[ தொலைக்காட்சிகளில் இப்பொழுது ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடரை வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பார்க்க முடிவதில்லை என்றும்; இதை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று அறிவித்து நள்ளிரவு சினிமா ஒளிபரப்பும் நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் என்றும், வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் வருமாறு:
தர்மபுத்திர, (யுத்திஸ்த்ரா) வாயுபுத்ர, (பீமன்) ஆசியோடு குந்திக்கு தர்மர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக் காட்சியில் வாயுவைக் காட்டும்போது உடனே குழந்தைகள் அந்தப் பிறப்புகள் பற்றி கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப்பட்டது. எனவே அதுபற்றியெல்லாம் குழந்தைகள் கேள்விகள் கேட்கக் கூடாது என்றுதான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.
பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்? என்று ஆங்கில இந்து ஏட்டில் (17.12.1988) கடிதம் எழுதி ஆதங்கப்பட்டவர் சென்னையைச் சேர்ந்த டி.அய். சுந்தரம் என்பவர்தான்.]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசிய (2.8.2014) உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். தாவே நான் சர்வாதிகாரியாக ஒரு நாள் இருந்தால் முதல் வகுப்பிலிருந்து பகவத் கீதை, மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றைக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று ஆணையிடுவேன் என்று பேசினார்.
இதே நீதிபதி கடந்த ஜூன் 2ஆம் நாள் சர்வதேச மறைமுகவரி கணக்குத் தணிக்கையாளர் கூட்டமைப்பின் உறுப் பினர்கள் தினம் சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு என்ன பேசினார்?
பிரதமர் நரேந்திரமோடியின் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ராமராஜ்ஜியம் நடக்கும் என்று முன்பு சொன்னார். அதுபோல ராமராஜ்ஜியம், இந்தியாவில் நடந்தால் குற்றங்கள் எதுவும் நடக்காது. வக்கீல்கள் நீதிபதிகள் ஆகி யோருக்கு வேலை இருக்காது என்று பேசினாரே!
மதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி எடுத்துக் கொண்டு பதவி ஏற்றவர்கள் இப்படி கிருஷ்ணனையும், இராமனையும் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்றால், இது நாடு தானா? என்ற கேள்வி எழத்தானே செய்யும்?
இதனைத் தொடர்ந்து இதுதான் சரியான இளித்த வாய்ச் சந்தர்ப்பம் என்று கருதி – ஆர்.எஸ்.எஸ். கலாச்சார அமைப்பான பாரதீய விஞ்ஞான கேந்திரம் என்ற அமைப் பின் தலைவர் பி. பரமேசுவரன் ஓர் அறிவிப்பைக் கொடுத்துள்ளார்.
ஒரு முறையேனும் பகவத் கீதையைப் படித்தவர்களாக இருந்தால் அதில் மதக் கருத்துகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள். கீதையைப் போல வேறு எந்த நூலும் இதுபோன்ற பரந்த அளவில் பரவவில்லை. எண்ணிலடங்கா விளக்கங் களுடன் கீதையைப் போல பதிப்பித்திடவும் இல்லை. கீதை காலத்தையும், இடத்தையும் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஞானத்துக்கான கருவூலமாக, மனதை வலுப்படுத்தும் அளவில் என்றென்றைக்கும் செல்வாக்கோடு இருந்து வருகிறது. மகாத்மா காந்தி கீதையைப் பற்றிச் சொல்லும் பொழுது தாய் என்றும், எப்பொழுதெல் லாம் குழப்பம் அல்லது வருத்தம் அடை வாரோ, அப்போதெல்லாம் அரணாக இருந்ததாகக் கூறியுள்ளார். நம்முடைய சுதந்திரப் போராட்டத்தில் தீர்மானிக்கக் கூடிய தாக்கத்தை கீதை ஏற்படுத்தியுள்ளது. கீதை மனிதனின் உயர்வான மதிப்பைச் சொல்லிக் கொடுக்கிறது. உலக அளவில் சீரழிவுகளுக்குத் தீர்வாக கீதை உள்ளது (டி.என்.ஏ. இந்தியா.காம் – 6.8.2014).
இத்தோடு இந்தியா முழுமையும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருதவாரம் கொண்டாடப்பட வேண்டும் (ஆகஸ்டு 7 முதல் 13 முடிய) என்ற மத்திய அரசின் சுற்றறிக்கையையும் கணக்கில் கொண்டால் தான் இந்தியா – இந்துத்துவா என்னும் காட்டாற்றுக்கு இழுத்துச் செல்லப்படுகிறது என்பதை அறியலாம்.
மகாபாரதத்தில் ஒரு உள்ளீடாக கீதையைச் சொல்லுகிறார்கள்; இல்லை இல்லை; இது ஓர் இடைச்செருகல் என்பது தான் வரலாற்றாசிரியர்களின் கணிப்பு.
யுத்தக் களத்திலே 700 செய்யுள்களை அர்ச்சுனனிடம் அருளுபதேசமாக ஒருவன் சொல்ல முடியுமா? அதற்கான அவகாசம் தான் இருக்குமா? கிருஷ்ணன் சுலோகங் களைச் சொல்லும் நேரத்தில் எதிரிப்படைகள் பூப்பறித்து கொண்டுதான் இருக்குமா?
பகுத்தறிவுக்கு ஒத்து வராத குப்பை நூல் இது. அதனால் தான் இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பிரச்சாரம் செய்த விவேகானந்தர் கீதையைப் படிப் பதைவிட, அந்தத் தருணத்தில் கால்பந்து ஆடுவது நல்லது என்ற அருமையான கருத்தை வெளிப்படுத்தினார்.
அண்ணல் அம்பேத்கரோ கீதை ஒரு முட்டாளின் உளறல் என்று செவுளில் அறைவதுபோல அறைந்தார்.
கீதை மக்களுக்குச் சொல்லும் உபதேசம் தான் என்ன? கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்பது தானே? அப்படி யானால் அடுத்தவனுக்கு உழைத்துப் போடு. உள் வாயையும் வயிற்றையும் கட்டிப் போட்டு விடு என்பதுதானே.
இந்தக் கீதைமீது ஏற்றி வைக்கப்பட்டுள்ள பிரச்சாரப் புழுதி மார்க்ஸியவாதிகளைக்கூட பெரும் பாதிப்புப் பள்ளத்தில் தள்ளியுள்ளது.
கேரளாவின் முதல் அமைச்சராக விருந்த ஈ.கே. நயினார் ரோம் நகரின் ஆட்சி தலைவரும், கத்தோலிக்க மக்களின் குருவுமான போப்பைச் சந்தித்தபோது – கீதையைப் பரிசாகக் கொடுத்தார் (மாலை முரசு – நெல்லை – 25.6.1997) என்றால் பார்த்துக் கொள்ளலாம். இதனை ஏற்றுக் கொண்டால் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் போராட்டங்களை நடத்த முடியுமா? (கடமையைச் செய்! பலனை எதிர் பாராதே! – கீதை)
மாமஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேபி பாபயோனியை
ஸ்த்ரியோ வைச்யாஸ் – ததா – சூத்ராஸ் தேற
(கீதை அத்தியாயம் – 9; சுலோகம் – 32)
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்த வர்கள் என்ற கீதைதான் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமா? பள்ளிப் பிள்ளைகளின் பாடத் திட்டத்தில் வைத்துச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டுமா?
வெட்கக்கேடு! வெட்கக்கேடு!! வெட்கக் கேடு!!!
தனக்குத் துக்கமும் துயரமும் வரும் போது காந்தியார் கீதையைப் படிக்கச் சொன்னாராமே! அதே கீதையை எடுத்துக் காட்டித்தான் நீதிமன்றத்தில் காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தையும் செய்யலாம்; அப்படி செய்வதும் தர்மம் தான் என்று பகவான் கிருஷ்ணன் கூறியுள்ளான் – அந்த அடிப்படையில்தான் காந்தியைச் சுட்டுக் கொன்றேன் என்று சொல்லவில்லையா?
காந்தியார் படுகொலை செய்யப்படு வதற்கு ஊக்கச் சக்தியாக இருந்த கீதையை வைத்தே காந்தியாரையும் இணைத்து பிணைத்துப் பேசும் பித்தலாட்டத்தை என்னென்று சொல்ல!
இந்தக் கீதை அதனை உள்ளடக்கிய மகாபாரதத்தைப் பற்றி அக்கிரகார இதழான ஆனந்தவிகடன் என்ன கூறுகிறது?
மகாபாரதத்தில் கிருஷ்ணன் நினைத் திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன் உட்பட கவுரவர்கள் அத்தனைப் பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குருசேத்திரம் வரை செல்ல விட்டார்?
பதில்: முதன் முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி கிருஷ்ணன் யாதவர்களின் அரசனே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதிநிதி யாகச் சென்று போர் வேண்டாம் என்று எடுத்துரைக்க மட்டுமே கிருஷ்ணனால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாக கருதப்பட்டது, மிகப் பிற்பட்ட காலத்தில் தான்; பிறகு கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் கிருஷ்ண வழிபாட்டை முதலில் துவக்கி வைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்
– இப்படிச் சொல்லுவது எது? நினைவில் வையுங்கள் ஆனந்தவிகடன் (31.10.2007)
அதே ஆனந்தவிகடன் இன்னொரு குட்டையும் போட்டு உடைத்துச் சின்னா பின்னம் ஆக்குவதுதான் ஆச்சரியம்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக் கும் இடையே குரு க்ஷேத்திரத்தில் ஒரு பிரம்மாண்டமான போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்திய தொல் பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சம்பவமாகக் கருத முடியாது. அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றும் இல்லை
கி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க் கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.
இராமாயணம், மகாபாரதம் இரண்டி லும் அவ்வப்போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கை வரிசையைக் காட்டிப் பலவற்றைப் புகுத்தியிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி.4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே!
(ஆனந்தவிகடன் 12.10.1975).
அக்கிரகார ஆனந்த விகடனே சாட்சிக் கையெழுத்துப் போட்ட பிறகு அதைத் தூக்கி வைத்துக் கொண்டு குதியாட்டம் போடுவது யாரை ஏமாற்ற?
பார்ப்பனர் அல்லாத மக்களை நான்காம் வருணத்தார்களாக ஆக்குவதற்கு – இன்னும் தங்கள் குதி கால் அடியில் அவர்களைக் கிடத்துவதற்கு இந்த இதி காசங்கள் அவர்களுக்கு தேவைப்படு கின்றன! சமஸ்கிருதக் கொண்டாட்டம் என்பதும் இந்தப் பின்னணியில் பார்க்கப் பட வேண்டியவையே!
மதக் கலவரங்களும், ஜாதிச் சண்டைகளும் தொலைய வேண்டுமானால் சமஸ்கிருதமும், அதன் படைப்புகளும் ஒழிந்து போக வேண்டும் என்று அந்த வட்டாரத்திற்கு மிகவும் வேண்டியவரான விவேகானந்தரே கூறி விட்டாரே!
கற்பனைக் கதைதான் என்றாலும், பாரதத்தின் யோக்கியதைதான் என்ன?
அதற்கும் ஆதாரம் அவாள் ஏடான இந்து ஆங்கில ஏடுதான்.
தொலைக்காட்சிகளில் இப்பொழுது ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடரை வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பார்க்க முடிவதில்லை என்றும்; இதை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று அறிவித்து நள்ளிரவு சினிமா ஒளிபரப்பும் நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் என்றும், வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் வருமாறு:
தர்மபுத்திர, (யுத்திஸ்த்ரா) வாயுபுத்ர, (பீமன்) ஆசியோடு குந்திக்கு தர்மர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக் காட்சியில் வாயுவைக் காட்டும்போது உடனே குழந்தைகள் அந்தப் பிறப்புகள் பற்றி கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப்பட்டது. எனவே அதுபற்றியெல்லாம் குழந்தைகள் கேள் விகள் கேட்கக் கூடாது என்றுதான் பெற் றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக் கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்ட வர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்? என்று ஆங்கில இந்து ஏட்டில் (17.12.1988) கடிதம் எழுதி ஆதங்கப்பட்டவர் சென்னையைச் சேர்ந்த டி.அய். சுந்தரம் என்பவர்தான்.
இராமாயணம் என்பது சூத்திர சம்பூகன் தவமிருந்தான் என்பதற்காக மகா விஷ்ணு வின் அவதாரம் என்று சொல்லப்படும் இராமனால் வெட்டிக் கொல்லப்பட்டான். பழங்குடியைச் சேர்ந்தவன் ஏகலைவன் வில் வித்தை கற்றுக் கொண்டான் என்பதற்காக அவனது கட்டை விரலை குருதட்சணையாக வாங்கிக் கொண்டான் துரோணாச்சாரி – இவற்றின் பொருள் என்ன? பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது என்பது தானே? பிராமணர் யார் தெரியுமா? பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் ஜாக் கிரதை – அவனிடம் வாலை ஆட்டாதே என்பதற்காகத்தானே! இவற்றையெல்லாம் பாடத் திட்டத்தில் பாடமாக வைத்துப் பிள்ளைகளின் அறிவில் நச்சுப் பொடிகளைத் தூவத்தானே?
மறுபடியும் இராமன் படம் எரிக்கப்பட வேண்டுமா? மீண்டும் கிருஷ்ணன் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்ற வேண்டுமா?
பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் (வாரணாசி 20.12.2013) என்று உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பு நரேந்திரமோடி சொன் னார் என்பதற்காக அதனைச் செயல்படுத்த வாள்களைக் கூர் தீட்டினால், அதுவே ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கான காரணத் தின் காரணியாகவும் மாறும் எச்சரிக்கை!
1971 சேலமும் – 1974 சென்னை இராவண லீலாவும் நினைவிருக்கட்டும்! நினை விருக்கட்டும்!!
– மின்சாரம்
”விடுதலை”யில் வெளியான ”மீண்டும் இராவண லீலா நடக்க வேண்டுமா?” கட்டுரை இது.
source: http://viduthalai.in/page-1/85560.html#ixzz39zh0zXwk