Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹமாஸ், “காஸா” மக்களை நோக்கி விடுத்த முக்கிய அறிவித்தல்!

Posted on July 14, 2014 by admin

ஹமாஸ், “காஸா” மக்களை நோக்கி விடுத்த முக்கிய அறிவித்தல்!

[ “ஓ….. பலஸ்தீனத்தின் வீர மைந்தர்களே. யூத காட்டுமிராண்டிகள் எம் மக்களை படுகொலை செய்ய தயாராகி விட்டார்கள். அதனை தடுக்க நாம் எம் உயிரையும் விட தயாராகி விட்டோம். எமது போராளிகள் இஸ்ரேலை நோக்க ரொக்கெட் தாக்குதல்களை சளைக்காமல் நடாத்துகிறார்கள். ஒவ்வொரு ரொக்கெட்டும் இஸ்ரேலை நோக்கி பாயும் போது நீங்கள் அடையும் மகிழ்ச்சியை நாம் அறிவோம்…”

ஆனால்……….. உங்கள் மகிழ்ச்சி இப்போது எமக்கு பிரச்சனைகைளை உண்டு பண்ணுவதாக அமைகிறது. எமது புனிதப்போராளிகள் மேற்கொள்ளும் தாக்குதல் நிலைகள், அவற்றில் பாவிக்கப்படும் எறிகணைகள், தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகள், நாம் நகர்த்தி செல்லும் ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் போன்றவற்றை நீங்கள் புகைப்படம் எடுக்கிறீர்கள்.

அதனை மீண்டும் வெளியிடுகிறீர்கள்.

இதனால் எதிரி எமக்கு இலக்குகளை உடனடியாகவே இனம் கண்டு கொண்டு அந்த இடத்தை நோக்கி தாக்குதல் நடாத்துகிறான். அவர்களின் விமானங்களும் ஆட்டிலறிகளும் குறித்த இலக்கை நோக்கி துல்லியமாக பதில் தாக்குதல் நடாத்துகின்றன…”]

ஹமாஸ் “காஸா” மக்களை நோக்கி விடுத்த முக்கிய அறிவித்தல்!

வடக்கு காஸாவை விழுங்கும் இஸ்ரேலிய திட்டமானது கடந்த 10 மாதங்களிற்கு முன்னதாகவே அதன் இராணுவ அமைச்சகத்தினால் திட்டமிடப்பட்ட நிலையில் பிரதமர் நெதன்யாகூவின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டிருந்தது. சில மாதங்களிற்கு முன்பாக அதற்கான அஸஸ்மென்ட் ரி்ப்போர்ட்டினை கோரியிருந்தார் இஸ்ரேலிய பிரதமர்.

மீண்டும் பாதுகாப்பு அமைச்சகம் அது தொடர்பான பிரடிக்டட் வோர் அஸஸ்மென்ட் ரிப்போர்டை வழங்கிய சில தினங்களிற்குள் தனது அமைச்சரவையுடன் நடாத்திய அதி உச்ச பாதுகாப்பு கூட்டத்தின் பின் அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியிருந்தார் இஸ்ரேலிய பிரதமர். அந்த கணத்தில் இருந்து “காஸாவில் இருந்து இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீதான தாக்குதல் அச்சுத்தல்கள் பற்றி” ஸியோனிஸ மீடியாக்கள் பேச ஆரம்பித்தன.

குடியேற்றவாசிகள் மீதான ஹமாஸின் எதிர்கால பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அவை தொலைக்காட்சி உரையாடல்களை நிகழ்த்தின. தங்கள் சார்பான கருத்தியலை வலுப்படுத்திய பின்னர் இஸ்ரேலிய வான்படை தனது தாக்குதலை ஆரம்பித்தது.

காஸா மீது என்னதான் இஸ்ரேலிய குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினாலும், அதன் ஆர்டிலறி செல்கள் வந்து வீழ்ந்தாலும் இந்த நிமிடம் வரை ஹமாஸின் செயற்கட்டமைப்பு குலையவில்லை. அது வேகமாக இயங்கி வருகிறது. ஹமாஸின் உள்துறை அமைச்சகம் பலஸ்தீனியர்களை நோக்கி நேற்றைய தினம் கட்டளை கலந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ஒலி பெருக்கிகள் பூட்டப்பட்ட வாகனங்களில் இந்த கட்டளை வீதி தோரும் வெளியிடப்பட்டுள்ளது.

“ஓ….. பலஸ்தீனத்தின் வீர மைந்தர்களே. யூத காட்டுமிராண்டிகள் எம் மக்களை படுகொலை செய்ய தயாராகி விட்டார்கள். அதனை தடுக்க நாம் எம் உயிரையும் விட தயாராகி விட்டோம். எமது போராளிகள் இஸ்ரேலை நோக்க ரொக்கெட் தாக்குதல்களை சளைக்காமல் நடாத்துகிறார்கள். ஒவ்வொரு ரொக்கெட்டும் இஸ்ரேலை நோக்கி பாயும் போது நீங்கள் அடையும் மகிழ்ச்சியை நாம் அறிவோம். ..”

“ஆனால்……….. உங்கள் மகிழ்ச்சி இப்போது எமக்கு பிரச்சனைகைளை உண்டு பண்ணுவதாக அமைகிறது. எமது புனிதப்போராளிகள் மேற்கொள்ளும் தாக்குதல் நிலைகள், அவற்றில் பாவிக்கப்படும் எறிகணைகள், தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகள், நாம் நகர்த்தி செல்லும் ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் போன்றவற்றை நீங்கள் புகைப்படம் எடுக்கிறீர்கள். அதனை மீண்டும் வெளியிடுகிறீர்கள். இதனால் எதிரி எமக்கு இலக்குகளை உடனடியாகவே இனம் கண்டு கொண்டு அந்த இடத்தை நோக்கி தாக்குதல் நடாத்துகிறான். அவர்களின் விமானங்களும் ஆட்டிலறிகளும் குறித்த இலக்கை நோக்கி துல்லியமாக பதில் தாக்குதல் நடாத்துகின்றன…”

“இதன் பின்னர் காஸாவில் யாரும் புகைப்படம் எடுப்பதை நாம் தடை செய்கின்றோம். அவர்களது ராடர்கள் மூலம் எம்மை கண்டு பிடித்து இலக்கை அழிக்க முற்படுவது வேறு விடயம். நாம் எறிகணைகளை ஏவிவிட்டு நகர்ந்து செல்லும் பாதைகளை நீங்கள் எடுத்து வெளியிடும் புகைப்படங்களால் அவர்கள் இலகுவாக அனுமானம் செய்கிறார்கள். இதனை தவிர்த்து கொள்ளுங்கள். இதனை மற்றையவர்களிற்கும் தெரியப்படுத்துங்கள்…”

“நாம் தாக்குதல் நடாத்தும் இடங்களை நீங்கள் அறிந்து கொண்டால் அங்கு குழுமாதீர்கள். அல்லாஹு அக்பர் கோசமெழுப்பி முழங்காதீர்கள். எதிரியின் பதில் தாக்குதல் அடுத்த நிமிடம் அந்த இடத்தை நோக்கி நடாத்தப்படுகிறது. அதில் அநியாயமாக உங்களில் பலர் பலியாகியதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரிவிலேயே யூதர்களிற்கு எதிரான எமது வெற்றி தங்கியுள்ளது. ”

காஸாவின் மக்கள் வாழும் ரெசிடென்டல் ஏரியாவில் இருந்து சில நேரங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பற்றிய புகைப்படங்கள் உடனுக்குடன் செயார் செய்யப்படுவதனால் இஸ்ரேலிய குண்டு வீச்சு விமானங்கள் குறித்த கட்டிடங்களை நாசம் செய்ய குண்டுகளை வீசுகின்றன. இதனை தடுக்கும் முகமாகவே ஹமாஸ் இந்த கட்டளையை விடுத்துள்ளது. போராளிகளின் கைகளில் தவழும் ஆயுதங்களின் வகைகள், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் வகைககள் நிறங்கள் என பல புலனாய்வு தகவல்களை இந்த செயற்பாட்டின் மூலம் இஸ்ரேலிய இராணுவ உளவுப்பிரிவினர் இலகுவாக கண்டறிந்து விடுகின்றனர்.
source: http://islamicuprising.blogspot.ae/2014/07/blog-post_9511.html#sthash.DLOhUVU8.BKZxO9D3.dpuf

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb