“நான் எந்த ஜமாஅத்திலும் இல்லை” என்போரே!
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் நபிகளார் கற்றுத் தந்த முறைகளில் செயல்பட ஜமாஅத் அவசியம். தனித்தனியாகச் செயல்பட எவ்வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு செயல்பட்டால் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ஜமாஅத்துடன் இணைந்து செயல்படுங்கள். இல்லையெனில் மந்தையை விட்டுத் தனியே ஒதுங்கிப் போய்விட்ட ஆட்டின் நிலைமைதான் உங்களுக்கும் ஏற்படும். ஏனெனில் தனியே சொல்லும் ஆட்டைதான் ஓநாய் விழுங்குகின்றது” (அறிவிப்பாளர்: அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது)
எல்லா நபிமார்களும் ஜமாஅத்துடனே இணைந்து வாழ்ந்தார்கள்; அவர்களின் அந்த ஜமாஅத்களை விட்டுப் பிரிந்து அந்த சமூகம் சென்று விடக்கூடாது என்பதை (42:13 முதல் 16 வரை படியுங்கள்) விளங்கலாம்.
நம் உயிரை விட மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (33:6) அவர்களின் கட்டளையைத் திரும்பத் திரும்ப ஞாபகமூட்டியும் தனித்தே செயல்படுவேன் என்றால் செவிடன் காதில் ஊதிய சங்குப் போல் அமைந்துவிடும்.
இயக்க வழிபாட்டினரை விட்டுப் பிரிந்து அவர்களின் அரசியல் லீலைகள் மற்றும் குர்ஆன் ஸுன்னாவின் கொள்கைகளுக்கு மாற்றான விளக்கங்களால் கொதித்துப் போய் பல சகோதரர்கள் அந்தந்த ஊர்களின் பெயராலும் மன்றங்களின் பெயராலும் ஜமாஅத்தாகச் செயல்படுகிறார்கள்.
இவர்களின் இந்த முயற்சி இயக்க வழிபாடுகளில் நீங்கள் சிக்கி இருந்ததைப் போன்றுதான் விளைவுகளை ஏற்படுத்தும். உங்களின் கோபம் எல்லாம் இந்த இயக்கத்திலிருந்து அங்கு சென்றால் அங்கே வலை விரித்து ஆளைப் பிடிக்கின்றார்.
ஆக இப்படி எங்கு சென்றாலும் தப்பவே முடியாது என்று ஒரு முடிவில் உள்ளீர்கள். அதனால் தான் ஊருக்கு ஊர் தெளஹீது ஜமாஅத்களும், இஸ்லாமிய மன்றங்களும் வைத்துள்ளீர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எண்ணிக்கை குறைவான இஸ்லாத்தைச் சொன்ன ஆரம்பக் கட்டத்திலும் சரி, எண்ணிக்கையில் அதிகமாக வாழ்ந்த மதீனா வாழ்விலும் சரி அவர்கள் ஜமாஅத்தாகத் தான் முஸ்லிம்களை ஒருங்கிணைத்தார்கள். அந்த ஜமாஅத் இன, மொழி, நாடு என இவற்றைக் கடந்து ஒரே தலைவரின் கீழ் செயல்பட்டது. இஸ்லாம் ஓர் ஊருக்கோ, ஓர் இன மக்க ளுக்கோ, ஒரு நாட்டிற்கோ மட்டும் சொந்த மானது இல்லை. உலக அளவில் ஒரே தலைமையில் கீழ் செயல்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போன்று செயல்பட்டால் அவர்களின் கட்ட ளைக்குக் கட்டுப்பட்டால் உன்னத ஜமாஅத் ஏற்படும். எல்லோரின் எதிர்ப்பார்ப்பும் அதுதான்.
நாம் வீட்டை விட்டு வெளியேறும்போது ஓதும் துஆ, வாகனத்தில் அமர்ந்தவுடன் ஓதும் துஆ, தும்மும்போது ஓதும் துஆ, தொழுகையில் இரு சஜ்தாக்களுக்கிடையில் ஓதும் துஆக்களை ஏன் ஓதுகின்றோம்? அல்லாஹ்வுடைய தூதர் நமக்குக் காட்டிய துஆக்கள் (நடைமுறைகள்). இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. இதே போலத்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கற்பனை செய்யப்பட்ட பிரிவுப் பெயர்கள் (பல்வேறு ஜமாஅத்கள்) தலை தூக்கும்போது அவர்கள் இட்ட கட்டளைதான் “ஜமாஅத் அல்முஸ்லிமீனையும் அதனுடைய இமாமையும் பற்றிப் பிடிப்பீராக” ஹதீஃதின் சுருக்கம். ஆதாரம் புகாரீ, முஸ்லிம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இட்ட மற்றையக் கட்டளைகளை நாம் செயல் படுத்துவது போல் இஸ்லாத்தின் பெயரால் புதிய, பழையப் பிரிவுகளுக்கு இடம் கொடுக்காமல் ஜமாஅத் அல்முஸ்லிமீன் என்ற ஜமாத்தை செயல்படுத்த அழைப்பு விடுக்கின்றோம்.
இந்த ஜமாஅத் அல்முஸ்லிமீன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளை என்று விளங்க வேண்டும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொன்ன இறைவன் உதாரணமாக கலாலா (சொத்துரிமை), தலாக் (விவகாரத்து) வணக்க வழிபாடுகள் இன்னும் பிற… முஸ்லிம்களின் பிரிவுக் குடுமிச் சண்டைகளுக்கு தீர்வே சொல்ல வில்லையா? அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தீர்வைத் தந்துவிட்டார்கள். இந்த ஒரு ஜமாஅத்தை அன்றி வேறு ஒரு ஜமாஅத்திற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அனுமதி தரவே இல்லை. தனி இயக்கப் பெயர்களாக இருந்தாலும் சரியே! அல்லது உள்ளூர் இஸ்லாமிய மன்றங்களின் பெயராக இருந்தாலும் சரியே!
அல்லாஹ் கூறுகின்றான் “இன்னும், நிச்சயமாக உங்கள் சமுதாயம் ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே தக்வாவுடன் (இறை உணர்வு) நடங்கள்; வசன எண் 23:51-55 வரையும் பார்க்கவும்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் நபிகளார் கற்றுத் தந்த முறைகளில் செயல்பட ஜமாஅத் அவசியம். தனித்தனியாகச் செயல் பட எவ்வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு செயல்பட்டால் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ஜமாஅத் துடன் இணைந்து செயல்படுங்கள். இல்லையெனில் மந்தையை விட்டுத் தனியே ஒதுங்கிப் போய்விட்ட ஆட்டின் நிலைமைதான் உங்களுக்கும் ஏற்படும். ஏனெனில் தனியே சொல்லும் ஆட்டைதான் ஓநாய் விழுங்குகின்றது” (அறிவிப்பாளர்: அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது)
எல்லா நபிமார்களும் ஜமாஅத்துடனே இணைந்து வாழ்ந்தார்கள்; அவர்களின் அந்த ஜமாஅத்களை விட்டுப் பிரிந்து அந்த சமூகம் சென்று விடக்கூடாது என்பதை (42:13 முதல் 16 வரை படியுங்கள்) விளங்கலாம்.
நம் உயிரை விட மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (33:6) அவர்களின் கட்டளையைத் திரும்பத் திரும்ப ஞாபகமூட்டியும் தனித்தே செயல்படுவேன் என்றால் செவிடன் காதில் ஊதிய சங்குப் போல் அமைந்துவிடும்.
யாரை ஜமாஅத்துடைய புதிய அமீராக நியமிக்கப்பட்டாலும் அவர் ஏன் என்றுதான் கேட்பார்கள். கருப்பு நிற அடிமை உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்குக் கட்டுப்படத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கட்டளையிட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபீசீனியாவிற்கு 11(அ)12 முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்ய வைத்தபோது ஜாஃப்ர் பின் அபூ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு, அமீராக நியமித்து அனுப்பும்போது எங்கிருந்தது இஸ்லாமிய அரசு? மக்காவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்த ஜமாஅத் தில் அவர்களை அமீராக ஏற்றுக் கொண்ட போது எங்கிருந்தது இஸ்லாமிய அரசு?
ஜமாஅத்துடன் கூடி வாழும் இஸ்லாமிய அடிப்படையை முஸ்லிம்களே தகர்த்தெரியாதீர்கள். 3:110 கூறுவது போல் உன்னத சமுதாயம் அமைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இட்டக் கட்டளைகளையும், முன் சென்ற நபிமார்களின் வழி முறைகளையும் பின்பற்றி ஈருலக பாக்கியங்களை அடையக் கூலியைக் கேட்காத மக்களில் நம்மையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. ஆமீன். நம்முடைய இந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் நேர்வழிப் பெற்றவர்கள் என்றக் கூற்றையும் கூறவில்லை. நேர்வழியை அல்லாஹ்தான் நாடியவருக்கு காட்டுகின்றான்; பிளவு ஜமாஅத்களுக்கும் கலர் கொடிகளுக்கும் இடம் கொடுக்காமல் தூதரின் கட்டளையை நிறைவேற்ற முன் வாருங்கள்.
Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம்,
source: http://annajaath.com/?p=6996