முஸ்லிம்களின் வெற்றி தாமதிப்பதேன்?
[ இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பல்வேறு முனைகளிலும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். சில நாடுகளில் ஆயுதத் தாக்குதல்களால் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து நிற்கின்றனர். தமது தாய்நாட்டு மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகள் நிலை கொண்டு தமது மக்களைக் கொடுமைப் படுத்துவதை காண்கிறார்கள்.
இந்தத் துயர நிகழ்வுகளால் முஸ்லிம் சகோதரர்களில் சிலர் நம்பிக்கை இழப்பதுண்டு. முஸ்லிம்கள் வீழ்ந்து விட்டார்கள் என்றும் இஸ்லாம் தோல்வியடைந்துவிட்டது என்றும் இவர்கள் எண்ணுகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் எழுச்சி மீதும் இஸ்லாத்திற்காக உழைக்கும் இயக்கங்கள் மீதும் அவர்களுக்கிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் இல்லாது போய் விரக்தியடைந்து நிற்கிறார்கள்.
இவர்களை ஆற்றுப்படுத்துவது இன்றுள்ள முக்கியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது.
இவர்கள் இஸ்லாத்தின் சமூக எழுச்சி, வீழ்ச்சி குறித்து அடிப்படை விதிகள் பற்றிய குறைந்தபட்ச அறிவும் இல்லாதவர்கள்.
இதை அவர்களது குறையாகக் கருத வேண்டியதில்லை. மானசீக ரீதியில் அவர்களைப் பலப்படுத்துவதே இஸ்லாமிய அறிவுஜீவிகளின் பொறுப்பாகும்.
”முஃமின்களுக்கு வெற்றியை வழங்குவது நம்முடைய கடமையாகும்” (அல்–குர்ஆன் 30:47)]
முஸ்லிம்களின் வெற்றி தாமதிப்பதேன்?
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்ஸ.
indexஉலகைத் தேடுவது வாழ்வின் இறுதி இலக்காகிவிடும்போது மரணம் பற்றிய அச்சமும் பீதியும் நம்மை ஆட்கொள்கின்றன. இதனால் அற்ப இன்பங்கள் மீதான பற்றும் மோகமும் அதிகரித்து போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தை நோக்கி பிற எதிர் சக்திகள் படையெடுக்கவும் ஆக்கிரமிக்கவுமான பாதைகளை இது திறந்து விடுகின்றது. சத்தியத்தைக் கையில் வைத்திருக்கின்ற ஒரு சமூகம் அற்ப இன்பங்களுகாக மரணத்தை வெறுக்கும்போது சமூகப் பின்னடைவு என்பது தவிர்க்க முடியாது போய்விடுகின்றது.
உலகிலேயே சிறந்த சமுதாயம்’ என்று அல்லாஹ் அல்குர்ஆனில் சிலாகிக்கும் சமூகம் முஸ்லிம்கள்தான். அதில் எந்த ஐயமும் நமக்கில்லை. முஸ்லிம் சமூகம் வராலாற்றின் பல்வேறு கால கட்டங்களிலும் வெற்றியையும் தோல்வியையும் மாறிமாறிப் பெற்று வந்துள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் முதல் கடந்த நூற்றாண்டின் முதற்கூறுகள் வரை முஸ்லிம்கள் அடைந்த எழுச்சியும் வீழ்ச்சியும் இரவையும் பகலையும் போன்று, வசந்தம் இலையுதிர் காலம் போல மாறி மாறியே நிகழ்ந்து வந்துள்ளன. இந்தப் பாரிய பிரபஞ்சத்தினை இயக்கும் இயங்கியல் விதிகளில் ஒன்று. மாற்றவே முடியாத நிஜம். அந்த வெற்றி தோல்விகளை நாம் சமூகங்களுக்கு மாறி மாறி கொடுக்கிறோம் என்று அல்குர்ஆன் இதனைக் குறிப்பிடுகிறது.
இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பல்வேறு முனைகளிலும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். சில நாடுகளில் ஆயுதத் தாக்குதல்களால் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து நிற்கின்றனர். தமது தாய்நாட்டு மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகள் நிலை கொண்டு தமது மக்களைக் கொடுமைப் படுத்துவதை காண்கிறார்கள். இந்தத் துயர நிகழ்வுகளால் முஸ்லிம் சகோதரர்களில் சிலர் நம்பிக்கை இழப்பதுண்டு. முஸ்லிம்கள் வீழ்ந்து விட்டார்கள் என்றும் இஸ்லாம் தோல்வியடைந்துவிட்டது என்றும் இவர்கள் எண்ணுகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் எழுச்சி மீதும் இஸ்லாத்திற்காக உழைக்கும் இயக்கங்கள் மீதும் அவர்களுக்கிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் இல்லாது போய் விரக்தியடைந்து நிற்கிறார்கள். இவர்களை ஆற்றுப்படுத்துவது இன்றுள்ள முக்கியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இவர்கள் இஸ்லாத்தின் சமூக எழுச்சி, வீழ்ச்சி குறித்து அடிப்படை விதிகள் பற்றிய குறைந்தபட்ச அறிவும் இல்லாதவர்கள். இதை அவர்களது குறையாகக் கருத வேண்டியதில்லை. மானசீக ரீதியில் அவர்களைப் பலப்படுத்துவதே இஸ்லாமிய அறிவுஜீவிகளின் பொறுப்பாகும்.
முஃமின்களுக்கு வெற்றியை வழங்குவது நம்முடைய கடமையாகும் (அல் – குர்ஆன் 30:47)
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்குமான வெற்றியும் ஆட்சி அதிகாரமும் அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட ஒன்று. அல்லாஹ் எவ்வகையிலும் வாக்குறுதி மீறாதவன் என்று நாம் நம்பிக்கை கொள்கிறோம். எனவே முஸ்லிம்கள் வரலாற்றில் மிகப் பெரும் தோல்வியையும் போராட்டத்தையும் சந்தித்த போதும் அவர்கள் முற்றாக அழிந்து இஸ்லாம் என்ற இறைத்தூது மறைந்து போகாவில்லை. மங்கோலிய தாத்தாரியப் படையெடுப்பும், சிலுவைப் போர்களும் முஸ்லிம் சமூகத்தை இரத்த வெள்ளத்தில் அமிழ்த்தியது. பாக்தாதில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மாங்கோலியர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டபோது ஈராக்கே குருதியில் குளிக்க நேர்ந்தது. அபோது உயிர் வாழ்ந்த இப்னுல் அஸீர் என்ற வரலாற்றாசிரியர் தனது வாலாற்று நூலில் பாக்தாதில் நடந்த கொடுமைகள் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.
“எனது தாய் என்னைப் பெறாமல் இருந்திருக்கக்கூடாதா? எனது கண்களால் இக்கொடுமைகளைக் காணாமல் இருந்திருக்க வேண்டுமே“
ஆனாலும் அந்த வீழ்ச்சியிலிருந்து முஸ்லிம் சமுதாயம் மீண்டும் ஒருமுறை உஸ்மானியப் பேரரசு என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யம் ஒன்றைக் கட்டியெழுப்பியது. உலக நிலப்பரப்பின் அரைவாசி அதன் ஆதிக்கத்தின் கீழிருந்தது. உலகில் முஸ்லிம் என்ற பெயரைத் தாங்கியவர்கள் பெரும் மரியாதைக்குரியவர்களாக நோக்கப்பட்டார்கள். பொருளாதாரச் செழிப்பும் நீதியும் சமத்துவமும் உலகை ஆண்டது. இது பல நூற்றாண்டுகள் நீடித்தது. இதிலிருந்து நாம் எதனைப் புரிந்து கொள்கிறோம்?
முஸ்லிம் சமுதாயம் பலவீனமடையலாம். நோய்வாய்ப்படலாம். ஆனால் அது முற்றாக அழிந்து போய்விடுவதில்லை. வீழ்ச்சியின் அதாலபாதாளத்தின் அது வீசப்படும் போதெல்லாம் மீண்டும் எழுச்சியின் சிகரங்களை அது தொட்டிருக்கிறது. அது அதிகார சக்தியாக ஆட்சிபீடத்தில் இஸ்லாம் பல நூற்றாண்டு காலம் அமர்ந்திருக்கிறது. இந்த வரலாற்று நியதி இறந்த காலத்திற்க்கு மட்டும் உரியதல்ல. அது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தழுவியது. இஸ்லாம் அல்லாஹ்வின் தூது என்பதால் அதற்கே இறுதி வெற்றி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
”அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.” (அல் – குர்ஆன் 61:8)
எனினும் உம்மத்தின் வெற்றி குறித்து இந்த இறை நியதியை (ஸுன்னத்துல்லாஹ்) பலர் தவறாக அர்த்தம் கொள்வதுண்டு. இஸ்லாம் அல்லாஹ்விடம் இருந்து வந்தது என்பதற்காக மட்டும் அந்த வெற்றி எப்படியேனும் கிட்டிவிடும் என்பது நம்மில் சிலரின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு பிழையானதல்ல. எனினும் மனித முயற்சிகள், உழைப்புகள், தியாகங்கள், அர்ப்பணங்கள் எதுவுமே கலவாத முழுமையானதொரு அற்புத நிகழ்வாக அந்த வெற்றியை எதிர்பார்ப்பது பிழையான கண்ணோட்டமாகும். முஸ்லிம்கள் உலகில் வெற்றியுடன் பாதுகாப்பாகவும் அதிகாரம் கொண்டவர்களாகவும் வாழ வேண்டுமாயின் அதற்கென்று சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஜாஹதா, இஜ்திஹாத், ஜிஹாத் என்பவை அவற்றுள் முதன்மையானவை.
‘முஜாஹதா’ என்னும் ஆன்மீக உழைப்பு இஸ்லாமிய எழுச்சியின் மூல நிபந்தனைகளில் ஒன்று. இதுவே இஸ்லாமிய சமூக மாற்றத்தின் அடிப்படையான ஸரத்தும்கூட. பாவச் செயல்கள் அதிகரித்து அநீதியும் அடக்குமுறையும் மேலோங்கி அல்லாஹ்வுடனான தொடர்புகள் அறுந்துபோகும் போது, பெரும் ஆன்மீக வறுமை மேலெழுகிறது. அதுவே சமூக வீழ்ச்சியின் தொடக்கமாகவும் அமைந்து விடுகிறது. முஸ்லிம் சமூகத்தின் நோயெதிர்ப்பு சக்தியாக விளங்கும் இந்த ஆன்மீக பலத்தை புறக்கணித்துவிட்டு எந்த மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் மிகப் பெரும் போராட்ட வெற்றிகளுக்குப் பின்னால் இருந்ததெல்லாம் இந்த ஆன்மீக இரகசியமேஸ
இஸ்லாமிய சமூக எழுச்சியின் இரண்டாவது நிபந்தனை உலகியல் சார்ந்த அதன் உழைப்பாகும். அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள், கைத்தொழில்துறை உற்பத்திகள் என்பவற்றிலேயே தங்கியிருக்கின்றன. உற்பத்திகள் எதுவுமின்றி வெறும் நுகர்வுச் சமூகமாக இருப்பவர்களால் உலகை ஆள முடியாது. மாறாக சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உயிர் வாழுகின்ற சமூகமாகவே அது இருக்கும்.
மூன்றாவதாக, உலகைத் தேடுவது வழ்வின் இறுதி இலக்காகி விடும்போது மரணம் பற்றிய அச்சமும் பீதியும் நம்மை ஆட்கொள்கின்றன. இதனால் அற்ப இன்பங்கள் மீதான பற்றும் மோகமும் அதிகரித்து போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தை நோக்கி பிற எதிர் சக்திகள் படையெடுக்கவும் ஆக்கிரமிக்கவுமான பாதைகளை இது திறந்து விடுகின்றது. சத்தியத்தைக் கையில் வைத்திருக்கின்ற ஒரு சமூகம் அற்ப இன்பங்களுக்காக மரணத்தை வெறுக்கும்போது சமூகப் பின்னடைவு என்பது தவிர்க்க முடியாது போய்விடுகிறது.
வரலாற்றை ஓரளவு பின்னோக்கிப் பாருங்கள். முஜாஹதா, இஜ்திஹாத், ஜிஹாத் இவை மூன்றும் அல்லது மூன்றில் ஏதேனும் ஒன்று புறக்கணிக்கப்பட்டபோது முஸ்லிம் சமூகத்தின் தோல்வி தவிர்க்க முடியாது நிகழ்ந்து வந்திருக்கிறது. வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களிலும் இஸ்லாமிய சமூகம் அடைந்த எழுச்சியையும் வீழ்ச்சியையும் நோக்குகின்றபோது நாம் புரிந்துகொள்ளும் ஒரு நிதர்சன உண்மை இதுதான். ஆனால் இன்று முஸ்லிம்கள் ஓரளவு விழித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிரியையும் நண்பனையும் அடையாளம் காணும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். தமது சமூகம் பற்றிய கரிசனையும் அக்கறையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிற்சில தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றபோதும் உலகெல்லாம் இஸ்லாமிய எழுச்சியின் அலைகள் வேகமாக வீசத்தொடங்கி விட்டன.
இப்போது முஸ்லிம் சமூகம் அடைந்துள்ள பின்னடைவு தற்காலிகமானதே. அநியாயக்கார சக்திகளுக்கும் அதிகாரம் செலுத்துவதற்கு ஒரு தவணைக்காலம் கொடுக்கப்படுவது இறை நியதிகளில் ஒன்று. ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் அசத்திய சக்திகளைக் கண்டு அஞ்சிவிடக்கூடாது. சமூகங்களின் எழுச்சி வீழ்ச்சி பற்றிய அல்குர்ஆனின் போதனைகளைப் படிக்கின்ற போது எதிரிகளின் மிகப்பெரும் ஆயுதங்கள், போர்க்கருவிகளைக் கண்டு பீதியுறத் தேவையில்லை என்பதையும் முஸ்லிம்களுக்கே இறுதி வெற்றி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
அநியாயத்தின் மீது எழும் சமூகம், ஒழுக்கச் சீர்கேட்டினை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சமூகம், சடவாத இன்பங்களை மட்டுமே நோக்கமாக கொண்ட சமூகம், இறைத்தூதை நிராகரித்து வாழும் சமூகம் இவற்றின் முடிவு மிகவும் பயங்கரமானவை. அவை தற்காலிகமாக பெரும் ஆதிக்க சக்தியாக எழுந்து நின்றபோதும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் முகங்குப்புற விழுந்து தவிடு பொடியாகப் போகின்றன.
இப்பகைப்புலத்தில் நின்று பார்க்குமிடத்து இன்று மிகப் பெரும் அரக்கனாக உருவெடுத்து அகிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முனையும் அமெரிக்க நாகரிமோ, ஐரோப்பிய சக்திகளோ வீழ்ச்சியடைந்து விடும் என்பது தவிர்க்க முடியாதது. 83 வருடங்களுக்குள் பிறப்பையும் மரணதையும் சந்தித்த சோவியத் யூனியனின் உடைவு இதற்கு மிக அண்மிய எடுத்துக்காட்டாகும். நம்ரூத், லூத், ஆத், ஸமூத்,பிர் அவ்ன் காலத்திய சமூகங்களின் வீழ்ச்சியைப் பார்க்கும் யாரும் பிரமித்துப் போவார்கள். இவ்வகையில் இப்போதுள்ள உலக ஆதிக்க சக்திகள் கிட்டிய எதிர்காலத்தில் சுக்குநூறாய்ப் போய்விடுவார்கள் என்பதில் எந்த ஐயமோ ஆச்சரியமோ கிடையாது என்பது வரலாற்று உண்மை.
வெற்றி முஸ்லிம்களுக்கே என்பது அல்லாஹ்வின் வாக்குறுதி ஆனால் அந்த வெற்றியை துரிதப்படுத்துவதும் காலம் தாழ்த்துவதும் முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்து. அது முஸ்லிம் சமூகத்தின் சுயபரிசீலனை, தியாகம், உழைப்பு என்பவற்றில்தான் தங்கியிருக்கிறது. வரலாறு வெற்றிடங்களை விட்டு வைப்பதில்லை என்பதைப் போன்றே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி நிகழ்கின்றது என்பதும் மாற்ற முடியாத ஒரு சமூக நியதி. இவ்வகையில் இஸ்லாத்திற்கான வெற்றி அண்மித்துவிட்டது. மேற்குலகின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. ஆனால் இங்கு எழும் கேள்வி அந்த வெற்றியை துரிதப்படுத்தவும் சுமந்து கொள்ளவும் முஸ்லிம் சமுதாயம் தாயாராகிவிட்டதா என்பதே????.
குறைகள் இருந்தால் என்னை சேரும். பரிபூரணமான ஞானங்கள் அல்லாஹ்வையே சேரும்.
source: http://www.iqrah.net