இளம் நோபல் பெண் தவக்குல் கர்மான்
A Priceless Quote from a confident Muslim Woman
இவர் அணிந்திருக்கும் ஹிஜாப் பற்றி பத்திரிக்கையாளர்கள் அவருடைய அறிவுத்திறனுக்கும், கல்வித்தகுதிக்கும் அது ஏற்றதாக உள்ளதா என கேட்ட போது அவர் கூறிய பதில்:
‘பண்டைய கால மனிதன் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தான். அவன் அறிவு வளர வளர அவன் ஆடைகளை அணியத் துவங்கினான். நான் இன்று யாராக இருக்கிறேனோ, என்ன அணிந்திருக்கிறேனோ, அது மனிதன் அடைந்துள்ள எண்ணங்கள் மற்றும் நாகரிகத்தின் உச்சத்தை பிரதிபலிக்கிறதே தவிர, பின்னடைவையல்ல. ஆடைகளை மீண்டும் களைவது தான் பின்னடைவாகும்.‘
மனித உரிமை ஆர்வலர், இதழியலாளர், அரசியல்வாதி எனப் பல முகங்களைக் கொண்டவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான். பெண்களுக்கென கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டில் பிறந்தாலும் வர்த்தகப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.
மனித உரிமை பாதுகாப்புக்காக 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கினைத்தார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் போராட்டங்களைக் கையிலெடுப்பார். பிப்ரவரி மூன்றாம் நாளை ‘பெருங்கோப நாள்’ என்று அறிவித்தார்.
பெண்களின் பாதுகாப்புக்காக, ‘சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’ என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருக்கிறார். பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்த அதே நேரத்தில் ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஏமன் நாட்டு மக்களால் ‘இரும்புப் பெண்மணி’ ‘புரட்சித் தாய்’ என அழைக்கப்படுகிறார்.
2011-ம் ஆண்டு லிபேரியா நாட்டின் எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோருடன் சேர்ந்து பெண்கள் பாது காப்பு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், பெண்கள் உரிமைகளுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றுக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
உலகிலேயே நோபல் பரிசு பெறும் முதல் அராபியப் பெண்ணாகவும், இரண்டாவது இஸ்லாமியப் பெண்ணாகவும் வரலாறு படைத்துள்ளார் தவக்குல் கர்மான். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். தான் பெற்ற நோபல் பரிசை ஏமன் நாட்டு பெண்களுக்கு அர்பணிப்பதாகக் கூறியிருக்கிறார் தவக்குல் கர்மான். -தி இந்து
A Priceless Quote from a confident Muslim Woman
Nobel Peace Prize winner “Tawakkul Karman,” ‘The mother of Yemen’s revolution,’ when asked about her Hijab by journalists and how it is not proportionate with her level of intellect and education, replied:
“Man in early times was almost naked, and as his intellect evolved he started wearing clothes. What I am today and what I’m wearing represents the highest level of thought and civilization that man has achieved, and is not regressive. It’s the removal of clothes again that is a regression back to the ancient times.”
What and inspiration… I have heard of no one who could have said it better!
Tawakkol Karman – Facts
Born: 7 February 1979, Ta’izz, Yemen
Residence at the time of the award: Yemen
Prize motivation: “for their non-violent struggle for the safety of women and for women’s rights to full participation in peace-building work”
Field: peace movement, women’s rights.
Tawakkol Karman is the Yemeni political activist who shared the Nobel Peace Prize with two other female activists in 2011.
She and Ellen Johnson Sirleaf and Leymah Gbowee (both of Liberia) were given the award “for their non-violent struggle for the safety of women and for women’s rights to full participation in peace-building work.” Tawakkol Karman was born in Yemen.
Her father, Abdul Salam, was a legal expert who later became the government minister for legal and parliamentary affairs. Karman earned a master’s degree in political science from Sana’a University.
In 2005, she helped found Women Journalists Without Chains, an organization that released annual reports on press freedom in Yemen. She also joined the Islah, Yemen’s conservative Islamist opposition party.
Her activism earned her the enmity of the government of President Ali Abdullah Saleh, which harassed and jailed her more than once.
During the “Arab Spring” of 2010 and 2011, as activists were fighting entrenched rulers in countries like Egypt and Tunisia, Karman began leading Yemeni protests against the rule of President Saleh.
Her floral headdress, unusual in a country more used to women in conservative black chadors, became her trademark, and though she was only 32 she earned the nickname of “Mother of the Revolution.”
She was awarded the Nobel Peace Prize in October of 2011. The next month, President Saleh agreed to step down after 33 years as president, although he did not immediately move to give up power.
Extra credit:
Tawakkol Karman’s name is sometimes spelled Tawakul or Tawakkul. She is married to Mohammed al-Nahmi. She described herself as having “three young children” in a 2011 op-ed essay in The New York Times. At age 32, she was the youngest person ever to win the Nobel Peace Prize.
source: Tawakkol Karman Biography (Activist) | Infoplease.com