் இருந்தே கொண்டு வருகின்றனர். பற்றாக்குறையை மட்டும் லோக்கலில் உற்பத்தி செய்கின்றனர். 20 கிலோ மீட்டர் (12.5 மைல்), இவற்றினால் Ashkelon and Sderot போன்ற பகுதிகளை தாக்க முடியும். இவை குறுந்தாக்குதல் இலக்குகளிற்கானவை.
அடுத்தவை நடுத்தர இலக்குகளிற்குரியவை. 40 கிலோ மீட்டர் (25 மைல்) தூரம் செல்பவை. இவற்றினால் Beersheba, Negev போன்ற நகர்களை தாக்க முடியும். மற்றயவை நெடுந்தூர இலக்கினை தகர்க்க வல்லன. 80 கிலோ மீட்டர் (50 மைல்கள்) வரை பயணிக்கக் கூடியவை. இவை டெல் அவிவ் மற்றும் ஜெரூஸலம் போன்றவற்றை இலக்கு வைக்கும் வலிமை பெற்றவை.
IDF என்ன செய்ய போகிறது?
நீண்ட தூர லோஞ்சர்களையும், லோஞ்சிங் பேட்களையும் ஓரளவு அழிக்கலாம். வீடுகளினுள் புகுந்து தேட முடியாது. IED-கள் காத்திருக்கின்றன. துல்லியமான உளவுத்தகவல்களை வைத்து லேசர் கைடட் மீசைல் தாக்குதல்கள் மட்டும் செய்ய முடியும். மீண்டும் தங்கள் யுத்த தந்திரம், எதிர்கால ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான ஒரு தெளிவான மீள்கணிப்பீடு அவர்களிற்கு அவசியமாகிறது. அதற்கு கால அவகாசம் என்பது அதை விட அவசியமாகிறது. ஹமாஸ் பற்றிய இராணுவ எடை போடல்களின் தோல்விகள் உணரப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு வோர் அசஸ்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இராணுவம் உள்ளது.
பலம் வாய்ந்த நவீன இராணுவம், உலகை ஆள வந்த இறைவனின் தெரிவுடைய மக்கள் போன்ற இமேஜ்களை பாதுகாக்க சில ரவுண்டுகள் ஆட்டிலறிகளால் சுட்டு காஸாவை சின்னாபின்னமாக்கி விட்டு தளம் திரும்பும் வரலாற்றின் விளிம்பில் நிற்கிறது யூத இராணுவம். ஹமாஸ் மீண்டும் ஒரு முறை வென்று விட்டது. அரசியல் ரீதியாக உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி விட்டது. இராணுவ ரீதியாக ஒரு பெரிய இராணுவத்தை ஒரு இடத்தில் பல நாட்கள் தேக்கி வைக்கும் அளவிற்கு வெற்றி பெற்று விட்டது. உளவியல் ரீதியாக ஒவ்வொரு ஸியோனிஸ்ட்டும் ஹமாஸை கண்டு அச்சப்படும் அமைப்பாக அது தனது டனல் வோரை நிலை நிறுத்தியுள்ளது.
WHO IS THE ORIGINAL PALADIN, HERO & WINNER ?
இந்த வெற்றிகளின் அடிப்படைகள் தான் என்ன?
ஒரு யூத இராணுவ வீரனிற்கு அவன் தலைக்கு மேல் எப்-16 பைட்டர் ஜெட்கள் பறக்க வேண்டும். அவன் முன்னேற. அல்லது அவன் மார்பிற்கு முன்னதாக மர்க்கவா டாங்கிகள் உருள வேண்டும் அவன் முன்னேற. எதிரியின் இடத்தினுள் நுழைந்து அவன் வானை அன்ணாந்து பார்த்தால், வெள்ளை பொஸ்பரல் குண்டுகள் எதிரியின் பக்கம் எரிந்து வீழ்வது தெரிய வேண்டும் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள.
ஆனால்…….
ஒரு காஸாவின் முஜாஹித்திற்கு சில குர்ஆனிய வசனங்கள் போதும் அவன் முன்னேற. பத்ர் களத்தின் காட்சிகள் போதும் அவன் முன்னேற. வாக்களிக்கப்பட்ட வானவர்களின் உதவிகள் பற்றிய நம்பிக்கைகள் போதும் அவன் முன்னேற. அவன் எதிரி இடத்தில் நுழைந்து வானை அண்ணாந்து பார்த்தால், ஜன்னத்துல் பிர்தவ்ஸின் காட்சிகள், அதில் வட்டமடிக்கும் பறவை வடிவ தனது ரூகூஃ தெரிய வேண்டும் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள.
இது தான் வெற்றியின் வித்தியாசங்கள். ஏன் அடிப்படைகளும் கூட.
by:Abu Asjath
source: http://khaibarthalam.blogspot.in/2014/08/blog-post.html?spref=fb
( PALADIN என்பதற்கு வீரன் என்று அர்த்தம் )