Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆணும் பெண்ணும் சமமல்ல!

Posted on June 18, 2014 by admin

ஆணும் பெண்ணும் சமமல்ல!

Why boys will be boys and girls will be girls, has an explanation in their brains, Prof. Coffey adds. Structurally, and functionally, there are differences between the brains of men and women, as a collective. Right from brain volume, to cerebrospinal fluid volume, white matter and gray matter, there are differences between the male and the female brain.

உடற்கூறு ரீதியாக பெண்கள் ஆண்களோடு போட்டியிட முடியாது. தற்போதய ஆராய்ச்சியானது சிந்தனை சக்தி, ஞாபக சக்தி, ஆளுமைத் திறன் அனைத்திலுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. ஹிந்து பத்திரிக்கையில் முன்பு வந்த கட்டுரையின் தமிழாக்கத்தை கீழே தருகிறேன்…

ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார், அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி..

சென்னையில் எம்.வி.அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் ‘‘பாலினத்தின் பாத்திரம் (Role of sexes)” என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். அதில் உரையாற்றும் போது ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கினறனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட் பொருட்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிட்டின் (serebrospinal fluid) அளவு மற்றும் வெள்ளை பருப் பொருள் (white matter), சாம்பல் பருப் பொருட்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.

இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலேயே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு மனிதன் வளர வளர மாறுபடுகின்றதா? அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா?

இது வரை இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளன என்று கூறுகிறார் பேராசியர் காஃபி.

9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரிதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன.

இந்த வேறுபாடுகள் ஆண் பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது. ஆண் மூளை ‘முன் மடலின் (frontal lobe) ‘ தடிமன் பெண் மூளையை விட வெகுவாக குறைகிறது. ஆனால் மூளையின் பின் பக்கப் பகுதி (posterior region) இதற்கு நேர் மாற்றமாக உள்ளது. அதாவது பெண் மூளையின் பின் பக்க பகுதியின்(posterior region) தடிமன் ஆண் மூளையை விட வேகமாகக் குறைகின்றது.

சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேலே குறிப்பிட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார்.

30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.

நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்துக்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் காஃபி.

மொழி செயல்பாடுகள் –language function

காட்சி இடம் சார் செயல்பாடுகள்- visual –spatial function

சமூக அறிவாற்றல் திறன்- social cognition skills

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் முறை- empathy

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல்-emotion and perception

தேடுதல் மற்றும் பரபப்பு- seeking and sensation

இவ்வாறு அனைத்து செயல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும் பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வேறு வேறாக உள்ளது.

இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகத்தில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.

இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? ஆம். இந்த உடற்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை ஆண் பெண் என மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். அது எப்படி இருந்தாலும் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசியர் காஃபி.

Why boys will be boys and girls will be girls, has an explanation in their brains, Prof. Coffey adds. Structurally, and functionally, there are differences between the brains of men and women, as a collective. Right from brain volume, to cerebrospinal fluid volume, white matter and gray matter, there are differences between the male and the female brain.

இது ‘தி ஹிந்து’ பத்திரிக்கையில் செப்டம்பர் 18 – 2011 அன்று 6 ஆவது பக்கத்தில் வந்த கட்டுரை

source: http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/article2464138.ece?css=print

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

46 + = 54

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb