ஆன்மிகத்திற்கு பெண்களின் பங்களிப்பு!
டாக்டர் ஃபரீதா கானம்
அமைதி, இணக்கம், நல்லியல்புகள் பெண்களிடம் இயற்கையாக அமைந்திருப்பவை. முரண்பாடுகள் சமூகத்துள்ளாகத் தோன்றும்போது அமைதியை நாட்டுவோர் பெண்கள்.
ஆன்மிக நோக்கத்தை வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்குரிய தகுதிகளாக இயல்பாகவே அவர்களிடம் அமைந்திருக்கின்றன.
வரலாறுகளூம், படிப்பினைகளும் கூறுவன; பெண்கள் குணத்தன்மையுடன் இயங்குகின்றனர். அவரவர் வீட்டோடு நின்று போகின்றது. வீட்டுப் பிரச்சனைகளை சரிப்படுத்த முயல்கின்றனர். மென்மை அணுகு முறையிலான ஈடுபாடு இருக்கிறது. மன அழுத்தங்களை தவிர்க்க முடிகிறது.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதல் வஹி வந்தபோது ஆற்றுப்படுத்தியவர் கதிஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் செய்தி கூறிச் செல்வதை தம் மனைவியிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்மை, தன்னலமற்ற போக்கு உணர்ந்திருந்த கதிஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் உண்மை நிலை உணர்ந்து கணவர் மீது அளவற்ற அன்பு செலுத்தியிருக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்புக்குப் பின் பல காரணங்களுக்காக முஸ்லிம்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஆலோசனைக்கு வந்தனர். நல்லதோர் ஆலோசகராக விளங்க வேண்டும் என்பதற்காக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீண்டதோர் பயிற்சியை வழங்கியிருந்தார்கள். அதன் காரணமாக ஆண், பெண் ஸஹாபிகள், சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கூறினார்கள்.
இன்றிருப்பது போன்று அன்று தகவல் தொடர்பு இல்லை. பெண்கள் தங்கள் திறமைகளை வீட்டுக்குள்ளாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஸூஃபிகளுக்கு மத்தியில் பிரபலமானவர் ராபியத்துல் பஸ்ரியா ரஹ்மதுல்லாஹி அலைஹி. 88 வயது வரை இறைவனை வணங்குவதிலும், அடுத்தோர்க்கு உதவுவதிலும் முழுமையாகத் தன் வாழ்நாட்களை செலவிட்டவர்கள்.
அக்காலத்தில் வேறுபாடுகளுடைய பல மதத்தவர்களும் வாழ்ந்தனர். ஸூஃபி பஸ்ரியா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் போதனைச் சொற்களில் ஈர்க்கப்பெற்ற மற்ற சமூக மக்கள் செவு கொடுத்தனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ஆணும், பெண்ணும் சரி பாதி. குர்ஆன் ஹதீஸ் வழியாக இதைக் கூறுவதன் மூலம் ஆண், பெண் இடையே நடுநிலை பேணல் ஏற்பட்டது. இச் சுதந்திரம் மூலம் சமூகத்தில் பெண்கள் பெரிய அளவிலான பங்களிப்பு செய்துள்ளனர்.
கல்வியறிவில் மிகைத்தோர், சமூக அக்கறை கொண்டோர், நுண்ணிய புரிதலாளிப் பெண்களுடைய பங்களிப்புத் தேவை இன்று அதிகரித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் திறன், நெறிப்படுத்தும் பங்களிப்பு முழுமையாக உணரப்படவில்லை. அதற்கான பயிற்சியும் தரப்படவில்லை. உரிய வகை பயிற்சி அளிக்கப்பட்டால் திறமையை வெளிக்கொணரலாம். உலகம் முழுதும் அமைதி ஏற்பட வழி வகுக்கலாம்.
(கட்டுரையாளர், மவ்லானா வஹீதுத்தீன் கான் மகளார்)
தமிழாக்கம்: ஏ.ஜெ. சனோஃபர் நிஷா
(முஸ்லிம் முரசு, மே 2014)