வெற்றி என்பது எது?
சில தினங்களுக்கு முன் நடந்த ”நீயா நானா” நிகழ்ச்சியில், வெற்றி என்பது எது?
வெற்றியை அடைய வேண்டுமானால் எவற்றையெல்லாம் இழக்க வேண்டும்?
வெற்றியை அடைய எவ்வாறு உழைக்க வேண்டும்?
வெற்றி என்று ஏதேனும் உள்ளதா?
என்ற கருத்தைக் கொண்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அதில் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் கருத்தாக, அம்பானியைப் போன்று பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும் என்றும், அம்பானி என்ன அம்பானி அவனை விட மிகப் பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என்றும் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். இப்படித்தான் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்ற மாய தோற்றத்தில் பேசினர்.
பின்னர்,
எனது குடும்ப சந்தோஷத்தை இழந்தேன்.
எனது தனிப்பட்ட சந்தோஷத்தை இழந்தேன்.
மனைவியுடன் நேரம் செலவிட முடியவில்லை.
குழந்தைகடன் நேரம் செலவிட முடியவில்லை.
பெற்றோர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை.
சகோதரன், நண்பன் போன்றவர்ளுடன் நேரம் செலவிட முடியவில்லை.
மொத்தத்தில் எனது உறவு முறையை இழந்திருக்கின்றேன்.
ஒரு நோக்கத்திற்காக வெற்றியடைய வேண்டுமானால் மற்ற சந்தோஷங்களை தள்ளி வைத்து விடத்தான் வேண்டியுள்ளது.
என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.
ஆனால் வாழ்வியல் நெறியான ”இஸ்லாம்” அன்றே ஒரு மனிதனின் வெற்றி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது.
கட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள். ‘இவ்வாறு செய்யாதே! நோன்பு வை! வைக்காமலும் இரு! தொழவும் செய்! தூங்கவும் செய்! ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரை கூறினார்கள். (நூல்: புகாரி 1975, 6134)
இந்த ஹதீஸின் மூலம்
ஒவ்வொரு மனிதனும் அவனவனுக்கு தனிப்பட்ட கடமைகளும் உள்ளன.
மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமை
பொருளாதாரத்தை திரட்டுவதற்கான கடமை
உறவு முறைகளுக்குண்டான கடமைகளும் உள்ளன.
இது போன்ற அனைத்து கடமைகளையும் அந்த அந்த நேரங்களில் சிறப்பாக செய்து வெற்றியடைபவன் தான் முழுமையாக வெற்றியடைந் மனிதனாவான் என்பது இஸ்லாத்தின் பார்வை.
-கடையநல்லூர் மசூது