உவைசியின் கவனிக்கப்படவேண்டிய 11.06.2014 அன்றைய பாராளுமன்ற உரை
ஓட்டு மொத்த பாராளுமன்றமே பேசவிடாமல் கூச்சல் இடும் போதும், தனி மனிதனாக, நிதானமாக, சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி விட்டார்.. முஸ்லிம் தலைவர்கள், பேச்சாளர்கள் இதில் இருந்து படிப்பினை பெற வேண்டும்.
குறிப்பிட்ட மாநிலத்தின், தொகுதியின் உறுப்பினராக இருந்தாலும், ஆந்திர, குஜராத், புனே, காஷ்மீர் பண்டிட், முஸ்லிம்கள் போன்ற அனைவரின் பிரச்சனைகளையும் கொடுத்த நேரத்தில் பேசிவிட்டார்.
BJP யினர் கூச்சலிட்டபோது, கோபப்படாமல் மோடியை வாழ்த்தினார்.
அவர் கூறிய சில விஷயங்கள்:
1) இங்கே முஸ்லிம் வோட் பங்க் என்ற குற்றச்சாட்டை வைத்த நீங்கள், அதை உடைத்து ஹிந்து வோட் பங்க் என்ற ஒன்று இருப்பதை இந்த தேர்தலில் நிருபித்து உள்ளீர். அதற்காக மோடியை பாராட்டி கொள்கிறேன்.
2) பஸ்வான் குஜராத் கரை மறக்க படவேண்டும் என்று கூறினார். இந்த நாட்டை உலுக்கிய 4 துயர சம்பவம்:
காந்தி படுகொலை,
சீக்கியர் படுகொலை,
பாப்ரி மஸ்ஜித் உடைப்பு,
குஜராத் சம்பவம்.
3) இதை செய்தவர்கள் இந்த நாட்டில் ஆட்சிக்கு வரும் போது, விரைவில் கோட்சேக்கு பாரத ரத்னா கொடுக்க படலாம்.
4) இந்த நாட்டின் சிறப்பு மத சார்பின்மை.. அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக புனே போன்ற நகரங்களில் கலவரம் துவக்க பட்டுள்ளது. (காஷ்மீர் பண்டிட்டுகள் பற்றி கூச்சல் வந்த போது) அவர்களும் வெளியேறிய காஷ்மீர் முஸ்லிம்களும் நாட்டுக்கு திரும்பி அனுப்ப பட வேண்டும்.
5) தெலுங்கானாவில் உள்ள சில பொது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த போது அவையில் உள்ள சிலர் கை தட்டினார்.
6) INCLUSIVE POLITICS பற்றி அரசு பேசிவருகிறது.. அது உண்மை என்றால் ஏன் 21 முஸ்லிம் MP மட்டுமே இருக்க வேண்டும்… சிறுபான்மயினருக்கான 4.5 சதவித இட ஒதிக்கீடு என்ன ஆச்சு.. நான் முஸ்லிம்களை பற்றி பேச வில்லை.. சிறுபான்மையனர் என்பது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்த மத மக்கள்.
7) குஜராத் அக்ஷர்தாம் கைதிகளை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உள்ளது. 11 வருடம் வாழ்க்கையை துளைத்து விட்ட தனது ஆட்சியில் கைது செய்யப்பட்ட இந்த அப்பாவிகளை பார்த்து மோடி மன்னிப்பு கேட்பாரா?
8) இறுதியாக நான் ஜாஃப்ரியின் மகனாக நிற்கிறேன், இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கிறேன், எனக்கு குஜராத் படுகொலைக்கு நீதி வேண்டும்.
285 பேர்களுக்கு நடுவே ஏழே நிமிட உரை ! BJP யை எகிற வைத்தது என்னவோ நிஜம்.
“மேரே ஸ்பான் கா முஃகாபலா தும் நஹீன் கர் சக்தே” என எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்களை வாயடைக்கச்செய்தார்.
இது துவக்கம் . இன்னும் போகப்போக தெரியும்.
-Mohamed Fawaj & Zafar Rahmani