Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

புரையோடியிருக்கும் மறக்கமுடியாப் பழக்கங்கள்!

Posted on July 18, 2014 by admin

புரையோடியிருக்கும் மறக்கமுடியாப் பழக்கங்கள்!

  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)   

சென்னை உயர் நீதி மன்றத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஒரு வழக்கு நடந்து அதன் தீர்ப்பும் வெளி வந்தது சிலர் படித்து இருப்பீர்கள். இருந்தாலும் அதனை இங்கு சுட்டிக் காட்டினால் நோன்பு நேரத்தில் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

அதாவது சென்னை தி.நகரில் ஒரு முஸ்லிம் வியாபாரி கனி(பெயர் மாற்றப் பட்டுள்ளது) மற்றொரு முஸ்லிம் வியாபாரி செய்யது (பெயர் மற்றப் பட்டுள்ளது) அவர்களுக்கு ரூ.22 லட்சம் கடனாகக் கொடுத்துள்ளார். வியாபாரி செய்யதும் ரூ 23 லக்சம் வட்டியாக மட்டும் வியாபாரி கனிக்கு கொடுத்துள்ளார். இருந்தாலும் வியாபாரி கனி தனது முதல் ரூ. 22 லட்சத்தினை உடனே செலுத்த வேண்டும் இல்லையென்றால் மேலும் வட்டி கொடுக்க வேண்டும் என்று மிரட்டுவதாக செய்யது உயர் நீதி மன்றத்தில் புகார் செய்து வழக்கும் விசாரணைக்கு வந்தது.

அதனை தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேற்று மதத்தவராக இருந்ததால் அவர் புருவம் உயர்த்தி ஆச்சரியத்துடன் இந்த வழக்கினை பார்த்திருப்பார் என்பது நிச்சயம். ஏன் என்றால் இஸ்லாத்திலும், நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைக்கு எதிராகவல்லவா இந்த வட்டி வழக்கு உள்ளது.

யூதர்கள் அதிக வட்டி வாங்குவதால் அரபு சமூதாயம் கடனாளியாக மூழ்கி இருக்கின்றது என்ற வேதனை களைய வட்டி வாங்குவது கொடுப்பது தடுக்கப் பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற வழக்கில் வட்டி 1400 ஆண்டுகளுக்குப் பின்னரும் இஸ்லாமிய சமூதாயத்தில் குட்டிபோட்டு பெருகி விட்டது எண்ணி நாம் மட்டுமல்ல மதிப்பு மிகு நீதிபதியும் வேதனைப் பட்டு வியாபாரி செய்யது கொடுத்த ரூ 23 லட்சமே போதுமானது மறுபடியும், அவரை வியாபாரி கனி எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்று உத்திரவு பிறப்பித்துள்ளார்.

இது எதனைக் காட்டுகின்றது என்றால் இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யாப்பட்ட சில பழக்க வழக்கங்கள் இன்னும் நம்மிடையே உலா வந்தவண்ணம் தான் இருக்கின்றது என்று சில சம்பவங்கள் மூலமாக எடுத்துச் சொல்வது பொருத்தமாக இருக்குமல்லவா?

நம்மிடையே திருமண வைபவங்களில் மணங்கமழும் பிரியாணி இல்லாக் கல்யாணமே  இப்போது எல்லாம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அப்படி பிரியாணி வழங்கப்படுவதால் அந்தக் கல்யாண மண்டபகத்தின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ஏகப்பட்ட வருமானம் கிடைக்கின்றதாம். நான் ஒரு தடவை எழும்பூரில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சிக்குக் காரில் சென்றேன். அந்த திருமண வாசலில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது பலருக்கும் தெரியும். அப்போது எனக்குத் தெரிந்த நபர்கள் இருவர் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்துக் கொண்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால் குடித்தவர்கள் முஸ்லிம் சகோதரர்கள்.

குடி குடியைக் கெடுக்கும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாத்தில் சொல்லப் பட்டாலும் இன்னும் அந்த பழக்கங்களை நமது சகோதரர்கள் மறந்தபடில்லையே! எத்தனை எத்தனை குடும்பங்கள் குடியினால் நடுத்தெருவிற்கு வந்து அவலப் பட்டுள்ளது பலருக்குத் தெரியும். இருந்தும் ஏன் அந்தத் தொற்றுநோயினை தொடர்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளதல்லவா?

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி. தமிழக கடக்கரை ஓர முஸ்லிம் ஊரில் பல லட்சம் ரூபாய் வைத்து சூது விளையாண்ட முஸ்லிம் சகோதரர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் என்று. போலீசார் அவர்களிடமிருந்து அடகு வைத்த இரு சக்கர வாகனங்கள், மைனர் செயின்கள், கைகிடியாரம், வீட்டுப் பத்திரம் போன்றவை கைபாற்றியாதாக செய்தியும் வெளி வந்தது வேதனையாக இல்லையா?

சில வியாபாரிகள் கூட நல்ல வருமானம் உள்ள தொழில்களை சூதாட்டம் மூலம் இழந்த கந்தலான கதை எல்லாம் இருக்கின்றது சிலருக்குத் தெரியும். சில மாதங்களுக்கு முன்பு ஒரு நடுத்தர  வயது முஸ்லிம்  தொழில் அதிபர்  பக்கத்து மாநிலத்திற்கு தொழில் விசயமாக சென்றாராம். அங்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து விடிய விடிய சீட்டாட்டக் கச்சேரியில் கலந்து கொண்டாராம். இவ்வளவிற்கும் அவர் இருதய நோயாளியாம். சீட்டாடிய தாக்கம் உடல் நிலை பாதித்து மரணித்து விட்டாராம். அவரை நம்பி உள்ள மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினரை அவர் கொஞ்சமாவது சிந்தித்துப் பார்த்தாரா? இல்லையே!

அதே போன்று தான் விலைமாதர்களையும், சில நடிகைகளையும் ஆசை நாயகிகளாக வைத்து பெருமை பேசும் முஸ்லிம் பிரமுகர்கள் அப்படிப்பட்ட பெண்களிடம் பல கப்பல் கவிந்த கதைகளும் உண்டு என்று அவர்களுக்குத் தெரியாதது இல்லையே! பின்பு ஏன் அந்த சுகம்? கிளிகள் போன்ற அழகிய மனைவிகள் இருந்தாலும் பிறர்க்கு குரங்கு போன்ற பெண்கள் அவசியம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் குரங்கு பிடித்தால் விடாது என்று அவர்களுக்கு ஏன் தெரியவில்லை?

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் இந்திய நாட்டில் இல்லைதான். ஆனால் ஒழுக்க நெறிபோதனை செய்யும் சரியத் சட்டங்களை மீறி நடக்கலாமா? பணக்காரர், செல்வாக்குள்ளவர்களுக்கு அந்த சட்ட விதிகள் கட்டுப் படுத்தாதா?

சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு சொத்தில் போலி ஆவணம் தயாரித்து சொத்தை அபகரித்த வழக்கில் நீதிபதி அவர்கள் 10.7.2014-இல் தீர்ப்பு வழங்கும்போது முஸ்லிம் நாடுகளில் உள்ளதுபோன்ற சட்டத்தினை மீறுபவர்களை கை, கால், விரல்கள் வெட்டப் படுவது இங்கே இல்லையே என்று ஆதங்கப் பட்டுள்ளார்!

ஆனால் உச்ச நீதி மன்றத்தில் 7.7.2014 கூறப்பட்ட தீர்ப்பின் பொது நீதிபதிகள் இந்தியா சட்டத்திற்குப் புறம்பாக எந்த சரியத் தீர்ப்பும், பத்வாவும் செல்லாது என்று கூறியுள்ளனர். அந்த வழக்கின் சாராம்சம் இதுதான். உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் முசாபார்நகர் மாவட்டத்தில் குக்ட கிராமத்தில் வாழும் ஒரு முஸ்லிம் பெண்மணியை அவருடைய மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்று ஜமாத்தார்களிடம் முறையிட்டால் அங்குள்ள ஜமாத்தார் இனிமேல் அந்தப் பெண் மாமனாருடன் தான் வாழவேண்டும், கணவருடன் வாழ தகுதி அற்றவள் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். இது எந்த வகையில் நியாயம் என்று நீதி அரசர்கள் கேள்விகனை எழுப்பி உள்ளது நியாயம் தானே! அதனைப் புரிந்துகொள்ளா சிலர் கண்டங்கள் எழுப்பி உள்ளனர்.

சில சமயங்களில் சரியத் கோர்ட் என்று வைத்து இருப்பவர்கள் சட்ட நுணுக்கம் தெரிவதில்லை. மாறாக வல்லமை வாய்ந்தவர்களுக்கு தீர்ப்பு வழங்கும் பழக்கத்தினை கடைப் பிடித்து வருகிறார்கள் என்பதினை இரண்டு சம்பவங்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்.

நான் சிறுவனாக இருந்தபோது நடந்த சம்பவம். எங்களூருக்கு அருகில் உள்ள ஊரில் ஒரு கோவிலில் அய்யனார் சாமி திருவிழா. அந்தத் திருவிழாவில் ஒரு முஸ்லிம் வயதான பெண்மணி கடலை அவித்து விற்பனைக்காக சென்றுள்ளார். ஆனால் அந்த ஊர் ஜமாத்தார் அந்தப் பெண்மணிக்கு அந்தக் காலத்தில் ரூ.100/ அபராதம் விதித்ததோடு அல்லாமல், அந்த அபராதம் கட்டும் வரை அந்தக் குடும்பத்தில் தொடர்பு வைத்துக் கொள்ளகூடாது என்றும் ஆணை இட்டது இன்றும் பசுமையாக உள்ளது. ஆனால் இன்றும் கூட பழனி போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் பூஜை சாமான்கள் விற்பனை செய்வது பார்க்கலாம்.

அடுத்த ஒரு சம்பவம் ஒரு மணமகள் சம்பந்தப் பட்டது. ஒரு பெண் ஒரு உறவினருக்கு பள்ளிப்படிப்பை பாதியில் நிப்பாட்டி திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமண நாள் அன்று பல கனவுகளோடு இருந்த அந்த பாலினப் பெண் கணவன் தன்னை ஆதரிப்பான் என்று தன்னையே கொடுத்ததாள். ஆனால் சில மணித்துளியிலேயே கணவனுடைய செல்போனுக்கு கள்ளகாதலி அழைப்பு விடுத்தாள். பாவம் நொறுங்கிளால் அபலைப் பெண். எங்கு முறையிட்டும் நியாயம் கிடைக்க வில்லை. மாவட்ட சரியத் நீதிமன்றமும் மணமகன் பக்கமே தீர்ப்பு வழங்கி அபலைப் பெண்ணுக்கு அநீதி இழைத்தது. கடைசியாக நீதி மன்றம் தான் அவளுக்கு உதவியது.

ஆகவே தான் நீதி வழுவாது தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். பணபலம், அதிகாரம், ஆள் பலம் சிலரது கண்களை மறைத்து புரையோடிய பழக்க வழக்கங்களில், மற்றும் அநீதியான செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நோன்பு நேரத்திலாவது அதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபட மாட்டோம் என்று உறுதி கொள்ளவேண்டும்.

-AP,Mohamed Ali  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 81 = 83

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb