Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்துத்வாவுக்கும் இஸ்ரேலியருக்கும் என்ன தொடர்பு?

Posted on July 21, 2014 by admin

இந்துத்வாவுக்கும் இஸ்ரேலியருக்கும் என்ன தொடர்பு?

இந்துத்வாவுக்குள் மறைந்து இருப்பது இஸ்ரேலிய சிந்தனை என்பதனை விளக்கும் அழகிய கருத்துப்படம். நன்றி: கார்டுனிஸ்டு யூசுப் முன்னா.

நமக்கு ஆச்சரியமாக இருக்கும். எங்கோ ஒரு தமிழகத்தின் மூலையில் இருக்கும் ஒரு பார்ப்பனர் தனது பூணூலை உருவி விட்டுக் கொண்டு இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்கலாம். பிஜேபி ஆட்சியில் எப்போதெல்லாம் அமருகிறதோ அப்போதெல்லாம் இஸ்ரேலிய உறவும் நமது நாட்டு உறவும் பலப்படும்.

அன்றைய வாஜ்பாய் ஆட்சியிலும் அதுதான் நடந்தது. இன்றைய மோடியின் ஆட்சியிலும் அதே உறவு மேலும் மேம்படுகிறது. இது ஏன் என்று என்றாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

ஆரியர்கள் பல பிரிவுகளாக உலகெங்கும் பிரிந்துள்ளனர். எகிப்தியர்கள், யூதர்கள், ஈரானியர்கள், ரஷ்யர்களில் சில பிரிவினர் மற்றும் நம் ஊர் பாரப்பனர்கள் என்று இவர்கள் அனைவருமே ஒரே இனமாக இருந்து காலப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நாடோடிகளாக சுற்றித் திரிந்து பல நாடுகளிலும் நிரந்தரமாக தங்கி விட்டனர்.

இவர்களின் முக சாயலும், எந்த செயலிலும் தங்களை முன்னிறுத்தி மற்றவர்களை பின்னுக்கு தள்ளி விடுவதிலும், வாழ்க்கையில் முன்னேற பாவ புண்ணியம் பார்க்காமல் எதனையும் செய்திட துணிந்து விடும் இயல்பும் ஏறத்தாழ அனைவருக்குமே ஒத்து வருவதை நாம் கவனித்திருப்போம்.

எனவே தான் எங்கோ இருக்கும் சுப்ரமணியம் சுவாமி இஸ்ரேலுக்காக துடிக்கிறார். நமது வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நமது பார்லிமெண்டில் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். அதே போல் ஆர்எஸ்எஸில் அங்கம் வகிப்பதில் முன்னணியில் இருப்பதும் பார்ப்பன அம்பிகள் என்பதும் நமக்குத் தெரியும்.

ஆர்எஸ்எஸூக்கும் இஸ்ரேலுக்கும் எந்த வகையிலெல்லாம் முன்பு தொடர்பு இருந்தது. அது நமது நாட்டை எந்த வகையிலெல்லாம் இன்று வரை அச்சுறுத்திக் கொண்டுள்ளது என்பதை பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் சாராம்சத்தைப் பார்ப்போம்.

ஆசிய நாடுகளில் மிக முக்கியமான நாடாக விளங்குவது நமது இந்தியா. பாகிஸ்தானும் ஓரளவு மனித வளங்களை கொண்ட நாடு. இந்த இரண்டு நாடுகளும் தொழில் துறைகளில் நெருங்கி வர ஆரம்பித்தால் மிகப் பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த இரு நாடுகளும் நட்பு நாடுகளாக மாறுவதில் நேரிடையாக பாதிக்கப்படுவது வேறு இரு நாடுகள். அவை முறையே அமெரிக்காவும் இஸ்ரேலும்.

இந்தியாவிற்கு மிகவும் அதிகமான இராணுவ தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பது அமெரிக்காதான். பாகிஸ்தானுக்கு அதிக அளவில் இராணுவத் தளவாடங்களை விற்பனை செய்து கொண்டிருப்பதும் அமெரிக்காவே! இராணுவத் தளவாடங்களை வளரும் நாடுகளான இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு விற்று இலாபம் சம்பாதிப்பதில்தான் அமெரிக்காவின் பொருளாதாரமே நிலை கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இராணுவத் தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் நாடு இஸ்ரேல். 2007 முதல் 2012 வரை இந்திய அரசு 50000 கோடி ரூபாயை இராணுவத் தளவாடங்களுக்கு செலவிட இருக்கிறது. இதில் பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தான் செல்ல இருக்கிறது.

இப்படி நமது நாடு ஏராளமான தொகையை ராணுவத்துக்கு செலவிடக் காரணம் நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைதான். உள் நாட்டு பிரச்னைகளை நமது காவல் துறையை வைத்தே சமாளித்து விடலாம். எனவே நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதில் நஷ்டத்திற்கு உள்ளாகும் நாடுகள் முதலில் அமெரிக்கா அடுத்து இஸ்ரேல் மூன்றாவது ரஷ்யா. மேலும் நமது நாட்டிலுள்ள வகுப்பு வெறி பாசிஸ்டுகள் என்று பட்டியல் நீள்கிறது.

தங்கள் நாட்டின் பொருளாதார வருவாயை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக பல சூழ்ச்சிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ வும் இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாத்தும் இந்தியாவில் முழு வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொஸாத் மும்பைக்குப் பக்கத்திலுள்ள தானா என்ற இடத்தில் 770000 சதுர அடியில் ‘ப்ளாஸா’ என்ற பெயரில் தனது அலுவலகத்தை நிறுவி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்ரேல் நாட்டின் யூத மத குருக்களின் தலைவர் என்று அழைக்கப்படக் கூடிய யோனா மெட்ஸ்கர் (Israels chief robbyYona Metskar) என்பவருக்கும் இந்து தர்ம ஆச்சாரிய சபை தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கும் சில காலம் முன்பு ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் டெல்லியில் உள்ள ஓபராயில் வைத்து 2007 பிப்ரவரி 7 ஆம் நாள் நடைபெற்றது. இதற்கு முதல் நாள்தான் ராம ஜென்ம பூமி புகழ் எல்.கே.அத்வானியின் வீட்டில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றது. சில பத்திரிக்கைகள் அன்று யூத மத தலைவர்கள் பலர் டெல்லி வந்திருந்ததாகவும் அவர்களுக்கும் இங்குள்ள இந்துத்வ தலைவர்களுக்கும் இடையே ஒருநாள் ரகசிய சந்திப்பு ஏற்பட்டதாகவும் கூறின.

ஆதாரம்
ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ்
பிப்ரவரி 07.

இஸ்ரேல் குஜராத் உறவுகள்!

குஜராத்தில் நவராத்திரி இரவுகளில் மக்களை மகிழ்வூட்ட இஸ்ரேலுடைய நடனக் குழு தருவிக்கப்பட்டிருந்தது. நடனக் குழுவை குஜராத் மாநில அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் துறைதான் தருவித்தது. இஸ்ரேல் நடனக்காரிகள் மிகவும் சிக்கனமாகவே ஆடை அணிந்திருந்தனர். ஆடியும் காட்டினர். 24.09.2006 அன்று அவர்கள் ஆடிக்காட்டியதை முதலமைச்சரே நேரில் கண்டு மகிழ்ந்தார்.

இஸ்ரேலிய மங்கையர் ஆபாசமாக ஆடை அணிந்திருந்ததால் மக்கள் வெகுண்டெழுந்து அவர்களை உடனே வெளியேற்றிட வேண்டும் என்றனர். இஸ்ரேலின் நடனக்குழு தலைவர் நாங்கள் வெளியேறிட இயலாது எனக் கூறினார். தங்கள் நாட்டில் மங்கையர் அப்படித்தான் ஆடை அணிவார்கள். அது இஸ்ரேல் நாட்டுப்புற நடனம். அது அப்படித்தான் என்று கூறி விட்டார். அத்தோடு மும்பையிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

மும்பையிலுள்ள இஸ்ரேலிய தொடர்பாளர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டார். மோடி குஜராத் சுற்றுலாத் துறை செயலாளர் ஆர்.எம்.பட்டேல் அவர்களை இஸ்ரேலிய நடனக் குழுவிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார். மன்னிப்பும் கேட்கப்பட்டது. அத்தோடு நடனங்கள் சற்றும் ஆபாசம் குறைவில்லாமல் நடைபெற ஆவணச் செய்யப்பட்டது.

‘முதலமைச்சர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் தலையிட்டதால் இஸ்ரேலுக்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள உறவுகள் உடைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டன.’

-ஆதாரம்
தி ஹிந்து 29-06-2006

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் இகத்நிரீடன்(22), மோர்ட்சரீலூஷ்(25) அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவா வந்தனர். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்ல நேற்று கோவா விமான நிலையம் வந்தனர். அவர்களை போலீஸார் சோதனையிட்டபோது அவர்களிடம் 5 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கோவா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

-தினகரன் 27.02.2007

இஸ்ரேல் மற்றும் நேபாளிகளின் துணையோடு இந்தியாவை இந்து ராஜ்யமாக மாற்றத்தான் சங்பரிவார் தீவிரவாதி பிகேட் வெடிகுணடு தாக்குதலை நடத்தியதாக தீவிரவாத தடுப்புப் படையின் அறிக்கை கூறுகிறது.

தயானந்த பாண்டேயிடம் பறிமுதல் செய்த லேப்டாப்பில் சங்பரிவார் இஸ்ரேலுடன் தொடர்பு கொண்ட போன் நம்பர்கள், தொலைபேசி உரையாடல்கள், வீடியோ காட்சிகள் எல்லாம் இருப்பதாக 4000 பக்கங்கள் கொண்ட ஏ.டி.எஸ்ஸின் அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் சங்பரிவாரின் ஒரு அலுவலகம் திறக்கவும், இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற அரசியல் ஆதரவு, மற்றும் ஐ.நா வின் ஒத்துழைப்பு போன்றவற்றை தாங்கள் இஸ்ரேலிடம் கேட்டுள்ளதாகவும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை லேப்டாப்பிலிருந்து ஆதாரமாக காட்டியுள்ளது ஏ.டி.எஸ். இவை அனைத்து விபரங்களையும் புரோகித் சங்பரிவாருக்கு விளக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இது சம்பந்தமாக இஸ்ரேலுக்கு சங் பரிவாரை சேர்ந்த ஒருவர் போய் வந்ததாகவும் இவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாகவும் மாலேகான் வெடிகுண்டு புகழ் பார்பனரான ஜெனரல் புரோகித் இந்த லேப்டாப்பில் விவரிக்கிறார். முழு அறிக்கையும் வெளி வந்தால்தான் பலரின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும். ஆனால் பல உண்மைகள் வெளி வருவதற்கு முன்பே ஹேமந்த் கர்கரேயை திட்டமிட்டு பாகிஸ்தான் ஆட்களை வைத்து முடித்து விட்டது இந்துத்வா.

செய்திகள் ஆதாரம்
உணர்வு 18-01-2009

மேலே உள்ள பத்திரிக்கை செய்திகளை படித்தால் நமது நாட்டில் இஸ்ரேலின் கை எந்த அளவு நீண்டுள்ளது: அதற்கு நமது நாட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த வகையிலெல்லாம் வழி அமைத்துக் கொடுக்கிறது என்ற உண்மைகள் தெரிந்திருக்கும்.

ஆனால் ஒன்று. இந்த இந்திய நாட்டில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை இந்த நாட்டை இன்னும் எத்தனை இஸ்ரேல்கள் சேர்ந்தாலும் இந்துத்வா நாடாக மாற்றி விட முடியாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்பொழுதுதான் சமஸ்கிரதத்தை கட்டாய பாடமாக்க மோடி அரசு முயற்சிக்கிறது. பொது சிவில் சட்டம் கொண்டு வரவும் முயற்சிக்கிறது. இப்படி கொஞ்சம் சொஞ்சமாக தனது இந்துத்வ முகத்தை மோடி அரசு காட்டவும் தொடங்கியுள்ளது.

இது மேலும் தொடர்ந்தால் இதனால் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள் அல்ல. 70 சதவீதத்துக்கு மேல் இருக்கும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே பாதிப்புக்கு உள்ளாவர். பாதிப்புக்குள்ளான அவர்களே இந்த இந்துத்வாவை இந்த மண்ணில் இருந்து தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை. அது வரை நாமும் பொறுமை காப்போம்.

source: http://suvanappiriyan.blogspot.in/2014/07/blog-post_20.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

27 + = 29

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb