Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

புதைந்த வரலாற்று உண்மைகள்

Posted on May 22, 2014 by admin

புதைந்த வரலாற்று உண்மைகள்

கலைஞர் அவர்களே உங்கள் சூழ்ச்சியால் முஸ்லிம் சமூகத்தை பிரித்தீர்களே…

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி – கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர்.

அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள்

அமைப்பாக ஒன்றுதிரண்டு,அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள முஸ்லிம் லீக்கை மக்கள் ஆதரவை இழக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளை, கலைஞரும், முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதியாக மாற்றினார்.

உதாரணமாக,

துறைமுகம் சட்டமன்ற தொகுதி :

1962-ல் கே.எஸ்.ஜி. ஹாஜா ஷெரிப் (காங்கிரஸ்)

1967-ல் டாக்டர். ஹபிபுல்லா பெய்க் – (முஸ்லிம் லீக்)

1971-ல் திருப்பூர் ஏ.எம். மொய்தீன் (முஸ்லிம் லீக்) – வென்ற தொகுதி – காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு 1977 தேர்தலில் செல்வராஜ் என்பவரை நிறுத்துகிறார்.

1977,1980,1984 என மூன்று முறை துறைமுகம் செல்வராஜை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார் கருணாநிதி.

1977-ல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் அவர் மறையும் வரை, இந்த மிகப்பெரிய ராஜதந்திரியால், அரசியல் சாணக்கியரால், ஆட்சிக்கு வர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க ஜெ.அணி – ஜா. அணி பிரிந்த நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாரே அப்பொழுது அவர் நின்று வென்ற தொகுதி அதே துறைமுகம் தொகுதிதான்.

1989-ல் ஏற்பட்ட ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. 1991-ல் வந்த தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நிலையில் – திமுக நாடு முழுவதும் படுதோல்வி அடைந்து இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது இந்தத் துறைமுகம்தான்.

அதன் பிறகு அந்தத் தொகுதியை விட்டு 1996&ல் வேறு தொகுதிக்கு மாறினார். மீண்டும் முஸ்லிமை நிறுத்துவார் என்று நினைத்தால் இல்லை. கலைஞருக்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் நிறுத்தப்பட்டார். 1996, 2001, 2006 நிற்கவைத்து 2011 வரை அவர்தான் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்.

துறைமுகத்தை விட்டு வேறு தொகுதிக்கு மாறிய கலைஞர் எந்தத் தொகுதி தேர்வு செய்தார் தெரியுமா? சேப்பாக்கம் தொகுதியை. அந்த தொகுதியின் கடந்த கால நிலை என்ன?

1977 ரகுமான்கான் திமுக

1980 ரகுமான்கான் திமுக

1984 ரகுமான்கான் திமுக

1989 எம். அப்துல் லத்தீப் (திமுக சின்னத்தில்)

1991 ஜீனத் சர்புதின் (காங்கிரஸ்)

இப்படி முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியில் 1996, தொடங்கி 2001-&2006 என்று நின்று வென்று வருகிறார். உதாரணமாகத்தான் சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளைக் காட்டியுள்ளோம். இன்னும் ஆய்வு செய்தால் அதிர்ச்சி தரும் பட்டியல்கள் வெளிவரலாம்.

முஸ்லிம் லீக் பல துண்டுகளாக உடைந்தது

1977 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து 1978 தொடங்கி 1988வரை தோல்வியைப் பற்றி கவலைபடாமல் தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக் 1989 தேர்தலில் ஆ.க.அ. அப்துஸ் ஸமது மற்றும் அ. அப்துல் லத்தீப் என்று உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.

அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(!)

கலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ? அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார்.

‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(!) மதவெறியை நியாயப்படுத்தினார்.

கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை’’ என்றார்.

அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போட்ட காவல் அதிகாரிக்கு பொறுப்பு

திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ‘கோவையை குண்டு வைத்துத் தாக்க மீண்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் சதி’ என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டார் உதவி ஆணையாளராக இருந்த ரத்தினசபாபதி. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியது. ஹாருன் பாஷா என்ற இளைஞரும் அவரது உறவினர்களும் இந்த பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார்கள். இந்த அக்கிரமதை அரசின் கவனத்திற்கு தமுமுக கொண்டு சென்றது. இதன் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி, இது கற்பனையாக புனையப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஹாரூன் பாஷாவும் அவரது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ரத்தினசபாபதியை நீதிபதி கடுமையாக கண்டித்தார். இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்குடைய அதிகாரிக்கு தனது ஆட்சியின் அந்திம காலத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்து கவுரவித்துள்ளார் கலைஞர். அரசுப் பணிக்கு ஆட்களை எடுக்கும் இந்த ஆணையத்தில் இவரைப் போன்றவர்கள் இருந்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயமாக நேர்மையாக வாய்ப்பு கிடைக்குமா?

ஆனால் இன்று கலைஞரின் நிலைமை பெற்ற பிள்ளையை தனது பிள்ளையில்லை என்று சொல்லும் அளவிற்கு இறைவன் கொண்டு போய்விட்டான்…

சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் இறைவன்…..

முஸ்லிம்சமூகத்தை கருணாநிதியின் சூழ்ச்சிக்கு அடகு வைத்த இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் விழிப்படைவார்களோ இல்லையோ முஸ்லிம் மக்கள் விழிப்படைய வேண்டும். இதோ கீழுள்ள நபிமொழியை பார்வையிடுங்கள்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 − = 5

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb