இஸ்லாத்தை நோக்கிய பிரிட்டன் – அதிர்ந்து போயுள்ள கிறிஸ்தவ உலகம்..!
ஜெர்மனி, ஹாலந்தில் அதிகரிக்கும் முஸ்லிம்கள்
மிக விரைவில் ஹலால் உணவு அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் – பிரிட்டிஷ் பிரதமர்!
பிரிட்டனில் பாங்குமேடையுடன் முதல் பள்ளி
தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.
இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் எண்ணிக்கை உயருகின்றது
பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் இலட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறிஸ்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்து கொண்டிருகின்றனர். ”இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்” என்ற தலைப்பில் “The Independent” என்ற பிர ட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலைவெளியிட்டுள்ளது.
ஆங்கிலப் பத்திரிகைத் தொகுப்பு:
கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால், தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
2001ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கெடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு இலட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்தஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள் தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில், நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன் மடங்காக இருக்கும் என தெரிவித்தார்.
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரச்சாரத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உந்தப்பட்டு போன்ற ஆபாசங்களும்,அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறிஸ்தவ உலகம் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழு வீச்சில் செயற்பட்டு வருகின்றது. பிரிட்டனைச் சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொன்ற CIA, இவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என பத்திரிகையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாதத்தோடு சம்பந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்தவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறிஸ்தவர்களை தக்க வைக்க முடியாது என்பதை கிறிஸ்தவ மிஷனரிகள் நன்றாக உணர்ந்துள்ளன. பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறிஸ்தவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழ வைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலர்களுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறை வேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உலறி கொட்டியது.
ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
பொது மேடையில் வாசிக்கும் தகுதிகூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்து தான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று, தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்கு தலைவியாக உள்ளார். இவர்களைப் போன்ற பலர் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர் வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்து வருகின்றனர்.
பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில்ஸ..பவுல் மார்ட்டின்-எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனைப்படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.
(குர்ஆன் குறித்த விவாதத்திற்குவரமால் ஓடி ஒளியும் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது. லண்டனைச் சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறிஸ்தவர்கள்குர் னின் அறிவியல் அற்புதங்களைபார்த்து ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி விடுவார்கள் எனபயந்து போய் தந்திரங்கள் செய்துதப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி -நான் ஒரு கிறிஸ்தவர், கத்தோலிக்க பள்ளியில் படித்தேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனைப் படிக்கும் போது ஏசு,மேரி,தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறிஸ்தவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால்,தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது தான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)
கதீஜா ரியோபுக்- ”நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வாரா வாரம் சர்ச்சிற்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை,ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனதுதாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ள முடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்.”
ஹனா தஜீமா- ”நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவதாக இருந்தது. எனவே, ஆழ்ந்த மதப்பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்.”
இது கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்துச் சொன்னால் இஸ்லாத்தை ஏற்க கோடிக் கணக்கான கிறிஸ்தவர்கள் இருகின்றனர், இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறிஸ்தவ மக்களுக்கு எடுத்து சொல்வது தான் மீதமிருக்கும் வேலை.
மிக விரைவில் ஹலால் உணவு அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் – பிரிட்டிஷ் பிரதமர்!
மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் அதனை நீங்கள் ருசிக்கத்தான் போகின்றீர்கள். – பிரிட்டிஷ் பிரதமர்.
ஐக்கிய இராச்சியத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு ஹலால் உணவே சிறந்தது எனவும் ஹலால் முறைப்படி உயிரினங்களை அறுப்பதற்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படமாட்டாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை லண்டனில் நடைபெற்ற சிறந்த இஸ்லாமிய ஊடகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்சியில் தெரிவித்தார்.
லண்டனில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை இல்லாமல் செய்ய பிரித்தானிய நீதித்துறைக்கு கட்டளை இட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த ஒரு முஸ்லிமும் வெறுமனே இஸ்லாத்தை பின்பற்றவில்லை மாறாக முழு நம்பிக்கையுடன் அவர்களுடைய வாழ்கை முறையை சிறப்பாக அமைத்துக்கொள்ளவும், வாழ்வின் இலட்சியங்களை அடைந்து கொள்ளவும் பின்பற்றுகின்றார்கள் என கூறினார்.
மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் அதனை நீங்கள் ருசிக்கத்தான் போகின்றீர்கள். நான் பிரதமராக இருக்கும் வரையில் ஹலால் உணவே பிரதானமானதாக இருக்கும் எனவும் அதுவே பிரித்தானியாவை பாதுகாப்பாக வைத்திருக்கும் என உறுதியளித்தார்.
கடந்த மாதம் டென்மார்க்கில் ஹலால் உணவு தடை செய்யப்பட்டுள்ளபோதும் பிரித்தானிய பிரதமர் மிகவும் துணிச்சலாக ஹலால் உணவுக்கு ஆதரவளித்து பாராட்டத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.
”இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.” (அல் குர்ஆன் 5: 83)
பிரிட்டனில் பாங்குமேடையுடன் முதல் பள்ளி
பிரிட்டனின் மையப் பகுதியாக விளங்கும் நாட்டிங்ஹாம் நகரில் பாங்கு மேடையுடன் கூடிய முதலாவது பள்ளிவாசலை முஸ்லிம்கள் திறந்துள்ளனர். தொன்மையான இந்நகரில் நான்காண்டு கால முயற்சிக்குப்பின் முஸ்லிம்களின் கனவு நனவாகியிருப்பது குறித்து, பள்ளிவாசல் இமாம் அவ்ரங்ஸீப் கான் மகிழ்ச்சி தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு நகர மன்றத்தின் அனுமதியைப் பெற்ற முஸ்லிம்கள், 1.2 மில்லியன் பவுண்ட் செலவில் அடையாளத்துடன் கூடிய இப்பள்ளிவாசலை எழுப்பியுள்ளனர். 11 மீட்டர் உயரத்தில் இந்த பாங்கு மேடை கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. நாட்டிங்ஹாம் நகரில் இதுவே முதலாவது பாங்கு மேடையாகும்.
கடந்த 30 ஆண்டுகளாக வீடுகளிலேயே தொழுதுவந்த நகர முஸ்லிம்களுக்கு இது மகிழ்ச்சியான தருணம் என்பதில் சந்தேகமில்லை. பள்ளிவாசல்களின் பயன்பாட்டிற்காக 50 ஒலிபரப்புக் கருவிகள் வாங்க பிரிட்டன் காவல்துறை 5 ஆயிரம் பவுண்ட் நிதியுதவி அளித்துள்ளது. குறிப்பாக பர்மிங்ஹாம் நகரில் பாங்கு, தொழுகை, குத்பா ஆகியவை ஒலிபரப்புவதற்கு இது துணைபுரியும்.
சிறுபான்மையினரான முஸ்லிம்கள் இறையில்லங்கள் எழுப்புவதற்கு நிதியுதவி செய்வது, அடிப்படைவாதிகளான வலதுசாரிகளின் எதிர்ப்பை சம்பாதிக்கும் என்ற அச்சம் தங்களுக்கு இருப்பதை முஸ்லிம்கள் மறைக்கவில்லை.
இதற்கிடையில் ஃபிரான்ஸ் நாட்டில் மோன்ட்ரேக் நகரில் பள்ளிவாசல் ஒன்று எழுப்புவதற்காக இடம் வாங்குவதற்கு அதற்கான அமைப்பு நிதி திரட்டிவருகிறது. கடந்த 9 மாதங்களில் 1.4 மில்லியன் யூரோ திரட்டியுள்ளது.
2013ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைதளத்தில் நிதி திரட்டுவதற்கான கோரிக்கை வெளியிடப்பட்டது. தற்போது நிலம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இப்போதுள்ள பள்ளிவாசலுக்கு அருகிலேயே இந்த இடம் வாங்கப்பட்டுள்ளது. இந்தப் பழைய பள்ளிவாசல் பூட்டப்படும் என்று நகர மன்றம் எச்சரித்திருந்தது குறிப்பிடத் தக்கது. பள்ளிவாசல் கட்டி முடிக்க 2 லட்சம் யூரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு அருகில் செராகோஸ் பகுதியில் கிறித்தவ தேவாலயம் ஒன்றை முஸ்லிம்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். 1,50,000 டாலருக்கு வாங்கப்பட்ட அந்த இடம் பள்ளிவாசலாக மாற்றப்பட உள்ளது. தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்!
‘வடக்கு கல்வி மையம்’ என்ற அமைப்பே இதற்கான ஏற்பாட்டினைச் செய்துவருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகி யூசுஃப் சோல் கூறுகிறார்: நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசலுக்கு, ‘மசீஹ் இப்னு மர்யம்’ பள்ளிவாசல் எனப் பெயர் சூட்டப்படும். இப்பள்ளிவாசலில் மார்க்க மற்றும் கல்வி சேவைகள் அளிக்கப்படும். ஆங்கில மொழி கற்பிக்கப்படும்.
இப்பகுதியில் வசிப்போரில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தம் இல்லங்களில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளிலேயே பேசுகிறார்கள். 16 விழுக்காட்டினர் அமெரிக்காவிற்கு வெளியே பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது
அமெரிக்கப் பின்னணிப் பாடகர் லோன் கூறுவதைக் கேளுங்கள்:
நான் இஸ்லாத்தில் இணைந்தபின் பெண்களையும் பிரபலத்தையும் விட்டுவிட்டேன். சுகபோக வாழ்க்கையில் திளைத்திருந்த எனக்கு ஏதோ ஒன்று குறைவாகவே இருந்துவந்ததை உணர்ந்தேன். அந்த ஒன்று (மன அமைதி) எனக்கு இப்போது இஸ்லாத்தில் கிடைக்கிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். என் கரத்தால் ஏராளமான அமெரிக்கர்கள் நல்வழி பெற்று, இஸ்லாத்தில் சேர்ந்துள்ளனர்.
நான் முஸ்லிமானபின் மன அமைதியை அனுபவிக்கிறேன். என் மனைவி, இரு குழந்தைகள், 80 வயதான தந்தை, ஏராளமான என் உறவினர் ஆகிய அனைவரும் இப்போது முஸ்லிம்கள். ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை கூடியவண்ணம் உள்ளது.
ஜெர்மனி, ஹாலந்தில் அதிகரிக்கும் முஸ்லிம்கள்
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் பன்மடங்காகப் பெருகியுள்ளது. அதே நேரத்தில் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. யூதர்களின் எண்ணிக்கையோ மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் மற்றும் பிராண்டன்போர்ஜ் மாநிலங்களின் புள்ளிவிவர மையத்தின் அறிக்கையில் இத்தகவல் காணப்படுகிறது. தேஜஸ் நாளிதழில் வெளியான இந்த அறிக்கையில் காணப்படுவதாவது:
பெல்லினில் 1992இல் கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்தது. 9.2 சதவீதம் முதல் 9.3 சதவீதம்வரை கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்த வேளையில், புராட்டெஸ்டண்டு கிறித்தவர்களின் எண்ணிக்கை 17.5 சதவீதம் முதல் 26 சதவீதம் சரிந்துவிட்டது. இது பெர்லினில் புராட்டெஸ்டண்டு பிரிவிக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடைசி சில ஆண்டுகளில் பெர்லின் நகரில், யூதர்களின் எண்ணிக்கை மறுபடியும் குறைந்து, 2011இல் சுமார் பத்தாயிரமாகச் சுருங்கிப்போயிற்று. ஆனால், பெர்லின் நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து வளர்ச்சியிலேயே இருந்துவருகிறது; பன்மடங்காகப் பெருகியுள்ளது. நகரில் 1,32,000 ஆக இருந்த முஸ்லிம்கள் 2,49,000 ஆக அதிகமாகியுள்ளனர்.
இன்னொரு புறம் ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டில் அடிக்கடி இஸ்லாம் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்ற அதே வேளையில், இஸ்லாத்தில் இணையும் ஹாந்து நாட்டினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறதாம்!
ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இஸ்லாத்திற்கு மாறியோர் குறித்து ஆய்வு செய்த பெண் ஆய்வாளர் வெனிஷா ஃபிரோன் நாஜிம் கூறுகிறார்:
புதிதாக இஸ்லாத்தில் இணைந்த 48 பெண்களைச் சந்தித்தேன். முஸ்லிம் ஆண்களை மணமுடிப்பதற்காகவே ஹாலந்து பெண்கள் இஸ்லாத்தில் சேருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அடிப்படையற்ற வாதமாகும் இது. நான் சந்தித்த 48 பேரில் 21 இளம்பெண்கள் திருமணமே செய்துகொள்ளாதவர்களாவர்.
ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் இஸ்லாத்தில் இணைகின்றனர். தற்போது அவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹாலந்து மொழியில் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வழிகாட்டிப் பெண்கள் தேவை என்று கூறும் அவர்கள், தாய்மொழியில் உரைகளைக் கேட்பதற்கும் பயிலரங்கில் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
தங்களின் மகள்கள் இஸ்லாத்தை ஏற்று பர்தா அணிந்து செல்வதைப் பார்த்து பெற்றோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஹாலந்தில் ஹிஜாபைப் பற்றிய தவறான கண்ணோட்டமே இதற்குக் காரணம். -கான் பாகவி
“இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது”
இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது “Islam Oppresses Women” என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது.
இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை “இஸ்லாம் என்றால் என்ன?” என்று அறிய தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள்.
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்ற பிரச்சாரம் எடுபட்டதில்லை என்பதொடு மட்டுமல்லாமல் பல சகோதரிகளை நம் மார்க்க சகோதரிகளாக கொடுத்திருக்கின்றது இந்த பிரச்சாரம். அந்த வகையில் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்வோர் நமக்கு மிகப்பெரும் உதவி புரிகின்றனர் என்றால் அது மிகையாகாது.
சில ஆண்டுகளுக்கு முன் “டைம்ஸ் ஆன்லைன்” இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை “Young. British. Female. Muslim” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.
அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன்.
பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.
லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.
இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார்.
இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆன்லைன். அனைத்தையும் இங்கே பதித்தால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் அவர்களில் இருவருடைய கருத்துக்களை மட்டும் இங்கே காண்போம்.
1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine) Nursery school teacher, 31, North London
இஸ்லாத்தை தழுவ விருப்பம் இருக்கின்றதா? என்று என்னுடைய பதினாறாம் வயதில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய பதில் “இல்லை, நன்றி” என்பதாக இருந்திருக்கும். குடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது.
வட லண்டனில் வளர்ந்தேன். என் வீட்டில் மதத்தை பின்பற்றியதே இல்லை. நான் எப்போதும் நினைத்ததுண்டு, மதம் என்பது பிற்போக்கானது மற்றும் (தற்காலத்துக்கு) ஒத்துவராதது என்று.
ஆனால் இவையெல்லாம் என்னுடைய வருங்கால கணவர் சையத்தை சந்திக்கும் வரைதான். அவர் என்னுடைய எண்ணங்களுக்கு சவாலாக விளங்கினார். அவர் இளைஞர், இறைவனை நம்பக்கூடியவர். அவருக்கும் மற்ற டீனேஜ் இளைஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றால் அது அவர் மது அருந்தமாட்டார் என்பதுதான்.
ஒரு வருடம் சென்றிருக்கும், நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தோம், அவர் முஸ்லிமாகவும் நான் முஸ்லிமல்லாதவலாகவும் இருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது?
சையத்தை சந்திக்கும் வரை என்னுடைய நம்பிக்கையை நான் கேள்வி கேட்டதில்லை. agnostic (agnostic – இவர்கள் இறைவன் இருக்கிறானென்றும் சொல்லமாட்டார்கள், இல்லையென்றும் சொல்ல மாட்டார்கள்) ஆகவே தொடர்ந்திருப்பேன்.
ஆக, ஆர்வ மிகுதியால் இஸ்லாம் குறித்த சில நூல்களை படிக்க ஆரம்பித்தேன்.
குர்ஆனின் அறிவார்ந்த விளக்கங்கள் தான் துவக்கத்தில் என்னை கவர்ந்தன. பிறகுதான் குரானின் ஆன்மீக பக்கம் என்னுள் வந்தது. குரானின் விளக்கங்களை விரும்பினேன். மேற்குலகில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation.
மதம் பற்றிய பேச்சுக்களை பேசுவதென்பது எங்கள் வீட்டில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் மூன்று வருடங்கள் என்னுலேயே இஸ்லாம் குறித்த ஆர்வத்தை மறைத்து கொண்டேன். ஆனால், பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில், நானும் சையத்தும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தோம். இப்போது கண்டிப்பாக என் பெற்றோரிடம் சொல்லி விடுவதென முடிவெடுத்தேன்.
என் அம்மாவின் முதல் கருத்து என்னவென்றால், “நீங்கள் ஏன் முதலில் சேர்ந்து வாழக்கூடாது?”. நான் திருமணத்திற்கு அவசரப்படுவதும், இஸ்லாமிய பெண்களின் இல்ல பொறுப்புகளும் அவரை கவலைக்கொள்ள செய்தன.
ஆனால் நான் எந்த அளவு இஸ்லாத்தை தழுவுவதில் மும்முரமாக இருக்கிறேன் என்று யாருமே உணரவில்லை. ஒருமுறை என் தந்தையுடன் இரவு உணவுக்காக வெளியே சென்ற போது அவர் கூறினார், “மதுவை அருந்து. நான் சையத்திடன் சொல்ல மாட்டேன்”.
நிறைய பேர், நான் இஸ்லாத்தை தழுவ நினைப்பது “சையத்தின் குடும்பத்தை திருப்தி படுத்தத்தான்” என்று நினைத்தார்களே ஒழிய, இஸ்லாம் மீதான என்னுடைய ஆர்வத்தை உணரவில்லை.
அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துவக்கத்தில் நான் ஹிஜாப் (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து அனைத்து உடல் பாகங்களையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) அணியவில்லை. தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொள்வேன்.
படிப்படியாக இஸ்லாமிய எண்ண அலைகளுக்குள் வந்துவிட்டேன். என்னுடைய அறிவாற்றலை வைத்தும், நடத்தையை வைத்தும் தான் என்னை எடை போட வேண்டுமே தவிர, நான் எப்படி உடை அணிகின்றேன் என்பதை வைத்தல்ல. It was empowering.
என்னுடைய நண்பர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது, “என்ன, மது இல்லையா, drugs இல்லையா, ஆண்கள் இல்லையா? எங்களால் முடியாது”
என்னுடைய ஆண் நண்பர்களிடம் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க சொல்ல சில காலம் ஆனது, “மன்னிக்கவும், இது முஸ்லிம்களின் பழக்கம்”
நாட்கள் போகப்போக, என் கணவரை விட மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவளாக மாறிவிட்டேன்.
காலப்போக்கில் என் கணவரால் குடும்பம் என்ற பொறுப்புக்குள் வர முடியவில்லை. ஏழு வருடங்களுக்கு பிறகு என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.
என்னுடைய பெற்றோர்களிடம் திரும்ப சென்ற போது, என்னை பார்த்தவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தார்கள், நான் ஏன் இன்னும் அந்த தலையை மறைக்கும் துணியை அணிந்திருக்கின்றேனென்று. ஆனால் நான் தனியாக இருந்தது என்னுடைய நம்பிக்கையை மேலும் வலுவாக்கியது.
இஸ்லாம் எனக்கு திசையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கொடுத்திருக்கின்றது.
முஸ்லிம் பொது பிரச்சனைகள் குழுவில் (Muslim Public Affairs committee) என்னை ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து, வறுமை மற்றும் பாலஸ்தீன நிலைமையை எதிர்த்து என பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வருகின்றேன்.
நான் இன்னும் என்னை பிரிட்டிஷ் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றேன். அதே நேரம் நான் முஸ்லிமும் கூட. இந்த இரண்டு அடையாளங்களுக்கு நடுவே ஒத்து போக சிறிது காலம் ஆனது. நான் இப்போது இந்த இரண்டிலும் அங்கம் வகிக்கின்றேன், அதிலிருந்து என்னை யாரும் வெளியேற்றவும் முடியாது.
2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey) Solicitor, 30, Bradford
நான் முதல் முறை என் அலுவலகத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. உள்ளே நுழைந்தபோது சிலர் கேட்டார்கள், “எதற்காக தலையை மறைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் முஸ்லிமாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது”
நான் தெற்கு யார்க்க்ஷையரில் வளர்ந்தவள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன் வரை ஒரு முஸ்லிமை கூட பார்த்ததாக நினைவில்லை. என்னுடைய முதல் வேலையின் போது, தனியாக நின்று சம்பாதிக்கக்கூடிய இளைஞியாக வர வேண்டுமென்று முயற்சி செய்தேன். மதுக்கூடங்கள், கடுமையான டயட், ஸாப்பிங் என்று சென்றது வாழ்க்கை. ஆனால் இது எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை.
2004ல், ஒரு மதிய நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு முஸ்லிம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். என் கழுத்தில் இருந்த சிறிய தங்க “ஏசு சிலுவையில் அறையப்பட்ட” செயினைப் பார்த்து அவர் கேட்டார், “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது போல?”
நான் அதனை மதத்திற்காக அணிந்திருக்கின்றேன் என்பதை காட்டிலும் பேஷனுக்காக தான் அணிந்திருந்தேன். “இல்லை நான் அப்படி நினைக்கவில்லை”.
பிறகு அவர் தன்னுடைய நம்பிக்கையை பற்றி பேச ஆரம்பித்தார்.
முதலில் நான் அவரை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவருடைய வார்த்தைகள் என் மனதை துளைக்க ஆரம்பித்தன. சில நாட்களுக்கு பிறகு இணையம் மூலமாக குரானை ஆர்டர் செய்தேன்.
லீட்ஸ் புதிய முஸ்லிம்கள் குழுவினரால் (Leeds New Muslims Group) நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்ல தைரியத்தை வரவழைக்க சில நாட்கள் ஆனது.
எனக்கு நினைவிருக்கின்றது, வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தீர்மானமில்லாத நிலையில் என்னையே கேட்டுக்கொண்டேன், “நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?”. உள்ளே இருக்கும் பெண்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிற அங்கி அணிந்திருப்பர் என்று கற்பனை செய்து கொண்டேன். “25 வயது பிரிட்டன் பெண்ணான எனக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கும்?”
நான் உள்ளே சென்ற போது, அதிலிருந்த எவரும் நாம் அடிக்கடி கேள்விப்படும் “அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தலைவி” என்ற வட்டத்திற்குள் வரவில்லை (none of them fitted the stereotype of the oppressed Muslim housewife). அவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, உளவியல் நிபுணர்களாக இருந்தனர்.
அவர்கள் மனநிறைவுடனும், பாதுகாப்புடனும் காணப்பட்டார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. நான் எந்த புத்தகத்தை படித்ததை காட்டிலும், இந்த பெண்களுடனான சந்திப்பு என்னை மிகவும் திருப்திபடுத்தியது.
பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 2008ல் ஒரு நண்பரது வீட்டில் இஸ்லாத்தை தழுவினேன். முதலில், நான் சரியான முடிவை எடுத்திருக்கின்றேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.
சில மாதங்களுக்கு பின்னர் என் பெற்றோரிடம் இது குறித்து சொல்ல வேண்டுமென்று உட்கார்ந்தேன்.
“நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்”.
சிறிது நேரம் அமைதி…என் தாய் கூறினார்.
“நீ முஸ்லிமாக போகின்றாய், அப்படித்தானே?”.
கண்ணீர் விட்டு அழுதார், கேள்விகளாய் கேட்டார்.
“திருமணமான பிறகு எப்படி இருப்பாய்? நீ இப்படி உடையணிந்து தான் ஆக வேண்டுமா? உன்னுடைய வேலை என்னவாகும்?.
அவர் என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டார். நான் அவரிடம் மறுபடியும் வாக்களித்தேன், நான் நானாகவே இருப்பேனென்று.
நிறைய மக்கள் நினைப்பது போல, இஸ்லாம் என்னை அடிமைப்படுத்தவில்லை, நான் நானாகவே இருக்க அனுமதிக்கின்றது.
நான் இப்போது மிகுந்த மனநிறைவுடன் உள்ளேன். சில மாதங்களுக்கு முன், ஒரு முஸ்லிம் வழக்குரைஞருடன் எனக்கு திருமணம் நிச்சயமானது. அவருக்கு நான் வேலைக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதே நேரம் இஸ்லாமிய பார்வையிலான ஆண் பெண் பொறுப்புகளை ஆமோதிக்கின்றேன். என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ள விரும்புகின்றேன். அதே நேரம் என்னுடைய சுதந்திரத்தையும் விரும்புகின்றேன்.
நான் ஒரு பிரிட்டிஷ் என்பதிலும், முஸ்லிம் என்பதிலும் பெருமை கொள்கிறேன். எந்த வழியிலும் இவை இரண்டிற்குமிடையே முரண்பாடு இருப்பதாக நான் நினைத்ததில்லை.
பிரிட்டிஷ் கலாச்சார பின்னணியில் நம்மை வைத்து பார்த்தால் இந்த சகோதரிகள் கடந்து வந்த பாதை நமக்கு தெளிவாக புலப்படும்.
டைம்ஸ் ஆன்லைனின் இந்த பதிவில் என்னை திணறடித்தது அகீலா லிண்ட்சே வீலர் என்ற சகோதரியின் கருத்து.
“The first time I tried on the hijab, I remember sitting in front of the mirror, thinking, ‘What am I doing putting a piece of cloth over my head? I look crazy!’ Now I’d feel naked without it and only occasionally daydream about feeling the wind blow through my hair” – Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
முதலில் நான் ஹிஜாபை அணிந்த போது, கண்ணாடியை பார்த்து என்னையே கேட்டு கொள்வேன், “ஒரு துணியை என் தலையை சுற்றி கட்டுவதால் நான் என்ன பண்ணுகின்றேன்? I look Crazy!”. ஆனால் இப்போதோ ஹிஜாப் அணியாமல் இருப்பதை நிர்வாணமாக இருப்பது போல உணர்கின்றேன் — (extract from the original quote of) Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
ஆக, எந்த ஹிஜாபை நோக்கி அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ, அதனை விரும்பி அணியும் பெண்களாகத் தான் இவர்கள் இருக்கின்றார்கள்.
இஸ்லாம் தங்களுக்கு மனநிறைவையும், பாதுகாப்பையும், திசையையும், உரிமைகளையும் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
ஒருபுறம், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, அடக்கியாள்கின்றது என்ற பிரச்சாரம். மறுபுறம், டைம்ஸ் இணையதளம் சொல்லுவது போல ஆயிரக்கணக்கில் இஸ்லாமிற்குள் நுழையும் சகோதரிகள்.
இஸ்லாமை நன்கு ஆராய்ந்து அதனுள் தங்களை இணைத்து கொண்டிருக்கும் சகோதரிகளின் கருத்து சரியா? அல்லது இஸ்லாமிற்கு வெளியே நின்று கொண்டு இஸ்லாம் பெண்களை இப்படி நடத்துகின்றது, அப்படி நடத்துகின்றது என்று கூப்பாடு போடுபவர்களின் கருத்து சரியா?
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக…ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனிற்கே .
-உங்கள் சகோதரன், ஆஷிக் அஹ்மத் அ.
இதைக்காணும் எவருடைய உள்ளம்தான் அசையாது?!
ஸுப்ஹானல்லாஹ்,
அல்ஹம்துலில்லாஹ்,
அல்லாஹு அக்பர்.
லாஇலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
-தொகுப்புக்கு உதவிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக.
“அமெரிக்காவை இஸ்லாம் ஆளும், இன்ஷா அல்லாஹ்” கட்டுரைக்கு, கீழே உள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்