பால்மணம் மாறாப் பாலகர்களைக் கொல்லும் பாவிகள்!
M.A. ஸலாமா
உதைபந் தாட்டத்தின்
உலகக் கூட்டத்தில்
வதைபந் தாட்டத்தின்
வலிகள் காணோமே!
வெடிகளே கும்மிருட்டை
வெளுப்பென காட்டுதலால்
விடிவினை காண்பதில்லை
விரயமே வாழ்தலிலே!
மனிதம் கொன்றவர்கள்
மழலை தின்றவர்கள்
புனிதப் பள்ளிதனைப்
பொசுக்க நின்றவர்கள்!
அரக்கர்கள் விளையாட்டில்
அழிகின்ற சிறுவர்கள்
இரக்கம்தான் விரைவாக
இறங்கட்டும் தரைமீது!
வல்லரசு நாடுகளும்
வாயிலாத பேடிகளாய்க்
கொல்லுதலை ஆதரித்தல்
கொஞ்சமேனும் நீதமுண்டோ?
கழுகுப் படைகளிடம்
கஸாவின் இரத்தமாகக்
கழுத்து முழுவதுமாய்க்
கலந்துப் பரவியதே
களையிழந்த நாட்டில்தான்
களவுபோன தோட்டங்கள்
விளைவதெலாம் தோட்டாக்கள்
விதைப்பவர்கள் முட்டாள்கள்!
பூவையும்தான் கிள்ளுவரோ
பூவுலகில் உள்ளவரும்
பூவினுமே மெல்லியராம்
பூமழலை கொல்லுவதேன்?
மழலைக் கறிதின்னும்
மகாபேய் யூதர்கள்
தழலாம் நரகத்தில்
தவழும் தீதர்கள்!
எறிகின்ற கற்களல்ல
எரிக்கின்ற அபாபில்
சிறகில்தான் வைத்திருந்தச்
சிறுகற்கள் அறிவீர்!
ஓடிவிளை யாடுபவன்
ஓங்கிவீசும் கூர்மையினால்
ஓடிவிடும் கோழையேநீ
உன்துணிவில் ஏழையேநீ
உயிரைத்தான் விலைகொடுத்து
உயர்வானச் சுவனமதைப்
பயிராக்கும் பயிற்சியினைப்
பயில்கின்ற பசுந்தளிர்கள்!
source: http://www.kalaamkathir.com/