இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
முன்னறிவிப்புச் செய்யப்பட்ட மஸ்ஜித்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் இந்த மஸ்ஜித் அமைந்திருந்த பிரதேசம் முஸ்லிம்கள் வசமிருக்கவில்லை. இந்தப்பகுதி முஸ்லிம் களால் வெற்றிகொள்ளப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
“தபூக் போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக்கொள் என்று கூறிவிட்டு, எனது மரணம் பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி- 3176)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இந்த முன்னறிவிப்பு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்தேறியது. இந்த முன்னறிவிப்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தூதுத்துவத்தின் உண்மைத் தன்மையையும், பைதுல் முகத்தஸ் முஸ்லிம்களது கையில் இருக்க வேண்டிய ஒன்று என்பதையும் உறுதி செய்கின்றது.
தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதி:
தஜ்ஜாலின் பித்னா குறித்து நபியவர்கள் அதிகமதிகம் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அவ்வாறு எச்சரிக்கப்படும் போது பல செய்திகளையும் கூறிவிட்டு, “நான்கு மஸ்ஜித்கள் (இருக்கும் பகுதி) தவிர மற்றைய பகுதியெல்லாம் அவனது அதிகாரம் வியாபித்திருக்கும். அந்த நான்கு மஸ்ஜித்களாவன, மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுர் ரஸுல், மஸ்ஜிதுல் அக்ஸா, தூர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஜுனாதா இப்னு அபூ உமையா ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஆதாரம்: அஹ்மத்: 24083-23683)
(ஷுஅய்ப் அல் அர்னாஊத் இந்த அறிவிப்பை ஸஹீஹானது எனக் கூறியுள்ளார்கள்.)
எனவே, தஜ்ஜாலின் பித்னாவிலிருந்து பாதுகாப்புப் பெற விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு இடமாகவும் இது திகழ்கின்றது.
மீண்டும் முஸ்லிம்கள் கையில் வரும் மஸ்ஜித்:
உலக முடிவின் போது நிச்சயமாக மஸ்ஜிதுல் அக்ஸாவும், பலஸ்தீன் புனித பூமியும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தே தீரும். இது குறித்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
அந்த இறுதி முன்னறிவிப்பு நடக்கும் முன்னர் மஸ்ஜிதுல் அக்ஸா கைமாறலாம். அந்த இறுதி முன்னறிவிப்பு பற்றியே இங்கே நாம் கூறுகின்றோம்.
பலஸ்தீன பூமியில் வைத்துத்தான் ஈஸா நபியால் தஜ்ஜால் அழிக்கப்படுவான். தஜ்ஜாலுடன் சேர்ந்து சத்தியத்திற்கு எதிராகப் போராடிய யூதர்கள் முஸ்லிம் போராளிகளால் தோற்கடிக்கப்படுவார்கள்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் போது, “முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் செய்து யூதர்கள் கற்களுக்கும் மரங்களுக்கும் பின்னால் மறைந்திருந்து அந்தக் கல்லும் மரமும் முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். வந்து அவனைக் கொன்றுவிடு எனக் கூறும் நாள் வரும் வரை உலகம் அழியாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லலிம்: 2922-82)
அந்த மகத்தான நாள் வரும் வரை யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் மோதலும் முறுகலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதில் முஸ்லிம்கள் சந்திக்கும் இழப்புக்கள் ஷஹாதத் எனும் வீர மரணமாகவே அமையும். அந்த நல்ல நாள் வரும் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதில் சில நேரத்தில் முஸ்லிம்களும் சில சமயம் அவர்களும் வெற்றியையும் தோல்வியையும்.சந்திக்கலாம். ஆனால் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.