11 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், நர்சிங் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, இளங்கலை, முதுகலை, எம்.பில், பி.எச்.டி ஆகிய படிப்புகளை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் 8961 முஸ்லிம் மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தகுதிகள்
01. முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
02. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
03. ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
04. போதுமான வருகைப் பதிவு இருக்க வேண்டும்.
05. வேறு துறைகள் மற்றும் வாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகை பெறாமல் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். www.momascholarship.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று Post Matric Scholarship என்று தேர்வு செய்து Student Registratiorஐ தேர்வு செய்து Fresh அல்லது Renewal என்பதை குறிப்பிட்டு, கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்பு Save பட்டனை கிளிக் செய்து Forward பட்டனை அழுத்த வேண்டும். இவை முழுமை அடைந்தவுடன் தற்காலிக ID மாணவ-மாணவிகளுக்கு தரப்படும். மேலும் விண்ணப்பம் கல்வி நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலம் சென்று சேர்ந்து விடும்.
இப்படி நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட்டை மாணவ, மாணவிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றோடு தகுந்த ஆவண நகல்களை இணைத்து தாங்கள் கல்வி கற்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
மதம், படிக்கும் கல்வி நிறுவனத்தின் பெயர், மதிப்பெண் விபரங்கள், ஆண்டு வருமானம், வங்கி விபரங்கள் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் கண்டிப்பாகத் தர வேண்டும். இந்த விபரங்கள் தரப்படாத விண்ணப்பங்கள் எந்த நிலையிலும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
1. பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவம்.
2. சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் சைஸ் போட்டோவை அதில் ஒட்ட வேண்டும்.
3. அடெஸ்டடு செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல், குறிப்பிட்ட தினங்களுக்குள் மார்க் சீட் கிடைக்காவிட்டால் ஆன்லைன் மார்க்சீட்டில் HODயின் அட்டஸ்டு வேண்டும்.
4. சாதித் சான்றிதழ்
5. வருமானச் சான்றிதழ் அல்லது 10 ரூபாய்க்கான நீதிமன்றம் சாரா முத்திரைதாளில் உறுதி (Affidavit) தர வேண்டும்.
6. விலாசத்திற்காக ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு அல்லது பாஸ்போர்ட்டின் நகல்
7. கல்விக் கட்டணம், லைப்ரரி கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டணம் செலுத்தியதற்காக கல்வி நிறுவனம் தந்துள்ள ரசீதுகள்
8. வங்கி கணக்கு புத்தகம்.
9. ஹாஸ்டல் பீஸ் செலுத்தி இருந்தால் அதன் நகல். தகுந்த ஆவணங்களோடு கல்வி நிறுவனத்திடம் ஆன்லைன் விண்ணப்பங்களை மாணவ மாணவிகள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் Fresh – 15.09.2014 Renewal – 10.10.2014
கல்வி நிறுவனங்கள் இதுகுறித்த தகவல் மற்றும் ஹார்டு டிஸ்கை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் Fresh – 25.09.2014 Renewal – 20.10.2014
இது குறித்த கூடுதல் விவரங்களை www.momascholarship.gov.in என்ற இணைய தள முகவரியிலும் 01.06.2014 அன்று வெளியான தினத்தந்தி நாளிதழில் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள விளம்பரங்கள் வாயிலாகவும் அறியலாம்.
– வாசிம்