மவ்லானா வஹீதுத்தீன் கான்
[ ஆண்டுதோரும் ஆயிரக்கணக்கான ஆலிம்களை தயார்படுத்தி மதரஸாக்கள் அனுப்புகின்றன. அவர்கள் தாவா பணி செய்ய தகுதியற்றவர்களாக இருக்கின்றனர்.
மதரஸா பயிற்சி நோக்கமே ”தாவா பணி” தான். ஆனால், தாவா பணி செய்யாதவர்களாக தர்க்கத்தில் காலம் கழித்தனர். இவர்களது எதிர்வாதம் வெற்றி, தோல்வி நோக்கியதாக; வாதத்தில் வெல்பவர் சிறந்தவர், தோல்வி கண்டவர் சிறப்பிழந்தவர் சூழலை உருவாக்கியது. ஆக்ரோஷமான எதிர்வாதமாக அமைந்தது.
தற்காலம் அறிவியல், ஆராய்ச்சிக்காலம். எதிர்வாதக் காலக்கட்டமல்ல. இந்த காலத்திற்கு ஏற்றவாறு தயாராக வேண்டும். எதிர்வாதம் பேசக்கூடியவர்களை மதரஸாக்கள் உருவாக்கக்கூடாது.
எதிர்வாதம் விரக்தியாக்குவதோடு தோற்பவர் மனத்தில் பழியுணர்ச்சியை உருவாக்கும்.
ஒருவரை மற்றவர் வெல்லும் எண்ணம் போராட்டமாக மாற்றும்.
சரி, தவறு உணரப்படாமல் தோற்கடித்தல், வெற்றி கொள்தல் எண்ணமே மேலோங்கும்.
இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையல்ல.
மனித இதயத்தை சுத்தப்படுத்துதலே உண்மையான மதபோதகர் பணி.
இந்த எண்ணத்துடன் பயில்வோருக்கு மட்டும் பயிற்சி தந்து சமூகத்துக்குள் அனுப்ப வேண்டும்.]
மாறும் காலச் சூழலில் மதரஸா!
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதரஸாக்கள் அதிகமக தோற்றுவிக்கப்பட்டன. மதக்கல்வி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே தோன்றியது.
உலமாக்கள் ஒன்றிணைந்து “இந்தியா தாருத் தாலிம்” – அறிவு இல்லம் இந்தியா” என்று ஃபத்வா கொடுத்தனர். அதன் காரணமாக மதரஸா – கல்வி நிலையங்கள் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டன. சிறிய வருமானத்தில் ஆயிரம் உலமாக்கள் உதவியுடன் எதிப்பார்ப்புகளின்றி மதரஸாக்கள் நடைபெற்றன. இலவசமாக போதித்தனர். ஏழைகள் பயனடைந்தனர்.
மார்க்க அறிஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட மதரஸாக்கள் பட்டம் வழங்கி மக்களுக்கு இறை செய்தியை எடுத்துரைக்கும் தாவா பணியில் அவர்களை ஈடுபடுத்தின.
காலப்போக்கில் “எதிர்வாத அணுகுமுறை” – Polemical Approch- இல் இறங்கியதால் மதரஸாக்கள் வலுவிழந்தன. ஆண்டுதோரும் ஆயிரக்கணக்கான ஆலிம்களை தயார்படுத்தி மதரஸாக்கள் அனுப்புகின்றன. அவர்கள் தாவா பணி செய்ய தகுதியற்றவர்களாக இருக்கின்றனர்.
மதரஸா பயிற்சி நோக்கமே ”தாவா பணி” தான். ஆனால், தாவா பணி செய்யாதவர்களாக தர்க்கத்தில் காலம் கழித்தனர். இவர்களது எதிர்வாதம் வெற்றி, தோல்வி நோக்கியதாக; வாதத்தில் வெல்பவர் சிறந்தவர், தோல்வி கண்டவர் சிறப்பிழந்தவர் சூழலை உருவாக்கியது. ஆக்ரோஷமான எதிர்வாதமாக அமைந்தது.
தற்காலம் அறிவியல், ஆராய்ச்சிக்காலம். எதிர்வாதக் காலக்கட்டமல்ல. இந்த காலத்திற்கு ஏற்றவாறு தயாராக வேண்டும். எதிர்வாதம் பேசக்கூடியவர்களை மதரஸாக்கள் உருவாக்கக்கூடாது. எதிர்வாதம் விரக்தியாக்குவதோடு தோற்பவர் மனத்தில் பழியுணர்ச்சியை உருவாக்கும். ஒருவரை மற்றவர் வெல்லும் எண்ணம் போராட்டமாக மாற்றும். சரி, தவறு உணரப்படாமல் தோற்கடித்தல், வெற்றி கொள்தல் எண்ணமே மேலோங்கும். இது அல்லா ஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையல்ல. மனித இதயத்தை சுத்தப்படுத்துதலே உண்மையான மதபோதகர் பணி. இந்த எண்ணத்துடன் பயில்வோருக்கு மட்டும் பயிற்சி தந்து சமூகத்துக்குள் அனுப்ப வேண்டும்.
அரசியலார் அமைப்பு முறையில் ஒரு சமூகம், இனம், பார்வை பாகுபாடு இருக்கும். அரசியலற்ற பொது அமைப்பு முறை செயல்ப்பாடே சிறப்பிற்குரியது. இக்கட்டமைப்பு மூலம் உருவாகும் நிறுவனங்கள் உருவாக்கக்கூடியவர்களே ஒட்டு மொத்த மனித குலத்தின் மீதும் அக்கரை செலுத்தக் கூடியவர்கள்.
– தமிழாக்கம்: ஜெ.ஜ ஹாங்கீர், முஸ்லிம் முரசு மே, 2014