முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக சின்னாப்பின்னமாகிக் கிடப்பதற்கு காரணம் மனித அபிப்பிராயங்கள் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதே!
[ (நபியே உம்மை) யாராவது ஒருவர் நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:80)
இந்த நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அறிஞர்களாக மதிக்கப்படுவோர் இறைவனது இத்தனை தெள்ளத் தெளிவான வசனங்களை எல்லாம் அறிந்தோ, அறியாமலோ புறக்கணித்து விட்டு, தங்கள் சுய சிந்தனையில் தோன்றிய அபிப்பிராயங்களை எல்லாம் மார்க்கத்தில் நுழைத்து அதன்மூலம் மார்க்கத்தில் கலப்படம் செய்துவிட்டு மார்க்கத்திற்கு பெரும் சேவை செய்துள்ளதாக மனப்பால் குடித்து வருகின்றனர்.
இந்தச் சாபக்கேடு நீண்ட நெடுங்காலமாக இந்தச் சமுதாயத்தை பற்றியுள்ளது. உலகின் மிக உன்னத சமுதாயம், இன்று அதாள பாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும். இன்று முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாகச் சின்னாப் பின்னமாக்கப் பட்டுக் கிடப்பதற்கும் இந்த மனித அபிப்பிராயங்கள் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதே காரணமாகும்.]
மனித அபிப்பிராயம்
இன்று ஆர்வமாக அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களில் பெரும்பான்யோரை ஒரு மயக்கம் பீடித்துள்ளது. இன்று அந்தச் சகோதரர்கள், தங்களில் ஏற்பட்டுள்ள மயக்கம் காரணமாக செய்யும் தவறுகள் குர்ஆன், ஹதீஸை முறையாகவும் சரியாகவும் செயல்படுத்த முயற்சிகள் செய்யும் சகோதரர்களையும் பாதிக்கிறது.
ஒட்டுமொத்தமாக அனைவரயும் சேர்த்தே சத்திய பணிக்கு விரோதமானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது பற்றிய தெளிவு அனைவருக்கும் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.
‘இஸ்லாம்’ அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட இறைமார்க்கம். அதற்கு பூரண சொந்தக்காரன் அல்லாஹ் மட்டுமே. அதனைச் செயல்படுத்துகிறவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையைத்தான் கவனிக்க வேண்டுமே தவிர மக்களின் மனோ நிலையையும், விருப்பங்களயும் அனுசரித்து இவர்களின் சொந்த யூகங்களைப் பின்பற்றக்கூடாது.
இறுதித்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குர்ஆனின் பல இடங்களில் இது விஷயத்தில் மிகத் தெளிவாகவும், கண்டிப்புடனும் அல்லாஹ் எச்சரித்துள்ளான். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
(நபியே) அல்லாஹ் அருள்செய்த (சட்டதிட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளை பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கி வைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். (5:49)
(குர்ஆனை) என் மனப்போக்கின்படி மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என்மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை. என்று (நபியே) நீர் சொல்வீராக. (10:15)
மக்கள் அனைவரும் இஸ்லாத்தில் வந்துவிட வேண்டும், எளிதாக இஸ்லாத்ததை புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அல்லாஹ் அறிவிக்காத எந்த ஒன்றையும் செயல்படுத்தக்கூடாது. அப்படி நல்லதுபோல் தோன்றும் எந்த திட்டத்தையும் குர்ஆன், சுன்னாவுடன் ஒப்பிட வேண்டும். எந்த அறிஞர் தந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அது அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது.
மேலும் மக்கள் எப்படியும் நேர்வழிக்கு வந்துவிட வேண்டும். இறைச் செய்திகளை (வஹி) மட்டும் செயல்படுத்துவதால் மக்கள் உணர்வு பெற்று நேர்வழிக்கு வரமாட்டேன் என்கிறார்கள். எனவே நாம் எதையாவது செய்து அவர்களை நேர்வழியின்பால் ஆர்வமுடையவர்களாக திருப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இறைவனால் கட்டளையிடப்படாத எதனையும் செய்யக்கூடாது என்பதற்கு
(நபியே உம்மை) யாராவது ஒருவர் நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (4:80)
இந்த நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அறிஞர்களாக மதிக்கப்படுவோர் இறைவனது இத்தனை தெள்ளத் தெளிவான வசனங்களை எல்லாம் அறிந்தோ, அறியாமலோ புறக்கணித்து விட்டு, தங்கள் சுய சிந்தனையில் தோன்றிய அபிப்பிராயங்களை எல்லாம் மார்க்கத்தில் நுழைத்து அதன்மூலம் மார்க்கத்தில் கலப்படம் செய்துவிட்டு மார்க்கத்திற்கு பெரும் சேவை செய்துள்ளதாக மனப்பால் குடித்து வருகின்றனர்.
இந்தச் சாபக்கேடு நீண்ட நெடுங்காலமாக இந்தச் சமுதாயத்தை பற்றியுள்ளது. உலகின் மிக உன்னத சமுதாயம், இன்று அதாள பாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும். இன்று முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாகச் சின்னாப் பின்னமாக்கப் பட்டுக் கிடப்பதற்கும் இந்த மனித அபிப்பிராயங்கள் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதே காரணமாகும்.
ஒரு கூட்டம் ஒரு அறிஞரின் மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இன்னொரு கூட்டம் இன்னொரு அறிஞரின் மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இப்படி அல்லாஹ் கொடுத்த நேரான வழிவிட்டு தடம்புரண்டு பல கோணல் வழிகளில் சென்று தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது இந்த சமுதாயம்.
இன்று முஸ்லிம்களிடையே ஆதிக்கம் செலுத்திவரும் மத்ஹபுகள், தரீகாக்கள் சூஃபிஸ வழிமுறைகள் இயக்கங்களின் பெயரால் பல பிரிவுகள் இன்னும் இவை போன்ற அனைத்தும் கோணல் வழிகளேயாகும். ஷைத்தான் இந்த கோணல் வழிகளில் முஸ்லிம்களுக்கு நல்ல பலன் கிட்டுவது போன்றதொரு மாயத் தோற்றத்தை உண்டாக்கி வைத்திருப்பதால், முஸ்லிம்களில் பெரும்பாலோர் அவற்றில் மயங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவை போன்ற தனித்தனி இயக்கங்களில் பெயரில் செய்யப்படும் முயற்சிகள் நல்லவையாகக கருதப்பட்டாலும் அவையும் மனித அபிப்பிராயங்களால் உருவாக்கப்பட்டவையே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னுள்ள நபிமார்களின் உம்மத்துகளும் இறை கொடுத்த நேர்வழியை விட்டு தங்கள் அறிஞர்களின் மனித அபிப்பிராயங்களால் தோற்றுவிக்கப்பட்ட கோணல் வழிகளில் சென்றே பல மதங்களையும் அந்த மதங்களில் பல பிரிவுகளையும் உண்டாக்கி வைத்துக்கொண்டு அவைகொண்டு அல்லாஹ் சொல்லுவது போல் மகிழ்வடைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் நாம் எடுத்து எழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்திற்கும் முரணானவையே. எனவே அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வழியில்லை. எனவே முஸ்லிம்கள் இவ்விஷயத்தில் சிந்திக்க தவறினால் அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதுபோல்
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகிவிட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32) என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளான்.