ஒரே நாளில் இஸ்ரேலுக்கு எதிராக மாறிய இந்தியா!
[ அமெரிக்காவுக்கு மாற்று இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற ஆசிய ஜாம்பவான்களும், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டங்களின் முக்கிய நாடுகளும் இணைந்து ‘பிரிக்ஸ்’ அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நாடுகள் பொருளாதார உதவிக்காக வங்கியொன்றையும் உருவாக்க முன்வந்துள்ளன. உலக பொருளாதாரம், ராணுவ விவகாரங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒடுக்க பிரிக்ஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் தீர்மானம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களிக்க முன்வந்த நிலையில், அதற்கு எதிராக பாலஸ்தீனுக்கு ஆதரவு அளிக்க பிரிக்ஸ் நாடுகள் முடிவெடுத்துவிட்டன. இதனால் இந்தியாவும் அதன் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.]
ஒரே நாளில் இஸ்ரேலுக்கு எதிராக மாறிய இந்தியா!
டெல்லி: “பாலஸ்தீனோ அல்லது இஸ்ரேலோ.. எங்களுக்கு அதெல்லாம் தெரியாது, இந்தியா எப்போதுமே அணி சேராத நிலைப்பாட்டைத்தான் கடை பிடிக்கும்” என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கர்ஜனை செய்த எதிரொலி கூட அடங்காத நிலையில், ஜெனிவாவில் இந்தியா இதற்கு நேர் எதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில், பாலஸ்தீன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வாக்களித்துள்ளது.
கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார், பாஜகவின் அடிப்படைவாதிகள் கடுமையாக எதிர்க்க தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானுடனான 1971ம் ஆண்டு போரின்போது இஸ்ரேல் நமக்கு உதவி செய்தது என்பதை அவர்கள் சுட்டிக் காண்பிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் சாடல் சமூக வலைத்தளங்களில் பாஜகவின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்து அக்கட்சியை சேர்ந்த பலரே கருத்துக்களை எழுதிவருகிறார்கள். மோடி அரசிடமிருந்து இப்படியொரு இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாட்டை எதிர்பார்க்கவில்லை. தனது பாதுகாப்புக்காக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை இந்தியா எதிர்த்தால், நாளை இந்தியாவிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது, அதை எந்த முகத்தை வைத்து எதிர்ப்பது என்பதுபோன்ற கருத்துக்களை அவர்கள் பகிர்ந்துவருகின்றனர்.
இரு தரப்பிலும் தவறு கடந்த செவ்வாய்க்கிழமை, இந்திய நாடாளுமன்றத்தில், இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டபோது, அதை உறுதியாக மறுத்தது மத்திய அரசு. இருதரப்பிலும் வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளதால் இருதரப்புக்கும் இந்தியாவின் கண்டிப்பு உண்டு, என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கூறியதை, எதிர்க்கட்சிகள் ரசிக்கவில்லை. வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
சுஷ்மா ஆதிக்கத்துக்கு ஆப்பு நேற்று நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு எதிராக, சர்வதேச விசாரணை தேவை என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. பாலஸ்தீன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததில், சுஷ்மா சுவராஜ் விருப்பம் மீறப்பட்டுள்ளதையே இது காண்பிக்கிறது. இலங்கை உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சினையிலும், அது உள்நாட்டு விவகாரம் என்ற ஒற்றை சொல்லை வைத்தே காய் நகர்த்துவது சுஷ்மாவின் கைவந்த கலை. அதையேத்தான் பாலஸ்தீன் விவகாரத்திலும் சொல்லிப்பார்த்தார். ஆனால் பிரதமர் மோடி இதற்கு சம்மதிக்கவில்லை. அவரது கட்டளையின்பேரிலேயே இந்தியா இதுபோன்ற முடிவை கடைசி நிமிடத்தில் எடுத்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதாரம் மோடி இதுபோன்ற முடிவை எடுக்க பாலஸ்தீன் மக்கள் மீதான பொதுநலம்தான் காரணம் என்று கூறினால், அதை பாலஸ்தீனே நம்பாது. இஸ்லாமிய நாடான பாலஸ்தீனத்துக்கு, மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள பல இஸ்லாமிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இந்தநாடுகளில் இருந்துதான் இந்தியாவுக்கு கச்சா எண்ணை, எரிவாயு சப்ளை கிடைக்கிறது. எனவே மேற்காசிய நாடுகளை பகைத்துக்கொள்வது இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பெரிய அண்ணன் தெற்காசியாவின் மிகப்பெரிய நாடான இந்தியா, இந்த பிராந்தியத்தில் தன்னை ஒரு பெரிய அண்ணனாக காண்பித்துக்கொள்ள விரும்புகிறது. வழ.. வழ.. காங்கிரஸ் ஆட்சி விடைபெற்று பாஜக தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், தெற்காசியா, மேற்காசிய நாடுகள், இந்தியாவிடம் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளன. இதை பூர்த்தி செய்து இப்பிராந்தியத்தின் தலைவராக காண்பிக்க இந்த தீர்மானம் உதவும்.
இஸ்ரேல் உறவு பாதிக்காது இஸ்ரேலுடன் இந்தியா வைத்துள்ள உறவு என்பது, பெரும்பாலும் பாதுகாப்பு சம்மந்தமானது. இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதியில் இந்தியாவின் சந்தை மதிப்பு அதிகம். கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே, இந்தியாவுக்கு ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஆயுதங்களை இஸ்ரேல் ஏற்றுமதி செய்துள்ளது. எனவே அந்த நாட்டுக்கு எதிராக வாக்களித்தாலும், இந்தியாவை விட்டு விலக, இஸ்ரேல் நினைக்காது. அந்த நாட்டுக்குத்தான் அதனால் பெரிய இழப்பு ஏற்படும்.
அமெரிக்காவுக்கு மாற்று இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற ஆசிய ஜாம்பவான்களும், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டங்களின் முக்கிய நாடுகளும் இணைந்து ‘பிரிக்ஸ்’ அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நாடுகள் பொருளாதார உதவிக்காக வங்கியொன்றையும் உருவாக்க முன்வந்துள்ளன. உலக பொருளாதாரம், ராணுவ விவகாரங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒடுக்க பிரிக்ஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் தீர்மானம் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களிக்க முன்வந்த நிலையில், அதற்கு எதிராக பாலஸ்தீனுக்கு ஆதரவு அளிக்க பிரிக்ஸ் நாடுகள் முடிவெடுத்துவிட்டன. இதனால் இந்தியாவும் அதன் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஒரே போன்று இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்துள்ளன.
source:http://tamil.oneindia.in/