Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தோண்டத்தோண்ட பூதகரமாக நீளும்.. பேய்கள் அரசாண்டால்..?

Posted on August 10, 2014 by admin

துணை வேந்தரின் உதவியோடு மட்டும் எம்.பி.பி.எஸ் பாஸ் செய்து விட முடியுமா?

[ ஒரு வழியாக 12 ஆண்டுகள் கழித்து எம்பிபிஎஸ் பாஸ் செய்தார் கோகுல். கோகுல் படித்த பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, தொடங்கப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.  பின்னாளில், அது நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறியது. 

கோகுல் படித்த காலத்தில் அது பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தோடுதான் இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி மதிப்பெண் எடுக்கும் கோகுல் எந்த காலத்திலாவது எம்பிபிஎஸ் பாஸ் செய்வாரா? 

அவரை பாஸ் செய்ய வைக்க, கோகுலின் தந்தை ஏ.என்.ராதாகிருஷ்ணன் அணுகிய நபர்தான் ஜலீஸ் அகமது கான் தரீன் என்ற ஜேஏகே தரீன். 

இவர் அப்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தார்.  தற்போது, க்ரெசன்ட் பொறியியல் கல்லூரியில் இருக்கிறார். இவருக்கு கோகுலை பாஸ் செய்ய வைக்க கொடுக்கப்பட்ட தொகை 25 லட்சம் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

துணை வேந்தரின் உதவியோடு மட்டும் எம்.பி.பிஎஸ் பாஸ் செய்து விட முடியுமா? மற்றவர்களின் உதவி வேண்டாமா?  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பதிவாளராக உள்ள டாக்டர் ஜே.சம்பத் மற்றும் துணைப் பதிவாளர் டாக்டர்.முரளிதாசன் ஆகியோரின் உதவியோடு ஒரு வழியாக பாஸ் செய்து முடித்தார் கோகுல்.

……1983ம் ஆண்டு, மீனாட்சி அம்மாள் ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு ட்ரஸ்ட் பதிவு செய்யப்படுகிறது. இந்த ட்ரஸ்ட், தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்காக என்று தொடங்கப்படுகிறது.  இந்த ட்ரஸ்டின் பதிவுப்படி, இதன் நோக்கம், இந்து மதத்தை பரப்புவது, கல்வி நிலையங்கள் நடத்துவது, இந்து கலாச்சாரத்தை பரப்புவது ஆகியன. ]

தோண்டத்தோண்ட பூதகரமாக நீளும்…. பேய்கள் அரசாண்டால்…?

முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்ததும், அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயலலிதா, முதலில் சொன்னது “சிஎம்டிஏ அதிகாரிகள் மீது எந்தத் தவறும் இல்லை” என்பதே.   எந்த விதமான விசாரணையும் நடக்கும் முன்னரே இப்படி ஒரு சான்றளிக்கும் முதலமைச்சர் ஆட்சி நடத்தும் மாநிலத்தில் என்ன நடக்காது ?

ஒரு சதுர மீட்டர் கூட அனுமதி பெறாமல் பல ஆயிரம் சதுர அடியில், ஒரு மருத்துவக் கல்லூரியை 5 ஆண்டுகளாக நடத்த முடியுமா?   முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.

முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி ஏறக்குறைய 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது மைனாரிட்டி கல்வி நிலையம் என்பதால், மொத்தம் உள்ள 150 சீட்டுகளில் 75 சீட்டுகள் அரசுக்கு மீதம் உள்ள 75 இடங்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு. இந்தக் கல்லூரியில் ஒரு எம்பிபிஎஸ் இடம் சராசரியாக 40 முதல் 45 லட்சம் வரை விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே கல்லூரி நிர்வாகத்துக்கு சொந்தமாக மீனாட்சி மருத்துவக் கல்லூரி என்று மற்றொரு கல்லூரியும் உண்டு. இதன் உரிமையாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணனின் மகன் கோகுலும் ஒரு மருத்துவர். இந்த கோகுல் 5 ஆண்டு மருத்துவப் படிப்பை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் மொத்தம் 12 ஆண்டுகள் படித்தார்.   12 ஆண்டுகள் படித்த பொழுது இவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா ?   2, 6, 8 இது போல ஒற்றை இலக்க மதிப்பெண்களை மட்டுமே பெற்றார்.

ஒரு வழியாக 12 ஆண்டுகள் கழித்து எம்பிபிஎஸ் பாஸ் செய்தார் கோகுல். கோகுல் படித்த பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, தொடங்கப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.  பின்னாளில், அது நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறியது.  கோகுல் படித்த காலத்தில் அது பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தோடுதான் இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி மதிப்பெண் எடுக்கும் கோகுல் எந்த காலத்திலாவது எம்பிபிஎஸ் பாஸ் செய்வாரா? அவரை பாஸ் செய்ய வைக்க, கோகுலின் தந்தை ஏ.என்.ராதாகிருஷ்ணன் அணுகிய நபர்தான் ஜலீஸ் அகமது கான் தரீன் என்ற ஜேஏகே தரீன். இவர் அப்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தார். தற்போது, க்ரெசன்ட் பொறியியல் கல்லூரியில் இருக்கிறார். இவருக்கு கோகுலை பாஸ் செய்ய வைக்க கொடுக்கப்பட்ட தொகை 25 லட்சம் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

துணை வேந்தரின் உதவியோடு மட்டும் எம்.பி.பிஎஸ் பாஸ் செய்து விட முடியுமா? மற்றவர்களின் உதவி வேண்டாமா?  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பதிவாளராக உள்ள டாக்டர் ஜே.சம்பத் மற்றும் துணைப் பதிவாளர் டாக்டர்.முரளிதாசன் ஆகியோரின் உதவியோடு ஒரு வழியாக பாஸ் செய்து முடித்தார் கோகுல். 

எம்பிபிஎஸ் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் படிக்கையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்ற வேண்டும். ஐந்தாம் ஆண்டு படிக்கும் கோகுல், நான் எங்களது கல்லூரியான மீனாட்சி கல்லூரியிலேயே ஹவுஸ் சர்ஜன் பணியாற்றிக் கொள்கிறேன் என்று வந்துவிட்டார்.    ஒரே ஒரு நாள், ஒரே ஒரு நாள் கூட ஒரு பேஷன்டைக் கூட கோகுல் பார்த்தது கிடையாது.    இப்படி இறுதியாண்டு கோகுல் படித்துக் கொண்டிருந்தபோதே, முத்துக் குமரன் மருத்துவக் கல்லூரியின் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதற்கு மாதந்தோறும் ஐந்து லட்ச ரூபாய் சம்பளம்.

சரி தற்போது கோகுல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்பீர்கள். தற்போது கோகுல், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.  

கோகுலை பத்து ஆண்டுகள் கழித்து பாஸ் செய்ததற்கு பிரதிபலனாக, துணைப் பதிவாளர் டாக்டர் முரளிதாசனின் மகள் அபிராமி என்பவருக்கு, ஏ.என்.ராதாகிருஷ்ணனின் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வழங்கப்பட்டது.  இந்தப் பெண் தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்.

இந்த கோகுல்தான், இந்த ஆண்டு ஜனவரி மாதம், குடி போதையில், ராகவேந்திரா மருத்துவமனையின் உரிமையாளரை நண்பர்களோடு சென்று தாக்கி, மருத்துவமனையை அடித்து நொறுக்கி, காவல்துறையிடமிருந்து தப்பி ஓடி, பின்னர் கைது செய்யப்பட்டவர்.  

தற்போது இவரது முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரிக்கு, மத்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.   இதை எதிர்த்து தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார், இதன் தாளாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.

இந்த ஏ.என்.ராதாகிருஷ்ணன், மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.  இவர் காமர்ஸ் டிப்ளமா படித்து விட்டு, ப்ளஸ் டூ மாணவர்களுக்கு தட்டச்சு மற்றும் அக்கவுன்டன்சி வாத்தியாராக இருந்தார்.  இதுதான் இவரது கல்வித் தகுதி.  இந்தப் பல்கலைக்கழகத்தின் தாளாராக இருப்பவர் ஏ.என்.சந்தானம்.  இவர் ராதாகிருஷ்ணனின் சொந்த சகோதரர்.    இவர் ஓய்வு பெற்ற முனிசிபல் கமிஷனர். இவர்களெல்லாம் சேர்ந்துதான் மேலே பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

தற்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன். அதில் முதல் பத்தியிலேயே அவர் குறிப்பிடுவது, முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, மைனாரிட்டி கல்வி நிலையம் என்ற அடிப்படையில் நடத்தப்படுவது.   மைனாரிட்டி கல்வி நிலையம் என்ற தகுதி எப்படி வருகிறது ? 

1983ம் ஆண்டு, மீனாட்சி அம்மாள் ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு ட்ரஸ்ட் பதிவு செய்யப்படுகிறது. இந்த ட்ரஸ்ட், தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்காக என்று தொடங்கப்படுகிறது.  இந்த ட்ரஸ்டின் பதிவுப்படி, இதன் நோக்கம், இந்து மதத்தை பரப்புவது, கல்வி நிலையங்கள் நடத்துவது, இந்து கலாச்சாரத்தை பரப்புவது ஆகியன.  

தோண்டத்தோண்ட பூதகரமாக நீளும் அதிர்ச்சியான முழு விபரங்களுக்கு கீழே உள்ள “LINK” ஐ “கிளிக்” செய்யுங்கள்..

http://savukku.blogspot.in/2014/08/blog-post_10.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

67 − = 58

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb