இஸ்லாமிய மாண்புகளை பின்பற்றுவதில் முன்நிற்கும் மேற்கத்திய நாடுகள்
Western countries more Islamic than Muslim countries: study
by Damien McElroy
The Koran’s teachings are better represented in Western societies than in Islamic countries, which have failed to embrace the values of their own faith in politics, business, law and society, a leading academic at George Washington University has said.
A study of 208 countries and territories has found that the top countries in both economic achievement and social values are Ireland, Demark, Luxembourg and New Zealand. Britain also ranks in the top ten.
The first Muslim-majority nation is Malaysia ranking at 33, while the only other state in the top 50 is Kuwait at 48.
Hossein Askari, an Iranian-born professor of International Business and International Affairs at George Washington University, said Muslim countries used religion as an instrument of state control. He said: “We must emphasise that many countries that profess Islam and are called Islamic are unjust, corrupt, and underdeveloped and are in fact not ‘Islamic’ by any stretch of the imagination.
“Looking at an index of Economic Islamicity, or how closely the policies and achievements of countries reflect Islamic economic teachings – Ireland, Denmark, Luxembourg, Sweden, the United Kingdom, New Zealand, Singapore, Finland, Norway, and Belgium round up the first 10”.
“If a country, society, or community displays characteristics such as unelected, corrupt, oppressive, and unjust rulers, inequality before the law, unequal opportunities for human development, absence of freedom of choice (including that of religion), opulence alongside poverty, force, and aggression as the instruments of conflict resolution as opposed to dialogue and reconciliation, and, above all, the prevalence of injustice of any kind, it is prima facie evidence that it is not an Islamic community,” he said.
An Overall Islamicity Index analysing social rules and human rights measures found that similar rankings were generated in 2010.
“New Zealand, Luxembourg, Ireland, Iceland, Finland, Denmark, Canada, the United Kingdom, Australia, and the Netherlands; and again only Malaysia (38) and Kuwait (48) make it into the top 50 from Muslim countries,” he said. “Islam is, and has been for centuries, the articulation of the universal love of Allah for his creation and for its unity, and all that this implies for all-encompassing human and economic development.”
Source: http://www.telegraph.co.uk/:
source: http://muslimvillage.com/2014/06/12/54404/acedemic-islamic-values-better-represented-west/
இஸ்லாமிய மாண்புகளை பின்பற்றுவதில் முன்நிற்கும் மேற்கத்திய நாடுகள்
இன்று உலகிலேயே இஸ்லாமிய மாண்புகளை அதிகமாகப் பின்பற்றுகின்ற நாடு எது தெரியுமா?
சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அயர்லாந்துதான்.
‘இஸ்லாமிய நாடுகளும்’, முஸ்லிம் ஆட்சியாளர்களைக் கொண்ட ‘முஸ்லிம் நாடுகளும்’ முதல் பத்து இடங்களில் கூட இல்லை.
டென்மார்க், நியூசிலாந்து, லக்ஸம்பெர்க், ஸ்வீடன், சிங்கப்பூர், பின்லாந்து, நார்வே, பெல்ஜியம், இங்கிலாந்து ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களை ஈட்டியிருக்கின்றன.
‘முஸ்லிம் நாடுகளில்’ மலேசியாவுக்குத்தான் முதலிடம். அது 208 நாடுகளைக் கொண்ட பட்டியலில் 33ஆவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. அதற்கு அடுத்து 48ஆவது இடத்தில் குவைத் வருகின்றது.
அமெரிக்க ஆய்வாளர்கள் ஹுஸைன் அஸ்கரியும் தோழர் ஷஹர்சாதே ரஹ்மானும் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளி வந்திருக்கின்றன.
குர்ஆனும் இஸ்லாமும் வலியுறுத்துகின்ற மாண்புகள் எந்த அளவுக்கு சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன என்கிற கோணத்தில் இவர்கள் இந்த ஆய்வை நடத்தினார்கள்.
‘முஸ்லிம்’ நாடுகளில்…
தேர்தல்கள் முறையாக நடப்பதில்லை.
மன்னராட்சிகள் நடக்கின்றன.
ஊழல் நிறைந்துள்ளது.
ஆளுக்கொரு நீதி கடைப்பிடிக்கப்படுகின்றது.
கருத்து சுதந்திரம், வேண்டிய மதத்தைப் பின்பற்றுகின்ற சுதந்திரம் இருப்பதில்லை.
ஏற்றத்தாழ்வு, வறுமை,
வேலையில்லாத் திண்டாட்டம்,
அடக்குமுறை ஆட்சி
என அவற்றைச் சூழ்ந்துள்ள அவலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இணைப்பு கீழே தரப்படுகின்றது.
http://muslimmirror.com/eng/ireland-tops-world-in-islamic-values/
அது சரி, குர்ஆனும் இஸ்லாமும் வலியுறுத்துகின்ற மாண்புகளைக் கடைப்பிடிக்கின்ற தனிமனிதர்கள் என்கிற கோணத்தில் ஆய்வு நடத்தப்படுமேயானால் நீங்களும் நானும் நூறுக்கு எத்தனை மதிப்பெண்கள் பெறுவோம்?
– டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்