அல்லாஹ்வை நம்பும் முஸ்லிம்கள் அல்லாஹ்வை மறுக்கும் யூதர்களால் கொல்லப்படுவது ஏன்?
அண்ணா பெறியாரின் கொள்கை உடையை ஒருவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார் எனக்கு பதில் சொல்லதெரியவில்லை.அவருக்கு நான் சில பதில்களை சொன்னேன் ஆனால் அந்த பதிலில் எனக்கே திருப்தியில்லை. அவர் கேட்ட கேள்விகள் .
1. உங்கள் அல்லாஹ் சக்தி உள்ளவர் என்கிறாயே! அப்புரம் ஏன் அந்த அல்லாவை ஏற்றுக்கொண்ட சோமாலியா மக்கள் உன்ன உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள்?
2. உங்கள் அல்லாஹ்வையே முழுமையாக நம்பியிருக்கும் பாலஸ்தீன மக்கள் ஏன் உங்கள் அல்லாஹ்வை ஏற்கமறுக்கும் யூதனால் சாகடிக்க படுகிறார்கள் பாவம் பச்சகுழந்தைகள் ஏன் அவர்களும் கொல்லப்படுகிறார்கள்?
3. இதுகெல்லாம் காரணம் யார் இறைவனா? மனிதனா?
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்றே எனக்கு தெரியவில்லை அண்ணா .
நானும் 5, 6,பேரிடம் கேட்டேன் அவர்கள் சொன்ன எந்தபதிலும் எனக்கு திருப்தியில்லை அண்ணா?
.الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ ﴿2:155﴾
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ﴿2:156﴾
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ ﴿2:157﴾
2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
மேற்கண்ட வசனம் மூலம் இறைவன் பசி, இழப்பு, அச்சம் போன்றவற்றைக் கொண்டு மனிதர்களை சோதிப்பேன் என்று சொல்லி இருக்கின்றானே தவிர இறைவனை வணங்குவோருக்கு துன்பம் வராது எனக் கூறவில்லை!
இந்த உலகம் ஒரு சோதனைக்களம் இதைத் தாங்கிக் கொள்பவர்கள் வெற்றி அடைகின்றனர்!
விளையாட்டு வீரனை உருவாக்க கடுமையான பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளரை கொடுமைக் காரன் எனக் கூறுவதும் , ராணுவ வீரரை உருவாக்க கடுமையான பயிற்சியாளரை இரக்கமில்லாதவர் என்று கூறுவதும், நோயுற்ற தன் குழந்தையின் நலம் கருதி அது கேட்கும் உணவைத் தவிர்க்கும் தாயை கருணை இல்லாதவள் என்று கூறுவதும் எவ்வளவு அறியாமையோ அது போலத்தான் இந்த வாதமும்!
மேலும் இதில் மனிதன் தன் கரங்களால் ஏற்படுத்தி கொள்ளும் துன்பங்களும் உண்டு! ஒரு பக்கம் உணவு தான்யங்கள் வீணாகி கடலில் கொட்டப் படுவதும் மறுபக்கம் மக்கள் பட்டினியில் இருப்பதும் பகிர்ந்து அளிக்கின்ற மனித முறைமையில் உள்ள தவறே அன்றி படைத்தவனின் தவறல்ல!
ஆக்கம் Sengis Khan