பிஸ்மில்லாஹ் உரத்துக் கூறுவோம்
[ ஹதீஸ் – தூங்கப் போகும் முன் பிஸ்மில்லாஹி கூறி நடவடிக்கைகளை மூடி வையுங்கள்.
காலையில் கண் விழித்தவுடன் ‘‘பிஸ்மில்லாஹ்’’ கூறி துவக்குவீர்.
அரிசி உலையில் போடும் முன் மகளிர் ‘‘பிஸ்மில்லாஹ்’’ கூறி போட வேண்டும்.
இண்டர்நெட், செல்போன், அன்றாட பழக்கம் பிஸ்மில்லாஹ் கூறுவதை ஒத்தி போடுகிறோம்.
தவ்ஃபீக். நல்லறம் சில நேரங்களில் உரத்துக் கூறுவீர். உறவினர்களும் பழக்கப்படுவர். பிள்ளைகளும் கற்றுக் கொள்வர்.
‘‘அல்ஹம்துலில்லாஹ்’’ கூறாவிடின் அந்த காரியம் தரித்திரம்.
இன்னொரு ரிவாயத், பிஸ்மில்லாஹ் கூறாமல் துவங்கினால் தரித்திரம் பிடிக்கும்.
வீட்டை விட்டு வெளியே வர, உள்ளே செல்ல தனித்தனி துஆ உண்டு. ஆனால் பிஸ்மில்லாஹ் பொது துஆ. ]
சூரா தவ்பா, அத்தியாயம் 9. இன்னொரு பெயர் ‘‘பராத்’’. விலகியிருத்தல். சில சூராக்களுக்கு இரண்டு பெயர்கள் உண்டு.
சூரா தஹ்ர் – சூரா இன்சான். சூரா லஹப் – சூரா மஸத். மதீனாவில் இறங்கியது. திருக்குர்ஆனில் அனைத்து சூராக்களின் முதல் வரியாக பிஸ்மில்லாஹ் எழுதப்பட்டிருக்கும். ஆனால், தவ்பா சூரா முன் பிஸ்மில்லாஹ் கிடையாது. முதல் வசனம், முஷ்ரிக் குறித்த கண்டனம், வேதனை ஆயத்துகள் பதிவாகியுள்ளன. ரஹ்மான், ரஹீம், அல்லாஹ்வின் நாமம் இருக்க வாய்ப்பில்லை. அதனால், சூரா தவ்பா, ‘‘அவூதுபில்லாஹி’’ கூறி ஆரம்பிக்கலாம்.
ஹிஜ்ரி 2, பத்ருப் போர். ஹிஜ்ரி ஆண்டு 3, உஹப் போர். ஐந்தாம் ஆண்டு கந்தக், ஹிஜ்ரி 6, ஹ§தைபிய்யா ஒப்பந்தம், எட்டாம் ஆண்டு மக்கா வெற்றி. ஒன்பதாம் ஆண்டு முஸ்லிம்களின் முதல் ஹஜ், பத்தாவது ஆண்டில் நபிகளாரின் முதல் ஹஜ், இறுதி ஹஜ் இறுதி உரை. முஸ்லிம்களின் வரலாறு பொது அறிவு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரிந்திருக்க வேண்டும். மண்ணறை, ஹஷர் இறுதிநாளில் இத்தகைய பொது அறிவு கை கொடுக்கும். வாழ்நாளில் ஈமான் அதிகரிக்கும். நினைவுபடுத்தினால் ‘‘ஃதவாபு’’ நன்மை பெருகும்.
ஹிஜ்ரி 9 ஆண்டில் தவ்பா சூரா இறங்கியது. 114 சூராக்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. பிஸ்மில்லாஹ் ஒவ்வொரு அத்தியாயத்துக்கு சீல் தர முத்திரை. 113 பிஸ்மில்லாஹ் உண்டு. தவ்பா சூராவின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹ் அமையவில்லை.
சூரா ஹ§ஜுராத் அத்தியாயம் 49, வசனம் 2. லா தர்பவூ அஸ்வாதகும் ‘‘நபியின் குரலுக்கு மேலே உயர்த்த வேண்டாம்’’ வசனம் இறங்கிய பின்னர் மவுனம் காத்தனர். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு மூலமாக இதர நபித் தோழர்கள் ஐயம் தீர்த்தனர். ‘‘அதபு’’, மரியாதை இல்லையென்றால் உருப்பட மாட்டீர். ஒவ்வொன்றுக்கும் ஒரு ஜீனத் அழகு இருக்கிறது. குர்ஆனுடைய ஜீனத் அழகு பிஸ்மில்லாஹ். நமக்கு இன்னும் நடைமுறை வாழ்க்கையில் பழக்கமாகவில்லை.
ஹதீஸ் – தூங்கப் போகும் முன் பிஸ்மில்லாஹி கூறி நடவடிக்கைகளை மூடி வையுங்கள்.
காலையில் கண் விழித்தவுடன் ‘‘பிஸ்மில்லாஹ்’’ கூறு துவக்குவீர்.
அரிசி உலையில் போடும் முன் மகளிர் ‘‘பிஸ்மில்லாஹ்’’ கூறி போட வேண்டும்.
இண்டர்நெட், செல்போன், அன்றாட பழக்கம் பிஸ்மில்லாஹ் கூறுவதை ஒத்தி போடுகிறோம்.
தவ்பீக். நல்லறம் சில நேரங்களில் உரத்துக் கூறுவீர். உறவினர்களும் பழக்கப்படுவர். பிள்ளைகளும் கற்றுக் கொள்வர்.
‘‘அல்ஹம்துலில்லாஹ்’’ கூறாவிடின் அந்த காரியம் தரித்திரம்.
இன்னொரு ரிவாயத், பிஸ்மில்லாஹ் கூறாமல் துவங்கினால் தரித்திரம் பிடிக்கும்.
வீட்டை விட்டு வெளியே வர, உள்ளே செல்ல தனித்தனி துஆ உண்டு. ஆனால் பிஸ்மில்லாஹ் பொது துஆ.
குர்ஆன் படிக்கும்வரை பரக்கத் நீடிக்கும். அல்லாஹ் தனது கருணையால் பிஸ்மில்லாஹ்வை நிரந்தரமாக்கிவிட்டான். ‘‘ப’’ அரபி மொழியில் இந்த சொல்லுடன் வார்த்தை துவங்குவதில்லை. இலக்கண விதி மீறல். ஆனால் பிஸ்மில்லாஹ் சொன்னால் வினைச்சொல் தானாகவே இணைந்துக் கொள்ளும்.
சாப்பிடும்போது பிஸ்மில்லாஹ் கூறினால், முழுமையான அர்த்தம். ‘‘அகுலு’’ இறைவன் கருணையால் சாப்பிடுகிறேன். முழு வினைப்பயன் வந்து நிற்கும்.
பிஸ்மில்லாஹ்வின் இலக்கண ஆற்றல், தனித்தன்மை.
தூங்கப் போகும் முன் பிஸ்மில்லாஹ் கூறினால் கெட்ட கனவு வராது. வாழ்க்கையில் சிரமம் புலம்புகிறீர். அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும் வேளை. பிஸ்மில்லாஹ் உச்சரிக்க மறக்கிறோம்.
இன்று முடிவெடுங்கள். ஒவ்வொரு காரியத்தையும் பிஸ்மில்லாஹ் கூறி துவக்குவோம். தோல்வி வராது.
ஈமானை அறிவிக்க பிஸ்மில்லாஹ் உரக்கக் கூறுவீர்.
அல்லாஹ் கேட்கிறான். சமியல்லாஹுலிமன் ஹமீதா – புகழ்வதை அல்லாஹ் கேட்டுக் கொள்கிறான்.
துஆ புரிந்து கேட்டால் ‘‘அஸர்’’ பலன் உண்டு. எங்கே அழுவது, எங்கே மகிழ்வது. துஆ கேட்பவனுக்கு புரிய வேண்டும். தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. தொழுகையாளி தோற்கமாட்டான்.
அல்லாஹு அக்பர் கூறி தொழுகத் துவங்கியதும் நூர் தலையிலிருந்து வானம் வரை உண்டாகிவிடும். புரிந்து தொழுதால் இர்பான் ஞானம், பரக்கத் கிடைக்கும். தொழுகாமலிருந்தால் இன்னும் மோசம், நட்டம்.
குர்ஆன் புனிதம், அர்த்தம் புரியாமல் வாசித்தாலும் ஃதவாபு கிடைக்கும். பார்த்தால் போதும் ஃதவாபு.
தபூக் யுத்தத்தில் மூன்று சஹாபாக்கள் பங்கேற்கவில்லை. 50 நாட்கள் புறக்கணிப்புக்குள்ளாயினர். மிகவும் மனம் வருந்தினர். அவர்களின் தவ்பா பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றான். கூனூ மா ஸாதிக்கீன் வசனம் 119. உண்மையாளர்களுடன் சேர்ந்து கொள்வீர். வசனம் 112, தவ்பா செய்தவருக்கு முதலிடம். இபாதத் பின்னர் வருகிறது. மன்னிப்பு கேட்பவரை, இறைவனுக்கு மிகவும் பிடிக்கும்.
ஹதீஸ் – ‘‘ஆதமின் மக்கள் பாவம் புரிபவர்கள். மன்னிப்பு கேட்போர் சிறந்தவர்.’’
நாற்பது ஹதீஸ் மனப்பாடம் செய். நபிகளாரின் ஷஃபாஅத் கிடைக்கும். புரிந்த தவறுக்கு வருத்தப்படுவதே தவ்பா. கன்னத்தில் அடித்துக் கொள்ள வேண்டாம். பனீ இஸ்ராயீல் சமுதாயத்தில் கழுத்தை வெட்டிக் கொண்டால் தவ்பா கபூலாகும். ஆனால் ரசூலுல்லாஹ்வின் உம்மத், மன்னிப்புக் கோரி வருந்தினால் போதும். பாவம் தொடர்ந்து புரியக்கூடாது. பர்னால் தீப்புண் மருந்து இருக்கிறது. தீயில் விரலை நுழைக்க வேண்டாம்.
மௌலானா முஸ்தபா ஷரீப் நக்ஷபத்தி, மெஹ்திபட்டிணம் வார உரை
தமிழில் : பொறியாளர் ஆ.ர. இபுராஹிம், பி.இ.,
source: முஸ்லிம் முரசு மார்ச் 2012